ads

Sunday, 16 June 2013


ஸ்தானங்களில் சந்திரன் பொது பலன்கள் 

ஒன்றில் சந்திரன்

ஆதிபத்தியம் எதுவானாலும் ஆபத்தில்லை. பலன்கள் சிறந்தே விளங்கும். வளர்பிறை சந்திரனானால் நிலையான   பலன். தேய்பிறையானால் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். 

தெளிவான புக்தி, திடமான சிந்தனை, கலாரசனை மிக்கவர்கள், சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

மதிப்பான வாழ்க்கை அமையும். தாழ்ந்த நிலையில் உள்ளவரோடு தள்ளியே இருப்பார்கள். உறவு வைத்து கொள்ள உறுத்தல் இருக்கும். 

கல்வியில் ஊக்கம், கலைத்துறையில் நாட்டம், காதலில் வெற்றி அனைத்தும் உண்டு. உடுத்தும் உடையில் இருந்து, உண்ணும் உணவு வரை பிடித்த மாதிரி இருக்க வேண்டும். பிடிவாத குணம், ஆயுள் விருத்திக்கும்.


இரண்டில் சந்திரன்

தனசேர்க்கை உண்டு. ஏதாவது ஒரு வகையில் வருமானம் வருவதற்கு வழி ஏற்படும். கரடு முரடான பேச்சில்லை, கண்டிப்பான கறார் வார்த்தையும் இருக்காது. நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும் நிலைத்திருக்கும். ஒரு உதவி ஒத்தாசைன்னா ஓடோடி வருவதில் பெண்கள் தரப்பே பெரும் பங்கு வகிக்கும்.  அதுக்கு ஒரு மச்சம் வேணும்ல.

இரண்டில் இருக்கும் சந்திரன் தேய்பிறையானால் கல்வியில் தடை, வாக்கு சுத்தம் என்பது வார்த்தைக்கே. நடைமுறைக்கு நம்பபடாது.

எந்த பிறையாக இருந்தாலும் வாலிப திருமணம், நல்லோரால் மதிக்கப் படல் என்பது சாத்தியம்.


மூன்றில் சந்திரன்

எதையும் நிலையாக செய்யும் பழக்கம் இருக்காது. ஆரம்பிக்கிறதும் விடுறதும், ஆரம்பிக்கிறதும் விடுறதும் சகஜம். கிட்டத்தட்ட துக்ளக். என்றாலும் அறிவாளி என்று பெயரெடுப்பதுதான் ஆச்சரியம்.

இவருக்கு பின்னால் பிறந்தது  பெண்ணாக இருந்தால் பெண்ணுக்கு ஆகாது. இவருக்கு உடம்பு கனத்துப் போகும். சரி வாத சரீரம் ஒரு வார்த்தையா முடிச்சுக்குவோம்.

நாலு பேர் கூடின சபையில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசத்தெரியாது. கல்யாணம் ஆகி வர்ற பொண்ணு வாத்தியார்தான். பெரும்பாலும் பொஞ்சாதி கொடு போட்டா இவர் ரோடு போடுவார்.எள்ளுன்னா என்னையா நிற்பார்.

இதுவே எதிரி கிட்டே காட்டுற குணம் வேறே. வஞ்சம் வைச்சா கெஞ்சுற வரை விட மாட்டார். இப்படி ஒரு நூதன  குணம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...