ads
Saturday, 31 August 2013
ஆசாராம் சாமியார் லீலை!!
ஆசாராம் சாமியார் இந்தூர் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் போலீசார் இந்தூர் ஆசிரமம் வந்துள்ளனர்,
ஆசிரமம் உள்ளே நுழைந்து கைது செய்யப்படலாம் என தகவல் பரவியுள்ளதால் இங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு தவறானது:
மகன்; ஆசாராம் சாமியார் மீதான குற்றம் தவறானது என்று அவரது மகன் நாராயண்சாய் இன்று மாலை 5 மணியளில் நிருபர்களை சந்தித்து பேசுகையில் கூறினார்..
இவர் மேலும் கூறுகையில்; ஆசாராம் மீதான குற்றச்சாட்டு தவறானது. அவர் குற்றமற்றவர், ஆசாராமுக்கு எதிராக சதி நடந்து வருகிறது. அவர் எங்கும் மறைந்து ஒளியவில்லை. இவருக்கு நரம்பியல் , ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னை இருக்கிறது. இவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். நிலைமை சீரான பின்னர் போலீசாரை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
வட இந்தியாவில் 350 க்கும் மேற்பட்ட இடங்களில ஆசிரமம் கொண்டுள்ள ஆசாராம் சாமியார் மீது இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள செக்ஸ் புகார் காரணமாக இவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் பல குழுக்கள் அமைத்துள்ளனர்.
நேற்று வரை எங்கு இருக்கிறார், எங்கு செல்கிறார் என தெரிந்து இருந்த நேரத்தில் இன்று முதல் இவர் எங்கே இருக்கிறார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயுள்ளனர்.
இதற்கிடையில் மத்திய பிரதேசம் இந்தூரில் சாமியார் இருக்கலாம் என கருதி ஆசிரமம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி., எஸ் எஸ். பி., மற்றும் எஸ். பி., தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவுக்குள் இவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனையொட்டி ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை சமாளிக்க போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் , குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமம் நடத்தி வரும் புகழ் பெற்ற சாமியார் ,ஆசாராம் . பல தொண்டர்களை கொண்டவராக இந்த ஆசிரம சாமியார் ஆசாராம் இருந்து வருகிறார் என்றால் அவரை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இவரது பேச்சை கேட்க திரளானவர்கள் ஆர்வமாக கூடுவதை பார்க்க முடியும். சமீப காலமாக சில புகார்கள் வந்தாலும் இவர் மீது பெரும் அளவில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக கொலை , நில அபகரிப்பு, மோசடியாளர்களுக்கு தஞ்சம் புக இடம் கொடுத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன. ஆனால் இவர் எதிலும் இதுவரை சிக்கவில்லை.
16 வயது இளம்பெண்:
இந்நிலையில் இவர் மீது 16 வயது இளம்பெண் ஒருவர் தன்னை செக்ஸ் தொந்தரவு செய்ததாக புகார் கூறியிருந்தார். டில்லியை சேர்ந்த இவரது பெற்றோர்கள் இந்த சாமியாரின் வழி செல்பவர்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் ஆசிரமத்திற்கு சாமியாரின் பிரசாரம் கேட்க வந்த போது சாமியாரின் தனி அறைக்கு வரவழைக்கப்பட்டதாகவும், இந்நேரத்தில் சாமியார் தவறாக நடந்து கொண்டதாகவும் அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
போதிய ஆதாரம் உள்ளது :
இந்த புகாரை விசாரித்த ஜோத்பூர் போலீசார் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது குறித்து நேரில் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் கமிஷனர் தெரிவித்திருந்தார்.
இவருக்கு நேற்று வரை ஆஜராக அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் சாமியார் தரப்பில் அவரது வக்கீல்கள் கால அவகாசம் கேட்டனர். இதற்கு போலீசார் மறுத்து விட்டனர். இதனையடுத்து இவர் சார்பில் குஜராத் கோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். இதனால் இவர் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிலை உருவானது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: இதற்கிடையில் இவர் தற்போது எந்த ஆசிரமத்தில் இருக்கிறார் என தெரியவில்லை. ஜோத்பூர் ஆசிரமம் முன்பு பத்திரிகையாளர்கள் , போட்டோகிராபர்கள் குவிந்தனர். இதனை பார்த்து ஆவேசமுற்ற சாமியாரின் ஆதரவாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆங்கில செய்தி சேனல் நிருபர்கள் சிலருக்கு இதில் மண்டை உடைந்தது. நிருபர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் மணீஷ்திவாரி, ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் கிடையாது. போலீசார் தனது பணியை செய்வர். அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். என்றார் முதல்வர் .
சாமியார் குறித்து மத்திய பிரதேச இந்தூர் எஸ்.பி., கோவித்ராவத் கூறுகையில் ஆசாராம் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இவரை விரைவில் கைது செய்வோம் என்றார்.
ஜோத்பூர் ஆசிரமத்திற்கு சீல்: இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து பக்தர்கள் வெளியேறுமாறு கேட்டுகொள்ளப்பட்டள்ளனர். இதனையடுத்து ஆசிரமத்தை போலீசார் சீல்வைக்கும் பணியில் ஈடுபடுவர் என தெரிகிறது.
சிறுமி தந்தை உண்ணாவிரதம்: சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் தந்தை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார். இந்த போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர் .
நன்றி : தினமலர் செய்தி
சிந்தித்த வேளையில்!!
