உண்மையாக, உறுதியாக, உளர்பூர்வமாக, சத்தியமாக, வேதங்களின் மேல் ஆணையாக ஒன்றை சொல்ல முடியும்.
எவன் ஒருவன் தன் நித்திய பூஜையாக சாளகிராமத்தை தொழுகிறானோ, அவன் இன்மையிலும் மறுமையிலும் எந்த கெடுதலையும் அடைய மாட்டான்.
தருமத்தை விரும்புகிறவர்கள் தருமத்தையும். பொன் பொருளை நாடுகிறவர்கள் பொன் பொருளையும். அந்தஸ்து அதிகாரங்களை விரும்புகிறவர்கள் அந்தஸ்து அதிகாரத்தையும். காமத்தை விரும்புகிறவர்கள் காமத்தையும். மோட்சத்தை விரும்புகிறவர்கள் மோட்சத்தையும். வளமான சந்ததியை விரும்புகிறவர்கள் வளமான சந்ததியையும் பெறுவார்கள்.
உள்ளத்தூய்மையும், புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் சாளகிராம சொரூப பரந்தாமனை உளமாற துதிப்பவனுக்கு எல்லாவிதமான துன்பங்களில் இருந்தும் விடுப்பட்டவன் ஆகிறான்.
கடன் தொல்லையில் மூழ்கி கரையேற முடியாமல் தவிப்பவர்கள் சாளகிராம வழிபாட்டை பக்தி சிரத்தையுடன் செய்தால் கடலளவு கடனும் கடுகத்தனையாக மாறும்.
மருந்து மாத்திரையே விருந்தாக உண்ணும் நோயாளிகள் அதிலிருந்து விடுபட சாளகிராம வழிட்டை மன ஒருமையுடன் தொடர்ந்தால், ஆரோக்கியம் மேம்படும் என்பதை அடித்துச் சொல்லலாம்.
வழக்குத் தொல்லைகளால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், நிம்மதியை தொலைத்து நிற்கதியாய் நிற்பவர்கள், ஆதரவற்றுப் போய் அநாதையாக இருப்பர்கள்.
ஆதரிக்க யாருமின்றி ஆண்டவனே கதியென்று அனுதினம் துதிப்பவர்கள் சாளகிராம வழிபாட்டை விடாது செய்தால் விமோச்னம் பெறலாம்.
எதிரிகள் மத்தியில் எந்நாளும் தவிப்பவர்கள், தொட்டது அனைத்திலும் தோல்வியை தழுபவர்கள், நவக்கிரக பாதிப்பால் நலிந்து மெலிந்தவர்கள் என எத்தரப்பினராக இருந்தாலும், மிக எளிமையான சாளகிராம வழிபாட்டை செய்தால், கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்து விடலாம்.
அருட் செல்வம் என்னும் ஆன்மசுகம், பொருட் செல்வம் என்னும் தனவிருத்தியை தடையில்லாமல் பெறலாம் என்று வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்கள் அறுதியிட்டு சொல்கின்றன.
சிந்தையில் கொள்வோம், சிரமேற்கொள்வோம், சாளகிராம வழிபாட்டை பக்தி சிரத்தையுடன் தொடர்வோம், அனைத்தும் பெற்று ஆனந்த வாழ்வு பெறுவோம் என்ற உறுதி மொழியோடு உள்ளே செல்வோம்.
வாருங்கள் வைகுண்ட வாசனின் திருவிளையாடல், அவரின் பெருமைகள், இதுவரை அறிந்திராத ஆன்மீக தகவல்கள், மந்திர பூஜா முறைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முதலடி எடுத்து வையுங்கள். திருமாலின் திருவடி தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.
ஓம் நமோ நாராயணாய.
தொடரும்
No comments:
Post a Comment