ads

Thursday, 8 March 2012

மென்சஸ்.... பெண்களின் பிரச்சனைக்கு தீர்வு

பெண்களை பொறுத்தவரை மாதம் தோறும் நிகழும் இயற்கையான விஷயம்தான் இது.  

அது ............மென்சஸ்.

இது ஒன்னும் திங்கள்கிழமைக்கு அடுத்து செவ்வாய்கிழமை வரும் என்று சொல்லுகிற மாதிரி குறிப்பிட்ட நாளில் நடக்கும் விஷயமல்ல.  கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.  

முன்ன பின்ன என்பது  ஒன்னு இரண்டு நாள் முன் பின்.  ஒரு ஆரோக்கியமான பொண்ணுக்கு இது டான்னு.. மணி அடித்த  மாதிரி 28 to 30 நாளில் நடக்க வேண்டும். 

நடக்கலையா?  நாற்பது நாள் அம்பது நாளுன்னு தள்ளி போகுதா? அப்ப பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்.

சிலருக்கு சொல்லி வைச்ச மாதிரி, தேதி தவறாமல் குளியல் தேதி இருக்கும்.  வர்ற பத்தாம் தேதி குளிக்கணும் என்று காலண்டரை பார்த்தபடி  சொன்னால், சொன்னபடி இருக்கும்.   

பலருக்கு இங்கேதான் பிரச்சனையே.  நாள் கணக்கெல்லாம் தாண்டி,  மாதங்களாகி, நம்மை அறியாம வயத்துக்குலே எதுவும் வந்துட்டா.. என்று அச்சம் கொள்ளகிற அளவிற்கு நாட்கள் தள்ளி போகும்.  

என்ன காரணம்?

உடல்கூறு,  ரத்த சோகை, மனக்கவலைகள் என்பது ஒட்டு மொத்த உளவியல் நிபுணர்களின் கருத்து.

சிலர் பிரச்சனையை தானே தேடி கொள்ளவதும் உண்டு.  வீட்டில் விஷேசம் அல்லது விழாக்காலம் வரும் போது,  இந்த தேதியும் அந்த தேதியும் பக்கத்து பக்கத்துல வந்தால் போதும், எல்லா பெண்களும் தணல் மேல் உட்கார்ந்த மாதிரி தவித்து போவார்கள்.

இது வேற சனியன் வந்து தொலையுது.  இப்படி ஒரு அங்கலாய்ப்பு வேற.  இந்த கேள்விக்கு விடை காண தாங்களே மருந்து வாங்கி உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  

ஒரு வாரம் தள்ளி போனால் தேவலை.

 சனியன் என்று சொல்லும் பெண்கள் சற்று சிந்திக்க வேண்டும்.  இந்த மாதாந்திர நிகழ்வு சரியில்லாமல் போகும் போது.   நீங்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன?

ஓடி வந்து நின்ன மாதிரி மேல் மூச்சு கிழ் மூச்சு வாங்குதா.  என்னன்னு சொல்ல முடியாத மாதிரி உடம்பு அசதியா இருக்கா. என்னமோ உடம்பு பூதம் மாதிரி கனத்து போன மாதிரி ஒரு எண்ணம் வருதா. 

அப்பறம்...

ஒரு பெண்ணின் புனிதமே அவள் தாய்மை அடைவதில் தான் இருக்கிறது.  இது சரியாக இருந்தால் அந்த பெண் தாய்மை அடைவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.  இல்லைனா மலடி பட்டம்தான் கிடைக்கும் தெரியும்தானே.  அப்பறம் என்ன அங்கலாய்ப்பு.

சரி மருந்து வாங்கி சாப்பிடும் பெண்களின் கதி என்ன?

நார்மலாக இருக்கும் உடல்நிலை மருந்துகளின் தாக்கத்தால் குளறுபடி செய்ய துவங்கி விடுகிறது.  இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டிய ஓன்று.

 இந்த பிரச்சனை ஏதோ ஒரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனை என்று ஒதுக்கி வைக்க முடியாது.  இதற்கும், அந்த பெண்ணின் ஜாதக அமைப்பு தான் காரணம்.

பொதுவாக சந்திரனை உடல் காரகன் என்று சொன்னாலும், பெண்களை பொறுத்தவரை கருப்பைக்கு காரகம் வகிக்கும் கிரகம்.  செவ்வாய் ரத்தத்திற்கு காரகம் வகிக்கும் கிரகம்.

பெண்கள் ஜாதகத்தில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால்  கண்டிப்பாக மேன்செஸ் தொடர்பான பிரச்சனை இருக்கும்.

அது இப்படி கூட இருக்காலாம்.

நாள் தவறி குளிப்பது ஓன்று.  மாதம் இருமுறை குளிப்பது ரெண்டு.  நீடித்த ரத்த போக்கு மூன்று.   இதில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடும்.

சந்திரன் செவ்வாய் ஒருவர்க்கு ஒருவர் ஆறுக்கு எட்டாக இருந்து, இவர்களோடு  சனி ராகு கேது இவர்கள் யாராவது ஒருவர் சேர்ந்து இருந்தால் போதும்,  இந்த பிரச்சனை தலை தூக்கும்.   கர்ப்ப சிதைவுக்கு இதுதான் காரணம்.

தனித்த செவ்வாய் ஆண் ராசியில் இருந்து ராகு சம்மந்தம் ஏற்பட்டால் குளியல் முழுகல் குறப்பிட்ட நாளில் வராது.

விருச்சிக ராசியில் பாவ கிரகங்கள் , பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில்  பல பாவ கிரகங்கள் இருப்பதும்,  மாதாந்திர குளியலில் மன கவலை  இருந்தே தீரும்.

சுக்கிரன் கன்னி ராசியில் இருந்தால் இந்த குறை இல்லாமல் இருக்காது.  சரி மருத்துவ நிவாரணம் என்ன என்பதை பாப்போம்.

