ads
Monday, 11 June 2012
Sunday, 10 June 2012
சைபர் கிரைம்
இணையதளங்களின் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. நட்பு வட்டம் பெருகி விட்டது.
உலகத்தின் எந்த மூளையில் இருந்தாலும் அந்த கணமே தொடர்பு கொள்ள பல வழிகள்.
இன்று பேஸ்புக் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.நல்ல நட்பை பெறுகிற இதில் சில தீய சக்திகளும் இருக்கிறது.
ஆபாச படங்கள் அனுப்புவது. விடியோக்கள் அனுப்புவது. ஆபாச வக்கிர சாட்டிங்க்க்கு அழைப்பு விடுப்பது என்று சிலர் தொடர்ந்து செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எப்படி தடுப்பது என்று புரியாமல் இருக்கலாம். அல்லது சரியான பாடம் புகட்டவேண்டும் என்று கூட நினைக்கலாம்.
ஆனால் எப்படி அதை செய்வது. யாரிடம் புகார் தருவது என்பது புரியவில்லையா? இதோ உங்களுக்காக....
உங்களுக்கு தொல்லை தரும் நபர் எதாவது ஒரு போலியான முகவரியில் இருக்கலாம். அல்லது போலியான புகைப்படத்திற்கு பின்னே ஒளிந்திருக்கலாம். அதை பற்றி நீங்கள் கவலை படவேண்டாம்.
உங்களுக்கு அவர் அனுப்பிய செய்திகள் உங்களிடம் இருக்கும்.அந்த பக்கத்தை புக் மார்க் செய்து வையுங்கள்.
செல்பொன்னில் இருந்து தகவல் அனுப்பினால் அவரின் நெட்வொர்க் தொடர்பான எந்த செய்தியையும் மறைக்க முடியாது.
கம்புட்டர் மூலம் செய்திகள் அனுப்பினாலும் எங்கும் ஓடி ஒளிய முடியாது.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீஸுக்கு தகவல் சொல்வது.
இதற்காக நீங்கள் போய்த்தான் புகார் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடிதம் மூலமாகவோ, அல்லது இமெயில் மூலமாகவோ நீங்கள் புகார் சொல்லலாம். உடன் நடவடிக்கை எடுக்க படும்.
அந்த முகரியை கிழே தருகிறேன். உங்களுக்கு தொல்லை தரும் இணையதள கொசுக்களை ஒழிக்க இது ஓன்று தான் வழி. முகவரி இதோ
Cyber Crime Cell
CB, CID
Chennai.
E-mail: cbcyer@tn.nic.in
Friday, 8 June 2012
இறைவன் எங்கிருக்கிறான்?
புராணங்கள் பதினெட்டு என்பர். அந்தந்த தெய்வங்களின் பெருமையை நிலை நாட்டுவதற்காக புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன.
அக்கதையில் கூறப்பட்டுள்ள மையக் கருத்துகளில் பல உண்மைகள் பொதிந்துள்ளன. நாம் ஒரே ஒரு கதையை மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். உலகையும் உலக உயிர்களையும் இயக்குகிற மூர்த்திகள் மூவர்.
ஒரு சமயம் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் தானே பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. யார் பெரியவன் என்ற போட்டியில் இருவரும் சிவனிடம் சென்று தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள்.
நீதிக்கரசர் சிவன் இருவருக்கும் சோதனை வைக்கிறார். தனது அடியையும், முடியையும் யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே சிறந்தவர் என்பது தான் போட்டி.
திருமால் பன்றி உருவம் எடுத்து பூமியை துளைத்து கொண்டு போகிறார். பிரம்மனோ அன்னம் வடிவெடுத்து மேலே போகிறார்.
திருமால் பாதாளம் வரை போயும் திருவடியை காணாமல் வந்து தந்து தோல்வியை ஒப்பு கொள்கிறார்.
மேலே சென்ற பிரம்மாவோ சிவனின் முடியை காணாமல் தாழம் பூவை துணைக்கழைத்து பொய் சாட்சி சொல்ல வைத்து, சிவனின் முடியை பார்த்ததாக பொய் கூறி அதற்கான தண்டனையை பெறுகிறார். இது கதை.
நமது ஹிந்து மதத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் சிலர். பொய்யையும் புனை கதைகளையும் பரப்பி, தம்மையும் தன் இனத்தையும் வளர்த்து கொண்டவர்கள் சிலர்.
அனல்வாதம் புனல்வாதம் செய்து பொது தொண்டையே தம் வாழ்க்கையாக மாற்றி ஹிந்து மதத்தின் பெருமையை நிலை நாட்டி கொண்டவர்கள் பலர்.
மிக மிக அதிகமாக படித்து விட்டு வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் பேசி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, குழப்பிய குட்டையில் மீன் பிடித்தவர்கள் சிலர்.
பதினெண்சித்தர்கள், இராமலிங்க சுவாமிகள் போன்று உலக மக்களுக்கு உண்மையை உணர்த்தி அவர்களை நல வழிப்படுத்த வந்தோர் சிலர்.
