ads

Thursday, 28 March 2013

படங்கள் சொல்லும் கதை








மாணவர்கள் போராட்டம் - ஒரு கண்ணோட்டம்



மாணவ செல்வங்களே வணக்கம்.

நாளைய  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். வலிமை மிகுந்த பாரதத்தை கட்டி எழுப்ப போகும் பேரொலிகள் நீங்கள். 

உங்களில் எத்தனை டாக்டர்கள் இருக்கிறார்கள் தெரியாது? எத்தனை இஞ்சினியர்கள் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது?   

எத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்றும் தெரியாது?  அவ்வளவு ஏன்.. இந்தியாவை கட்டி ஆளும் தகுதியடைய எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றும் தெரியாது?

ஓன்று மட்டும் தெரியும். நீங்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி. வளரும் தலைமுறையான உங்களை நம்பிதான் இந்தியா இருக்கிறது.



கண்ணிருந்தும் குருடாக, வாயிருந்தும் ஊமையாக,  பேசாமல் இருந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆள்பவரே அரசர்கள். சட்டதிட்டங்களை வகுக்கும் வல்லவர்கள். அவர்களை கட்சி பேதம் இல்லாமல் ஆதரித்தோம், ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினோம்.

அதன் பிறகு, நல்லது செய்வார்கள் என்று நம்பினோம், நம்பிக்கையோடு காத்திருந்தோம்.



ஆனால்..... தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். தங்கள் வாரிசுகளுக்கு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கோடி கோடியாய் கொள்ளை அடித்து,   இதோ நம் கண்ணெதிரே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நம் கோவம் அதுவல்ல. தவறுக்கு தண்டனை தர தேர்தல்கள்  இருக்கிறது. தேடி வருவார்கள் பார்த்தக் கொள்ளலாம் என்று பொறுமை காத்தோம்.

ஆனால் நம் கண்ணெதிரே செத்து மடிந்தது நம் தமிழினம்.  துடித்து எழ வேண்டியவர்கள் துணை போன கொடுமையும் அரங்கேறியது.



உளவு பார்த்து சொன்னதாக சொல்கிறார்கள், ஆயுத உதவி செய்ததாக சொல்கிறார்கள். பண உதவி செய்ததாக சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியாது.

ஆனால் உலக அரங்கில் அந்த கொடுங்கோலனை, கொடுங்கோல் அரசை வழி நடத்தும் ராஜபக்ஷ்சேவை காவல் காப்பதில் முகமூடி கிழிந்து போனது இந்தியாவிற்கு.




பல்வேறு அமைப்புகள் தங்கள் உணர்வுகளை பதிவு செய்தன. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி போய்விட்டது.

இப்போது கூட ஜெனிவா தீர்மானம் இந்தியா சொல்லியபடி தான் தாக்கல் செய்யப்பட்டது என்று அமெரிக்கா சொல்கிறது.

ஆக  போர் குற்றங்களை விசாரிக்க துப்பில்லாத, மனித உரிமைகளை மீறிய இலங்கையை தண்டிக்க வழியில்லாத, வெற்று சடங்காக,  உப்பு சப்பில்லாத தீர்மானம் வர இந்தியாவே  காரணம் என்பது புலனாகிறது.




இருக்கட்டும்.

நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது.  நடத்திய நாடகம் போதும் நியாயம் வேண்டும் என்பது உங்கள் கோரிக்கை.

சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த அரக்கனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது உங்கள் வேண்டுகோள்.

நட்பு நாடு என்ற போர்வையில் ஊமை  கோட்டானாக இனியும் இருக்கக் கூடாது என்பது உங்கள் எதிர்பார்ப்பு.

தவறுகள் திருத்தப் பட வேண்டும், தவறியவன் தண்டிக்க பட வேண்டும் என்ற உங்கள் ஆவல்,

நாடிழந்த நம் சொந்தங்கள், நல்ல விதமாக வாழ வேண்டும், அதற்கு ஆளும் அரசின் கவனத்தை திருப்ப,  உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்லூரி படிப்பை கூட மறந்து, வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி.

இலங்கையை பொறுத்தவரை விடுதலைபுலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். இந்தியாவிற்கும் அதே கண்ணோட்டம்தான். ராஜீவ்காந்தியை கொன்ற வகையில்.

ஆனால் விடுதலை புலிகள் வேறு, இலங்கை தமிழர்கள் வேறு என்ற வித்தியாசம், டெல்லிகார்களுக்கு புரிவதே இல்லை.

