நவரத்தினத்தில் ஒன்றாக விளங்கும் பச்சை
நிறம் கொண்ட மரகதத்தை ஆங்கிலேயர்கள்
எமரல்ட் (ணினீமீக்ஷீணீறீபீ) என்று அழைக்கின்றனர். இது
வைரம், மாணிக்கம், போன்று, தரமான கற்கள்
அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைப் பச்சை என்றும் அழைக்கின்றனர்.
இன்னும் சில ரக மரகதத்தை
மரைக்காயர் பச்சை என்றும் அழைக்கின்றனர்.
இதைப்பற்றிய சுவையான கதையின் வாயிலாக
மரைக்காயர் பச்சை என்ற பெயர்
எவ்வாறு வந்தது என்று அறியலாம்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த மரைக்காயர் அக்காலத்தில்
பாய்மரக் கப்பலில் வியாபார நிமித்தமாக
வெளிநாடு சென்று கொண்டிருக்கும் போது
நடுக்கடலில் புயல் காற்றின் காரணமாக
கப்பல் திசைமாறி ஒரு தீவை அடைந்தது.
தனது வியாபாரப் பயணம் திசை மாறிய
வருத்தத்தில் அத்தீவில் தனது மாலுமிகளுடன் அடுத்த
திட்டம் என்ன என்பதைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு கிடந்த பச்சைக்
கற்கள் இவர் மனதைக் கவர்ந்தது.
உடனே தனது மாலுமிகளிடம் அக்கற்களை
எடுத்துக் கப்பலில் ஏற்றும்படி உத்தரவிட்டார். சுமார் பத்துப் பதினைந்து
பெரிய கற்களைக் கொண்டு வந்து அதன்
சிறப்பை அறியாது தனது வீட்டின்
முன் பகுதியில் மழைக்காலங்களில் சேற்று மண் காலில்
படாதவாறு வாசலில் பதித்து விட்டார்.
பெரிய வியாபாரியாகிய இவரை
வியாபார நிமித்தமாகப் பார்க்கப் பலர் வந்தபோவது வழக்கம்.
ஆனால் நாளடைவில் இவரது கப்பல் திசைமாறியது
போல் வாழ்க்கையும் திசைமாறி வறுமையை நோக்கிச் சென்றது.
ஈவு, இரக்கமுடைய மரைக்காயர் சிறந்த தர்மவானாகவும் விளங்கினார்.
இத் தருணத்தில் தனது கடனால் கௌரவம்,
அந்தஸ்து பாதித்து விடுமோ என்று பயந்து
தனக்கு மிஞ்சியிருந்த குடியிருக்கும் அழகான வீட்டை விற்றுக்
கடனை அடைத்தது போக மீதிப் பணம்
இருந்தால் வெளியூர் சென்று சிறு தொழில்
செய்து வாழ்வோம் என்ற திட்டத்தில் இருந்தார்.
இக்கட்டான நேரத்தில் முத்து பவளம் போன்ற
கற்கள் வியாபாரத்தில் புகழ் பெற்ற சீன
வியாபாரி ஒருவர் எதிர்பாராவிதமாகப் பாண்டிச்சேரிக்கு
வந்தபோது மரைக்காயரைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றார்.
சீன வியாபாரியோ கற்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
பொதுவாகச்
சீனர்கள் பச்சைக் கற்களை விரும்பி
அணிவது யாவரும் அறிந்ததே. அந்த
சீன வியாபாரி வீட்டின் உள்ளே செல்வதற்கு முன்
வெளியே நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த கற்களைப் பார்த்தவுடன் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு
விலைஉயர்ந்த கற்களை வாசலில் பதிக்கும்
அளவிற்குப் பெரிய பணக்காரர் என
நினைத்து அசந்து போய் உள்ளே
சென்றார்.
தன்னைத் தேடி வந்த
விருந்தாளியை அன்புடன் உபசரித்து மரைக்காயர் பேசிக் கொண்டிருக்கும் போது
தனது வியாபாரத்தை நிறுத்தி விட்டேன் என்று ஆரம்பித்தார். உடனே
சீன வியாபாரி, பெரியவங்க நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
. உங்கள் வீட்டின் முன் போட்டுள்ள பச்சைக்
கற்கள் இரண்டு கொடுங்கள். தாங்கள்
விரும்பும் பவுணை நான் தரத்
தயாராக உள்ளேன் என்றதும் மரைக்காயர்
சுதாகரித்துக்கொண்டார்.
ஐயா நான் இதை
விற்பனைக்காக வைத்திருக்கவில்லை. அழகிற்காகப் பதித்து வைத்திருக்கின்றேன். இதன்
விலை மிக மிக அதிகமானது.