இப்படி ஏராளமான பிரிவினரை நம் இந்து மதத்தில் காணலாம். இவர்கள் அத்தனை பேருமே இறைவனை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பாப்போம்.
இறைவன் எல்ல இடத்திலேயும் ஒளிவெள்ளமாக நிறைந்திருக்கிறான் என்கிறார் தாயுமானவர்.
அவன் ஆகாயமாகவும், பூமியாகவும், காற்றாகவும், ஒளியாகவும், நம் உடம்பாகவும், உடம்பினுள் உறைந்திருக்கிற உயிராகவும் அனைத்துமாய் இருக்கின்றான் என்றார் மாணிக்கவாசகர் பெருமான்
எல்லா உலகங்களையும் படைத்தும் நடத்தியும் அழித்தும் ஆகிய முத்தொழில்களை விளையாட்டுபோல் செய்கிறவனே இறைவன் என்கிறார் கவிசக்கரவர்த்தி கம்பன்.
ஆதியும் நடுவும், முடிவுமாய் நின்றவன் என்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வாரின் பாரதம்.
ஆதிசங்கரரின் அத்வைத கொள்கையும் இதைத்தான் வலிவுருத்துகிறது.
இதைதான் சித்தர்களும் கடுவெளிக்கு முடியில்லை. அடியும் இல்லை என்றார்கள்.
அப்படியானால் இறைவன் என்பது யார்?
ஒரு வேலை பிரபஞ்சமாக இருக்குமோ.
இனி பிரபஞ்சத்தை பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கிறது.
அதன் அணுக்கரு மாற்றம் அடைந்து அது பல வாயுக்களாக பெருகி பின்னர் விரிவடைந்து பின்னால் இறுகி திடீர்ரென்று பெரிய வெடிப்பாக வெடித்து இப்பிரபஞ்சம் உருவாயிற்று என்கின்றனர்.
இதை BIG BANK THEROY என்பார்கள். இந்த பிரபஞ்சத்தில் ஆயிரகணக்கான அண்டங்களை தன் தொலைநோக்கியால் கண்டறிந்தவர் ஹப்பின் என்ற விஞ்ஞானியாவார்.
அவர் இந்த பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை அது ஆதி அந்தமற்றது.
பிரபஞ்சம் தோன்றுகிறது வளர்கிறது பின் மறைகிறது. இப்பிரபஞ்சம் நிரந்தரமானது, அது எல்லையில்லாதது என்கிறார் விஞ்ஞானி ஹாய்ஸ்.
இப்பிரபஞ்சம் எப்போது தோன்ற்யது?.
எப்போது முடியும்?
இப்பிரபஞ்சத்தின் எல்லைஎது ?
எங்கே ஆரம்பம்?
எங்கே முடிவு?
இதுவரை எந்த விஞ்ஞானமும் சரியான தீர்வை சொல்லவில்லை. விஞ்ஞானிகள் சொல்கின்ற கருத்துகள் அனைத்தும் உத்தேசமானதே அன்றி அவை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் அல்ல.
அடிமுடி கதைக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பு உண்டு..
நாம் அனுபவத்தில் ஒரு நாளில் பாதியை பகலாகும். மீதிப் பாதியை இரவாகவும் காண்கிறோம்.
தமிழ்நாட்டில் எல்லா பஞ்சாங்கங்களிலும் சூரியன் உதயம் சூரியன் மறைவு என போட்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் சூரியன் தோன்றுவதும் இல்லை. மறைவதும் இல்லை. இதுதான் நிரந்தரமான உண்மை.
அப்படியானால் சூரியன் தோற்றமும் மறைவும் பொய்யா? இல்லை. அதுவும் உண்மை எப்படி
1 .சூரியன் தோற்றம் மறைவு -ஒரு தற்காலிக உண்மை.
2 .சூரியன் என்றைக்கும் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை. இது நிரந்தர உண்மை.
இதைப்போல் இப்பிரபஞ்சம்தான் கடவுள், கடவுள்தான் பிரபஞ்சம் என்பது தான் நிலையான உண்மை. இதுதான் ஆன்மிகத்தில் முதல் நிலை.
அப்படியானால் நமது மும்முர்த்திகள்?
இப்பிரபஞ்சத்திற்கு நம் முன்னோர்களாலும், ரிஷிகளாலும், ஞானிகளாலும் கொடுக்கப்பட்ட ஒரு குறியிடு அல்லது உருவம்.
இந்த உண்மையை நீங்கள் உணரும் போது பெருமாளின் தரிசனம் கிட்டும். முப்பத்து முக்கோடி தேவர்களின் தரிசனம் கிட்டும்.
இல்லை எனில் நீங்களும் உங்களது ஜீவனும் பக்குவ நிலையை அடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதுதான் உண்மை.