ஆலம்விழுதையும்  ஆலம் விதையையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து  காலையில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை தீரும்.

பொதினா இலையின் சாரை எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பிரச்சனை தீரும்.

அத்தி பழம் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உத்திர போக்கு நிற்கும்.  

சோற்று கற்றாழை சோற்று பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிடலாம்.

வாழைப்பழம், ஏலக்காய் இரண்டையும் பிசைந்து சாப்பிட்டாலும் குணமாகும்.    இது பெண்கள் பிரச்சனை.  ஆண்கள் பிரச்சனை இருக்கே.  அதை அடுத்த பதிவில் பாப்போம். 


Wednesday, 7 March 2012

சென்ற பிறவி ரகசியம்

நான் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது? 

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது.  இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக,  யாரோ ஒருவருக்கு மனைவியாக,  பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக  இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம்.  இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

கன்னி தீவு கதை மாதிரி கண்டுபிடிக்க முடியாத ரகசியம் ... முன் பிறவி ரகசியம் என்பதே. அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.

இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை.  தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது. 

இது உண்மையே. 

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு  பலர் செய்யும்  தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன். 

பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள்.  இதற்கு அடுத்த படியாக  குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள்.  இதில்  ராகு கேது தவிர்த்து,  ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது. 

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.  இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.

இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும்,  5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து,  பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள்.  இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.

அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை,  மீறி அமையும் வாழ்க்கையில்  குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடுகள்,  பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.

அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும்,  புத்திர சோகத்தை தருகிறது.  காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள்,  பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.

சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.

என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும்,  ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது.   ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள். 

இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ,  ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,  அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம்.

அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை  வதைத்தவர்கள்,  சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.

மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.

உதாரணமாக பரணி  நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம்.   அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும்.  சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது. 

ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு  திசையாக  5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம்  என்று குறைந்த அளவே தசையாக வருகிறது. 

காரணம் என்ன?

முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார்.  சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில்,  இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே  இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.

நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம்.  இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில்  சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார்.  மற்ற கிரகங்கள் மாறாது.

ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை,  இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.

ஒருவர் மீன ராசியில் பிறந்தால்,  அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது,  அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார்.

சந்திரன்  கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர்.   அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம்.   ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.

அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......

மேஷம்,  தனுசு  - சத்திரிய குலம்.   அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.

ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம்.  அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம்  பிராமண குலம்.  அதாவது கோவில் பூஜை  மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.

கன்னி துலாம்  சூத்திர குலம். 

இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும்.  அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது. 

அடுத்த பதிவில்... நாடி ஜோதிட தில்லு  முல்லுகள் பற்றியும்,  அதன் உண்மையான ரகசியம் பற்றியும் பார்ப்போம்.



 

Tuesday, 6 March 2012

மூன்றாம் உலக போர் நடக்க காரணமாய் இருக்க போவது இந்தியா பாகிஸ்தான் - நாஸ் டடாமஸ் சொல்கிறார்.

அது 14 ம் நூற்றாண்டு. 

வானவியல் ஆராச்சியில் முதலிடத்தில் இருந்தது பாரதம்.  ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள் இத்துறையில் பல படிகளை கடந்த நேரம் அது.  

ஆனால் ....  அக்காலத்தில் ஐரோப்பியர்கள் பூமியைத்தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று  நம்பி வந்தார்கள்.  அது தவறு என்பதை கண்டு பிடித்தார் கலிலியோ.  

சூரியனைத்தான் பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகிறது என்றார்.  அவ்வளவுதான் வெகுண்டு எழுந்தார்கள் பழமைவாதிகள்.  கலிலியோ ஒரு மூடன், முட்டாள்.... நீ எப்படி வாயில் வந்ததை சொல்லலாம்.  வா விசாரணைக்கு என்றார்கள்.  

அப்போது பழமைவாதிகள்,  ஒன்றும் அறியாத மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்த நேரம் அது.  தங்களோடு ஒத்து போகாதவர்களை எல்லாம் கொடுமையான தண்டனை கொடுத்து வந்தார்கள்.

அதே அதிகார தோரணை கலிலியோக்கும் போனது. முதுமையில் இருந்த கலிலியோ உண்மையில் பயந்து போனார். 

அவரிடம் நகத்தை புடுங்கும் கொறடு,  நகத்துக்குள் செலுத்தும் ஊசிகள், பழுக்க காச்சிய கம்பிகள் போன்றவற்றை காட்டி,  நீ சொல்லியதை தவறு என்று ஒத்து கொள்கிறாயா... அல்லது இந்த தண்டனைகளை ஏற்று கொள்கிறாயா என்று மிரட்டினார்கள்.

பயந்து போன கலிலியோ மன்னிப்பு கோரினார்.  இதை அறிந்த நாஸ் டடாமஸ் பயந்து போனார்.  நாட்டை விட்டு வெளியேறி கொஞ்ச காலம் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார்.

யார் அந்த நாஸ்டடாமஸ்.  

நம் கட்டுரை இன் கதாநாயகன். எதிர்காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்.  பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு ஞானி.  மருத்துவ நிபுணர். இறந்தவர்கள் உடலை பாதுகாக்கும் முறையை கண்டு பிடித்தவர்.

இவர் முறையை பயன்படுத்திதான் பிற்காலத்தில் பிரமீடுகள் கட்டப்பட்டன. இவர் தன் ஞானத்தால் அடுத்து நடக்க போகும் சம்பவங்களை சொன்னார்.  பல 100 வருடங்க்களுக்கு பிறகு நடக்க போகும் சம்பவங்களை கூட துல்லியமாக பாடல்களாக எழுதினார். 

