ads

Thursday, 19 December 2013

பேஸ்புக்’ தகவலால் அடையாளம் கண்டுபிடிப்பு!!

சவுதி அரேபியாவில் சுயநினைவிழந்த தமிழர் ‘பேஸ்புக்’ தகவலால் அடையாளம் கண்டுபிடிப்பு!!



விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, போய்குனம் பகுதியை சேர்ந்த தணிகைவேலு (33) சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். அவர் திடீரென மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு நினைவுத் திறனை இழந்துவிட்டார்.

நினைவுத் திறனை இழந்த தணிகைவேல் சவுதியில் உள்ள ஜெட்டாவில் இந்திய தூதரக அலுவலகம் முன் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததால் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சுயநினைவிழந்ததால் அவர் யார் என்ற விவரம் தெரியாமல் தவித்த அதிகாரிகள் அவரை எப்படி தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது என திணறிவந்தனர்.

பல்வேறு முயற்சிகளுக்குபின் தூதரக அதிகாரிகள் செந்தமிழ் நல மன்றம் என்ற தமிழ் அமைப்பை அணுகினர். அவர்கள் அவரது தற்போதைய புகைப்படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டனர். 

அவரது புகைப்படத்தை 8000 பேர் பகிர்ந்துள்ள நிலையில் அதில் ஒருவர் அவரை கண்டுபிடித்து, அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் என அரபு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தணிகவேலு மனைவியிடம் அவரது விசாவின் நகல் இருந்ததையடுத்து, உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகள், சவுதி தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவரை இந்தியாவிற்கு அனுப்ப ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்திய பணியாளர்கள் அவரின் மருத்துவ செலவையும், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செலுத்தவேண்டிய அபராதம் மற்றும் இந்திய பயணத்திற்கான விமான கட்டணத்தையும் செலுத்த முன்வந்தனர். 

இந்திய தூதரக அதிகாரிகள் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதுவரை அவரை அங்குள்ள மருத்துவமனையில் வைத்திருக்க இந்திய தூதரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...