PKS

Wednesday, 6 June 2012
hindu vedhas .com
அன்பு நண்பர்களே வணக்கம். என் நீண்ட நாளைய கனவான இணையதளம் hindu vedhas ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வெளிவர போகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமை பெற்றுவிடும் என நம்புகிறேன். இப்போதைக்கு உங்கள் பார்வைக்கு இப்போதைக்கு தமிழில்
இதை கிளிக் செய்யுங்கள்.
Tuesday, 5 June 2012
சிந்திக்க சில நிமிடம்
மனிதனாக பிறந்திட்டாலே தான், தன, சுகம்னு ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்க்கை அமைந்து விடுகிறது.
யாராவது எனக்கு சுயநலமே இல்லை, எப்ப பார்த்தாலும் பொது நலத்தை பற்றிதான் சிந்திக்கிறேன்னு சொன்னால், அதில் எள் முனை அளவு கூட உண்மை இல்லை.
ஏன்னா...எப்போ தான், தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் ஏற்ற சிந்தனை வெளிப்படுகிறதோ, அப்போதே சுயநலம் இருக்கிறது என்று பொருள்.
இதில் தவறு காண்பதோ, குற்றம் சொல்வதோ அல்ல நோக்கம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அன்பு என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறதே என்பதுதான் நம் முன்னால் உள்ள கேள்வி.
இதிகாசங்கள் சொல்கிறது. அள்ள அள்ள குறையாதது அமுதசுரபியாம்.
ஏன்? அன்பு கூடத்தான். அதை எல்லாருக்கும் தாராளமாக தருகிறோமா இல்லையே.
வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்,சொந்தக்காரன், ஜாதிக்காரன் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கி விடுகிறது அன்பு.
வீசுகிற காற்று வேறுபாடு பார்ப்பதில்லை. பெய்கிற மழை அனைவருக்கும் பொதுவாகத்தான் பெய்கிறது. ஆனால் மனிதர்கள்?
என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவே.. உன் வீட்டிற்கு வந்தால் என்ன தருவே ... சுயநல போக்குகள் தலை தூக்குவதால் உறவுகள் விரிவடைவதில்லை.
ஒருவர் அலுவல் நிமித்தம் வெளியில் போகிறார். ரொம்ப நாளா சந்திக்க முடியாத ஒரு நண்பர் எதேச்சையாக ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார். பார்த்ததும் பரவசம்.
கிட்டே நெருங்கி என்னப்பா எப்படி இருக்கே என்ன செய்றேன்னு கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்.
கிட்டே நெருங்கி என்னப்பா எப்படி இருக்கே என்ன செய்றேன்னு கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்.
அப்படியே சிமிமாவில் வர்ற பிளாஷ்பேக் மாதிரி பழைய நினைவுகளில் மூழ்கி விடலாம் என்று பார்த்தால், பாம்பை பிடிச்சு கையில் சுத்தி வச்ச மாதிரி கெடிகாரம் டயம் ஆகுது என்று சொல்லி பயம் காட்டி கொண்டிருக்கிறது.
நண்பரோடு அதிக நேரம் செலவிட முடியலை. அன்பை அவசரமாக முட்டை கட்டி வச்சுட்டு அப்பறம் பார்க்கலாம் என்று புறப்பட வேண்டிய சூழல்.
இதில் சிலர் விதிவிலக்காய் இருக்கிறார்கள். மற்றவர்களோடு பழக ஒரு எல்லைகோடு வைத்திருப்பார்கள்.
எதற்காக?
தான் பணபலம் படித்தவன், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவன் என்கிற எண்ணம். அதனால் தன்னை சுற்றி ஒரு வெளியை போட்டு வைத்திருப்பார்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.எந்தவிதமான எதிர்விளைவையும் தராத அன்பை மற்றவர்களுக்கு தர மறுப்பது கதையில் வரும் பணக்காரரின் செய்கை மாதிரி இருக்கிறது.
அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர். வீட்டிலே விலை மதிக்க முடியாத அளவிற்கு பொன்னும் பொருளும், தங்கமும் வைரமும் இருந்தது.
நாட்டில் திருடர்கள் தொல்லை அதிகம். அதனால் அதை பத்திரமாக பாதுகாக்கணும் என்று முடிவு செய்தார். உடன் தன் உதவியாளரை அழைத்து இந்த நகை மற்றும் ஆபரணங்களை வைக்க, உடனே ஒரு பெட்டகத்தை தயார் செய் என்று கட்டளை இட்டார்.
மறுநாளே கணமான இரும்பு தகட்டில் பெட்டி தயாராகி வந்தது. வந்தது கோபம் பணக்காரருக்கு.
ஏண்டா அறிவு கெட்டவனே... இந்த பொருள்கள் எவ்வளவு மதிப்பானது. அதன் தகுதிக்கு தகுந்த மாதிரி பெட்டகம் தயார் செய்ய வேண்டாமா? தங்கமும் தகரமும் ஒன்றாகுமா? தங்கத்தில் பெட்டி தயார் செய்ய சொல் பூட்டு சாவி கூட தங்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.