இதன் விலையை நான் கூறினால்
நீங்கள் வாங்கமாட்டீர்கள் என்று மரைக்காயர் சொல்லிப்பார்த்தார்.
ஆனால் சீன வியாபாரி விடவில்லை.
உடனே மரக்காயர் தனக்குள்ள கடன் போக பெரிய
தொகை கையில் தம்
இருக்கும்படி கணக்கிட்டு ஒரு பெரிய கல்லிற்கு
விலையைக் கூறினார். அவர் சொன்ன பணத்தைக் கொடுத்து விட்டு இரண்டு கற்களை
வாங்கிச் சென்றார் சீன வியாபாரி.
பத்து ஆண்டுகள் பாதையில்
கிடந்த கற்கள் அன்று முதல்
அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால் மரைக்காயர் மீண்டும்
அத் தீவைக் கண்டுபிடிக்க முயன்று
முடியவில்லை.
இதனால்
தன்னிடம் இருந்த கற்களை நல்ல
விலைக்கு இந்தியாவிலேயே விற்றுப்
பெரும் பணக்காரராக ஆகிவிட்டார். இன்று கூட மரைக்காயர்
வம்சத்தினர் பெரும் கற்கள் வியாபாரியாக
உலக முழுவதும் இருப்பதைக் காணலாம்.
மரகதம் மென்மையானது. இதைக்
கண்ணாடி பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில்
மரகதத்தைப் போட்டால் பால் முழுவது பச்சை
நிறமாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் விலை உயர்ந்ததாகும்.
இது பச்சைக் கிளிக்குஞ்சின் இறகு,
புதிய பசும்புல் போன்றவைகளின்
நிறத்தை ஒத்தது.
இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் ரேகை,
மாலை கருகுதல் போன்ற குற்றங்களைப் பற்றிக்
கூறுகின்றார். பொதுவாக குற்றமற்ற மரகத
மணிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. சூரிய ஒளியில் மரகதம்
நன்கு ஒளி உண்டாகி மற்றப்
பொருட்களையும் பச்சை நிறமடையச் செய்யும்.
கொலம்பியாவில் கிடைக்கும் மரகதம் சிறந்ததாக மதிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவிலும், பெரு என்னும் நாட்டிலும்
மரகதம் எடுக்கப்பட்டு வருகின்றது. தென்னமெரிக்காவில் புகழ்பெற்ற மரகதச் சுரங்கம் மியூசோ,
காஸ்க்யூஸ் போன்ற இடங்களில் அமைந்துள்ளது.
சோமன்டோகோ சாலமன் என்ற அரசன்
காலம் முதல் மரகதத்தின் சிறப்பை
மக்கள் அறிந்துள்ளனர் என்று புத்தக வாயிலாகத்
தெரிய வருகிறது.
பாபிலோன்
நாட்டு அரசன் ஒருவனிடம் நான்கு
முழம் நீளமும், மூன்று முழம் அகலமும்
உள்ள மரகதக்கல் இருந்ததாகவும் அதைத் தன் குருவிற்கு
அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றும் வரலாற்று நூல்கள்
கூறுகின்றன.
ஸ்ரீ லங்காவில் ஒருவர்
தனது அலுவலக மேசையின் மீது
பேப்பர் வெயிட்டாக ஒரு கல்லைப் பயன்படுத்தி
வந்தாராம். அந்தக்கல் அவருடைய தாத்தா காலத்திலிருந்து
இருந்து வந்ததாம். இதனால் இவர் இதை
மேசையிலேயே நீண்டகாலமாக வைத்திருந்தாராம்.
ஒரு நாள் கல்லைப் பற்றித்
தெரிந்த ஒருவர் இவரைச் சந்தித்தபோது
இதை மரகதம் என்றும் இதன்
விலை சுமார் இத்தனை லட்சம்
போகும் என்று கூறியதும் உடனே
பெரிய வியாபாரிகளைச் சந்தித்து விற்று உயர்ந்த நிலையில்
இன்றும் வாழ்கின்றாராம்.
கற்களைப் பற்றித்
தெரியாத சிலரிடம் நல்ல கற்கள் கிடைத்ததும்
அவர்கள் ஏமாற்றறம் அடைவதும் உண்டு. படிகக் கற்களைக்
கையில் எடுத்துக் கொண்டு வைரம் என்று
விற்க அலைபவர்களும் உண்டு.
கிடைக்குமிடங்கள்
மரகதம் இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்பத்தூர்
மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊரில் கிடைத்தது
வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர், அஜ்மீர் போன்ற இடங்களிலும்
சிறந்த பச்சைக்கற்கள் கிடைத்து வருகிறது.
