ads

Sunday, 20 October 2013

மரகதம் / EMERALD


         
  
   நவரத்தினத்தில் ஒன்றாக விளங்கும் பச்சை நிறம் கொண்ட மரகதத்தை ஆங்கிலேயர்கள் எமரல்ட் (ணினீமீக்ஷீணீறீபீ) என்று அழைக்கின்றனர். இது வைரம், மாணிக்கம், போன்று, தரமான கற்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    இதைப் பச்சை என்றும் அழைக்கின்றனர். இன்னும் சில ரக மரகதத்தை மரைக்காயர் பச்சை என்றும் அழைக்கின்றனர். இதைப்பற்றிய சுவையான கதையின் வாயிலாக மரைக்காயர் பச்சை என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று அறியலாம்.
         பாண்டிச்சேரியைச் சேர்ந்த மரைக்காயர் அக்காலத்தில் பாய்மரக் கப்பலில் வியாபார  நிமித்தமாக வெளிநாடு சென்று கொண்டிருக்கும் போது நடுக்கடலில் புயல் காற்றின் காரணமாக கப்பல் திசைமாறி ஒரு தீவை அடைந்தது. தனது வியாபாரப் பயணம் திசை மாறிய வருத்தத்தில் அத்தீவில் தனது மாலுமிகளுடன் அடுத்த திட்டம் என்ன என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
                அப்பொழுது அங்கு கிடந்த பச்சைக் கற்கள் இவர் மனதைக் கவர்ந்தது. உடனே தனது மாலுமிகளிடம் அக்கற்களை எடுத்துக் கப்பலில் ஏற்றும்படி உத்தரவிட்டார். சுமார் பத்துப் பதினைந்து பெரிய கற்களைக் கொண்டு வந்து அதன் சிறப்பை அறியாது தனது வீட்டின் முன் பகுதியில் மழைக்காலங்களில் சேற்று மண் காலில் படாதவாறு வாசலில் பதித்து விட்டார்.
                பெரிய வியாபாரியாகிய இவரை வியாபார நிமித்தமாகப் பார்க்கப் பலர் வந்தபோவது வழக்கம். ஆனால் நாளடைவில் இவரது கப்பல் திசைமாறியது போல் வாழ்க்கையும் திசைமாறி வறுமையை நோக்கிச் சென்றது. ஈவு, இரக்கமுடைய மரைக்காயர் சிறந்த தர்மவானாகவும் விளங்கினார்.
     இத் தருணத்தில் தனது கடனால் கௌரவம், அந்தஸ்து பாதித்து விடுமோ என்று பயந்து தனக்கு மிஞ்சியிருந்த குடியிருக்கும் அழகான வீட்டை விற்றுக் கடனை அடைத்தது போக மீதிப் பணம் இருந்தால் வெளியூர் சென்று சிறு தொழில் செய்து வாழ்வோம் என்ற திட்டத்தில் இருந்தார்.
                இக்கட்டான நேரத்தில் முத்து பவளம் போன்ற கற்கள் வியாபாரத்தில் புகழ் பெற்ற சீன வியாபாரி ஒருவர் எதிர்பாராவிதமாகப் பாண்டிச்சேரிக்கு வந்தபோது மரைக்காயரைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றார். சீன வியாபாரியோ கற்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
     பொதுவாகச் சீனர்கள் பச்சைக் கற்களை விரும்பி அணிவது யாவரும் அறிந்ததே. அந்த சீன வியாபாரி வீட்டின் உள்ளே செல்வதற்கு முன் வெளியே நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த கற்களைப் பார்த்தவுடன் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு விலைஉயர்ந்த கற்களை வாசலில் பதிக்கும் அளவிற்குப் பெரிய பணக்காரர் என நினைத்து அசந்து போய் உள்ளே சென்றார்.
                தன்னைத் தேடி வந்த விருந்தாளியை அன்புடன் உபசரித்து மரைக்காயர் பேசிக் கொண்டிருக்கும் போது தனது வியாபாரத்தை நிறுத்தி விட்டேன் என்று ஆரம்பித்தார். உடனே சீன வியாபாரி, பெரியவங்க நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது . உங்கள் வீட்டின் முன் போட்டுள்ள பச்சைக் கற்கள் இரண்டு கொடுங்கள். தாங்கள் விரும்பும் பவுணை நான் தரத் தயாராக உள்ளேன் என்றதும் மரைக்காயர் சுதாகரித்துக்கொண்டார்.