அர்த்தம்
பொதிந்தது ஆலய வழிபாடுகள். ஆலயங்கள்
என்பது வாழ்வியல் நெறிகளை சொல்லித் தரும் கலைக் கூடங்களாக மட்டும் இல்லாமல், வெறும் அமைதி
குடில்களாக மட்டும் இல்லாமல், மனிதனின் மனச்சுமைகளை இறக்கி வைக்கும்
சுமைதாங்கிகளாகவும் இருக்கிறது.
ஆனால் சிலருக்கு
எந்த துயரமும் விலகுவதில்லை. கஷ்ட நஷ்டங்கள் தீருவதில்லை. வளச்சிப் பெற வேண்டிய வாழ்க்கை, திசை மாறிய கப்பல் மாதிரி திக்கற்றுப் போகிறது.
உடன் இறைவன் மேல்
கோபம் கொள்கிறார்கள். நான் பரிகாரங்கள்
செய்தேன். பூஜை விரதங்கள் இருந்தேன், ஆனாலும் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. பணமும், காலமும், நேரமும்தான் வீணாகி இருக்கிறது என்று
புலம்புகிறார்கள்.
என்ன செய்ய...
கருணை இல்லாதவன் இல்லை கடவுள். சிலருக்கு பரிகாரங்கள் உடனடி பலன் தருகிறது. சிலருக்கோ தாமதமாகிறது. வேறு சிலருக்கோ
பலிப்பதில்லை. அதற்கு கர்ம வினையே
காரணம்.
கோள்களின்
கோலாட்டத்தில் நாம் ஓர் அங்கம்.
நவக்கோள்கள்தான் நம்மை ஆள்கின்றன.
ஜோதிடத்தில் சொல்லப்படும் ராசி மண்டலம் தான் நாம் வாழும் பூமி. இந்த
பூமியையில் வாழும் மனிதனை கிரகங்கள் ஆட்டிப்படைக்கின்றன.
அதனால் பூஜைகள்
தற்காலிகமாக பலன் தராமல் போயிருக்கலாம். ஆனால் பலனே இல்லை என்று சொல்ல முடியாது.
ஒருவன் கத்தரி
செடி நடுகிறான். இன்னொருவன் மாமரம் நடுகிறான். வேறொருவன் புளியமரம்
வைக்கிறான். கத்தரி செடி நட்டவனுக்கு
அடுத்து சில மாதங்களில் பலனைப் பெற்று விடுகிறான்.
மாமரம் நட்டவன்
ஒன்றிரண்டு வருடங்களில் அதன் பலனை, காய்கனிகளை
பெறுகிறான். ஆனால் புளியமரம் நட்டவனால்
பலனை பெறமுடியாது. அவனது சந்ததிகள் தான்
அந்த பலனை பெறும்.
மரம் கதைதான்
பூஜைகளும், விரதமும். ஓருவர் செய்த கர்ம வினையின் பிரகாரம் பலன்கள்
தரும். ஒருவேளை இப்பிறவியில் பலன் தராமல்
போனால் அவர்களுடைய சந்ததிகளுக்கு பலன் தரும்.
அடுத்த பிறவிக்கு
அது அஸ்திவாரமாக அமையும். இதுதான்
வேதங்கள் நமக்கு சொல்லும் பாடம்.
நம்பிக்கையோடு இறைவனை தொழுவோம். நல்லது நடக்கும் நம்புவோம்.
வாழ்க வளமுடன்.
Monday, 26 August 2013
சீன பெருவிழா -1
மகாவிஷ்ணுவின் அம்சம் என்று வர்ணிக்கப்பட்ட புத்தர் பிறப்பால் ஹிந்து. ஆனாலும் அவரால் உருவாக்கப்பட்ட ஒரு மார்க்கத்திற்கு புத்த மதம் என்ற பெயர் வந்தது.
கடவுளை பற்றி பேசாத ஒரே மதம் புத்த மதம். கடவுள் இருக்கிறாரா தெரியாது. ஒரு வேளை இல்லாமல் இருக்கலாம்.
கடவுள் இல்லையா அதுவும் தெரியாது ஒரு வேளை இருக்காலாம். நம் கவலை அதுவல்ல என்று தத்துவ முழக்கம் செய்த புத்தர் பரப்பிய மதம் இன்று சீனாவில் அதிகம் பெயரால் பின்பற்றப்படும் மதம் என்ற பெருமையை பெறுகிறது.
சீனாவில் புத்த மதத்தை பின் பற்றினாலும் பல்வேறு சமய சடங்குகள் பின் பற்றப்படுகின்றன. நேற்று சீனர்களால் அனுசரிக்கப்பட்ட மத சடங்கின் பெயர் ஹங்க்ஹிரி ஹோஸ்.
இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்களை தேடி வருவார்கள் என்பது ஐதீகம். அவர்களை வரவேற்கும் பொருட்டு இந்த இனிய திருவிழா நடத்தப்படுகிறது.
அதோடு கெட்ட ஆவிகளின் தொல்லைகளை விலக்கும் நாளாகவும் அனுஷ்டிக்கிறார்கள். அப்படி நடத்தப்பட்ட ஒரு ஊர்வலத்தின் காட்சி தான் இப்போது நீங்கள் காண்பது. இது நடந்தது மலேசியாவில்.