இவர் எழுதிய பாடல்களை இன்றும் பலர் ஆராச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  இவர்தான் மூன்றாம் உலக போர்  நடப்பதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் காரணமாக இருக்கும் என்கிறார். 

இந்த இரு நாடுகளுக்கும் ஆதரவாக,  எதிரும் புதிரும்மாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி, இஸ்ரேல், சிரியா, ஜெர்மனி, ஈரான், போன்ற நாடுகள் களத்தில் குதிக்கும் என்கிறார். 

இந்தியாவை பொறுத்தவரை உலகின் மிக பெரிய ராணுவம்.  சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியாதான் அந்த இடத்தில் இருக்கிறது.  தொழில் நுட்பத்தில்  அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக இந்தியா வளர்ந்து வருகிறது. 

இதை அமெரிக்க அதிபர் ஓபமா.. ஒப்பு கொண்டார்.  எல்லா நாடுகளும் இரண்டாம் இடத்திற்கு போட்டி போடுகின்றன.  ஆனால் இந்தியாவோ முதல் இடத்தை குறி வைக்கிறது என்றார். இந்த விஷயத்தில் நாம் விழித்து கொள்ளா விட்டால் இந்தியா நம்மை பின்னுக்கு தள்ளி விடும் என்று சொன்னார் தன் நாட்டு மக்களுக்கு.

சரி.... இந்தியாவின் ராணுவ பலத்திற்கு முன்பு பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய்.  ஆனால் அணு ஆயுதம் என்று வரும் போது,  இந்தியா யோசிக்க வேண்டி இருக்கும்.

ஒரு வேலை அணு ஆயுத போர் வெடித்தால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிக்க படும்.  

இந்தியா... 2011 க்கு பிறகு பல சோதனைகளை சந்திக்கும்.  பல உள்நாட்டு குழப்பங்கள் ஏற்ப்படும்.  அரசியலில் நேர்மை இருக்காது.  மொழி மற்றும் இன ரீதியாக மக்கள் வேறுபடுவார்கள்.  இதை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு போரை திணிக்கும்.  அந்த போர் மூன்றாம் உலக போராக மாறும் என்கிறார் நாஸ் டடாமஸ். 

அந்த கால கட்டம் எது?

2011 முதல் 2016 க்குள் என்கிறார் நாஸ் டடாமஸ். இந்த போருக்கு பின்னால் இந்தியா பல சோதனைகளை சந்திக்க வேண்டிவரும்.  வறுமை, வேலை இல்லாத திண்டாட்டம் ஏற்படுமாம்.

இந்த போரினால் பல கோடி மக்கள் உயிர் இழப்பார்கள்.  பின் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக வளரும்.  2026 இல் இந்தியா வளர்ந்த வல்லரசாக இருக்கும். உலகின் முதல் நாடாக இந்தியாவே இருக்கும்.

மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து விடும். மிகவும் வசதியாக வாழ்வார்கள்.  செல்வம் கொழிக்கும் என்கிறார் நாஸ் டடாமஸ்.

போர் நடக்காமல் இந்தியா வளர கடவுள் துணை இருக்கட்டும்.  

Monday, 5 March 2012

வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு

இயற்கையாய் கிடைக்கும் பொருள்களில் இறைஅம்சம் பொருந்தியது மூன்று.  

1 .  ருத்ராட்ச்சம்  - இது சிவனுக்கு உரியது.
2 .  சாலக்கிராமம் - இது மகாவிஷ்ணுவுக்கு உரியது.
3 . வலம்புரி சங்கு - மகாலட்சுமிக்கு உரியது.

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் மங்கள பொருள்களில் வலம்புரி சங்கு முதலிடம் பெறுகிறது.    

 சங்கு என்னவோ  கடலில் வாழும் மெல்லுடளிகள் தான். என்றாலும் ஹிந்துக்கள் பூஜை அறையிலும்,  கோவில்களில் வணங்கும்  பொருளாகவும் வலம்புரி சங்கு இருக்கிறது.

எங்கெல்லாம் வலம்புரி சங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த திருமகள் இருப்பாளாம்.

எங்கெல்லாம் சங்கின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாளாம்.

மகாலக்ஷ்மி.......

இந்த செல்வ திருமகளின் அருள் பார்வை மட்டும் கிடைத்து விட்டால்,  குப்பையில் இருப்பவன் கூட கோபுர உச்சிக்கு   போய் விடலாம்.  அன்றாட சோத்துக்கே அல்லாடும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அரசன் போல் வாழலாம்.

செல்வம் இழந்து, செல்வாக்கிழந்து, செல்லாகாசாகி போனவர்கள் கூட,  எதை இழந்தார்களோ,  எங்கே இழந்தார்களோ,  அதை அங்கேயே பெறலாம்.

முயற்சித்த  காரியங்களில் முழுத்தடை, தொழில் உத்தியோக ரீதியாக வருமான குறைவு,  குடும்பத்தில் வம்பு சண்டைகள் இருக்கவே இருக்காது.

கடன் கொடுக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.  புரிந்து கொள்ளாமல் புறம் பேசியவர்கள், அறிந்து கொள்ளாமல் அலச்சியம் செய்தவர்கள் எல்லாம் தேடி வரும் நிலை உருவாகும்.

வலம்புரி சங்கின் ஓம் என்னும் ஓங்கார பிரணவ மந்த்திரத்தை மைல் கணக்கில் ரீங்காரம் செய்யும் தன்மை படைத்தது.  இந்த சங்கை தான் மகாவிஷ்ணு கையில் வைத்திருக்கிறார்.  சூரிய பகவான் வைத்திருக்கிறார்.  துர்க்கை அம்மனின் கையில் வலம்புரி சங்கு தான் இருக்கிறது.

1000 சிப்பிகள் சேர்ந்தது ஒரு இடம்புரி சங்கு.
1000 இடம்புரி சங்குகள் சேர்ந்தது ஒரு வலம்புரி சங்கு.