              ஐயா நான் இதை விற்பனைக்காக வைத்திருக்கவில்லை. அழகிற்காகப் பதித்து வைத்திருக்கின்றேன். இதன் விலை மிக மிக அதிகமானது. இதன் விலையை நான் கூறினால் நீங்கள் வாங்கமாட்டீர்கள் என்று மரைக்காயர் சொல்லிப்பார்த்தார்.
    ஆனால் சீன வியாபாரி விடவில்லை. உடனே மரக்காயர் தனக்குள்ள கடன் போக பெரிய தொகை கையில்  தம் இருக்கும்படி கணக்கிட்டு ஒரு பெரிய கல்லிற்கு விலையைக் கூறினார். அவர் சொன்ன  பணத்தைக் கொடுத்து விட்டு இரண்டு கற்களை வாங்கிச் சென்றார் சீன வியாபாரி.
       பத்து ஆண்டுகள் பாதையில் கிடந்த கற்கள் அன்று முதல் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால் மரைக்காயர் மீண்டும் அத் தீவைக் கண்டுபிடிக்க முயன்று முடியவில்லை.
   இதனால் தன்னிடம் இருந்த கற்களை நல்ல விலைக்கு இந்தியாவிலேயே  விற்றுப் பெரும் பணக்காரராக ஆகிவிட்டார். இன்று கூட மரைக்காயர் வம்சத்தினர் பெரும் கற்கள் வியாபாரியாக உலக முழுவதும் இருப்பதைக் காணலாம்.
                மரகதம் மென்மையானது. இதைக் கண்ணாடி பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவது பச்சை நிறமாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் விலை உயர்ந்ததாகும். இது பச்சைக் கிளிக்குஞ்சின் இறகு, புதிய பசும்புல்  போன்றவைகளின் நிறத்தை ஒத்தது.
                இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் ரேகை, மாலை கருகுதல் போன்ற குற்றங்களைப் பற்றிக் கூறுகின்றார். பொதுவாக குற்றமற்ற மரகத மணிகள் அதிக விலைக்கு  விற்கப்படுகின்றன. சூரிய ஒளியில் மரகதம் நன்கு ஒளி உண்டாகி மற்றப் பொருட்களையும் பச்சை நிறமடையச் செய்யும்.
                கொலம்பியாவில் கிடைக்கும் மரகதம் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவிலும், பெரு என்னும் நாட்டிலும் மரகதம் எடுக்கப்பட்டு வருகின்றது. தென்னமெரிக்காவில் புகழ்பெற்ற மரகதச் சுரங்கம் மியூசோ, காஸ்க்யூஸ் போன்ற இடங்களில் அமைந்துள்ளது. சோமன்டோகோ சாலமன் என்ற அரசன் காலம் முதல் மரகதத்தின் சிறப்பை மக்கள் அறிந்துள்ளனர் என்று புத்தக வாயிலாகத் தெரிய வருகிறது.
    பாபிலோன் நாட்டு அரசன் ஒருவனிடம் நான்கு முழம் நீளமும், மூன்று முழம் அகலமும் உள்ள மரகதக்கல் இருந்ததாகவும் அதைத் தன் குருவிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
    ஸ்ரீ லங்காவில் ஒருவர் தனது அலுவலக மேசையின் மீது பேப்பர் வெயிட்டாக ஒரு கல்லைப் பயன்படுத்தி வந்தாராம். அந்தக்கல் அவருடைய தாத்தா காலத்திலிருந்து இருந்து வந்ததாம். இதனால் இவர் இதை மேசையிலேயே நீண்டகாலமாக வைத்திருந்தாராம்.
    ஒரு நாள் கல்லைப் பற்றித் தெரிந்த ஒருவர் இவரைச் சந்தித்தபோது இதை மரகதம் என்றும் இதன் விலை சுமார் இத்தனை லட்சம் போகும் என்று கூறியதும் உடனே பெரிய வியாபாரிகளைச் சந்தித்து விற்று உயர்ந்த நிலையில் இன்றும் வாழ்கின்றாராம்.
    கற்களைப்  பற்றித் தெரியாத சிலரிடம் நல்ல கற்கள் கிடைத்ததும் அவர்கள் ஏமாற்றறம் அடைவதும் உண்டு. படிகக் கற்களைக் கையில் எடுத்துக் கொண்டு வைரம் என்று விற்க அலைபவர்களும் உண்டு.