இதன் இரண்டாம் பாகம் நாளை வெளிவரும்
Thursday, 22 August 2013
அமேசன் காட்டில் மனிதர்கள்
இதுநாள் வரை அமேசன் காடுகள் என்றால் மனிதர்கள் உள் நுழைய முடியாத அடர்ந்த காடு, கொடிய. விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் முதல் பல ஜீவன்கள் வாழ்ந்து வருகிறது என்று தான் உலகமே நினைத்திருந்தது.
அந்த கருத்து பொய் என்பது போல், அடர்ந்த காட்டுப்பகுதியில் வெளிஉலக தொடர்பே இல்லாமல் மனிதர்கள் வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
Wednesday, 21 August 2013
வெளிநாட்டுவாழ் நண்பர்கள் கவனத்திற்கு!
வெளிநாட்டுவாழ் நண்பர்கள் கவனத்திற்கு!
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை சமாளிக்கும் விதத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து Flat டிவி (LCD,LED and Plasma) கொண்டு வந்தால் 36.05 சதவீதம் இறக்குமதி வரி கட்டவேண்டும். மத்திய அரசு அறிவிப்பு! தகவல்(நன்றி) Shaik Mohamed Anas
ஒரு நாட்டின் பொருளாதரத்தை சீர்படுத்தும் அன்னியச் செலவாணியை அதிகப்படுத்துவதில் இன்று முன்னிற்பது, வளைகுடா வாழ் உழைப்பாளர்களே!
அவர்களுக்கு இதுவரை அரசு எந்த சலுகையும் அளித்ததில்லை ஆனால் அடி மடியில் கைவைக்காமலும் இருந்ததில்லை... அது பிளைட் டிக்கட் ஆனாலும் சரி கஷ்டம்ஸ் கஷ்டங்கங்களானலும் சரி.
கொள்ளையடிச்சு, வரி ஏய்ப்பு செய்து இந்திய பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் சிலர் உலக வங்கியில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டுவர வக்கில்லை...
ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊர் சொத்தை அடித்து தன் வீட்டு உலையில் போடும் அபகரிப்பாளர்கள், கள்ள நோட்டு கும்பல்கள், வரி ஏய்ப்பு செய்யும் வசதியானவர்கள் இவர்களிடம் பிடுங்க வேண்டியதுதானே?
தப்பு தப்பா சுயநலத்தோட யோசிக்கிறீங்க! ஆக மொத்தம் நீங்க அரசியல் நடத்த...
ஊரில் சிலர் உண்டு கொளூத்து வாழ.. வாழ்வாதாரம் இழந்து வாடும் வளைகுடா தொழிலாளர்கள்தான் கிடைத்தார்களா..?
பாவம்! குடும்பம் இழந்து, குழந்தைகளை பிரிந்து வியர்வை சிந்தி, கடும் குளிரிலும், கொல்லும் வெப்பத்திலும் உழைத்து, கிடைத்த இடை வேளைகளில் கிடைக்கும் நிழலில் கீழே கிடந்து உறங்கி, தினமும் 12 மணி நேரம் உழைத்து கஷ்டப்படும் (lcd LED கொண்டுவரும் வெளிநாட்டினர் வளைகுடா காரர்களே) வெளிநாட்டினர்தான் கிடைத்தார்கள? படுபாவீங்களா?
இந்த விசயம் சம்பந்தப்பட்டவர்கள் காதுகளுக்கு எட்டுமா? எட்டச் செய்வீர்களா?
தயவு செய்து இதற்க்கு யாரும் “LIKE" போடாதீர்கள்... இது வாழ்நாளில் பெரும் பகுதியை தன் தாய்நாட்டில் வாழமுடியாமல், வெளிநாட்டில் தொலைத்து இறுதியில் நோய்வாய்பட்டு ஊர் திரும்பும் வளைகுடா தியாகிகளின் கண்ணீரை கண்டு கொள்ளாமல் தன் மகளுக்கு, மகனுக்கும், மனைவிக்கு என்று வாங்கிக் கொண்டு போகும் பொருள்களுக்கு அநியாய வரி விதித்து, அவன் ஆசையில் மண் அள்ளிப் போடும் செயல். இது கண்டிக்கத்தக்கது என்பதை உண்ர்ந்து இதனை உங்கள் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
பேஸ்புக் வாசகர் Ssr Thevarajan Kpm எழுதியது
Monday, 19 August 2013
தலைவா ஏன் இந்த தடுமாற்றம்?
கவின் மலர் |
மதராஸ் கஃபே பற்றிய பேச்சு வந்துவிட்டது. இப்போது தலைவா வெளியாகப் போகிறது. எதற்கு இப்போது இந்தக் கட்டுரை என்று கேட்கலாம். ஆனால் தலைவா குறித்து எழுதவேண்டிய தேவை இருக்கிறது.
சினிமாவிலிருந்து ஆட்சியதிகாரம் செலுத்த வந்த காலம் போய் சினிமாவை ஆட்சி செய்வதாக ஆட்சியதிகாரம் மாறியிருக்கிறது.
தற்போது தலைவா 20ம் தேதி வெளியாகும் என்று செய்தி வந்துவிட்டது. விஜய் முதல்வருக்கு நன்றி கூறியிருக்கிறார். எதற்கு நன்றி கூறியிருக்கிறார்? இந்த நன்றியின் பின்னணி என்ன?