  • இந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும்.

  • ஆடி மாதம் பூர நட்ச்சத்திரம்,  புரட்டாசி பவுர்ணமி,  ஆணி மாதம் வளர் பிறையுடன் கூடிய அஷ்டமி,  அல்லது சித்திரா பவுர்ணமி அன்றும் வலம்புரி சங்கில் பால் வைத்து,  மகாலட்சுமிக்கு  வேண்டிய நெய்வேத்தியங்களை படைத்து பூஜை செய்தால் தன பாக்கியமும், பொன்,  பொருள், ஆடை, ஆபரணம் சேர்வதுடன்,  இதை செய்கிற தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ்வார்கள்.

  • ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும்.

  • புத்திரகானான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும்.

  • பிறந்த பிள்ளைக்கு வலம்புரி சங்கில் பால் வைத்து, அந்த பாலை புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும். அதோடு கண்திருச்ட்டி, முடி மாந்த்தம், பாலரிஷ்ட்டம் அணுகாது. 

  • செய்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த சங்கில் பசும் பால் வைத்து 27 செவ்வாய் கிழமைகள் அம்மனை பூஜித்தால் எல்லா தோஷங்களும் விலகி  திருமணம்  நடைபெறும்.

  • பில்லி,  , செய்வினை கோளாறுகள் சங்கிருக்கும் வீட்டை அணுகாது. 

  • வீட்டில் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்து வழிபடுபவர்களுக்கு சில வழி காட்டிகள். 

1 . தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும்.
2 . தட்டு அல்லது இலையின் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.
3 .  சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.
4 . சங்கில் தண்ணிர் வைத்து துளசி போடலாம்.
5 . பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்திங்கள் வைக்கலாம்.
6 .  அல்லது பூக்கள் வைக்கலாம்.

வலம்புரி சங்கின் மந்திரம்.

பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி 
தந்தோ சங்கப் பரசோதயாத் 

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் வலம்புரி சங்கை பூஜித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறோம்.



Sunday, 4 March 2012

கடவுள் பாதி... மிருகம் பாதி.

-sreekrishanr

கடைசி பிள்ளை ஜாதகம் குடும்பத்துக்கே பேசுமா?

இதுதான் என் கடைசி பிள்ளை ஜாதகம். நல்லா கணிச்சு, குடும்ப பலனை சொல்லுங்க ஜோசியரே  - ஒரு அப்பாவி அப்பாவின் வார்த்தை இது.

ஜாதகத்தை கையில் வாங்கிய ஜோசியரும், கணக்கு போட்டு, கிரகநிலைகளை ஆராய்ந்து,  ஐம்பது வருஷத்துக்கு முன்பே பிறந்த அப்பா அம்மாவில் இருந்து, பத்து வருஷத்துக்கு முன்பு பிறந்த  சகோதர சகோதரிகள் தலை எழுத்து வரை சொல்ல துவங்கினார்.

நன் கேள்வி இதுதான்.  இது சரியா?  எப்படி சாத்தியமாகும்?

பத்தும் பத்தும் இருபதுன்னா  கணக்கு சரி.  பத்தும் பத்தும் பத்தொன்பதுன்னா எப்படி ஒத்து கொள்வது?

இந்த பழக்கங்கள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  நம் பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே கடைசி பிள்ளை ஜாதகம் குடும்பத்துக்கே பேசும் என்கிறார்கள் 

எப்படி?

வருடம் தோறும் நிகழும் குரு பெயர்ச்சியோ , இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனி பெயர்ச்சியோ சரி இல்லை, அல்லது ஜாதகத்தில் பாதக திசை நடப்பில் இருக்கிறது  என்று வைத்து கொள்வோம்.

கிரகங்கள் என்ன செய்யும்? வயதுக்கு தகுந்த மாதிரி பலனை தரும்.

வயதில் மூத்தவர் என்றால் குடும்பத்தாரின் அன்பு கிடைக்காமல் செய்ய பார்க்கும். ஒதுக்கி ஓரம்கட்டும்.  இதுநாள் வரை குடும்பத்தையே கட்டி காத்தவர்கள், குடும்ப சூழலில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முயலுவார்கள்.

ஆனால் வளர்ந்த பிள்ளைகளோ வார்த்தையால் கொட்டும்.  வயசுதான் போச்சு.  வாயை மூடிகிட்டு சும்மா இருந்ததால் என்ன?  என்பார்கள்.  பெரிசுகளின் மனம் தவிக்கும்.

அதுவே  நடுத்தர வயது என்றால்.... நடப்பதே வேறு. வேலையில் தொல்லை, வேண்டாத சிந்தனை, முயற்ச்சியில் தடை, முன்னேற்ற குளறுபடி, குடும்ப குழப்பம், நண்பர்கள் உறவுகள் பிரிவு,  விருந்துக்கு வைத்திருக்கும் பணம் மருந்துக்கு செலவாகும் அவலம் என்று பலன்கள் இப்படி இருக்கும்.

வாலிபத்தில் இருப்பவர்களுக்கு என்ன செய்யும்? அதுவும் படிப்பவராக இருந்து  விட்டால் கதையே  வேறு.

அஜித் படம் வந்து இருக்கு.  முதல் ஷோ எப்படியும் பார்த்துடணும், குமார் வா மச்சி ஒரு சேதி இருக்குன்னு சொன்னான், போய் பார்க்கணும்.

கூட படிக்கிற அகிலாவும் நல்லா இருக்கு, அனுஷாவும் நல்லா இருக்கு. யாரை கரைக்ட் பன்றதுன்னு தெரியலை... இப்படியே  அவர்கள் சிந்தனை படிப்பை தவிர மற்றவற்றில் தான்  இருக்கும்.

ஆக ...... தனிப்பட்ட முறையில் அவர்கள் வாழ்க்கையை தான் கிரகங்கள் இயக்கி கொண்டிருக்கும்.  இது சரிதானே.

