இருதயம் இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது என்று நம்மில் பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருதயம் ரத்தத்தைச் சுத்தம் செய்வது கிடையாது.
நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் போன்ற உறுப்புக்களே இரத்தத்தை சுத்தம் செய்கின்றன.
அதே போல் இரத்தத்தை உருவாக்குகின்ற உறுப்பு எலும்பு மஜ்ஜைகள்.
இரத்தத்தை ஒரு ரயில் போல் கற்பனை செய்து கொண்டால், உடலிலுள்ள முக்கிய உறுப்புக்களை ரயில் நிலையங்கள் என்று கொள்ளலாம்.
ரத்தம் என்ற ரயில் இருதயம் என்ற இடத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் உள்ளேயும் சென்று வெளியே வரும்.
ரயில் சில ஸ்டேஷன்களில் சில பயணிகள் ஏறுவார்கள், சில ஸ்டேஷன்களில் சில பயணிகள் இறங்குவார்கள். அதே போல் உடலில் இருக்கும் உறுப்புகள் என்ற ஸ்டேஷன்களிலிருந்து சில பொருட்கள் ஏறும் சில பொருட்கள் இறங்கும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன?
நம் உடல் வேலைசெய்யும் போது உடலிலுள்ள செல்கள் இரத்தத்தில் உள்ள சக்தியை எடுத்துக் கொள்கின்றன.
செல்களை குழந்தையாகவும் இருதயத்தை இரத்தமாகவும் கற்பனை செய்யுங்கள். எத்தனை குழந்தைகள் சாப்பிடுகிறதோ அத்தனை பி.பி. உங்களுக்கு அதிகமாகும்.
நீங்கள் உங்கள் இரண்டு கைகளையும் மேலேயும் கீழேயும் ஆட்டுங்கள். உங்கள் பி.பி ஏற்கனவே இருந்ததைவிட அதிகரிக்கிறதா குறைகிறதா? அதிகமாகிறது அல்லவா? ஏன் ? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களை சாப்பிடுவதால் இருதயம் வேகமாக அந்த இடங்களுக்கு இரத்தத்தை அனுப்பி அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.
நீங்கள் வேகமாக ஓடினால் பி.பி அதிகமாகிறதா குறைகிறதா? வேகமாக ஓடும் போது யாராக இருந்தாலும் அவர்களுக்கு பி.பி . அதிகமாகத்தான் இருக்கும்.
ஹை பி.பியை நோய் என்று சொல்கிறார்களே, உலகத்தில் யாரும் வேகமாக ஒடக்கூடாதா? பி.பி நார்மலாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பது பொதுவான கருத்து. ஒரு நாய் துரத்தும் போது பி. பி. நார்மலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து மெதுவாக ஓடினால் நாய் உங்களைக் கடித்து விடும். நாய் துரத்தும் போது பி.பி யை நார்மலாக வைத்துக் கொண்டிருக்க முடியாது.
இரத்த அழுத்தம் நார்மலாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
ஒலிம்பிக் போட்டியில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் எந்த ஒரு விளையாட்டிற்குச் சென்றாலும் பி.பி அதிகரிக்கவேச் செய்யும்.
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் பி.பி நார்மலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
குறைந்த இரத்த அழுத்தம்
ஒரு மணிநேரம் அசைவின்றி தியானத்தில் அமருங்கள். அப்போது ரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள். இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்திருக்கும். உடனே லோ பிரஸ்ஸர் என்று சொல்லிவிட முடியுமா?
எனவே குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது. குறைந்த இரத்த அழுத்தம் ஒரு நோய் என்றால் யாரும் தியானம் செய்யக் கூடாது.
தியானத்தில் நமக்கு பல அதிசய சக்திகள் கிடைக்கிறது என்கிறார்கள். குறைந்த இரத்த அழுத்தம் நோய் என்றால் தியானம் செய்யும் போது எப்படி ஆற்றல் கிடைக்கும். தியானம் முடிந்தவுடன் கைகால்களை மேலும் கீழும் ஆட்டுங்கள். அப்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
நம் உடலுக்கு எப்போழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறே உடல் அதை அதிகப்படுத்தியோ குறைத்துக் கொள்ளவோ செய்கிறது.
சார், இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனால் நான் ஓடவேயில்லை.. வீட்டில் உட்கார்ந்திருக்கும் போதே எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதே இதற்கு காரணம் என்ன? நான் வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது எனக்கு லோ பிரஷர் வந்து தலை சுற்றி விட்டது .. இதற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள் ? என்று நீங்கள் கேட்கலாம்..
நம் உடலுக்கு வேலை கொடுக்கும் போது, அனைத்து செல்களும் வேலை செய்யும் பொழுது அனைத்து செல்களும் சாப்பிடும்பொழுது அல்லது செல்களுக்கு நோய் வரும்பொழுது, தன் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கும், இயக்க சக்தி அதிகரிப்பதற்கும், இரத்த அழுத்தம் அதிகமாகிறது. எப்போழுது நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவு தேவையில்லையோ அப்போது பி.பி குறைவாகும்.
ஒரு செல்லுக்கு நோய் வந்தால் நான்கு விசயங்களைக் கேட்கும்
.
1. இரத்த அழுத்தம் 2. சர்க்கரை. 3. ஆக்ஸிஜன் 4. நோயைக் குணப்படுத்த தேவையான தாதுப் பொருளும் வைட்டமின்களும்.
