ads

Wednesday, 8 May 2013

Tuesday, 7 May 2013

வேதம் கண்ட விஞ்ஞானம்


ப. முத்துகுமாரசாமி 




நாளை தொடரும் ......

பின்வாங்கியது சீனா - பின்னணி தகவல்கள் என்ன?




இந்திய எல்லைக்குள் ஊடுருவியது சீனா. ஊடுருவல் நடந்தது 10 கிலோமீட்டர் தூரம் என்று பகீர் தகவலாக பரபரத்தது மீடியாக்கள். 

இரண்டே நாளில் மேலும் 9 கிலோமீட்டர் முன்னேறிவிட்டது சீனா, இந்திய எல்லையில் 750 கிலோமீட்டர் பரப்பளவை அது ஆக்கிரமித்து கொண்டது என்று இந்தியா முழுவதும் கிடுகிடுத்து போனது. 

ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்திய சீன ராணுவத்திற்கு இடையே நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 4வது பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தைக்கு  பின்  சீனா திடீரென தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 

இது எங்கள் பகுதி என்று வாதிட்ட சீனாவிற்கு எங்கே இருந்து ஞானோதயம் வந்தது?



பலவீனமான மன்மோகன்சிங் என்று பரிகாசம் செய்த எதிர்கட்சிகளின் வாயடைக்க வைத்து, குண்டு வீசாமலே குழப்பம் தீர்ந்தது எப்படி? இதுதான் சுவாரசியம். 

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதை முன்னமே உணர்ந்து கொண்டது மத்திய அரசு. உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, மிரட்டல் அறிக்கை விடுவது எல்லாம் பிரச்சனைக்கு தீர்வாகாது. 

அதுவும் சீனா போன்ற ராணுவ பலம் கொண்ட நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது இந்திய நலனுக்கு நல்லதல்ல. அதற்கு ஏற்றார் போல் காய்கள் நகர்த்தப்பட்டன. 



ராணுவ மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் சீனாவின் இந்திய தூதருக்கு ஒரு விஷயம்   தெளிவுப்படுத்தப்பட்டது. 

இந்தியா சீனாவோடு நட்புறவையே   விரும்புகிறது. ஆனால் எங்கள் இறையாண்மையை மீறும் எந்த செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

இப்போது எல்லையில் நடந்திருப்பது அப்பட்டமான அத்து மீறல் என்பது உங்களுக்கே தெரியும். இருப்பினும் பொறுமை காக்கிறோம். இது எங்கள் பலவீனம் அல்ல. உங்கள் நிலையை திருத்திக் கொள்ள அவகாசம். 



மேலும்  உங்கள் ராணுவம் பழைய  நிலைக்கே மீண்டும் திரும்ப வேண்டும் என்பது எங்கள் எதிர்ப்பார்ப்பு. திரும்பா விட்டால் இந்தியா வேறு வகையில் யோசிக்க வேண்டியிருக்கும் என்பதே அவரிடம் சொல்லப்பட்ட தகவல்.

முதலில் சொல்லப்பட்டது சரி. வேறு வகையில் யோசிக்க வேண்டிவரும் என்று சொன்ன கடைசி வரிதான் கவனிக்க தக்கது. இதற்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன என்பது சீனாவிற்கு தெரியும். தேவையானால் ராணுவ நடவடிக்கையும் எடுப்போம் என்பதின் உள்அர்த்தம்தான் அது. 

போர் என்ற விஷ பரிட்சையில் இந்தியா உடனடியாக இறங்கி விடும் என்றெல்லாம் சீனா பயப்படவில்லை. அதுவும்  மன்மோகன் இருக்கும் வரை அந்த பயமும் அவசியமற்றது. ஆனால் உள்நாட்டு அழுத்தம் தாளாமல் இந்தியா ஆக்கிரமிப்பு வீரர்களை துரத்த முயலலாம். அப்படி நடந்தால் சீனாவிற்கு தர்மசங்கடமாக போய் விடும்.

அதோடு இம்மாதத்தில் நிகழ உள்ள தலைவர்கள் பயணம் வேறு குறுக்கே நின்றது.

மே 9ம் தேதி சீனா வரவுள்ள ,  வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது சீனப்பயணத்தை ரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது ஒரு புறமிருக்க, வரும் மே 20ம் தேதி இந்தியா வரவுள்ள சீனப்பிரதமர் லீ கெசியாங் பயணத்தை மிகவும் பாதிக்கும் என சீனா கருதியது.