சரி..

ஆனால் பெற்றோரை சார்ந்து வாழும் கடைசி பிள்ளை, அப்பாவின் தலை எழுத்தை மாற்ற முடியுமா?

முடியாது ..... முடியாது.....முடியாது....

பொதுவா ஒரு விஷயம் இருக்கு.  யோகம் இல்லாத தந்தைக்கு யோகமான பிள்ளை பிறக்காது.  அப்படி பிறந்து விட்டால் அந்த குழந்தை அவருடன் இருக்காது. 

பொதுவாக அப்பா அம்மாவின் ஜாதகத்தை ஒட்டியே பிள்ளைகளின் ஜாதக அமைப்பும் இருக்கும்.

காரணம்... பிள்ளைகள் சம்பாதிக்க போறதில்லை, குழந்தைக்கு என்று தனிப்பட்ட குடும்பம் இல்லை.  தொழில் வளச்சி இல்லை.

அந்த வகையில் அப்பா நல்லா இருந்தால்........பிள்ளையும் சந்தோசமாக இருக்கும்.  பிள்ளைகளின் தேவைகளை அப்பா பூர்த்தி செய்வார்.

அப்பா கஷ்ட்ட பட்டால்,   அவர் கடன் பட்டால் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.  அப்போது பிள்ளைகளும் கஷ்ட்ட சூழலை சந்திக்க நேரிடும்.  இதுதான் எதார்த்த உண்மை.

வாழ்க்கை என்பதே ஒரு வட்டம்.  எவ்வளவு பெரிய வட்டமாக இருந்தாலும் ஒரு இடத்தில் வந்து  முட்டும்.

இது தான் வாழ்க்கை சூத்திரம்.  ஒருவரின் தலை எழுத்தை ஒட்டியே மனைவி வருவாள்.  அவர்கள் ஜாதக அமைப்பை பொறுத்தே பிள்ளைகள் பிறக்கும். இதுதான் உண்மை.

ஒருவரின் தலை எழுத்தை ஒட்டியே மனைவி வருவாள்.  அவர்கள் ஜாதக அமைப்பை பொறுத்தே பிள்ளைகள் பிறக்கும். இதுதான் உண்மை.

படிக்காத அப்பாவிற்கு அறிவாளி பிள்ளை பிறக்கும்.  இது பிள்ளையின் ஜாதக அமைப்பு.

ஏழையாக பிறந்து,  ஏழையாக வாழ்ந்து,  ஏழையாகவே இறந்து போன அப்பாவிற்கு,    பிறந்த பிள்ளை வளர்ந்து வசதியாக வாழ்வான்.  காரணம் அவன் ஜாதக அம்சம்.

100 வயது வாழும் அப்பாவிற்கு அற்பாயுள் குழந்தை பிறந்து இறக்கிறது.  அது அந்த குழந்தையின் ஜாதகம்.

ஆக.... பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஜாதக அமைப்பும், கிரக நிலவரமும், தசா புத்தியும் வருகிறது.  அதன் படியே அவர்கள் வாழ்க்கை பாதை போகும்.

பிள்ளைகளுக்கு வரும் யோகம் மற்றும் அவயோகம் என்பது அப்பாவின் ஜாதகத்தை ஒட்டியே இருக்குமே தவிர.... பிள்ளைகளின் ஜாதகம் குடும்பத்தையே மாற்றி அமைக்காது.  அதனால் கடைசி பிள்ளை ஜாதகம் குடும்பத்துக்கே பேசும் என்பது அபத்தம்.




Saturday, 3 March 2012

குட்டி கதைகள் / short story

இது ஒரு தமாஷ் கற்பனை கதைதான்.

வானலோகத்தில் ஒரே பரபரப்பா பேசிக்கிட்டாங்க.  பூலோகவாசிகள் புது புது போதை வஸ்த்துக்களை கண்டுபிடிச்சு ரொம்ப  சந்தோசமா இருக்காங்க.  ரம், பீர், விஸ்க்கி, பிராண்டி, ஜின்னு, வோட்கா,  ஓய்ன்,  கல்லு, கஞ்சா, அபின் இப்படி ஏகப்பட்ட சந்தோசங்களை சாதாரண மானிடர்கள் பயன்படுத்துகிறார்கள்.  

ஆனால் வானலோகத்தில் இன்னமும் சோம பானமும் , சுறா பானமும்தான் குடித்து கொண்டிருக்கிறோம்.  

இந்த வஸ்த்துக்கள் எப்படி இருக்கும்? 

இதை தெரிந்து  கொள்ள ஒரு நாள் கடவுள் மனித ரூவத்தில் ஒரு பாருக்கு வந்தாரு.  சப்ளை பன்ற பையன் வந்து என்ன சார் வேணும்னு கேட்டான்.  

குழந்தாய்...என்ன இருக்கு?

எல்ல ஐட்டமும் இருக்கு உங்களுக்கு என்ன வேனும். 

சரி... பீர் கொண்டு வா.  பையன் கொண்டு வந்தான்.

ஒன்னு குடிச்சார்   போதை வரலை.  ரெண்டு குடிச்சார் போதை வரலை.  பத்து குடிச்சார் போதை வரலை.  

என்னடா இது..  இதை குடித்தா பூலோகவாசிகள் போதையில் ஆடுகிறார்கள்.  

குழந்தாய்... பிராண்டி கொண்டு வா.  

குவாட்டரா, ஆப்பா . புல்லா, 

இது என்ன அளவு.  கடவுளுக்கு புரியவில்லை.  சரி எதுவாக இருந்தால் என்ன.  முதலில் வரட்டும் என்று நினைத்தவராக.... ஒரு புல்லு கொண்டு வா மகனே.  

ஒரு பாட்டில் குடிச்சார் போதை வரலை, ரெண்டு குடிச்சார் போதை வரலை, பத்து குடிச்சார் போதை வரலை.