தலைவா – எப்போது வரும் என்கிற கேள்வியைவிட எல்லோர் மனதில் தொக்கி நினறது பின்வரும் கேள்விகள்தான். ஏன் அந்தப் படத்துக்கு இத்தனை சிக்கல்கள்? என்ன காரணம்? யார் காரணம்? தலைவா அரசியல் படமா? அதில் வரும் வசனங்கள் காரணமா? அல்லது படத்தின் கேப்ஷனாக வரும் ‘டைம் டு லீட்’ என்கிற வார்த்தைகள் காரணமா? அல்லது உண்மையில் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? அதனால்தான் பயந்து திரையரங்க உரிமையாளர்கள் அரசு பாதுகாப்பு அளித்தால்தான் படத்தை திரையிடுவோம் என்று பின்வாங்கினார்களா?
என்ன தான் நடந்தது? வெள்ளித்திரைக்குப் பின்னால் நடக்கும் திரைமறைவு வேலைகள் தான் என்ன? இவை எதுவும் சாமான்யர்களுக்கு தெரியவில்லை. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் எந்த சக்திக்கு அடிபணிந்து இந்தப் படத்தை திரையிட மாட்டோம் என்றார்கள்? உண்மையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? அப்படி மிரட்டல் வந்திருந்தால் காவல்துறைக்கு விஷயம் சென்றிருக்கவேண்டும். அல்லது உளவுத்துறை எச்சரித்திருக்கவேண்டும்.
காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் ‘’திரையரங்கங்களில் தலைவா படத்தை திரையிடாமல் இருப்பதற்கும் காவல்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்று அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பு நமக்குச் சொல்வது என்ன? ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தால் முதலில் போக வேண்டிய இடம் காவல்துறைதானே? காவல்துறைதானே இந்த விஷயத்தில் அறிவுரை கூறி படத்தை திரையிட வேண்டாம். ஒருவேளை அப்படி திரையிட்டால் உங்கள் சொந்த ரிஸ்க் அது என்று கூறியிருக்கவேண்டும். ஆனால் காவல்துறை தனக்குத் தொடர்பில்லை என்று கையை விரித்துவிட்டதால், இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது உண்மையில் வந்ததா என்கிற சந்தேகம் எழுகிறது.
வெடிகுண்டு மிரட்டல் உண்மையிலேயே வந்திருந்தால் அதில் தொடர்புடைய இயக்கம் எது? அல்லது எந்த தனிநபர் இதில் தொடர்புடையவர்? அல்லது அது அனாமதேய மிரட்டலா? தொடர்புடைய இயக்கம் இதுதான் என்று கூறாமல், தொடர்புடைய நபரின் பெயரையும் கூறாமல், அனாமதேய மிரட்டல் என்றும்கூட கூறாமல், வெறுமனே மிரட்டல் மிரட்டல் என்று திரையரங்க உரிமையாளர்கள் மிரண்டுபோய் கூறுவது ஏன்? ஒரு அனாமதேய மிரட்டலுக்கு பயந்து ஒரு பெரிய படத்தை திரையிட மறுக்கும் அளவுக்குத்தான் நம் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கிறார்களா? தனக்குப் பிடிக்காத நடிகர் ஒருவரின் படத்தை திரையிடாமல் செய்ய ஒரு அனாமதேய மிரட்டல் போதுமே அப்படியெனில்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாத முட்டாள்கள் அல்ல தமிழக மக்கள். கடந்த பல ஆண்டுகளாக அரசியலையும் சினிமாவையும் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் பின்னே உள்ள அரசியலை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இவ்விஷயத்தில் நிலவும் அமைதிதான் சகித்துக்கொள்ள முடியாதது. விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தடைக்கான சூழல் வேறு.
அந்தத் தடையை இஸ்லாமிய இயக்கங்கள் விரும்பின. ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் தலைவா படத்துக்கு எந்த இயக்கமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தடை கோரவில்லை. சொல்லப்போனால் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதை சுட்டிக்காண்பித்தபின் காட்சிகள் சில வெட்டப்பட்டு, சில வசனங்கள் வெட்டப்பட்டு படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. ஆக படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்கின்றன என்றால் அதை வெட்டவும் தயங்காதவர்தான் விஜய். அப்படி இருக்கையில் இந்தப் படத்தின் காட்சிகளுக்காகவே இந்த மறைமுகத் தடை என்பது நகைச்சுவையே. சொன்னால் அவற்றை வெட்டிவிட்டு படத்தைத் திரையிடவே இயக்குநர் விஜய்யாக இருந்தாலும் நடிகர் விஜய்யாக இருந்தாலும் செய்வார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. துப்பாக்கி விவகாரத்துக்குப் பின் அதற்கு பிராயச்சித்தமாக விஜய் ஒரு படத்தில் இஸ்லாமியராக நடிப்பார் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வேறு உறுதிமொழி அளித்தார். அதே எஸ்.ஏ. சந்திரசேகரால்தான் இப்போது விஜய் படத்துக்கும் பிரச்சனை நேர்ந்ததாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற ரீதியில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதும், விஜய்யின் பிறந்தநாள் விழா ஒரு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு ஷோபா திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டபோது அவர் பேசியவை ஆட்சியாளர்களின் காதுகளை எட்டி கோபத்தைக் கிளப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக திரையரங்கங்களை மிரட்டியதாக திரைப்படத் துறையில் பேச்சு இருக்கிறது. மேலிடத்திலிருந்து நேரடியாக தலைவாவுக்கு நெருக்கடி தரும்படியான உத்தரவு வந்ததாகவே சினிமாத் துறையில் பேசப்படுகிறது.
