பல்வேறு பணிகளுக்கு இடையில் அன்றைய செய்திகளை தெரிந்து கொள்ள செய்தி தாள்களை பார்ப்பதுண்டு. இன்று தினமலரை படிக்க வந்தேன். அதில் சீன ஊடுருவல் பற்றி ஒரு செய்தி.
அதற்கு டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற வாசகர் பதில் அளித்திருந்தார். நான் அறிந்திராத செய்தி அது.
அக்காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து எழுதி இருந்தார். ஒரு தேர்ந்த கட்டுரையாளன் மாதிரி வார்த்தைகளை கோர்த்து சொல்லிய விதம் என்னை கவர்ந்தது. இதோ உங்கள் பார்வைக்கு.
துரோக வரலாற்றை திரும்பி பார்த்தால் சல்மான் குர்ஷித் கவலை படவேண்டாம் என்று சொல்வதில் வியப்பேதும் இருக்காது.
அதில் சில உங்கள் பார்வைக்கு.............வரலாறை நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். 1962ல் நடந்த தேசீய அவமான சம்பவமான சீன போரின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நேருவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனிக்கு பதிலாக கிருஷ்ணமேனனும் பதவியிலிருந்தது ஒன்று தான் வித்தியாசம் என்பது அனைவருக்கும் விளங்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1959ல், காஷ்மீரை காத்தவர் என்று புகழப்பட்ட ராணுவத் தளபதி திம்மையா அவர்கள், அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ண மேனனின் போக்கைக் கண்டித்து தனது ராஜினாமாவை கொடுத்தார்.
காரணம் ராணுவத்தை பலப்படுத்தவும், எதிர்காலங்களில் வரும் போர் அபாயங்களை (1962 சீன போர்) தடுக்கவும் தான் வகுத்தளித்த திட்டங்களை ஏற்க மறுத்ததுமே காரணமாகும்.
பிறகு நேருவின் வற்புறுத்தலுக்கு பிறகு தனது ராஜினாமாவை ராணுவத் தளபதி திம்மையா அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் நேரு தளபதி திம்மையா அவர்களுக்கு உறுதியளித்தபடி ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் எடுக்கவில்லை.
சிறிய நடவடிக்கைகள் கண்துடைப்பாக எடுக்கப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையாவும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றார். அதன் விளைவு தான் இந்திய சீன போர். அதன் முடிவு இந்தியாவிற்கு தோல்வி மட்டுமல்ல, பெருத்த அவமானத்தையும் தேடித்தந்தது.
ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் ராணுவத்தை பலப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நேருவாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
ராணுவத்தளபதி திம்மையா அவர்கள் தளபதி தொரட் என்பவரை புதிய ராணுவத்தளபதியாக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். ஆனால் நேருவும் கிருஷ்ணமேனனும் அவருடைய பரிந்துரையை நிரகரித்தது மட்டுமல்ல, பிரான் நாத் தாப்பர் என்பவரை புதிய தளபதியாக நியமிக்க முடிவெடுத்தனர்.
தொரட் வீரம் மிக்க போராடும் குணம் கொண்ட போராளி ஆவார்.. ஆனால் தாப்பர் அரசியல் தொடர்பு கொண்டவர். நேருவிற்கு (திருமண சம்பந்த மூலம்) உறவினர் ஆவார். (சரித்திர ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் இவருக்கு மாமா ஆவார்.
தற்போதைய தொலைகாட்சி புகழ் கரன்தாப்பர் அவர்களின் தந்தையும் ஆவார்.) குடும்ப உறவுகளின் வலிமை எப்படிப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் புரியும்.
இதேபோன்று அரசியல் தொடர்பு கொண்ட பிரிஜ் மோகன் கவுல் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்கு எல்லை தளபதியாக நியமிக்கப்பட்டார். 1962 சீன போரின்போது, கவுல் போர்க்களத்திலிருந்து ஓடி, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் தானே சேர்ந்து ஒளிந்து கொண்டு, சரித்திரத்தில் அழியாத அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டவர்.
ஆக நேருவும், கிருஷ்ணமேனனும் நியமித்த அரசியல் தொடர்பு கொண்டவர்களின் தகுதியால் நாடு எப்படி பெரும் அவமானத்தைச் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நேருவிற்கும், கிருஷ்ணமேனனுக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் ஆர்வம் இருக்கவில்லை.
இவர்கள் தங்களை இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாறாக உலகிற்கு தாங்கள், யுடோபியன் கருத்துக்களை போதிக்கும் ஒரு களமாக இந்தியாவைக் காட்ட முனைந்தனர்.