இதைவிட முக்கியம்  பொருளாதார பாதிப்பு. போர் நடந்து ஏற்படும் பாதிப்பை விட, வர்த்தக உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டால் ஏற்ப்படும் பாதிப்பே அதிகம்.

நேரடியாக ரூ. 5 லட்சத்து 41 ஆயிரத்து 300 கோடி அளவிற்கு வணிக லாபம் கிடைக்க, மறைமுகமாக இந்திய சந்தையில் சீன பொருள் விற்பனை மூலம் இருமடங்கு வருமானம் சீனாவிற்கு வருகிறது.

சீன பொருளுக்கு இந்திய சந்தையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டி வரும். அதன் காரணமாகவும் சீன படைகள் பின் வாங்கி சென்றன.

மொத்தத்தில் சந்தை லாபம் கருதியே சண்டை தவிர்க்கப்பட்டிருக்கிறது.


Saturday, 4 May 2013

அட்சய திருதியை!!




நேரம் மிக முக்கியம்.

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி, வாழையடி வாழையாய் வாழ்ந்து  வளர்ச்சி பெற, திருமணத்திற்கு நல்ல முகூர்த்தம்   பார்க்க வேண்டும். 

ஒரு குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்துதான் அதன் வாழ்நாளை கணிக்க வேண்டும்.

வீடு கட்ட, கிரகபிரவேசம் செய்ய, விதை விதைக்க, அறுவடை செய்ய, பெண் பார்க்க, மண் வாங்க இப்படி எல்லாக் காரியங்களையும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் செய்கிறோம்.

காலநேரம் பார்த்து செய்யும் காரியம் வளரும். வெற்றி கிட்டும், மங்களம் உண்டாகும். மகிழ்ச்சியும் மனத்திருப்தியும் எப்போதும் இருக்கும். நேரம் தான் நமக்கு எல்லாமே.

எந்த நேரத்தில் ஆரம்பிச்சோம்ன்னு தெரியலை. ஒன்னும் விலங்களை என்று சிலர் புலம்புவதை கேட்டிருக்கலாம்.

எதிலும் வெற்றிபெற நேரம் மேரம் மிக முக்கியம். எனவேதான் கண்ணபிரான் ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவரான சகாதேவனிடம் குருசோத்திர யுத்தத்திற்கு களப்பலி கொடுக்க நேரம் குறிக்க சொல்கிறார்.

துரியோதனன் களப்பலி நேரத்தை சரியாக கடைபிடிக்காததால் தோல்வியை தழுவ நேருகிறது. அந்த பிழைக்கு கண்ணபிரானே காரணமாகிறார்.

நேரம் காலம் பார்த்து செய்கிற காரியத்திற்கு உரிய பலன்கள் கிடைக்கும். அப்படி ஒரு உயர்ந்த நாள்தான் சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வருகிற திருதியை திதி.

இந்த திருதியில் செய்யும் காரியங்கள் வளரும்  என்பதால் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது.

கண்ணா என்று கதறிய பாஞ்சாலியின் அபய குரல் கேட்டு அட்சய கரம் நீட்டினாராம் மணிவண்ணன். துச்சாதனன் துகிலுரிய பாஞ்சாலியின் சேலை வளர்ந்து கொண்டே போனது. அவன் மயக்கி விழுந்தான் என்று பாரதம் கூறுகிறது.

இன்று நேற்றல்ல, வேத காலம் தொட்டே இந்த அட்சய திருதியை நாளை வளர்ச்சிக்கும்,  நல்ல காரியங்கள் செய்யவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். சிவபெருமான் ஜாதகத்தில் குரு பத்தாம் பாவத்திற்கு வருகிறார்.

முக்கண் படைத்த சிவபெருமானே அலைந்து திரிந்து, காசியில் அன்னபூர்ணாதேவியிடம் பிச்சை பெற்று தன வையிற்று பசியை போக்கி கொண்டதும் இந்த நாளில் தானாம். உலக உயிர்களுக்கு உணவு பஞ்சம் தீர்ந்ததும் அதனால்தானாம்.