அடுத்த சில நாட்களில் தங்கத்தால் ஆன பெட்டி தயாரானது. தங்கத்தை வைத்து பாதுகாக்க, தங்கத்தால் ஆன பெட்டி.
திருடர்களுக்கு ரொம்ப வசதியாகி விட்டது. உடைத்து கொண்டிருப்பதை விட தூக்கி கொண்டு போவது சுலபம்.
இந்த பணக்காரரின் செய்கை போலத்தான் நாமில் பலர் அன்பு காட்டுவதில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறார்கள். அன்பு மிக பெற ஆயுதம்.
அதனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எவரிடம் வேண்டுமானாலும் அன்பு காட்டி பெற்று விடலாம்.
சரி இன்னொரு கதையை பாப்போம்.
ஊரின் கடைக்கோடியில் ஒதுக்கு புறமாக ஒரு மகான் ஒருவர் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். எப்போதும் இறை சிந்தனையில் வேலை தவறாமல் வேதம் ஒதிகொண்டிருந்தார்.
ஒரு நாள் இரவு குடிலின் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் ஒரு இளைஞன் கடும் குளிரில் நடுங்கியபடி பரிதாபமாக நின்றான்.
யாரப்பா நீ...என்ன வேண்டும். இந்த இடத்தில் நள்ளிரவில் தனியாக நிற்கிறாயே? என்று கனிவாக கேட்டார்.
சுவாமி...நான் ஒரு வழிப்போக்கன். இந்த பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. எனவே.. இரவு பொழுதை இங்கேயே கழித்துவிட்டு போகலாம் என்று வந்தேன்.தங்களை சிரமபடுத்தியதற்கு மன்னிக்கவும்.
சுவாமிஜி...எல்ல உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர் ஆயிற்றே. இவனுக்கு மட்டும் உதவாமல் போய் விடுவாரா என்ன? தாராளமாக தங்கிகொள் என்றார். பின் தன்னிடம் இருந்த உணவு பதார்த்தங்களை வழங்கி ஓய்வு எடுத்து கொள்ள சொன்னார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. காலை சிற்றுண்டி உணவு வழங்கி உபசரித்தார். இவ்வளவு கனிவாக உபசரித்த மகானிடம் தான் யார் என்பதை சொல்லாமல் போவது பாவம் என் நினைத்த அந்த வழிப்போக்கன் மனம் திறந்து பேசலானான்.
சுவாமி உயர்ந்த உள்ளம் படைத்த உங்களிடம் உண்மையை சொல்லாமல் போக மனம் இடம் தரவில்லை.
நான் ஒரு திருடன். நேற்றிரவு திருடிவிட்டு ஓடிவரும் போது தப்பித்து கொள்ளவே உங்கள் குடிலுக்குள் தஞ்சம் புகுந்தேன். என்னை மன்னித்து அருள வேண்டும் என்று கூறி விட்டு தன் வழியே போய் கொண்டிருந்தான் அந்த வழிப்போக்கன்.
அந்த மகான் மிகுந்த துயரத்திற்கு ஆளானார். மற்றவர்களிடத்தில் அன்பு பாராட்டுகிற அவர், தகுதியல்லாத ஒருவனுக்கு உதவிகள் செய்து உபசரித்து விட்டோமே என்று ஆண்டவனை தொழுதார்.
இறைவா.. என்னை ஏன் சோதிக்கிறாய். மற்றவர்களை துன்பபடுத்தி அவர்கள் பொருள்களை எல்லாம் அபகரித்து செல்லும் திருடனுக்கு தங்க இடம் கொடுத்து உன்ன உணவளித்து உபசரிக்கும் இழிசெயலுக்கு ஆளாக்கி விட்டாயே... ஏன்? என்று இறைவன் முன் கேள்வியை எழுப்பினார்.
அப்போது இறைவன் அவர் முன் தோன்றி அவனுக்கு வயது 35 ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் அவன் யாருக்குமே எந்த நம்மையும் செய்தது இல்லை.
இருப்பினும் 35 ஆண்டுகாலம் இந்த பூமியில் தங்கி இருக்கவும், உன்ன உணவும், உடுக்க உடையும் அளித்து மனிதனாக நடமாட விட்டிருக்கிறேனே என் மனநிலையை நீ யோசித்து பார்த்தாயா?
அவன் பிறப்பின் கர்மா அத்தகையது. அவன் அனுபவிப்பான். அதற்காக நீ அன்பு செலுத்துவதை நிறுத்தி விடாதே. பிறந்த எல்லா உயிர்களுக்கும் பூமியில் வாழ உரிமையுண்டு. அவன் செயலை பார்த்து நீ வருந்தாதே.
அன்பு காட்டுவதும், உதவி செய்வத்தும் உன்கடமை. அதை தவறாமல் செய். என்று சொல்லி இறைவன் மறைந்தார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அன்பு கட்டுவதில் பாகுபாடு தேவை இல்லை. அன்பே சிவம்.