கடவுளுக்கு குழப்பம்.  இருக்கும் அத்தனை வகையிலும் பத்து குடித்தும் கொஞ்சம் கூட போதை ஏறவே இல்லை.  

இதை பக்கத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்தான் ஒரு குடிமகன்.  

இவ்வளவு குடிச்சுட்டு  கல்லு மாதிரி உட்காந்து இருக்கியே நீ யாருயியா என்றான்.  

அதுக்கு அவர் நான் தான் கடவுள் என்றார்.

யோவ்.... இவ்வளவு நேரம் ஒன்னை ஒன்னும் செய்யலை.  இப்பதான் புல் போதைல இருக்கே என்றான்.



இது பட்டிமன்றம் ஒன்றில் கேட்ட கதை.

குடியில மூன்று வகை இருக்கு.


1 . கௌரவ குடி.

2 . மர்ம குடி

3 . மானம் கெட்ட குடி

முதாலாவது  மூன்றாவது மனிதனுக்கு தெரியாமல் வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து குடிப்பது.  இது கௌரவ குடி.

 வெளி உலகத்திற்கு தெரியாமல்,  தன் வீட்டிற்கு கூட தெரியாமல் குடித்து விட்டு நல்ல பிள்ளை மாதிரி இருப்பது மர்ம குடி.

கடைசி... மானம் கெட்ட குடி. டிப் டாப்பா சலவை சட்டையை போட்டுக்கிட்டு போய்,  பார்ல குடிச்சுட்டு,  ஆ உவ் ன்னு கத்தி அலம்பல் பன்றது. கடைசியா   ரோட்டோரத்துல சாக்கடை ஓரமா  விழுந்து கிடக்கிறது.

இது மானம் கெட்ட குடியாம்.  சாக்கடைன்னு சொன்னதும் இன்னொரு கதை நினைவுக்கு வருது.  


ஒரு முனிவரை மன்னன் ஒருவன் அவமதித்து விட்டான். கோவமடைந்த முனிவர் ..... மரியாதை தெரியாத மடையா..நீ பன்றியாக கடவது என்று சபித்து விட்டார்.

மன்னனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  கவலையுடன் மகனை அழைத்தான்.  நான் பன்றியாகி பாவத்தை  கழிக்கிறேன்.  நீ..... நான் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொன்று விடு.

என் சாபமும், கேவலமான பன்றி வாழ்க்கையும் முடிவுக்கு வரட்டும் என்று மகனுக்கு உத்தரவிட்டான்.

ஒரு வருஷம் முடிந்தது விட்டது. மன்னனின் மகன் தன் தந்தையை பன்றி கூட்டங்களில் தேடி அலைந்தான். இறுதியில் ஒரு காட்டில் சேறு நிறைந்த குட்டை ஒன்றில் தன் தந்தையை அடையாளம் கண்டான்.

அந்த பன்றி ஒரு பெண் பன்றியுடன் சேர்ந்து ஆறு குட்டிகளை  ஈன்று இருந்தது.  அதை கொள்ள தன் வில்லை எடுத்தான்.  உடனே பன்றியாக இருந்த மன்னன் மகனிடம் ஓடி வந்து கெஞ்சியது.

மகனே என்னை கொள்ளாதே.  இந்த வாழ்கையும் எனக்கு பிடித்திருக்கிறது.  இதோ இவள் தான் உன் சிறிய தாய்.  உனக்கு ஆறு சகோதரிகள் இருக்கிறார்கள்.  நான் சந்தோசமாக இருக்கிறேன்.

நீ நாட்டை ஆட்சி  செய் என்றது.  மகன் தலை குனிந்த படியே திரும்பினான்.

காதல் ரொமான்ஸ் ரெண்டும் ஒன்றா?

கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தில் மட்டும் இல்லை.  மனித வாழ்க்கையிலும் உண்டு.   அன்பை கொடுத்து அன்பை வாங்குவதுதான் வாழ்க்கை.  அன்பில்லாத மனசு அரக்கனுக்கு சமம்.

சிறியவர்கள் பெரியவர்கள் மேல் வைப்பது அன்பு.  பெரியவர்கள் சிறியவர்கள் மேல் வைப்பது பாசம்.  ஆண் பெண் இருபாலாருக்கு  இடையே வருவது நேசம். அதைத்தான்  காதல் என்கிறார்கள்.

காதல் என்பதே கவனித்தல் என்றுதான் அர்த்தம்.  காணமல் போன நம்மை வேறு ஒருவரிடம் கண்டு பிடிப்பது காதல் என்பார்கள்.  மனித வாழ்க்கையில் இந்த காதல் மட்டும் இல்லாமல் போயிருந்தால்,  மனிதன் மிஷினாக தான் இருந்திருப்பான்.

தன்னை அழகு படுத்தி கொள்ள ஆசை வராது.  அலங்கரித்து கொள்ள நாட்டம் இருக்காது.  என்னை பொறுத்தவரை காதல் என்பது தன்னை நேசிக்க வைப்பது.

காதல் மாதிரியே ரொமான்ஸ் என்பதும் தவிர்க்க முடியாத ஓன்று.  ரொமான்ஸ்க்கு அர்த்தம் கேட்டேன் என் தோழியிடம்.  அது கட்டில் சமாச்சாரம் என்று கண்ணடித்தாள்.  

பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள்.  இது தவறு.  

சரி.... காதலும் ரொமான்ஸ்சும் ஒன்றா அல்லது இரண்டும் வேறு வேறா?

ஒன்றோடு ஓன்று இனைந்தது.  

காதல் என்பது உணர்ச்சி மயமானது. உந்துதல் சக்தி நிறைந்தது.  தான் தன் சுகம் என்ற கோணத்தில் யோசிக்க வைப்பது.  தனக்கே தனக்கு என்று நினைக்க வைப்பது.  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பார்ப்பது.