திரைத்துறையினர் இதுகுறித்து பெயர் குறிப்பிட்டு வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். எதுதான் உண்மை என்பதை அறிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாலர் திருச்சி ஸ்ரீதரை தொடர்புகொண்டபோது ‘’தலைவா 23ம் தேதி நிச்சயமாக வெளிவரும். தமிழக முதல்வரின் நல்லாசியுடனும், அரசின் ஒத்துழைப்புடனும் வரும்’’ என்று மட்டும் கூறினார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இதுகுறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர்.
படத்துக்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு நியமித்திருக்கும் குழுவோ திரைப்படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், ‘யூ’சான்றிதழ் பெற்றிருந்தாலும், தமிழ் இளைஞர்களைப் பாதிக்கும் வகையில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளதாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழிக் கலப்பு உள்ளதாலும், இத்திரைப்படம் வரி விலக்கிற்குத் தகுதியானது அல்ல என பரிந்துரை செய்துள்ளது. அப்படியெனில் எப்படி சென்சார் போர்ட் யூ சான்றிதழ் கொடுத்தது? இதில் தமிழக அரசின் குழு கூறுவது சரியா? அல்லது சென்சார் போர்ட் அதிகாரிகளின் தீர்ப்பு சரியா?
விஜய் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் திரும்பத் திரும்ப அரசும் தமிழக முதல்வரும் படம் வெளியாக உதவவேண்டும் என்று கோரிக்கை வைப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா வெடிகுண்டு மிரட்டல் என்கிற விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று.? ஒரு நேரடி பகைக்காக ஒரு படத்தை முடக்குவது என்பது எந்த வகையில் சரி? யாரும் தடைகோராத ஒரு படத்தை சொந்த பகை அல்லது ஈகோவுக்காக வெளியாகவிடாமல் தடுப்பதை ஒரு படைப்புக்கு விடப்படும் சவால் எனலாம்.
தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த தலைவா பட விவகாரம். அந்தப் படம் ஒரு மசாலா படமாகவே இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் அந்தப் படம் என்ன காரணத்துக்காக வெளிவரவிடாமல் காரியங்கள் நடக்கின்றன என்று யோசித்தால் ஒரு படைப்பாக அது வெளிவருவதற்குரிய உரிமையை யாரும் தடுக்க முடியாது என்கிற வகையில் தமிழக அறிவுஜீவிகள் மத்தியில் இது குறித்த கவலைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை வெகுஜன மக்கள் ரசிக்கும் விஜய்யின் படம்தானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். ஆனால் கமல்ஹாசனுக்காக கருத்துச் சுதந்திரம் பேசியவர்கள்கூட இயக்குநர் விஜய்யின் கருத்துச் சுதந்திரத்துக்காக பேசவில்லை.
விஸ்வரூபம் பிரச்சனையில் கமலுக்காக திரண்ட கலையுலகம் விஜய்க்காக திரளவில்லை. ஆங்காங்கே சிம்பு, தனுஷ், நயன் தாரா, உதயநிதி என்று ஒரு சில குரல்கள் மட்டுமே இணையத்தில் கேட்டன. தேசிய ஊடகங்களில் இது குறித்து விவாதங்கள் இல்லை. ‘India’s shame’ என்றோ ‘கலாசார பயங்கரவாதம்’ என்றோ சொல்லாடல்கள் இல்லை. கருத்துரிமை குறித்த பேச்சே எழவில்லை. ஏனெனில் கமலுக்கு எதிராக இருந்தவை சிறுபான்மையான இஸ்லாமிய அமைப்புகள் இருந்தன. இப்போது ‘ம்தரஸ் கஃபே’ படத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பையும் இதனுடன் ஒப்பிட முடியாது. எந்த எதிர்ப்பும் வராத யாரும் தடை கோராத ஒரு படத்துடன் விஸ்வரூபத்தையும் மதராஸ் கஃபேயையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடக் கூடாது.
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அப்போது இஸ்லாமியர்கள் பக்கம் இருந்தாலும், பெரும்பான்மைவாதம் பலர் மனங்களில் வேலை செய்தது. ஆனால் இப்போது தலைவா படத்துக்கு எதிராக நிற்பது யார்? சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்பதால் பலர் வாய்திறக்காமல் இருக்கின்றனர். இந்த மௌனம் அல்லது கண்டுகொள்ளாமை அல்லது பயம் அதிகாரத்தைப் பார்த்து வருகிறது. ஆக, அதிகாரமோ ஆட்சியோ இருந்தால் எவர் வாயையும் மௌனிக்க வைக்க முடியும் என்கிற உண்மை மிக மிக கசப்பாக கண்முன் நிற்கிறது. இன்றைக்கு தலைவா என்கிற படமாக இருக்கலாம். நாளைக்கு வேறு ஒரு படமாக இருக்கலாம். அல்லது ஒரு புத்தகமாக இருக்கலாம். ஒரு கட்டடமாக இருக்கலாம். அதிகார தீவிரவாதம் எவர் மீது வேண்டுமானாலும் பாயலாம். இப்போது அமைதியாய் இருந்ததுபோலவே அப்போதும் எல்லோரும் அமைதியாய் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு அமைதியும் எதில் போய் முடியும்?
ஊரறிந்த ரகசியமொன்றை ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பதை விட்டுவிட்டு உரக்க அரசுக்கு எதிராக குரல்கொடுக்க முனைபவர்கள் வெகு சிலரே.
தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இந்த நிலை மிக மிக ஆபத்தானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
விஜய் என்கிற கலைஞர் மசாலா படத்தை தரக்கூடியவராகவே இருக்கட்டும். ஆனால் ஆட்சியதிகாரத்தின் பெயரால் அவருக்கு இழைக்கப்படும் அநீதியை அறிவுலகம் பார்த்துக்கொண்டிருக்குமானால் அது மிகப்பெரிய தவறு.
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துவது என்பது அழிவின் ஆரம்பம்.
அரசுக்கு எதிரான குரல்கள் எழுவதை அரசு விரும்புகிறதோ இல்லையோ அப்படி குரல் கொடுத்துவிடாமல் ஜாக்கிரதையாக அடக்கிவாசிக்க நினைக்கும் நாம் ஜனநாயகமான சுதந்திர நாட்டின் அடிமைகள்தானோ?
மோனா லிசா
உலகப்புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தைப் பற்றி ஒரு செய்தியைப் பல வருஷங்களுக்கு முன் படித்திருக்கிறேன். பாரீஸில் லூவ்ர் மிஸியத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியம் ஒரு நாள் திருடு போய்விட்டது.
இரண்டு வருஷத்திற்குப் பிறகு தான் அது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் படித்திருக்கிறேன்,
ஆனால் அதற்கு மேல் அதைப் பற்றி நான் யோசித்தது கூட இல்லை,உங்களிடம் யாராவது ‘மோனாலிசா ஓவியம் திருடு போய் அப்புறம் அகப்பட்டதாமே?” என்று கேட்டால், “ ஆமாம்..,,இத்தனை பிரபலமான ஓவியம் திருடு போகிற அளவுக்கு அலட்சியமாக இருந்திருக்கிறார்களே. பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்களா?” என்றுதான் கேட்டிருப்பீர்கள்.
அதை விடுங்கள். என் மனதில் எழுந்த ஒரு கேள்வியைச் சொல்லுகிறேன், சரி, இந்த ஓவியத்தைத் திருடியவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?
அது, அந்த காலத்திலேயே (1911) 50 லட்சம் டாலர் மதிப்புள்ளது, யார் வாங்குவார்கள்? வாங்கி வீட்டில் வைக்க முடியுமா? யாரும் வாங்க மாட்டார்கள் என்று தெரிந்தும் ஏன் அது திருடப்பட்டது?
இது பற்றி தகவல்களைத் திரட்டினேன்.
முதலாவது அந்த மியூசியத்தில் இருந்த பல அற்புதமான ஓவியங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவ்வளவு பிரபலமான ஓவியமல்ல. பார்க்கப்போனால் அது திருடு போய் மீண்டும் அகப்பட்டதால்தான் அதற்குத் திடீர் பிராபல்யம் கிடைத்தது என்கிறார்கள்.
சுமார் 200 அறைகள் கொண்ட அந்த மியூசியத்தில் அவ்வளவு அதிக பாதுகாப்புகள் கிடையாதாம். திருடு போனதே தற்செயலாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டதாம்.
1911’ம் ஆண்டு 21’ம் தேதி அதை படம் எடுக்க ஒரு போட்டோகிராபர் போனார். வழக்கமான இடத்தில் அது காணவில்லை, “ “எங்கே மோனாலிசா படம்?” என்று விசாரித்ததும்தான் மியூஸிய அதிகாரிகளுக்கு படம் திருடு போனது தெரிந்தது!
அதை விற்கமுடியாது என்று தெரிந்தும் யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள். பாரிஸில் இருந்த பல ஓவியர்களிடம் போலீஸ் விசாரித்தது. பொறமை காரணமாகக்கூட அதைத் திருடி மறைத்து வைத்திருக்ககூடும். ( ஓவியர் பிக்காஸோவையும் கூட விசாரித்தார்களாம்!)
பல மாதங்கள் வலை வீசியும்ஓவியம் கிடைக்கவில்லை, ஆனால் அந்த படத்தை பலவித வியாபாரப் பொருளாகச் செய்து நிறைய பேர் விற்க ஆரம்பித்தார்கள். போதக்குறைக்கு மோனாலிசா படம் மாட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்க்க (!) மியூசியத்தில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது!
சுமார் இரண்டு வருடம் கழித்து இத்தாலியில் இருந்த கெரி என்ற ஒரு’ஆர்ட்’ வியாபாரிக்கு ஒரு கடிதம் வந்தது. “மோனலிசா ஓவியம் இத்தாலி ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்தது.
இந்த பொக்கிஷம் இத்தாலிக்குச் சொந்தமானது, பிரான்சில் அது இருக்கக்கூடாது. மோனாலிசா ஓவியம் என்னிடம் இருக்கிறது. அதை இத்தாலிக்கேத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன், அதற்காக எனக்கு ஒரு சிறிய தொகை தரவேண்டும்”என்று கடிதத்தில் எழுதி இருந்தது.
கீழே ‘லியானார்டோ வின்சென்ஸா”என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது. அவனுடன் தொடர்பு கொண்டு அவனைக் கெரி சந்தித்தார், ஓரு தொகை தருவதாகச் சொல்லி ஓவியத்தை வாங்கி கொண்டு வந்தார், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்,
லியானார்டோ வின்சென்ஸா கைது செய்யப்பட்டான். கோர்ட் அவனுக்கு ஒரு வருஷம் சிறைத் தண்டனை கொடுத்தது, அதன் பிறகுதான் மோனாலிசாவின் புகழ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது!
