ads

Tuesday, 28 July 2015

ரசமணி இரகசியங்கள்

சித்தர்கள் என்ற சொல்லைக் கேட்டாலே மனதில் சிலிர்ப்புத் தோன்றும். ஆண்டவனுக்கு நிகரானவர்கள், அஷ்டமா சித்திகளை ஆடவல்லவர்கள். காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழ்ந்தாலும் மனித இனத்திற்காக மகத்தான மருத்துவ முறையை கண்டறிந்தவர்கள். 

அதுதான் சித்தர்கள் கண்டறிந்த சித்த வைத்தியம். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பட்டதுதான் சித்தவைத்தியம்.

வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம்.  மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும் என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இயற்கையாக இருக்கும் பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால், செம்பு தங்கமாக ஜொலிக்கும்.  

அதற்கு கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும் என்பது அவர்கள் கண்டுபிடிப்பு.  ஆனால் அந்த கூத்தன் குதம்பை எது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.  

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள்.  வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.

மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது.  இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.

அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.

இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.

விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.

பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.

செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.

வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு.  ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும்.  அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...