கிடைக்குமிடங்கள்
                மரகதம் இந்தியாவில் தமிழ்நாட்டில்  கோயம்பத்தூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊரில் கிடைத்தது வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர், அஜ்மீர் போன்ற இடங்களிலும் சிறந்த பச்சைக்கற்கள் கிடைத்து வருகிறது.
   இதில் நல்ல மரகதப் பச்சைக் கற்களுக்கு அதிக விலைகொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். எதியோப்பியாவிலும் எகிப்து நாடுகளிலும் நீண்ட காலமாகக் கிடைக்கின்றது.
           உலகத்திலேயே அதிகமாக இன்று கொலம்பியா, சைபீரியா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. அவுஸ்திரேலியாவிலும் யூரல் மலைப்பகுதி, சாலஸ்பர்க் ஆல்ப்ஸ் என்ற மலைப்பகுதி, ஸ்ரீலங்கா, பர்மா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது. தங்கச் சுரங்கங்களிலும் செப்புச் சுரங்கங்களிலும் எதிர்பாராத விதமாக கலப்பாக உள்ள மரகதம் கிடைக்கிறது. உண்மையான மரகதம் தேய்த்தால் ஒளிமிகும்.
          நொருங்கும் தன்மை கொண்ட இப்பச்சைக் கற்களைப் பட்டை தீட்டுவதில் இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் தான் சிறந்து விளங்குகின்றது. கொலம்பியா, பிரேசில், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து  பட்டை தீட்டுவதற்கான இக்கற்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
   தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநள்ளாறில் ஒரு மரகத லிங்கம் இருக்கின்றது. லண்டனிலும் நியூயோர்க்கிலும் வரலாற்றுப் பழம் பொருளகத்தில் பாதுகாப்பாகச் சிறந்த மரகதக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
               
தன்மை
                பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதன் ஒப்படர்த்தி 2.73 இதன் கடினத்தன்மை 7.5 முதல் 8 வரையுள்ளது. இதில் சிலிக்கா, அலுமினியம், சோடா, மக்னீஸ் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளது.
  பார்ப்பவர்கள் மனதைக் கவரும் அழகுடையது. இந்துக்களும் முகமதியர்களும் மாலையாகயும், தொங்கட்டானாகவும், தாயத்தாகவும் அணிகின்றனர். சயாம் மன்னனின் பகோடாவில் மரகதத்தால் ஆன புத்தர் சிலை உள்ளது. அதிகமான மரகதக் கற்களில் பசும் இலைகளின் பின்புறம் உள்ள நரம்புகள் போன்று காணப்படும்.

                குணமாகும் நோய்கள்
   மரகதத்தை நிலப் பூசனிக் கிழங்கினுள் வைத்துப் பின் இதனை கோழிமுட்டை வெள்ளைத் தாதுவில் 3 நாள் ஊற வைத்து கழுவி சுத்தியாக்க வேண்டும் என்றும், இதில் ஆறுவகைக் குற்றமுள்ளது என்றும் சித்த நூல்கள் கூறுகின்றது.
  இப்படி சுத்தி செய்யப்பட்ட மரகதத்தைக் கண்டங்கத்தரி இலையின் சாற்றுடன் பூ நீர் கலந்து ஊறவைத்து பின் நேர்வாளவேரில் அரைத்துப் புடம் செய்து பஸ்மாக்கப்படுகிறது.
                இப் பஸ்பம் வயிற்றுக் கடுப்பு, வலிப்பு, சிறுநீரகக்கல், மூளையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் போன்றவை குணமாகும். இப்பஸ்பத்துடன் பவளப் பஸ்பமும் சேர்த்துச் சாப்பிட்டால் மூளைதாதபிதசுரம் தீரும். உடம்புச்சூடு, மேகச்சூடு, அக்னிமகதம் போன்ற வியாதிகள் தீரும்.
      பெண்களுக்குக் கர்ப்பச் சிதைவைத் தடுக்கும். மூளையில் இரத்தக் கசிவைத் தடுக்கவும் கண்ணில் சதை வளர்வதைத் தடுக்கவும் செய்யும். விந்தணுக்களைப் பெருக்கும் தன்மையும் உண்டு. வாதம், பித்தம் போன்றவற்றைக் குணப்படுத்தி உடலுக்கு வலுவூட்டக்கூடியது. உடல் வளர்ச்சி இன்றி இருப்பவர்களை உடல் வளர்ச்சியடையச் செய்யும்.