நலம் தரும் நாட்கள்
நாளைய நாட்கள் நலமிக்கவைதானா அல்லது நலமிழந்த நாட்களா என்பதை கணிக்கும் இலக்கண அரிச்சுவடிதான் ஜோதிடக்கலை.
இதை அனைவரும் அறிந்திருந்தாலும் அதிலும் எங்கனம் அவற்றின் அளவை செய்வது என்பது அரிதான வித்தைதான். ஏனெனில் ஏணிப்படி சிறிது வழுக்கினாலும் எட்டி பிடிக்க வேண்டிய இடம் தடுமாறிவிடும், தடமாறிவிடும்.
ஒருவர் சிம்ம லக்னமாக அமைந்து சூரியன் ரிஷபத்தில் நின்று சந்திரனோடு கூடி அமாவாசையாக, செவ்வாயும் கூடி விட்டால் எத்தனை கிரகங்கள் இமயமென உயர்ந்து இருந்தாலும், நாட்கள் நலம் ஆக்குவதில்லை. நலம் தருவது போல் தோன்றி ஏமாற்றிவிடும்.
அதே போன்று விருச்சிகத்தில் சந்திரனும் கடகத்தில் செவ்வாயும் மேஷத்தில் சனியும் நின்று நீச்ச நிலையை உயர்ந்துவிடில் வேறு என்ன கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் நல்லது நடக்காது.
எப்போதும் இடைவிடாத பினித்தொல்லை, எவரையும் பார்த்து அச்சம் கொள்ளும் நிலை என்று அல்லல் பட வைக்குமே தவிர ஆனந்த பட வைக்காது.
மூன்று கிரகங்களும் அதற்கு மேலும் நீச்சமடைந்திடில் அந்த ஜாதகர் தத்தி தத்திதான் வாழ்வை மற்றவர் தயவால் நடத்தி செல்லும் நிலை ஏற்படும்.
அதிலும் செவ்வாய் சூரியனோடு இணைந்து இதில் ஓன்று நீச்சமடைந்திடில், இவர்களோடு புதனும் சேர்ந்து இருந்தால் தீய பழக்கங்கள் தலை எடுத்து அதில் இருந்து மீள முடியாத அடிமையாகிவிடும்.
மூன்று கிரகங்கள் உச்சம் அடைந்தால், அவர் என்னதான் இழிதான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உயர்வான வாழ்க்கையை அடைவது உறுதி. ஆனால் மற்றைய கிரகங்கள் நிச்சமடையாமல் இருக்க வேண்டும்.
சிலருக்கு இரண்டு மூன்று கிரகங்கள் நீச்சமுற்ற நிலையில் இருக்கும் போது, சிம்ம லக்னத்தில் உதித்து சூரியன் உச்சமானால் விசித்திரமான குணம் உடையவர்கள்.
அடங்கா கோபம், யாரையும் துச்சமாக நினைக்கும் சுபாவம், அலசிய போக்கு கொண்டவர்கள்.மற்றவர் பார்த்து பேசிய சில நிமிடங்களில் இவரின் அடங்கா குணத்தை பார்த்து விலகி விடுவார்கள்.
அதே போன்று 7 இல் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க பெற்றவர்கள் இழிவான நடத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் நல்ல நாட்கள் எது என்று கேட்டால் அவர்கள் சுதந்திரமாக அநீதி வழி அலையும் நாட்களே ஆனந்தம் என்பார்கள்.
கடக லக்கனத்தில் பிறந்து அங்கேயே குருவும் சந்திரனும் இணைந்து நிற்கிற நிலைமை ஏற்பட்டால், இந்த உலகத்தில் மிக உயர்வான நிலை என்று சொல்லாலாம்.
ராமபிரானுக்கு அந்த அமைப்பு என்று புராணங்கள் சொல்கின்றன.
எனவே..இனிய நாட்கள் அவரவர் கிரக நிலையை பொறுத்து உருவெடுக்கும். எனவே லக்னத்தையோ சந்திரனையோ குரு பார்வையையோ, அல்லது இணைவோ ஏற்பட வேண்டும்.
அந்த குரு உச்சம் பெற்று இருக்கா விட்டாலும் நீச்சமடைந்து இருக்க கூடாது.
பெண் இனத்தாருக்கு கடகத்தில் சனியோ, ராகு கேது செவ்வாய் ஆகிய தீய கிரகங்கள் நின்றிடில் வாழ்வில் எந்த சூழலிலாவது அவஸ்தைகள், அவமானங்கள், அல்லல் தொல்லைகள் என்று இருந்தே தீரும்.
சாதாரணமாக புதனும் குருவும் பரிவர்த்தனை நிலை ஏற்பட்டால் குறைபட்ட குசந்தைகள் பிறப்பார்கள் என்கிறது சாஸ்த்திரம்.
இவ்விதம் கணவன் மனைவிக்கும் இருந்தால் நிச்சயமாக உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறந்தே தீரும்.