இதில் நல்ல மரகதப் பச்சைக்
கற்களுக்கு அதிக விலைகொடுத்து வியாபாரிகள்
வாங்கிச் செல்கின்றனர். எதியோப்பியாவிலும் எகிப்து நாடுகளிலும் நீண்ட
காலமாகக் கிடைக்கின்றது.
உலகத்திலேயே அதிகமாக இன்று கொலம்பியா,
சைபீரியா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளில்
கிடைக்கின்றது. அவுஸ்திரேலியாவிலும் யூரல் மலைப்பகுதி, சாலஸ்பர்க்
ஆல்ப்ஸ் என்ற மலைப்பகுதி, ஸ்ரீலங்கா,
பர்மா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது.
தங்கச் சுரங்கங்களிலும் செப்புச் சுரங்கங்களிலும் எதிர்பாராத விதமாக கலப்பாக உள்ள
மரகதம் கிடைக்கிறது. உண்மையான மரகதம் தேய்த்தால் ஒளிமிகும்.
நொருங்கும் தன்மை கொண்ட இப்பச்சைக்
கற்களைப் பட்டை தீட்டுவதில் இந்தியாவில்
உள்ள ஜெய்ப்பூர் தான் சிறந்து விளங்குகின்றது.
கொலம்பியா, பிரேசில், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து பட்டை
தீட்டுவதற்கான இக்கற்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில்
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநள்ளாறில் ஒரு மரகத லிங்கம்
இருக்கின்றது. லண்டனிலும் நியூயோர்க்கிலும் வரலாற்றுப் பழம் பொருளகத்தில் பாதுகாப்பாகச்
சிறந்த மரகதக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
தன்மை
பச்சை நிறம் கொண்ட
மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதன்
ஒப்படர்த்தி 2.73 இதன் கடினத்தன்மை 7.5 முதல்
8 வரையுள்ளது. இதில் சிலிக்கா, அலுமினியம்,
சோடா, மக்னீஸ் போன்ற இரசாயனக்
கலவைகள் அடங்கியுள்ளது.
பார்ப்பவர்கள்
மனதைக் கவரும் அழகுடையது. இந்துக்களும்
முகமதியர்களும் மாலையாகயும், தொங்கட்டானாகவும், தாயத்தாகவும் அணிகின்றனர். சயாம் மன்னனின் பகோடாவில்
மரகதத்தால் ஆன புத்தர் சிலை
உள்ளது. அதிகமான மரகதக் கற்களில்
பசும் இலைகளின் பின்புறம் உள்ள நரம்புகள் போன்று
காணப்படும்.
குணமாகும் நோய்கள்
மரகதத்தை நிலப் பூசனிக் கிழங்கினுள்
வைத்துப் பின் இதனை கோழிமுட்டை
வெள்ளைத் தாதுவில் 3 நாள் ஊற வைத்து
கழுவி சுத்தியாக்க வேண்டும் என்றும், இதில் ஆறுவகைக் குற்றமுள்ளது
என்றும் சித்த நூல்கள் கூறுகின்றது.
இப்படி
சுத்தி செய்யப்பட்ட மரகதத்தைக் கண்டங்கத்தரி இலையின் சாற்றுடன் பூ
நீர் கலந்து ஊறவைத்து பின்
நேர்வாளவேரில் அரைத்துப் புடம் செய்து பஸ்மாக்கப்படுகிறது.
இப் பஸ்பம் வயிற்றுக்
கடுப்பு, வலிப்பு, சிறுநீரகக்கல், மூளையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் போன்றவை குணமாகும். இப்பஸ்பத்துடன்
பவளப் பஸ்பமும் சேர்த்துச் சாப்பிட்டால் மூளைதாதபிதசுரம் தீரும். உடம்புச்சூடு, மேகச்சூடு,
அக்னிமகதம் போன்ற வியாதிகள் தீரும்.
பெண்களுக்குக்
கர்ப்பச் சிதைவைத் தடுக்கும். மூளையில் இரத்தக் கசிவைத் தடுக்கவும்
கண்ணில் சதை வளர்வதைத் தடுக்கவும்
செய்யும். விந்தணுக்களைப் பெருக்கும் தன்மையும் உண்டு. வாதம், பித்தம்
போன்றவற்றைக் குணப்படுத்தி உடலுக்கு வலுவூட்டக்கூடியது. உடல் வளர்ச்சி இன்றி
இருப்பவர்களை உடல் வளர்ச்சியடையச் செய்யும்.
இவ்வளவு இருக்கிறதா...? நன்றி...
ReplyDelete