ரொமான்ஸ் என்பது அப்படி அல்ல. வேடிக்கை, வினோதம், சிரிப்பு, சந்தோசம் நிறைந்தது.  அய்யோடா..... என்று திகைக்க வைப்பது.  காதல் வானில் சிறகுகள் விரித்து, வான வீதியில் பறக்கவா என்று, சொல்லாமல் சொல்ல வைப்பது.

காதலிக்க நேசம் நிசமானது என்று  தெரிந்தால் போதும். ஆனால் ரொமான்ஸ் அப்படி அல்ல.  இங்கு பேச தெரிய வேண்டும்.  சின்ன விஷயத்தை  சினிமா படம் போல், விவரிக்க தெரிய வேண்டும்.

நேற்று நீலக்கலர் சுடிதார் போட்டு இருந்தே தெரியுமா? சூப்பர்.  அப்படியே வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி இருந்தே.  அதிலும் காது ஓரத்தில் குத்தி இருந்த ரோஜாப்பூ.....அடடா... என்ன சொல்றதுன்னே தெரியலை  கலக்கிட்டே போ.  கலவரப்படுத்த தெரிய வேண்டும்.

நான் ரோட்டில் நடந்து வந்துகிட்டு இருந்தேனா...எதிர் பக்கம் போகலாம்னு நினைச்சேன். டக்குன்னு ரோட்டை கிராஸ் பண்ணினேன்.  திடீர்ன்னு ஒரு கார் வேகமா வந்துடிச்சு.

அய்யய்யோ... அப்பறம்.

நான் டக்குன்னு கட் பண்ணி ஓரத்திலே விலகிட்டேன்.  இப்படி விவரிக்க தெரிய வேண்டும்.  இவர் கிட்டே பேசிக்கிட்டு இருந்தா நேரம் போறதே தெரியலை என்று நினைக்க வைக்க வேண்டும்.

அடேய் ... என் ராஜ குமாரா.. அப்படியே என்னை அள்ளிக்கோ,  கட்டி பிடி, இறுக்கி அணை,  மூச்சு முட்டுற மாதிரி நெருக்கு என்று உருக வைக்க வேண்டும். 

இன்று பெரும்பாலும் வாழ்க்கை கசந்து போவதற்கு என்ன காரணம்?  பெரும்பாலான மன முறிவுகளுக்கு காரணம் தான் என்ன? 

எதிலும் ஒட்டுதல் இல்லாதவர்கள்.  நான் அப்படித்தான் என்று ஒரு தலை பச்சமாக நினைப்பவர்கள். நீதான் புரிஞ்சு நடந்துக்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

ஒரு நாட்டின் மீது குண்டு வீசி விட்டு,  பின் உட்க்கார்ந்து பேசி கொள்ள முடியும் என்றால், ஒருவரோடு ஒருவர் பேசி பழகியவர்கள், ஒரே வீட்டில்  இருந்து குடும்பம் நடத்தியவர்கள், மன வேற்றுமையை தீர்க்க முடியாதா?

பொதுவாக உறவுகள் மேம்பட பாராட்டும் பரிசும் முதல் இடத்தில் இருக்கிறது.  மனைவியை சந்தோசப்படுத்த வைர முக்குத்திதான் வேண்டும் என்றில்லை. 

இன்னைக்கு நீ வச்ச ரசம் சூப்பர்ன்னு சொல்லிபாருங்கள்.  சந்தனகலர் புடவையில கலக்குற போன்னு வர்ணித்து பாருங்கள்.   சும்மா நாய் குட்டி மாதிரி சுத்தி சுத்தி வரும்.

ஒரு உண்மையை சொல்ல போனால்..  மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

நான் உன்னை நேசிக்கிறேன்... நீ என்னை நேசிக்கிறாய்...பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறோம் என்று நினைப்பவர்கள்.

நான் 100 % சுத்தமானவன்.  என் அன்பு உண்மையானது.  நீ அப்படி அல்ல.  போலியாக பழகி, போலியாக சிரித்து,  போலியாக வாழ்பவர்கள் என்று நினைப்பவர்கள்.

இன்னும் சிலர் உன் அன்பு நிஜம். அதில் போலி இல்லை.  என்றாலும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.  என்று நினைப்பவர்கள்.

இன்னும் சிலர் என்னிடம் இருந்து என்ன வேண்டும்?  உன்னிடம் இருந்து என்ன தருவாய் என்று ஆதாய கணக்கு பார்ப்பவர்கள்.

நீங்கள் எந்த ரகம்?

நீங்கள் முதலாம் வகை என்றால் சபாஷ்.

இரண்டாம் வகை என்றால் உங்களுக்களுக்கு என் அனுதாபங்கள். 

முன்றாம் வகை என்றால்.... நீங்கள் திருந்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கடைசி வகை என்றால் இது வாழ்க்கை.  வியாபாரம் அல்ல.     


Friday, 2 March 2012

நாலு வரியில் நச்சுன்னு சொல்லுங்க.

என் அன்பிற்கினிய உறவின நண்பர்களே...  வணக்கம்.

டிசம்பரில் துவங்கப்பட்ட jothida sudaroli .blogspot .com  இன்றுடன் 76 நாட்களை தொடுகிறது.  

இடைப்பட்ட இந்த நாட்களில் பல பதிவுகளை உங்களுக்கு தந்திருக்கிறேன்.  இதுதான் இப்படித்தான் என்று இல்லாமல் எல்லா தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுத ஆர்வம் இருக்கிறது.

எதிர் காலத்தில் இது சாத்தியமாகும்.  எதிர் வரும் மார்ச் 25 இல் 100 ராவது நாளை தொடபோகிறது இந்த வலை தளம். 

வலை தளத்தை பற்றி உங்கள் கருத்துக்களை நாலு வரியில் நச்சுன்னு சொல்லுங்க.  அது உங்கள் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தையாக இருக்க வேண்டும்.  