P Dineshkumar
Thursday, 15 August 2013
கண்கள் சொல்லும் கதை
கண்கள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை/. கண்கள் காட்சிகளை காண மட்டும் பயன் பட வில்லை. நம் உடலில் ஏற்படும் நோய்களைப் பற்றிய முன்னறிவிப்பையும் தருகிறது.
அது எப்படி....
இப்படிதான்.
சிவப்பு மற்றும் எரிச்சல் கண்கள்
கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால், அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரத்தில் அலர்ஜியின் காரணமாகவும், கண்களுக்கு போடும் மேக் கப் செட்டில் இருக்கும் கெமிக்கல்களின் மூலமாகவும் வரும்.
அதுமட்டுமல்லாமல், கண்களுக்கு தேவையில்லாமல் கண்களுக்கான மருந்துகளை பயன்படுத்தினாலும் ஏற்படும்.
வெளிர் நிற கண்கள்-
வெளிரி நிறத்தில் கண்கள் இருந்தால், உடலில் அனிமியா முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறி. அதாவது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கண்கள் வெளிர் நிறத்தில் இருக்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள் நிற கண்கள்-
இந்த நிறத்தில் கண்கள் இருந்தால், உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காததால் ஏற்படுகிறது. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியலாம்.
வீக்கமான கண்கள்- கண்கள் வீக்கத்துடன் காணப்பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. அதுவும் தைராய்டிசத்தில் ஒன்றான, ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறியாக உள்ளது. ஆகவே அப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வறட்சியான கண்கள்-
கண்கள் வறட்சியுடன் காணப்பட்டால், உடல்நிலையில் குறைபாடு மிகுந்துள்ளதை காட்டுகிறது. மேலும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளது. இதனால் உடலில் நோய்கள் எளிதில் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த நிலையில் இருந்த தவிர்க்க, நிறைய தண்ணீரை பருக வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்ண வேண்டும்.
-வளர்மதி
-வளர்மதி
விடியல் எப்போது?
ஏதோ ஒரு படம் தேட..
என் கண்ணில் பட்ட இந்தக் காட்சி..
கண்டதும் ஒரு கணம் ..
நெகிழ்ந்தது நெஞ்சம்..
போர்த்திக் கொள்ள போர்வையின்றி..
உடுத்திக் கொள்ள ஆடையின்றி..
அள்ளி அணைக்க யாருமின்றி..
யாரோ விதைத்த விதை..
வீதியில் நாதியற்றுக் கிடக்கின்றதே..
நிஜமாக
பார்த்தால் பார்க்காமல் போகாதீர்கள்..
பராமரிக்கும் இடமிருந்தால்...
பக்குவமாய் அங்கே சேர்த்துவிடுங்கள்..
ஆலயங்கள் இனித்தேவையில்லை..
அதிகமாகவே இருக்கின்றது..
அனாதையாக அலையும்..
அபலைகளுக்கும், ஏழைகளுக்கும்..
கட்டிடுங்கள் பாதுகாப்பான இல்லம்.
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
-தனிமதி
Wednesday, 14 August 2013
தெரியுமா உங்களுக்கு?
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்;கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்றுமுன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். 6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.
7. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்துவிடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப்பாதங்களிலும் அமைந்திருக்கிறது. 12. மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்.
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.
14. மனிதமுளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.
16. நம் ஒடல் தசைளின் எண்ணிக்கை 630.
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.
19. மண்டை ஓடு மனினதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக்காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது. கவனிக்கவும்.
24. பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.
26. நமது தலையின் எடை 3.175 கிலோகிராம்.
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்துவிடும்.
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது.
29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.
32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பார்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது.
36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.
37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. அப்புறமாக புது கேசம் வளர்கிறது. 38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர்வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.
41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது.
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.
46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
49. நம்முடைய தலை ஒரே எலும் பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.
50. மனித உடலில் 50 லட்சம் முடிக் கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது.
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.
56. நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)
58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.
65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்.
69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது. 70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6கிராம் ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.
74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம் காவல் துறையில் வேலை.
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள 'ஆலவியோலி' என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டுட் 30 கோடியாகும் புகைப்பிடித்தல் கூடாது. 78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை. நாக்கு.
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ்பூனில் 10 லட்சம் நிரப்பலாம். 87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது.
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வரு~த்திற்கு 4கோடி தடவை. உங்க வயசை 4கோடியால் பெருக்கிப் பாருங்கள். அல்லாஹ்வின் பேரருள் தெரியும். 90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.
95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டா...வி விடுகிறோம்.
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. உங்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.
99. ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கைகளில் வலதுகையில் அரபு எண் 1ÙÙ1(18) என்கிற வடிவ ரேகையும், இடதுகையில் Ù1(81) என்கிற வடிவரேகையும் உள்ளது. 100. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5 மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.வி. முன் மணிக்கணக்கில் உட்கார்ந்தால் எவ்வளவு காலம் வாழ்நாளில் வீணாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
வெற்றி நிச்சயம் என்ற இணையதளத்தில் நான் படித்தது.
Saturday, 10 August 2013
கோச்சடையான்’ படத்தோட கதை இது!!
