கண்கள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை/. கண்கள் காட்சிகளை காண மட்டும் பயன் பட வில்லை. நம் உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றிய முன்னறிவிப்பையும் தருகிறது.
அது எப்படி....
இப்படிதான்.
சிவப்பு மற்றும் எரிச்சல் கண்கள்
கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால், அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரத்தில் அலர்ஜியின் காரணமாகவும், கண்களுக்கு போடும் மேக் கப் செட்டில் இருக்கும் கெமிக்கல்களின் மூலமாகவும் வரும்.
அதுமட்டுமல்லாமல், கண்களுக்கு தேவையில்லாமல் கண்களுக்கான மருந்துகளை பயன்படுத்தினாலும் ஏற்படும்.
வெளிர் நிற கண்கள்-
வெளிரி நிறத்தில் கண்கள் இருந்தால், உடலில் அனிமியா முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறி. அதாவது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கண்கள் வெளிர் நிறத்தில் இருக்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள் நிற கண்கள்-
இந்த நிறத்தில் கண்கள் இருந்தால், உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காததால் ஏற்படுகிறது. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியலாம்.
வீக்கமான கண்கள்- கண்கள் வீக்கத்துடன் காணப்பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. அதுவும் தைராய்டிசத்தில் ஒன்றான, ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறியாக உள்ளது. ஆகவே அப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வறட்சியான கண்கள்-
கண்கள் வறட்சியுடன் காணப்பட்டால், உடல்நிலையில் குறைபாடு மிகுந்துள்ளதை காட்டுகிறது. மேலும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளது. இதனால் உடலில் நோய்கள் எளிதில் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த நிலையில் இருந்த தவிர்க்க, நிறைய தண்ணீரை பருக வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்ண வேண்டும்.
-வளர்மதி
-வளர்மதி
No comments:
Post a Comment