அந்த கருத்துக்களை sreesundhari @gmail .com என்ற மின் அஞ்சலுக்கு,  உங்கள் புகை படத்துடன் இணைத்து அனுப்பி வையுங்கள்.  

மார்ச் 25 இல் உங்கள் கருத்துக்கள்,  உங்கள் புகைபடத்துடன் blogil  வெளியாகும்.  இதுவரை ஆதரவு தந்த நண்பர்களுக்கும், எதிர் காலத்தில் இந்த வலை தளத்துடன் இணைந்து பயணிக்க போகும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.   மறக்காமல் அனுப்புங்க. 



சரி...  வந்ததுக்கு இரண்டு நல்ல கருத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

what  happens in 24 hours ?
your heart  beats 103689  times
your blood travels 168000000 miles
your muscles move 780 times
your hair grows ௦.01714


helth tips
1 apple / day = no doctor
1 lemon / day = no fat
1 ege / day = no cancer
1 cup milk / day = no bone problems
3 litter water / day = no diseases

Thursday, 1 March 2012

சிந்திக்க சில நிமிடம்

ஆடு ஊடாடிய காடு 
அதர்மன் உறவாடிய வீடு
உழுது அறாத வயல்
எழுதி பார்க்காத கணக்கு 
அடிக்கடி அப்பன் விட்டுக்கு போகும் பெண்
இது எதுவமே சரியாக வராது.

வெள்ளாடு இருக்கே ... ஒரு தோட்டத்துக்குள்ளே நுழைஞ்சா அந்த தோட்டத்தையே அழிச்சுடும்.   

கெட்ட சிந்தனை உள்ளவன் ஒரு வீட்டில் பழகினால் எப்படியாவது அவர்களுக்கு தீங்கிழைத்து விடுவான்.

விவசாயம் செய்றோம்.  முதலில் என்ன செய்யணும்.  வயலை உழனும்.  கலை புல்லின் வேர் அறுந்து போகிற அளவிற்கு ஆழமா உழுது பின் விதை தூவனும்.

அப்பத்தான் விவசாயம் நல்லா இருக்கும்.

அது மாதிரி எந்த செலவாக இருந்தாலும் அதை எழுதி பார்க்கணும்.  அப்பத்தான் வரவு செலவு சரியாய் இருக்கும்.  

சில பேர் நிறைய சம்பாதிக்கிறேன், ஆனால் சேமிக்கவே முடியலைன்னு புலம்புவாங்க.   அவங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?  அவர்களின் அன்றாட செலவுகளை எழுதி பார்க்கணும்.  

ஒரு டி குடிச்சாலும் அந்த கணக்கையும் எழுதுங்க.  மாதம் முடிஞ்சதும்  அந்த கணக்கை பாருங்க.  இதுல எது தேவையான செலவு,  எது தேவை இல்லாத செலவுன்னு பாருங்க.

அதில் தேவை இல்லாத செலவை இந்த மாதம் செய்ய கூடாதுன்னு ஒரு  முடிவுக்கு வாங்க.  செலவு குறையும். 

அப்பறம்.... ஒண்ணான் தேதி சம்பளம் வாங்குறிங்க.  உங்க முதல் செலவு என்னவாக இருக்கும்.

இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.  இனிமேல் உங்க முதல் செலவு சேமிப்பா இருக்கணும்.  

புரியலையா... மாதம் 100 . 200  அது என்ன தொகை என்பது உங்க விருப்பம்.ஆனால் கட்டாயம் உங்க வங்கி சேமிப்பு கணக்குல போட்டே ஆகணும்னு ஒரு முடிவுக்கு வாங்க.  

இது அவசர தேவைக்கு போய் எடுக்குறது இல்லை.  அவசிய பட்டா மட்டும் எடுக்கனும்னு ஒரு முடிவுக்கு வாங்க.  உங்க கிட்டே ஒரு சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும்.  சரியா? 

ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகுது.  அப்பா வீட்டு சிந்தனை இருக்கும்தான்.  புதிய இடம், புதிய சூழ்நிலை, புதிய நபர்கள்,  அது பழகிக்க கொஞ்ச நாள் ஆகும் தப்பில்லை.  

ஆனால்...  சும்மா சும்மா எங்க அப்பா வீட்டுக்கு போறேன்னு ஒரு பொண்ணு போனா.... அது சரியாய் வராது. 

ஏன்னா.... பொண்ணு பஸுல போயிருக்கும்.  அந்த களைப்புல வீட்டுக்கு போகும்.  பொண்ணோட அம்மா பார்பாங்க.... என்னம்மா.. ஒரு மாதிரியா இருக்கே.  உன் மாமியார் எதுவும் சொன்னாளா.  

இல்லைம்மா... 

இருந்தாலும் கவனமா இரு.  நான் கல்யாணத்தப்பவே  கவனிச்சேன்.  அது கொஞ்சம் சிடு முஞ்சு பொம்பளை.  எதாவது சொன்னா இடம் கொடுத்துடாதே.  வெடுக்குன்னு கேட்டு விட்டுடு.  

உன் புருஷன் எப்படி?

உன் பேச்சை கேட்குறாரா... இல்லை... அம்மா பிள்ளையாவே இருக்காரா? இப்படி எதையாது ஒன்னை சொல்லி அந்த பொண்ணு மனசை கலைச்சு விட்டுவாங்க.  

அதுனால புகுந்த விட்டுக்கு வந்த பொண்ணு, பொறந்த வீட்டுக்கு போகணும்னா ஒரு காரணம் இருக்கணும்.  ஆரம்பத்திலே சரி.  அப்பவும் விட்டுக்கார் இல்லாமல் தனியா போகவே கூடாது.  அப்ப தான் அந்த பொண்ணு ஒழுங்கா குடும்பம் நடத்தும்.

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...