       இருதயக் கோளாறைச் சரி செய்து இருதயத்தை நன்கு இயங்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு. இதெல்லாம் அனுபவம் உள்ள வைத்தியர் துணைகொண்டு செய்யக்கூடியதுநாமாக முயற்சிக்கக் கூடாது.  

Wednesday, 11 September 2013

வேதம் கண்ட விஞ்ஞானம்-14

வேதம் கண்ட விஞ்ஞானம்-13

கேட்டதெல்லாம் கொடுக்கும் கோட்டுமலை பிள்ளையார்.


மலேசியா,  வெள்ளைக்காரர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம் ஓன்று, விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்க காரணமாய் இருந்த கதை இது.

சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டு தோட்டத்தில் கோபமாய்  உலாவிக் கொண்டிருந்தார் வெள்ளைக்கார துரை என்று வர்ணிக்கப்படும் வாக்னர். முதலில் காவல்துறையில் பணியாற்றி,பின் வழக்கறிஞராக மாறியவர்.

இவரின் கோபத்திற்கு காரணம் என்ன?

ஓயாது ஒலிக்கும் கோவில் மணி ஓசையும், அவர் வீட்டை சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும் தான் காரணம்.

கோவில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே இருக்கும், விநாயகர்   கோவில்தான்.

கோவில் என்றதும் விஸ்த்தாரமான  கட்டிடம், வானுயர்ந்த கோபுரம் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு சின்ன ஓலை குடிசையில் இருக்கும் விநாயகர்.

இந்த விநாயகரை கூட வெள்ளைக்காரதுரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் தன பக்தி வெளிப்பாட்டின் காரணமாக சிறு சிலையாக வைத்து வழிபட தொடங்கியதுதான்.

ஆலயங்கள் அதிகம் இல்லாத அக்காலத்தில் மக்கள் வரத்தொடங்கியதும், பக்தர்கள் வேண்டியதை அருளிய விநாயகர் விரைவில் பிரபலமானதும் ஒன்றும் ஆச்சரியமில்லை.


குறுகிய இடத்தல் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார்.

அழைத்தார் தன் பணியாளரை. உடனே அந்த ஓலை குடிசையை அப்றப்படுத்து. சாமி பூதம் என்று அங்கே எதையும் செய்யக்கூடாது என்றார் காறாராக.

வெள்ளைக்காரருக்கும்  விநாயகருக்கும்  சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்.  வேலைநேரம் போக மற்றநேரமேல்லாம் விநாயகர் தொண்டுழியம் புரியும் தோட்டக்கரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்.

பதறிப்போனார் அந்த தோட்டக்காரர்வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் விக்ன விநாயகரை அகற்றுவதா?

மன்றாடினார் தோட்டக்காரர். மறுத்தார் வாக்னர். கடைசியில் ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை. அதிகாரம் வென்றது.

நாளை அங்கே எதுவும் இருக்கக் கூடாது என்று உத்தரவுயிட்டார். அதற்கு பிறகு நடந்ததுதான் வக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.

மாதங்கள் பல சென்றது. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும் கூட அவருக்கு நோய் குணமாகவில்லை.

கடைசியில் இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ என்று மனதுக்குள் புலம்ப துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கிராராம்.


 இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார் என்று உறுதியளித்தார்.

அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு  வாக்னருக்கு விபூதியை பூசுகிறார். என்ன ஆச்சரியம். நாளடைவில் பூரண குணமடைகிறார்.



அடுத்து வாக்னர் செய்ததுதான் விநாயகருக்கு அவர் செய்த நன்றிக் கடன். அதன் பிறகு அவர் விநாயக பக்தராக மாறிப்போனது இருக்கட்டும், குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் காங்கரீட் கட்டிடம் கட்டிக் கொடுத்தார்.

இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு   நாள் அதிகரிக்க தொடங்கியது.

அதன் பின்னர் கோலாலம்பூர் ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் தேவஸ்த்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961 ஆண்டிலேயே 70 ஆயிரம் மலேசிய வெள்ளி செலவில் ஆலயம் கட்டப்பட்டு, 1963இல் கும்பாபிழேகமும் நடந்தது.



இவ்வாலயத்தில் தான் இன்றும் அதிகாலை 5.30 க்கெல்லாம் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூஜைகள் நடைபெறுகிறது.  

இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிழேகம் மிக பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோவில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஓன்று.

அதைவிட நினைத்து நடக்கும், அது நினைத்த மாதிரியே நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.


Friday, 6 September 2013

துரோக வரலாற்றை திரும்பி பார்த்தால்!!

பல்வேறு பணிகளுக்கு இடையில் அன்றைய செய்திகளை தெரிந்து கொள்ள செய்தி தாள்களை பார்ப்பதுண்டு.  இன்று தினமலரை படிக்க வந்தேன். அதில் சீன ஊடுருவல் பற்றி ஒரு செய்தி. 

அதற்கு டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற வாசகர் பதில் அளித்திருந்தார். நான் அறிந்திராத செய்தி அது. 

அக்காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து எழுதி இருந்தார். ஒரு தேர்ந்த கட்டுரையாளன் மாதிரி வார்த்தைகளை கோர்த்து சொல்லிய விதம் என்னை கவர்ந்தது. இதோ உங்கள் பார்வைக்கு. 


துரோக வரலாற்றை திரும்பி பார்த்தால் சல்மான் குர்ஷித் கவலை படவேண்டாம் என்று சொல்வதில் வியப்பேதும் இருக்காது. 

அதில் சில உங்கள் பார்வைக்கு.............வரலாறை நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். 1962ல் நடந்த தேசீய அவமான சம்பவமான சீன போரின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நேருவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனிக்கு பதிலாக கிருஷ்ணமேனனும் பதவியிலிருந்தது ஒன்று தான் வித்தியாசம் என்பது அனைவருக்கும் விளங்கும். 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1959ல், காஷ்மீரை காத்தவர் என்று புகழப்பட்ட ராணுவத் தளபதி திம்மையா அவர்கள், அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ண மேனனின் போக்கைக் கண்டித்து தனது ராஜினாமாவை கொடுத்தார். 

காரணம் ராணுவத்தை பலப்படுத்தவும், எதிர்காலங்களில் வரும் போர் அபாயங்களை (1962 சீன போர்) தடுக்கவும் தான் வகுத்தளித்த திட்டங்களை ஏற்க மறுத்ததுமே காரணமாகும். 

பிறகு நேருவின் வற்புறுத்தலுக்கு பிறகு தனது ராஜினாமாவை ராணுவத் தளபதி திம்மையா அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் நேரு தளபதி திம்மையா அவர்களுக்கு உறுதியளித்தபடி ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் எடுக்கவில்லை. 

சிறிய நடவடிக்கைகள் கண்துடைப்பாக எடுக்கப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையாவும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றார். அதன் விளைவு தான் இந்திய சீன போர். அதன் முடிவு இந்தியாவிற்கு தோல்வி மட்டுமல்ல, பெருத்த அவமானத்தையும் தேடித்தந்தது. 

ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் ராணுவத்தை பலப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நேருவாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. 

ராணுவத்தளபதி திம்மையா அவர்கள் தளபதி தொரட் என்பவரை புதிய ராணுவத்தளபதியாக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். ஆனால் நேருவும் கிருஷ்ணமேனனும் அவருடைய பரிந்துரையை நிரகரித்தது மட்டுமல்ல, பிரான் நாத் தாப்பர் என்பவரை புதிய தளபதியாக நியமிக்க முடிவெடுத்தனர். 