இன்றைய அரசாங்கம் இலங்கை தமிழர்களை தமிழர்கள் என்று பார்ப்பதில்லை. விடுதலை புலிகளாக பார்ப்பதுதான் இத்தனை கொடுமைக்கும் காரணம்.

நிற்க

மாணவ சக்தியின் மகிமையை உலகம் அறிந்த ஒன்றுதான். நீங்கள் வீதிக்கு வந்த பிறகு அரசியல் சக்திகள் கூட அடையாளம் தெரியாமல் போய் விட்டது.  அதுதான் மாணவ சக்தி.

உங்கள் போராட்ட களத்தில் உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் தோழர்களில் ஒருவன் என் மகன் என்பதும் எனக்கு பெருமை.

உங்கள் போராட்டத்தை யாரும் குறை சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்கள். ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் மனசாட்சியாக இருக்கிறது உங்கள் போராட்டம்.

இருப்பினும் உங்கள் அறப்போராட்டம் வழி மாறுகிறதே. திசை மாறுகிறதே. உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் வார்த்தைகள்  இடம் பெறுகிறதே.... தவிர்க்க வேண்டியவை அல்லவா அவை.

அரசு அலுவலகங்களை முடக்குவது, பூட்டு போடுவது, செயல்பட விடாமல் தடுப்பது, காவல் துறை அதிகாரிகளை வசை மாறி பொழிவது என்று போனால், வீண் அசம்பாவிதங்கள் நடக்க வழி வகுத்து விடும்.

வன்முறைகள்,  அடக்கு முறைகள் நடக்க காரணமாக இருந்து விடும். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் கடமை.

பொது மக்களுக்கு இடையூருதராமல் அறவழியில்  போராடினால், நிச்சயம் வழி திறக்கும், ஒளி பிறக்கும்.

வெல்லட்டும் உங்கள் போராட்டம்... ஓங்கட்டும் மாணவ சக்தி. மலரட்டும் தமிழ் ஈழம்.

வீடியோ இணைப்பு


Wednesday, 27 March 2013

சிக்கன் பிரியரா நீங்கள்- இதை படிங்க முதலில்!!




சிக்கன் 65 ன்னு எதனால பெயர் வந்துச்சு... அதை ஏன் சிக்கன் 95, சிக்கன் 120 இப்படி எல்லாம் சொல்லாம 65 ன்னு சொல்ல காரணம் இது என் கேள்வி.

அதற்கு என் நண்பர் ராகேஷ் முன்பு சொன்ன  பதில்.  சார்... வளர்ப்பு கோழியோட ஆயுள் காலம் 65 நாள் தான்.

அதுக்கு பிறகு அதுக்கு நோய் வந்து இறந்து போய்டும். அதனால அதன் ஆயுள் காலத்தை சொல்லுகிற விதமாத்தான் சிக்கன் 65 ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்படியா? சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

அசோகனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து
போனது. 

காரணம் அசோகனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. 

அசைவப்பிரியரான அசோகன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். 

எப்படி? 

பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. 

இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. 

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். 

எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். 

இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. 

சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். 

மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். 

எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். 

இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். 

செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.

இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். 

முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். 

மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். 

அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். 

அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. 

அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார். 

அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: “சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். 

நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். 

தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. 

கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது’ என்று எச்சரிக்கிறார்.

நன்றி – குமுதம்



உங்கள் நட்சத்திர பலன்களை தெரிந்து கொள்ள

தமிழ் புத்தாண்டு பலன்கள்  

திருப்பதி ஏழுமலையான் ரகசியம்!!




திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன. 

அதேபோல், நேற்றுமுன்தினம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 75 லட்சம் கிடைத்தது. சென்னையை சேர்ந்த நிஜலிங்கம் என்ற பக்தர் ஒரு கிலோ தங்கத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக வழங்கினார்.

மேற்கண்ட தகவலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். - இது செய்தி.



இப்படி திருப்பதி  உண்டியலில் மக்கள் பணத்தையும், பொன் பொருள்களையும் கொண்டு போய் காணிக்கையாக கொட்ட என்ன காரணம்?

புராணக்கதை சொல்வது வேறு. திருமலையார் தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார். 

அந்த கடனை கட்டவே பத்தர்களிடம் காணிக்கையாக பெறுகிறார். இதுவரை அவர் வாங்கிய கடனுக்கு வட்டி தான் கட்ட முடிகிறதே தவிர அசலை அடைத்தபாடில்லை என்கிறது. 

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டியை விட கொடுமையான வட்டியாக இருக்கும் போல இருக்கிறதே என்று சிலர் யோசிக்கலாம். நம் யோசனை அதுவல்ல.

திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் வரும் என்றார் கண்ணதாசன். அந்த வார்த்தை உலகம் முழுவதும் பரவி விட்டது.

பலர் திருப்பதி சென்று வந்த பிறகு வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இது ஒருபுறமிருக்க,  ஒருவர் சொந்த தொழில் ஆரம்பிக்கிறார். தன் தொழிலுக்கு கூட்டாளியாக, ஒரு செல்வந்தரை சேர்த்துக் கொள்வது இயல்பு.

பலர் தங்கள் தொழில்த்துறை கூட்டாளியாக சேர்த்துக் கொள்வது திருமலையானைத்தான்.



அவர் எப்ப வந்து முதல் போட்டு முதலாளியானார் என்று கேட்கலாம். அவர் முதல் போடாத முதாலாளி.

தொழில் துவங்குவோர் அவரவர் விருப்பம் போல் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொள்கிறார்கள். தொழிலும் அமோகமாக  நடக்கிறது.

அப்படியானால் லாபத்தில் ஒரு பகுதியை ஒப்புக் கொண்ட மாதிரி கொடுப்பதுதானே முறை. அதுதான் உண்டியலில் பணம் கொட்டும் வித்தை.




உங்கள் நட்சத்திர பலன்களை தெரிந்து கொள்ள

தமிழ் புத்தாண்டு பலன்கள்  

Monday, 25 March 2013

கண்ணதாசன் தத்துவங்கள்!!




ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்!!
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்!!
ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை!!
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு!!
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!!




மனிதர்கள் பெரும் புகழ் இரண்டு வகைப்படும்
ஓன்று பெற்று சாவது
இன்னொன்று செத்து பெறுவது
சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள்
பெற்று செத்தார்கள்
கோடிக் கணக்கானவர்கள்
செத்து பெற்றார்கள்.


தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும் கிடைத்து விட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாக தோன்றும்.


அழும்போது தனிமையில் அழு
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி
கூட்டத்தில் சிரித்தால் நடிப்பு என்பார்கள்
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள். 

சுவாமி விவேகானந்தர்!!


எனக்கு
வலிமையை கொடு என்று
இறைவனிடம் கேட்டேன்
அவர் என் வாழ்க்கையில்
நிறைய
கஷ்டங்களை
ஏற்படுத்தினார்!

எனக்கு
புத்திசாலித்தனத்தை கொடு என்று
கெஞ்சினேன்
வாழ்க்கையில்
சில பிரச்சனைகளை
உருவாக்கினார்!

மகிழ்ச்சியை கொடு என்று
கடவுளிடம் வேண்டினேன்
சோகமான
மனிதர்களை எனக்கு
அடையாளம்  காட்டினார்!

செல்வத்தை கொடு என்று
அவரிடம் கேட்டேன்
கடுமையாய்
உழைப்பது எப்படி என்பதை
காட்டினார்!

எனக்கு சாதகமான
நிலையை
உருவாக்கி தா என
மன்றாடினேன்
உழைப்பதற்கான
சில சந்தர்ப்பங்களை
எனக்கு அவர் அளித்தார்!

அமைதியை  கொடு என்றேன்
ஆண்டவனிடம்
அடுத்தவருக்கு உதவுவது எப்படி
என்பதை கற்று தந்தார்!

இறைவன் நான் கேட்ட
எதையும் தரவில்லை
ஆனால்
எனக்கு
தேவையான
எல்லாவற்றையும்
தந்து விட்டார்!

ரஜினியும் அவரது நட்பும்!!



நடிகர் ரஜினிகாந்த் அவர்களை   நல்ல மனிதர், பண்பாளர், மனிதநேயம் மிக்கவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த கருத்தில் இருந்து  அவர் தவறி விட்டார் என்றும் சொல்ல முடியாது. ஆனால் சமீப காலங்களில் அவர் குரல் ஊடககங்களில் அதிகம் ஒலிக்கிறது. 

அது பெரும்பாலும் மக்கள் சந்திக்கும் பெரும் துயரத்தை பற்றியோ, கண்ணெதிரே நடக்கும் அவலங்களை பற்றியோ, உயிர் துறக்கும் மீனவர்கள் பற்றியோ, நித்தம் நடக்கும் கொலை கொள்ளைகள் பற்றியோ செத்து மடிந்த ஈழ தமிழர்கள் பற்றியோ இல்லை.

அவரின் அன்புக்கு உரியவர்கள், சினிமாதுறை சார்ந்தவர்கள் பாதிக்கப் படும் போது மட்டும் உள்ளம் கொதிக்கிறது அவருக்கு. 

