ads

Thursday, 13 June 2013

இதற்கெல்லாம் முடிவு என்ன?


அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை விட, அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. போராட்டம், சாலை மறியல், பேருந்து எரிப்பு, கல்வீச்சு, அதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொலைதூரம் பயணம் செய்யும்  எவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர்வோம் என்ற நம்பிக்கை இல்லை. வழியில் பஸ் நிறுத்தப்படலாம், இறக்கி விடப்படலாம் அல்லது வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்படலாம் என்பதே உண்மை நிலை

காரணம் மக்கள் போராட்டம்.

போராட்டங்கள் வாயில்லாக நாம் அறிவது என்ன

தங்கள் தேவைகளை கேட்டுப் பெரும் குணம் அதிகமாகியிருக்கிறது என்பதை விட,  பொறுப்புணர்ச்சி குறைந்து விட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுக்கள் தான் இவையெல்லாம்

குழாயில் தண்ணீர் வராவிட்டாலும் கூட்டம் சேர்ப்பதும், கொடி பிடிப்பதும், சாலைகளுக்கு வந்து மறியலில் ஈடுபடுவதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது



இதனால் பொதுமக்கள் சந்திக்கும் அசௌகரியங்களை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

போராட்டம் தவறல்ல. போராட்ட முறை மாறி இருக்கிறது. முன்பெல்லாம் அறவழி போராட்டங்கள் நடக்கும். பொது மக்களுக்கு இடையூறு தராமல் அமைதி ஊர்வலங்கள் நடக்கும். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள  உண்ணாவிரதங்கள் நடக்கும்

அதுவும் முன்னமே மக்களுக்கு தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட தேதி, நேரத்தில், இவ்விடத்தில் போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கும் முறை இருந்தது. பொதுமக்களும் அதற்கு தகுந்தாற் போல். தங்கள் பயணங்களை, வேலைகளை மாற்றி அமைத்துக் கொள்ள முடிந்தது.

அதோடு இது போன்ற போராட்ட அறிவிப்புகள் வெளியானால் சம்மந்தப்பட்ட நிர்வாகமோ, அரசாங்கமோ பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க முயலுவார்கள். இப்போது அப்படி இல்லை, எல்லாம் தலைகீழ்.

குறைகளை கேட்க வேண்டியவர்கள் காதை மட்டுமல்ல,கண்ணையும் சேர்த்து மூடிக் கொள்கிறார்கள். போராட்டவாதிகளும், தாங்களும் ஒரு பொதுஜனம் என்பதை மறந்து சக பொதுஜனத்தை துன்புறுத்த முயல்கிறார்கள்.



சாலை மறியல், பேருந்து உடைப்பு, கல்வீச்சு, எரிப்பு என்று வன்முறை தாண்டவமாடுகிறது.

இதில் ஜாதி மதம் இனம் என்ற போர்வையில் வருகிறவர்கள் மட்டும் அல்ல, அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல. தங்கள் எதிர்ப்பை காட்ட எத்தனையோ வழிகள் இருக்கும் போது, பொதுச்சொத்தை நாசம் செய்வதும், பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்துவதுவதினால் தான் போராட்டத்தின் வீரியம் தெரியும் என்று நினைப்பதுதான் விபரீதத்தின் உச்சகட்டம்.

மதிவாணன்.
அரசாங்கம் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மதிவாணன்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், பொதுச்சொத்தை நாசப்படுத்துகிரவர்கள் எவராக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்கிறார்.  அதற்கான துணிச்சல் ஜெயலலிதாவிற்கு உண்டு. அவருக்கே தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், தமிழகத்தின் எதிர்காலம் கருதி இதை செய்ய வேண்டும் என்கிறார்.
முத்துகிருஷ்ணன்

 இன்னும் ஒரு படி மேலே போய் முத்துகிருஷ்ணன்   போராட்டகாரர்களிடம் நஷ்ட ஈடு வாங்கவேண்டும். கொடுக்க மறுத்தால் அரசாங்கம் அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் அரசு சலுகைகளை பெறுவதை தடுக்க வேண்டும். அவர் பெயரில் சொத்துக்கள் வாங்கவோ, வைத்திருக்கவோ முடியாதவாறு திவால் செய்ய வேண்டும் என்று காட்டம்  காட்டுகிறார்.

குமார்
வன்முறையில் ஈடுபடுகிறவர்களை கைது செய்தால் வாழ்நாள் சிறைவாசம் அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.அப்போதுதான் இது போன்ற குற்ற செயல்கள் குறையும் என்பது குமாரின்  கருத்து.

ஜாதி என்பது எங்களை பொருத்தவரை கல்லூரியில் சீட் வாங்க, அரசு வேலை பெற ஒரு வழியாகத்தான் பார்க்கிறோம். மற்றபடி ஜாதியால் ஒன்றும் பயனில்லை என்கிறார்   திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் பாலமுருகன் . கேமராவை கையில் எடுத்தால் போட்டோ வேண்டாமே, என் கருத்தை பதிவு செய்யுங்கள் அதுபோதும் என்று நாசுக்காக நழுவுகிறார் தன் நண்பர்களுடன்.  .

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எத்தனையோ போராட்டங்களை இந்தியா சந்தித்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் வலுப்பெற்ற பின்னால் தான் போராட்டம் வியூகம் மாறிப்போனது.

ஜாதி சங்கங்கள் வலுப்பெற்ற பின்னால் மோசமான, அபாயகரமான கட்டத்தை எட்டியது.

இதுவரை நடந்த போராட்டங்கள், பஸ் எரிப்பு, பொதுச்சொத்து அழிப்பு என்று கணக்கிட்டுப் பார்த்தால் பல்லாயிரம் கோடி இருக்கும்.

இதற்கெல்லாம் காரணமாவர்கள் பெற்ற தண்டனை என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. இந்திய ஜனநாயகத்திற்கே கரும்புள்ளியாக இருக்கிறது.

ஓன்று மக்கள் மாறவேண்டும், அல்லது சட்டம் மாறவேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விழும் என்பது நடுநிலையாளர்கள்   கருத்து. நம் எல்லோரதது கருத்தும் அதுதான்.


1 comment:

  1. நல்ல கருத்துக்கள்...

    புகைப்படம் மூலம் நண்பர்களையும் அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...