அந்த நிலைபட்டவர்கள் விவாகத்திற்கு முன்பே அவ்வித நிலை இல்லாதவரை மணந்தால் ஒருவாறு தப்பிக்கலாம்.
அதே போன்று குழந்தைகள் பிறக்கும் சமயம் சுக பிரசவமா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை கூட ஜாதகத்தை பார்த்து சொல்லிவிடலாம்.
லக்கனத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை வலுவுடன் இருந்தால் சுகபிரசவமாக இருக்காது.
அதே போன்று லக்னத்திற்கு 8 லோ, அல்லது சந்திரனுக்கு 8 லோ மூன்று கிரகங்கள் இருந்தால் அந்த குழந்தை ஒரு வருடத்தை தாண்டாது. ஆனால் குரு பார்வை இருந்தால் தப்பிக்கலாம்.
பெண்கள் ஜாதகத்தில் 5 அல்லது 9 இடத்தில் இருந்தால் சனி செவ்வாய் ராகு கேது இவற்றில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் பிரசவம் சுகமாக ஏற்படாது.
ஸ்ரீமத் ஜெயவீரதேவா

Sunday, 3 June 2012
வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்
வசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள்.
வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம் ஆட்டி படைக்கிறது என்று பார்ப்போம்.
நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது, சிலர் குறுக்கு வழியில் கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.
ஒரு தாய் தன் மகன் மீது அன்பு செலுத்துகிறாள். அந்த அன்புக்கு போட்டியாக மருமகள் என்பவள் வந்து தன்னை உதாசீன படுத்தும்போது அவர்கள் இருவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவர அவள் கையில் கொண்டு வரும் ஆயுதம்தான் இந்த வசியம்.
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகளவாம் என்கிறார் பாரதிதாசன்.
அந்த கடை கண் பார்வை தனக்கு கிடைக்காத போது, அந்த இளைஞனின் கண்ணில் படுவதுதான் இந்த வசியம் என்கிற போர் ஆயுதம்.
ஒரு பெண் தன் கணவன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறாள். அவனுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு தானும் தன் குடும்பமும் சீரழிக்கப்படும் போது, என்ன விலை கொடுத்தாவது அவனை தன் வழிக்குள் கொண்டுவர அவள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த வசியம் என்ற A .K .47 .
பங்காளி பழிஎடுப்பான் என்பார்கள். பங்காளியால் மட்டும் அல்ல, மற்ற எதிரிகள் தொல்லையாலும், பாதிக்கபடுகிற பொழுது மனதளவில் பாதிக்க படுகிற போது, அவர்களை அழிக்க தங்கள் கையில் ஏந்துகிற ஒரு வெடிகுண்டு தான் இந்த வசியம்.
தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக முயற்சியே இந்த வசியம் எனப்படும்.
இதை அத்தனை பேருமே கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுபோன்ற குறுக்கு வழிகளை நாடி, அதனால் நன்மையோ அல்லது தீமையோ பெறவேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிற நபர்கள் மட்டுமே அந்த பக்கம் போகிறார்கள்.
நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான் வசியம்.
இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம். சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர் வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம், பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று ஆறு வகையாக பிரித்துள்ளனர்.
உலகம், பகைவர் மற்றும் விலங்கு வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும், அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர் வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும் பயன்படுத்தி உள்ளனர்.
வசியத்தை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது
1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி இவைகளை பற்றி ஆராய்வோம்.
மந்திரம்
குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே மந்திரம் எனப்படும்.
வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும் அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர எழுத்துகளுக்கு உண்டு.
நமது சித்தர்களும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின் ரகசியங்களும் அடங்கி இருந்ததை அறிந்திருந்தார்கள்.
நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.
இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும் பயன் படுத்தி உள்ளனர்.
ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது வசியதிற்கான முலமந்திரமாகும்.
இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள் சித்தர்கள்.
கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது. உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம் இந்திரன்.
வசிய ஆற்றலைத்தான் இன்றைய விஞ்ஞானம் மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.
எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை படுத்தி படிக்கும் போது நமது உடலில் மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும். இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று குறிப்பிடுவார்கள்.
தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம் தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின் மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது யந்திர முறையாகும்.
இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22 வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால் செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம் அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால் ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.
இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள் பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம் வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.
இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும். இது ஒரு முறை.
எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும் மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன. இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர முறையாகும்.
தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால் எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும் தராது.
தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின் பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை சிதற விட மாட்டார்கள்.
அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?
ஐயோ பாவம்..முறையாக உருவேற்றபடாத எந்த சக்கரத்திற்கும் சக்தி இல்லை.
நீங்கள் ஏமாறவும் வேண்டாம், ஏமாற்று காரராகவும் மாற வேண்டாம். நீங்கள் நீங்களாகவே வாழ முயற்சியுங்கள்.