தொரட் வீரம் மிக்க போராடும் குணம் கொண்ட போராளி ஆவார்.. ஆனால் தாப்பர் அரசியல் தொடர்பு கொண்டவர். நேருவிற்கு (திருமண சம்பந்த மூலம்) உறவினர் ஆவார். (சரித்திர ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் இவருக்கு மாமா ஆவார். 

தற்போதைய தொலைகாட்சி புகழ் கரன்தாப்பர் அவர்களின் தந்தையும் ஆவார்.) குடும்ப உறவுகளின் வலிமை எப்படிப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் புரியும். 

இதேபோன்று அரசியல் தொடர்பு கொண்ட பிரிஜ் மோகன் கவுல் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்கு எல்லை தளபதியாக நியமிக்கப்பட்டார். 1962 சீன போரின்போது, கவுல் போர்க்களத்திலிருந்து ஓடி, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் தானே சேர்ந்து ஒளிந்து கொண்டு, சரித்திரத்தில் அழியாத அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டவர். 

ஆக நேருவும், கிருஷ்ணமேனனும் நியமித்த அரசியல் தொடர்பு கொண்டவர்களின் தகுதியால் நாடு எப்படி பெரும் அவமானத்தைச் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நேருவிற்கும், கிருஷ்ணமேனனுக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் ஆர்வம் இருக்கவில்லை. 

இவர்கள் தங்களை இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாறாக உலகிற்கு தாங்கள், யுடோபியன் கருத்துக்களை போதிக்கும் ஒரு களமாக இந்தியாவைக் காட்ட முனைந்தனர். 

(யுடோபியா ஒரு சரியான அரசியல் சட்ட அமைப்பு (socio-politico-legal tem) கொண்ட ஒரு இலட்சிய மக்கள் சமூகம். 1516ல் தாமஸ் மோர் என்பவர், தான் எழுதிய யுடோபியா என்ற புத்தகத்தில் இந்த கிரீக் வார்த்தையை பயன் படுத்தினார்.) எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயேயும், மேற்கத்தியர்களை ஈர்க்கும் முயற்சிகளிலேயேயும் நேரு மிகுந்த ஆர்வம் காட்டினார். 

1948ல் தளபதி திம்மையா அவர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டு சென்றார். 

அதன் விளைவை இன்றளவு நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ராணுவத்தளபதி கரியப்பா அவர்களின் வடகிழக்கு எல்லையோரங்களில் ராணுவத்தை பலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற திட்டத்தையும் பிரதமர் நேரு நிராகரித்தார். 

பிரிட்டிஷ் மெசினரியை சார்ந்த வெர்ரியர் எல்வின் என்பவரது ஆலோசனையையே நேரு கேட்டறிந்தார். பழங்குடி கலாச்சாரத்தை பேணிக்காக்கும் வகையில் அங்கு அடிப்படை செயல்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று நேருவிற்கு எல்வின் ஆலோசனை வழங்கினார். 

பழங்குடியினர் கலாச்சாரத்தை பேணிக்காப்பதில் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்களை, குறிப்பாக இளம் பெண்களை தனது விருப்பத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். 

தனது வயதிற்கு மிகக்குறைவான வயதுடைய இரு இளம்பெண்களை திருமணம் செய்துகொண்டு, பிறகு அவர்களை விவாகரத்து செய்துவிட்டார். இவர்தான் நேருவிற்கு மிகவும் விருப்பமானவர். நேருவிற்கு ஆலோசனை வழங்கியவர்.

 இவரது ஆலோசனையின் விளைவு தான் வடகிழக்கு மாநிலங்கள் இன்று கிருத்துவ ஆதிக்கம் கொண்டதுமட்டுமல்ல, பிரிவினையையும் கோரிவருகின்றன. 

ஐக்கியநாட்டு சபை தொடங்கப்பட்டபோது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்க முன்வந்தது குறித்து நமது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. (இப்போது இந்த நிரந்தர இடத்திற்கு பிச்சை கேட்டு வருகிறோம்). 

