ads

Wednesday, 18 December 2013

கிட்லருக்கே தண்ணி கட்டிய நேதாஜி !!



ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரைச் சந்திக்க பெர்லின் சென்றிருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஹிட்லரின் மாளிகையில் அவரது உதவியாளர்கள் நேதாஜியை வரவேற்று அழைத்துக் கொண்டுபோய் ஓர் அறையில் உட்காரச் சொன்னார்கள். அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் சுபாஷ் சந்திரபோஸ்.

யாரையும் அவ்வளவு எளிதில் நம்பவோ, சந்திக்கவோ மாட்டாராம் நாஜிகளின் தலைவரான அடால்ப் ஹிட்லர். தன்னைப் போலவே உருவமுள்ள மூன்று, நான்கு டூப்புகளை எப்போதும் தன்னைச் சுற்றி வைத்திருப்பாராம். சுபாஷ் சந்திரபோஸ் அமர்ந்திருந்த அறைக்கு அடால்ப் ஹிட்லர் போன்ற தோற்றமுடைய டூப் ஒருவர் வந்தார்.

அங்கிருந்த ஏதோ ஒரு பொருளைக் காட்டி அதை வேறு இடத்தில் மாற்றி வைக்கும்படி அங்கிருந்த அதிகாரி ஒருவருக்குக் கட்டளை இட்டுவிட்டு அகன்றார் அவர். எந்தவிதச் சலனமுமில்லாமல் நேதாஜி அதைப் பார்த்தும் பார்க்காமல் தனது புத்தகத்தில் மூழ்கி இருந்தார். ஹிட்லர் போலவே தோற்றமுள்ள இரண்டு, மூன்று டூப்புகள் அந்த அறைக்கு வந்தார்கள்.

ஒருவர் நேதாஜியின் எதிரிலேயே அமர்ந்தார். அப்போதும் சலனமே இல்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டார் நேதாஜி. வேறொருவராக இருந்தால், ஹிட்லர் என்றாலே பயத்தில் நெளிவார்கள். எழுந்து நின்று சல்யூட் அடிப்பார்கள். குனிந்து வணங்குவார்கள். வந்திருந்த நபர் புன்னகை புரிந்துவிட்டு அகன்று விடுவார்.

எதையுமே சட்டை செய்யாமல் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் அந்த இந்தியரைப் பார்த்து ஹிட்லரின் உதவியாளர்களும், உளவுத் துறையினருமே வியப்பில் ஆழ்ந்து விட்டனர். இவற்றைப் பற்றி ஹிட்லரிடம் சென்று தகவல் அளித்தனர். கடைசியாக ஹிட்லர் வந்தார். சுபாஷ் சந்திரபோஸின் தோளைத் தொட்டார்.

தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டு எழுந்த சுபாஷ் சந்திரபோஸ், “ஹலோ மிஸ்டர் ஹிட்லர்’ என்று கைகுலுக்கத் தனது கரங்களை நீட்டியபோது, அடால்ப் ஹிட்லருக்கே அதிர்ச்சி. “”எப்படி நீங்கள் நான்தான் ஹிட்லர் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள்..? என்று கேட்ட ஹிட்லரிடம், நேதாஜி சுபாஷ்போஸ் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்- எனது தோளில் கையை வைக்கும் தைரியம் வேறு யாருக்கு வரும்..?

ஒரிஜினலுக்கும் டூப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடக் கண்டுபிடிக்கத் தெரியாதவன் போராளியாகவும், தலைவனாகவும் இருக்க முடியாது!” அனைவரும் “ஹெய்ல் ஹிட்லர்!’ என்ற முழக்கத்துடன் சல்யூட் அடித்துக் குனிந்து வணக்கம் தெரிவிக்கும் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், முதன்முறையாகக் குனிந்து வணக்கம் செலுத்தி நேதாஜி சுபாஷ்போûஸ வரவேற்றுத் தனது அறைக்கு அழைத்துச் சென்றார்…!

நன்றி குருவி 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...