P .K .S
Friday, 1 June 2012
சாமி ஆடுறாங்களே உண்மையா?
எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
ஒரு பிரிவினரின் குலதெய்வ பூஜை.
குலசாமி எது..?
மதுரை வீரன். அந்த பிரிவினரின் பங்காளி வகையாறாக்கள் ஓன்று கூடி சித்திரை மாதத்தில் விழா எடுப்பார்கள்.
இது ஒண்ணும் ஊரையே கூட்டி காட்டுகிற விழா அல்ல. அவர்கள் குடும்ப சகிதம் ஓன்று கூடுவார்கள், தங்களுக்கு வேண்ட பட்டவர்களை அழைப்பார்கள். வேண்டுதல் இருந்தால் ஆட்டு கிடா வெட்டுவார்கள்.
குலதெய்வ பூஜை என்றால் பூசாரியின் சாமியாட்டம் இல்லாமல் இருக்குமா. சாமி வந்துதானே கிடாவெட்ட வேண்டும்.
கடந்த சித்திரையில் வந்தது பூஜை. மூன்று கிடா வெட்டுவதாய் வேண்டுதல்.
ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சாமியாட்டத்திற்கு முன்பு மதுரை வீரன் கதையை உடுக்கை அடி பாடகர் சொல்வார். அது கிராமிய கலை நிகழ்ச்சி போல் கேட்க சுவாரிசயமாக இருக்கும்.
பூஜை ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்க, உடுக்கையடி பாடகர் கிடாவெட்ட சாமியை அழைக்க பாடுகிறார்.
யார் மேல் சாமி வருமோ அவர் தயாராக நிற்க, அவர் முகத்திற்கு முன்பு, ஒரு மண் சட்டியில் நெருப்பு வளர்ந்து அதில் சாம்பிராணி புகையை போட்டு, அந்த புகையை சாமியாட தயாரக நிற்றவரின் முகத்தில் பிடிக்கிறார்கள்.
ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அதாவது சாமி வரவில்லை. முயற்ச்சி தொடர்கிறது.
எவ்வவளவு நேரம்?
இரண்டு மணிநேரம் கடந்து விட்டது. அந்த ஆசாமி மீது சாமி வரவில்லை.
இது ஏதோ சாமி குத்தம், அதான் சாமி வரலை என்று வயதான பெரியோர்கள் முனுமுனுக்க தொடங்கி விட்டார்கள்.
இந்த இடத்தில தான் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கு. அவர் பெயர் தர்மலிங்கம். தி.மு. கவில் முக்கிய புள்ளி.
அவரும் அந்த பூஜைக்கு முக்கிய அழைப்பாளர். கறிசோறு என்றதும் குவாட்டர் சகிதம் வைத்துவிட்டார்.
கட்டிங்கை போட்டு கரி சாப்பாடுன்னா நல்லாதானே இருக்கும். ஆனால்.... நேரம் தான் ஆகி கொண்டிருக்கிறதே தவிர, கிடா வெட்டியபாடு இல்லை.
அதான் சாமியே வரலையே?
உடுக்கையடி பாடகர் பாடி பாடி களைத்தும் போய் விட்டார். ஒரு கட்டத்தில் அடித்த அடியில் உடுக்கையும் கிழிந்து விட்டது.
இப்போது வீரன் கதையை நிறுத்தி விட்டு தன் சொந்த கதையை பாட தொடங்க்கி விட்டார்.
உடுக்கை யல்லோ கிழிந்து போச்சு..
ஆமாம் ஆமாம் (இது பின் குரல் கொடுப்பவர் )
சாமி இன்னும் வல்லை.... வல்லை..
ஆமாம் ..ஆமாம்...
பார்த்தார் தர்மலிங்கம். இப்படியே போனால் கரி சாப்பாடு கிடைக்காது என்று யோசித்தவர் உடன் காரியத்தில் இறங்கினார்.
ஏய்..என்று சாமி வந்தது போலவே சத்தமிட்டு எழுந்தார். ரெண்டு குதி குதித்தார், அப்படியே ஓடிபோய் கிடா வெட்டும் கத்தியை எடுத்தார்.
சாமியாட நின்றவர் கையில் கொண்டு போய் கொடுத்து விட்டு.... மீண்டும் ஏய்...என்று பெரிய சவுன்ட் கொடுத்து விட்டு போய் சாய்ந்து விட்டார். அதாவது சாமி மலை ஏறிடுச்சாம்.
அப்பறம் என்ன சாமி உத்தரவு கிடைத்து விட்டது என்று கிடா வெட்ட பட்டு சமையல் தொடக்கி விட்டது.
அடுத்து....சாமியே வராதவருக்கு இப்போது அருள் வந்து விட்டது. அவர் குறி சொல்ல தொடங்கி விட்டார்.
ஏலே...முத்துசாமி...உன் பெரியகாளைக்கு ஆபத்துடா.