ஆனால் நேரு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதற்கு முன், மாசேதுங் தலைமையிலான சீனாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதே சரியாக இருக்குமென்று வாதிட்டு, சீனாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பதில் முன்னின்றார். 

1950களில் சுதந்திர நாடாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, நேரு அதைப் பொருட்படுத்தவில்லை. 

அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் இன்னும் ஒருபடி மேலே பொய் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது சரி என்றும், சீனா இந்தியாவின் மீது எப்போதும் போர் தொடுக்காது என்றும் வாதிட்டார். 

சீனா போர் தொடுத்ததும், அதில் நாம் தோல்வியை சந்தித்ததும் உலகறிந்த விசயம். தற்போதும் சீனா நம்மை விழுங்க வலை விரிக்கிறது. பலவகைகளிலும் அது நம்மை நெருக்கி வருகிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடாக்கிக்கொண்டு, அந்த நாடுகளை நமக்கு எதிராக தூண்டி வருகிறது. 

ஆனால் இந்தியாவை தூங்கிக்கொண்டே ஆண்டு கொண்டிருக்கும் சோனியா காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. 

ராணுவத்தளபதியின் கடிதம் எப்படி கசிந்தது என்பதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் அரசு, அவர் கூறியுள்ள ராணுவத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும். 

இல்லையென்றால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல முட்டாள்களால் மீண்டும் வரலாறு திரும்பும் ஒரு பெட்டி செய்தி: ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்டாலும், பிரபலமான ஜோதிடர் திரு பி வி ராமன் அவர்களை நேருவும், கிருஷ்ணமேனனும் கலந்தாலோசிப்பது வழக்கம். 

மேனன் நேரிடையாகவும், நேரு, தனது தூதர் குல்சாரிலால் நந்தா மூலமாகவும் ஆலோசனை கேட்பது வழக்கம். ஒரு முறை, மேனன் தனது பதவியை இழப்பார் என்றும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்று கணித்து சொன்னார். 

அப்போது மேனன் அவரிடம் “நான் பதவியை இழப்பேன் என்று சொல்வது கூட உண்மையாக இருக்கலாம், ஆனால் சீனா இந்தியா மீது எக்காலத்திலும் போர் தொடுக்காது, ஏனென்றால் இருநாடுகளும் சோசிலிச நாடுகள்” என்று கூறினாராம். அதன் பின்னர் சீனா போர் தொடுத்தது அனைவரும் அறிந்த ஒன்று.


டாடி எனக்கு ஒரு டவுட்டு - thalainagaram,இந்தியா

Thursday, 5 September 2013

பிறந்த நாள் வாழ்த்து


கடந்த 02-09-2013 இல் கடந்து போனது என் பிறந்த நாள். நடந்து வந்த பாதையை  திரும்பி பார்க்கிறேன்.  

நான் சாதனையாளன் அல்ல. ஆனால் சாதிக்க பிறந்தவன் என்று புரிகிறது. அதற்கான கால நேரத்திற்காக காத்திருக்கிறேன். 

வெறுமனே பிறந்து வாழ்ந்து செத்து போனவர்கள் பட்டியலில் நானும் ஒருவனாக இருக்க விருப்பம் இல்லை.  மரணத்திற்கு பின்னும் மரிக்காத சாதனைகள் புரிய ஆசை.

2015 எனக்கான களம். அதுவரை நான் முடிக்க வேண்டிய சில பணிகள் இருக்கிறது. அதற்க்கான காத்திருப்பு என்பதை விட தவம் என்பது பொருந்தும். 

இன்று ஐயா முத்து குமாரசாமி அவர்கள் வாழ்த்து என் வாசலுக்கு வந்தது. அன்புக்கும் பண்புக்கும் உதாரண புருஷர் அவர். 

நூற்றை தொடும் நூல்கள் எழுதிய சிந்தனை சிற்பி.  அவரின் வாழ்த்து என்னை மேலும் ஊக்குவிக்கும்.  

நண்பர்  செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் என் முக நூலுக்கு வாழ்த்து அனுப்பி இருக்கிறார். அவருக்கும் என் நன்றி. 


குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...