இந்த 4பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்த செல்லுக்கு எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதலில் அது கேட்பது பி.பி.
ஏனென்றால் இரத்த அழுத்தம் அதிகமானால்தான் அதற்கு பொருள் வேகமாக வந்து சேர்ந்து சாப்பிட முடியும். அப்போதுதான் நோயைக் குணப்படுத்த முடியும். 10000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10000 செல்களும் முதலில் பி.பியைக் கேட்கும்.
பி. பி அதிகமாகும். 10000 செல்களும் தங்கள் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அரைமணியோ, ஒரு மணி நேரமோ, நான்கு மணி நேரமோ தேவைப்படலாம். இவ்வளவு நேரமும் பி.பி அதிகமாகத்தான் இருக்கும். பி.பி நார்மலாக இருந்தால் நோயைக் குணப்படுத்த முடியாது.
யாருடைய உடலில் நாம் ஏற்கனவே சொன்னது போல் 1 இரத்தத்திலுள்ள பொருள்களின் தரம். 2 பொருள்களின் அளவு, 3 இரத்தத்தின் அளவு, 4 மனது , 5 உடல் அறிவு இந்த ஐந்து விசயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய பி.பி அதிகரிக்கும்,
நோய்கள் குணமாகும், பின்பு பி.பி நார்மலுக்கு வந்து விடும். மேலே சொன்ன பொருட்களில் ஒன்றோ இரண்டோ சரியில்லை என்றால் நம் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த முடியாது..
அப்படி ஒரு செல் குணமாகாமல் தவிக்கும் போது பி.பியைக் கேட்டுக் கொண்டே இருக்கும். இரத்தத்தின் அளவு குறைவானாலும், மனம் கெட்டுப்போனாலும், உடலின் அறிவு கெட்டுபோனாலும் பி.பி அதிகரித்த நிலையிலேயே இருக்கும்.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது . அதைக் குணப்படுத்த இயலாமல் தவிக்கிறது என்பதை உணரவேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது.. இருதயம் கோளாறாகி விட்டது என்று தவறாக நினைக்கக் கூடாது.
மேலே சொன்ன ஐந்து காரணங்களை சரி செய்வதன் மூலம் உடலிலுள்ள செல்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து நோயைக் குணப்படுத்தி, பி.பியைக் குறைக்க முடியும் இதுவே சரியான தீர்வு.
உடலிலுள்ள செல்களுக்கு நோய் ஏற்பட்டு அதை குணப்படுத்த தேவையான பொருட்கள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ பி.பி அதிகரிப்பது உயர் பி.பி என்று பார்த்தோம்.
அதே போல் திசுக்களாலான இருதயத்திற்கும் செல்கள் உண்டு. இருதயத்திலுள்ள செல்கள் சாப்பிடக்கூடிய பொருள் கெட்டுப்போயிருந்தாலோ, அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இருதய செல்கள் பாதிக்கும்.
இதைக் குறை இரத்த அழுத்தம் என்கிறோம். எனவே உயர் பி.பி என்பது, குறை பி.பி என்பதும் இருதய சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய். குறிப்பாக மேலே சொல்லப்பட்ட ஐந்து பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய். எனவே அந்தப் பொருட்களை சரிப்படுத்திக் கொண்டால் பி.பி நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
மற்றபடி மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கிப் போட்டால் அது நோயைக் குணப்படுத்துவதில்லை.
பி.பி அளவை கண்ட்ரோல் மட்டுமே செய்கிறது. சில நாட்களில் நாம் சாப்பிடும் மருந்துகளின் டோஸ் மட்டுமே அதிகரிக்கிறது. நோய் குணமாவதில்லை.
வாழ்க்கை முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நாம் செல்களை குணப்படுத்திக் கொண்டால்தான் நோயை விட்டு விலக முடியும்.
பி.பி மாத்திரை என்பது ஆபரேஷன் மற்றும் ஆபத்துக் காலத்தில் பி.பி யை ஒழுங்காக வைத்துக் கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான். மருந்து மாத்திரை களை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் விற்பனையை அதிகப்படுத்தி தாங்கள் லாபம் சம்பாதிக்க இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்து என்று கூறி இதை மக்களை நம்பவைத்து விற்றுக் கொண்டிருக்கின்றனர். உலகில் இரத்த அழுத்தம் என்று நோயும் கிடையாது, அதைக் குணப்படுத்தும் அவசியமும் இல்லை.
நம் கடைபிடிக்கிற ஐந்து விசயங்கள் மூலம் உடலில் 300 கோடி செல்கள் ஒரு நிமிடத்தில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றன. இந்த ஐந்து விசயங்கள் செல்களிலுள்ள நோய்களைக் குணப்படுத்துகின்றன. எந்த ஒரு மருந்தும் மாத்திரையும் இன்றி ஐந்து விசயங்களை ஒழுங்குப்படுத்துவன் மூலம் 4 மாதத்தில் பி. பி யை ஒழுங்குப் படுத்த முடியும்.
ஏற்கனவே சாப்பிடும் பி.பி மாத்திரையின் அளவை படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்து 4வது மாதத்திலிருந்து பி.பி மாத்திரையின் அவசியமே இல்லாமல் செய்து விடலாம்.
ஹீலர் பாஸ்கர்
No comments:
Post a Comment