ஐயா.. சாமி.. என்ன சொல்றே? கறிவேப்பில்லை கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வைச்ருக்கேன். நீதான் சாமி காப்பாததணும்.
ஏய்.. அவன் என் குஞ்சுடா..நான் பாத்துகிறேன். எனக்கு என்ன செய்வே.
சாமி என்ன சொன்னாலும் செய்றேன்.
ஒரு திங்களுக்குள்ளே பறவையில பத்தும், உருளையில 108 ம் தருவாயாடா...
தர்றேன் சாமி.
போடா நான் பாத்துகிறேன் உன் பெரிய காளையை.
அந்த சாமியாடி மிஸ்டர் பொதுசனத்துக்கிட்டே பேசிய வசனம் தான் இது.
இப்ப சொல்லுங்க இந்த சாமி உண்மையா?
இந்த சாமியை விடுங்க. பொதுவா சாமியாடுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. மற்றும் நம்பிக்கை. இப்படி குறி சொல்லுபவர்களும், சாமியாடுபவர்களும் ஊருக்கு ஊர் பல்வேறு கெட்டப்பில் இருக்கிறார்கள். நம் ஆராட்சி அதுவல்ல. இது உண்மையா?
இது சுத்த கம்பக்...என்கிறார் பாரதிமோகன்.
அதெல்லாம் சும்மா. ஏமாற்று வேலை- குருமூர்த்தியின் கருத்து.
மூடநம்பிக்கை - இது பாலமுருகனின் அபிப்பிராயம்.
ஏமாற்றுவேலை - ஆனந்நாராயணனனின் பதில்.
சரியாய் தெரியலை - கவியின் கருத்து
மனுஷன் மேல வர சாமிக்கு கிறுக்கா- காவியா
இப்படி எல்லோருமே அரைகுறை நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். இருந்தும் இந்த மூடநம்பிக்கை முற்றிலும் மாறவில்லை.
பொதுவா சாமியடுறது என்பது பாதி பொய். மீதி பாதி என்பது ஒரு விதமான மன நோய் என்கிறார் மனநல மருத்துவர்.
மனம் அதீதமான ஒரு நம்பிக்கைக்கு உள்ளாகும் போது, தன்னை அறியாமல் ஒரு உணர்வில் உந்த படுகிறான். அதன் வெளிபாடுதான் ஆட்டம்.
ஆனால் அந்த உணர்வு ஒன்றிரண்டு நொடிகளில் மாறி விடும். அப்படி மாறாமல் இருந்தால் ஓன்று மன நோயாக இருக்க வேண்டும். அல்லது போலியாக நடிக்க வேண்டும். என்று அடித்து சொல்கிறார்.
ஆக அருள் என்பதும், சாமி விளங்குது என்பதும் போலியாக சித்தரிக்க படும் செய்தி. மிகைபடுத்தபடும் கற்பனை. அதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.
இப்ப சொல்லுங்க இந்த சாமி உண்மையா?
இந்த சாமியை விடுங்க. பொதுவா சாமியாடுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. மற்றும் நம்பிக்கை. இப்படி குறி சொல்லுபவர்களும், சாமியாடுபவர்களும் ஊருக்கு ஊர் பல்வேறு கெட்டப்பில் இருக்கிறார்கள். நம் ஆராட்சி அதுவல்ல. இது உண்மையா?
இது சுத்த கம்பக்...என்கிறார் பாரதிமோகன்.
| kurumoorthi |
அதெல்லாம் சும்மா. ஏமாற்று வேலை- குருமூர்த்தியின் கருத்து.
![]() |
| balamurugan |
மூடநம்பிக்கை - இது பாலமுருகனின் அபிப்பிராயம்.
![]() |
| aanadhanarayanan |
ஏமாற்றுவேலை - ஆனந்நாராயணனனின் பதில்.
![]() |
| kavi |
![]() |
| kavviya |
இப்படி எல்லோருமே அரைகுறை நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். இருந்தும் இந்த மூடநம்பிக்கை முற்றிலும் மாறவில்லை.
பொதுவா சாமியடுறது என்பது பாதி பொய். மீதி பாதி என்பது ஒரு விதமான மன நோய் என்கிறார் மனநல மருத்துவர்.
மனம் அதீதமான ஒரு நம்பிக்கைக்கு உள்ளாகும் போது, தன்னை அறியாமல் ஒரு உணர்வில் உந்த படுகிறான். அதன் வெளிபாடுதான் ஆட்டம்.
ஆனால் அந்த உணர்வு ஒன்றிரண்டு நொடிகளில் மாறி விடும். அப்படி மாறாமல் இருந்தால் ஓன்று மன நோயாக இருக்க வேண்டும். அல்லது போலியாக நடிக்க வேண்டும். என்று அடித்து சொல்கிறார்.
ஆக அருள் என்பதும், சாமி விளங்குது என்பதும் போலியாக சித்தரிக்க படும் செய்தி. மிகைபடுத்தபடும் கற்பனை. அதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.
Subscribe to:
Posts (Atom)
குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil
கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...