கமலுக்கு சிக்கல் என்றதும் மௌனம் கலைத்தார்.  அவருக்காக குரல் கொடுத்தார். இப்போது குண்டு வெடிப்பு வழக்கில்  சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. 

அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது. 

இந்த தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்”என தெரிவித்துள்ளார்.

நல்லது. யார் செத்தால் என்ன? எத்தனை உயிர்கள் மடிந்தால் என்ன? நட்பு தான் முக்கியம். அவர்  தீவிரவாதியாக இருந்தாலும்.

இதுதான் தமிழக அரசியல்வாதிகள்!!

இவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு பார்ப்பது வியாபாரம்.  

அரசியலும் அப்படித்தான் போலும். வாழ்வா சாவா என்பது முக்கியமல்ல. என்ன ஆதாயம் என்று பார்ப்பதும் தான் அரசியல் என்று ஆகிவிட்டது.

பிரபாகரனின் இளைய  மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு துயர சம்பவம் என்றால், அந்த இறப்பை வைத்து ஆதாயம் தேடும் தமிழக அரசியல்வாதிகளை என்ன சொல்வது? 






Sunday, 24 March 2013

விஞ்ஞான உலகத்தில் கடவுள் நம்பிக்கை தேவையா?


உலகத்தில் உள்ள அத்தனை பொருள்களையும் மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் புரிந்து கொண்டு விட்டான். 

அதனால் அவன் இயற்கையான அமைப்புகளை மாற்றி அமைக்கக் கூடிய வல்லமை கொண்டவனாக ஆகிவிட்டான். இந்த நிலையில் கடவுளை நம்ப வேண்டியதின் அவசியம் என்ன?



மனிதன் இன்று உலகத்தின் அமைப்பை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். வானவெளியில் பிரயாணம் செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறான். 

ஆனால் அவனால் மனித வாழ்க்கையில் அன்றாட மாற்றங்களை கணிக்க முடியவில்லை. நாளைக்கு என்ன நடக்கும் என்று அவனால் சொல்ல முடியவில்லை. 

மனிதன் இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று அவனால் சொல்ல முடிவதில்லை. முயற்சி ஒரு விதமாகவும். அதற்கு பலன் வேறு விதமாகவும் அமைந்து விட்டால் அதன் காரணத்தை அவனால் விளக்க முடிவதில்லை.

அவன் இயற்கையாக மனித குலத்தின் நன்மைக்காக கண்டுபிடித்தவைகளே, மனிதனை அழிக்கும் சக்தியாக பேருருவம் எடுத்து நிற்ப்பதையும் அவனால் தடுக்க முடிவதில்லை.

மனிதனை மீட்டு வழிகாட்ட அவன் பெரும் சக்தியான கடவுளைதான் நாட வேண்டியிருக்கிறது.

மனிதன் இன்று எத்தனையோ இயந்திரங்களையும், கம்பியுடர்களையும் கண்டுபிடித்து விட்டான்.

பல்லாயிரக்கனக்கான மக்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில கருவிகளே செய்து விடுகின்றன. இவை எல்லாம் விஞ்ஞான அற்புதங்களே.


ஆனால் இவற்றில் ஒரு சிறு கருவி கூட தானே இயங்க முடியாது. பழுதாகி விட்டால் தானே சரி செய்து கொள்ள முடியாது. அதற்க்கு ஒரு மனிதன் தான் தேவைப்படுகிறான்.

அந்த மனிதனை உண்டாக்கும் வல்லமையை இன்றும் எந்த விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவில்லை. இறந்து விட்ட சிறு எறும்புக்கு கூட எந்த விஞ்ஞானியும் உயிர் கொடுக்க முடியாது.

ஆகையால் தனது படைப்பு வாழ்க்கை,  முடிவு ஆகிய மூன்றுமே மனிதன் தன்னை ஆட்டி படைக்கக் கூடிய வேறு சக்தி ஒன்றைத்தான் நம்பி இருக்கிறான்.

ஆகையால் கடவுள் நம்பிக்கை அவசியமா என்று நாம் கேட்க வேண்டியதில்லை. அதை ஒத்து கொள்ளாமல் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டால் போதும், அப்படி புரிந்து கொள்ள இயலாதவர்கள் எத்தனை விஞ்ஞான அறிவு பெற்றிருந்தாலும், அது அவனை முழுமையானவனாக செய்ய முடியாது.

சுவாமி. சிவருப தாமோதரதாசா. 


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...