‘கோச்சடையான்’ படம் டிராப்பாகி விட்டது, ரஜினியை ஷங்கர் மீட் பண்ணிட்டு வந்திருக்கிறதால அவர் தான் ரஜினியோட அடுத்த படத்தை டைரக்ட் செய்யப்போறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில், தான் ‘கோச்சடையான்’ இந்த வருஷத்துக்குள்ள கண்டிப்பாக ரிலீஸாகிடும், ரஜினி சாரே படத்தை பார்த்துட்டு சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டார் என்றெல்லாம் சொன்னார் தயாரிப்பாளர் முரளி மனோகர்.
இதனால் ரசிகர்களில் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘கோச்சடையான்’ கதை தற்போது லீக்காகியிருக்கிறது. அதாவது இதுவும் ஒருவகையில் பொலிடிக்கல் பேஸ்ட்டு ஸ்டோரி தான் போலிருக்கிறது.
கதைப்படி, அப்பா ரஜினிகாந்த் ஒரு நாட்டை ரொம்ப நல்லமுறையில் ஆட்சி செஞ்சிக்கிட்டு வர்றார். நாட்ல இருக்கிற செல்வங்கள் எல்லாத்தையும் மக்களுக்கு ஷேர் பண்ணி கொடுக்கிறார்.
ஆனால், நல்லா போய்க்கிட்டிருக்கிற ஆட்சியை துரோகிகள் சும்மா விடுவாங்களா..? அவரது அமைச்சரவையிலேயே இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி பண்றாங்க, சில அசிங்கமான உத்திகளைக் கையாண்டு அப்பா ரஜினியோட ஆட்சியை கவுத்துடுறாங்க…
அப்போதுதான் அவருக்கு மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். அப்பாவோட திறமையான பயிற்சியில் அவர் நல்ல புத்திசாலியா திறமைசாலியா வளர்கிறார்.
பிறகு காட்டில் வீரப்பன் ரேஞ்சில மறைவா ஒரு டீமை பார்ம் பண்றார்.
அதுக்குப் பிறகு அப்பாவோட ஆட்சியைக் கவிழ்த்து நாட்டை ஆண்டுக்கிட்டிருக்கிற துரோகிகளோட கையிலிருந்து எப்படி புரட்சி பண்ணி நாட்டை மீட்டெடுக்கிறார்ங்கிறது தான் கோச்சடையானின் ஸ்டோரியாம்.
ஹாலிவுட்டில் ரிலீஸான அவதார் மற்றும் டின் டின் ஆகிய படங்களுக்கு நிகராக படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். இந்தக்காட்சிகள் தமிழ்ரசிகர்கள் புது அனுபவமாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம்.
Thursday, 8 August 2013
அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தின் ‘தலைகீழ்’ காட்சி நெட்டில் லீக் ஆனது எப்படி?
நடிகர் அஜீத் நடிக்கும், ‘ஆரம்பம்’ படத்தின் ஒரு காட்சி, இணையதளத்தில் வெளியிடப்பட்டதில், ஆரம்பம் யூனி்ட் இதிர்ச்சியில் உள்ளது. இந்தக் காட்சி எப்படி லீக் ஆனது என துருவித்துருவி விசாரித்து வருகின்றார்கள் படக்குழுவினர்.
நடிகர் அஜீத், ஆர்யா, டாப்சி நடித்துள்ள, ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்தக் காட்சி லீக் செய்யப்பட்டுள்ளது. படம், அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை சஸ்பென்ஸில் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின், டிரெய்லர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸ்டில்கள் மட்டும் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அதற்கு மேல் படத்தின் காட்சிகள் பற்றிய எந்த தகவலும் வெளியாகாதவாறு படப்பிடிப்பு யூனிட்டை சேர்ந்தவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள்.
இப்படியான சூழ்நிலையில்தான் படத்தின் ஒரு காட்சி நேற்று, இணையதளத்தில் திடீரென வெளியாகியது. இது, ஆரம்பம் யனிட்டுக்கு தெரியவர, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியான காட்சியில், அஜீத்தை வில்லன் குழுவினர் தலைகீழாக கட்டிவைத்து அடிக்கும் சீக்வென்ஸ் உள்ளது.
ஆரம்பம் யூனிட் உடனடியாக படத்தின் போஸ்ட் புரொக்ஷன் நடக்கும் இடங்களுக்கு சென்று விசாரித்தனர். அங்கு லீக் ஆகியிருக்க சான்ஸ் இல்லை என்று தெரியவந்தது. அதன்பின் இன்டர்நெட்டில் வெளியான காட்சியை கவனமாக ஆராய்ந்ததில், அந்தக் காட்சி படம்பிடிக்கப்பட்ட கேமரா கோணமும், நெட்டில் வெளியான கேமரா கோணமும் வேறுவேறாக உள்ளது புரிந்தது.
இக்காட்சியின் படப்பிடிப்பு நடந்தபோது யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை தற்போது இணையதளத்தில் வெளியிட்டிருக்கலாம் என படக்குழுவினர் சந்தேகப்படுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட இந்தக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது அல்ல.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டிருந்தால், அதை ஏன் உடனடியாக வெளியிடாமல், தற்போது விஜய்யின் ‘தலைவா’ பட ரிலீஸூக்கு இரு தினங்களுக்கு முன் லீக் செய்யப்பட்டுள்ளது?
இந்தக் கேள்வியிலேயே, இந்தக் காட்சி எப்படி லீக் ஆனது என்ற கேள்விக்கான பதில் தங்கியுள்ளது.
நன்றி விறுவிறுப்பு
சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு!!!
ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு.
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!
venkatraman |
Subscribe to:
Posts (Atom)
குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil
கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...