(யுடோபியா ஒரு சரியான அரசியல் சட்ட அமைப்பு (socio-politico-legal tem) கொண்ட ஒரு இலட்சிய மக்கள் சமூகம். 1516ல் தாமஸ் மோர் என்பவர், தான் எழுதிய யுடோபியா என்ற புத்தகத்தில் இந்த கிரீக் வார்த்தையை பயன் படுத்தினார்.) எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயேயும், மேற்கத்தியர்களை ஈர்க்கும் முயற்சிகளிலேயேயும் நேரு மிகுந்த ஆர்வம் காட்டினார்.
1948ல் தளபதி திம்மையா அவர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டு சென்றார்.
அதன் விளைவை இன்றளவு நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ராணுவத்தளபதி கரியப்பா அவர்களின் வடகிழக்கு எல்லையோரங்களில் ராணுவத்தை பலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற திட்டத்தையும் பிரதமர் நேரு நிராகரித்தார்.
பிரிட்டிஷ் மெசினரியை சார்ந்த வெர்ரியர் எல்வின் என்பவரது ஆலோசனையையே நேரு கேட்டறிந்தார். பழங்குடி கலாச்சாரத்தை பேணிக்காக்கும் வகையில் அங்கு அடிப்படை செயல்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று நேருவிற்கு எல்வின் ஆலோசனை வழங்கினார்.
பழங்குடியினர் கலாச்சாரத்தை பேணிக்காப்பதில் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்களை, குறிப்பாக இளம் பெண்களை தனது விருப்பத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்.
தனது வயதிற்கு மிகக்குறைவான வயதுடைய இரு இளம்பெண்களை திருமணம் செய்துகொண்டு, பிறகு அவர்களை விவாகரத்து செய்துவிட்டார். இவர்தான் நேருவிற்கு மிகவும் விருப்பமானவர். நேருவிற்கு ஆலோசனை வழங்கியவர்.
இவரது ஆலோசனையின் விளைவு தான் வடகிழக்கு மாநிலங்கள் இன்று கிருத்துவ ஆதிக்கம் கொண்டதுமட்டுமல்ல, பிரிவினையையும் கோரிவருகின்றன.
ஐக்கியநாட்டு சபை தொடங்கப்பட்டபோது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்க முன்வந்தது குறித்து நமது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. (இப்போது இந்த நிரந்தர இடத்திற்கு பிச்சை கேட்டு வருகிறோம்).
ஆனால் நேரு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதற்கு முன், மாசேதுங் தலைமையிலான சீனாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதே சரியாக இருக்குமென்று வாதிட்டு, சீனாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பதில் முன்னின்றார்.
1950களில் சுதந்திர நாடாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, நேரு அதைப் பொருட்படுத்தவில்லை.
அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் இன்னும் ஒருபடி மேலே பொய் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது சரி என்றும், சீனா இந்தியாவின் மீது எப்போதும் போர் தொடுக்காது என்றும் வாதிட்டார்.
சீனா போர் தொடுத்ததும், அதில் நாம் தோல்வியை சந்தித்ததும் உலகறிந்த விசயம். தற்போதும் சீனா நம்மை விழுங்க வலை விரிக்கிறது. பலவகைகளிலும் அது நம்மை நெருக்கி வருகிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடாக்கிக்கொண்டு, அந்த நாடுகளை நமக்கு எதிராக தூண்டி வருகிறது.
ஆனால் இந்தியாவை தூங்கிக்கொண்டே ஆண்டு கொண்டிருக்கும் சோனியா காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
ராணுவத்தளபதியின் கடிதம் எப்படி கசிந்தது என்பதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் அரசு, அவர் கூறியுள்ள ராணுவத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும்.
இல்லையென்றால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல முட்டாள்களால் மீண்டும் வரலாறு திரும்பும் ஒரு பெட்டி செய்தி: ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்டாலும், பிரபலமான ஜோதிடர் திரு பி வி ராமன் அவர்களை நேருவும், கிருஷ்ணமேனனும் கலந்தாலோசிப்பது வழக்கம்.
மேனன் நேரிடையாகவும், நேரு, தனது தூதர் குல்சாரிலால் நந்தா மூலமாகவும் ஆலோசனை கேட்பது வழக்கம். ஒரு முறை, மேனன் தனது பதவியை இழப்பார் என்றும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்று கணித்து சொன்னார்.
அப்போது மேனன் அவரிடம் “நான் பதவியை இழப்பேன் என்று சொல்வது கூட உண்மையாக இருக்கலாம், ஆனால் சீனா இந்தியா மீது எக்காலத்திலும் போர் தொடுக்காது, ஏனென்றால் இருநாடுகளும் சோசிலிச நாடுகள்” என்று கூறினாராம். அதன் பின்னர் சீனா போர் தொடுத்தது அனைவரும் அறிந்த ஒன்று.
டாடி எனக்கு ஒரு டவுட்டு - thalainagaram,இந்தியா
No comments:
Post a Comment