இந்திரன் படைப்பு தொழிலை தொடங்கியதும், குபேரன் செல்வம் கொட்டிக் கிடக்கும் அழகாபுரிக்கு அதிபதியானதும் இந்நாளில் தான்.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் தந்ததும், சூரியனிடம் தருமன் அட்சய பாத்திரம் பெற்றதும் இந்நாளில் தான்.

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட தர்மசீலைக்கு மகாலக்ஷ்மி தங்க மழை பொழிந்ததும் இதே நாளில் தான் என்று புராணங்கள் கூறுகிறது.

குசேலன் கொஞ்சம் அவலோடு தன் நண்பன் கண்ணபிரானை பார்க்க மதுராபுரி சென்றதும், அவளை கேட்டு வாங்கி கண்ணபிரான் உண்டதும் இந்த பொன்னாளில் தானாம்.

அதனால் இந்நாளில் பசிக்கு உணவு கொடுப்பதால் பல புண்ணியம் பெருகுகிறது.

அட்சய திருதியையில் வளர்ச்சி தரக்கூடிய நல்ல காரியங்கள் அனைத்தையும் செய்யலாம்.



வீடு கட்டலாம், வாங்கலாம். வாகங்கள் வாங்கலாம். திருமணம் பேசலாம். விதிக்கலாம், பயிர் நடலாம். படிப்பை தொடங்கலாம். வேளையில் சேரலாம்.

பணம் சேமிக்கலாம். தொழில் துவங்கலாம். தங்கம் வாங்கலாம். குறிப்பாக இல்லாதவருக்கு அன்னதானம் அளிக்கலாம். மங்களமும் மகிழ்ச்சியும் தரும் இந்நாளில் செய்யும் காரியங்கள், ஈடுபடும் வேலைகள் விருத்தி பெரும்.

செய்து பாருங்களேன். மே 13 அட்சய திருதியை நாள்.

-மதிவாணன் 

Friday, 3 May 2013

வாழ்க்கை வாழ்வதற்கே!!




வாழ்க்கை வாழ்வதற்கே
யாரையும் காயப்படுத்தாமல்
நாமும் காயப்படாமல்
உறவுகளை மேம்படுத்தி
உறவுகளை சீர்படுத்தி
வாழும் வாழ்க்கை
வாழ்வதற்கே

துரத்தும் சோகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து
தேடி வரும் சந்தோஷத்திற்கு
வானமே எல்லையாக்கி
வாழும் வாழ்க்கை
வாழ்வதற்கே

இல்லை என்றாருக்கு கைகொடுத்து
உறவுகள் அற்றோரை அரவணைத்து
வாழும் வாழ்க்கை
வாழ்வதற்கே

வாத்தைகளில்   உண்மை
வாழும் வாழ்க்கையில் நேர்மை
பொது உலகில் தூய்மையென
வாழும் வாழ்க்கை
வாழ்வதற்கே

கள்ளம் கபடில்லாத மனம்
உள்ளம் சுருங்காத குணம்
எளியோருக்கு உதவுகிற பணம் பெற்று
வாழும் வாழ்க்கை
வாழ்வதற்கே

வாழ்வோம்
வாழவைப்போம்
வாழ்த்துவோம்

Thursday, 2 May 2013

இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுவேன்!!




ஒவ்வொரு நாளும் பொழுது புலர்கிறது. விடிந்ததும் மனதில் எழும் கேள்வி... 

இன்று எத்தனை பேர் செத்திருப்பார்கள்? 

எத்தனை பேருந்துகள் எரிக்கப்பட்டிருக்கும்? 

உடைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும்? 

செயலிழந்து போன மாவட்டங்கள் எத்தனை?  

இந்த கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

காரணம் சாதி...!!



இந்த சாதி மனிதனின் பாதி அறிவை தின்று விட்டதால், மிருக நிலைக்கு உயர்ந்து போன கொடுமை.  

தமிழனென்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா.. என்ற வரிகள் தூக்கு கயிற்றில் தொங்கி கொண்டிருக்கிறது. 

என்ன கொடுமை? ஏன் இந்த இழிநிலை?

அரசியல்.

இந்த கேடுகெட்ட அரசியல் தான் அத்தனைக்கும் காரணம்.

அரசியலில் நல்லவர்களை இழந்தோம், நல்லவர்களை உருவாக்க தவறினோம். தவறானவர்களுக்கு தலைமை பொறுப்பை கொடுத்தோம், தலைவர்கள் என்று கொண்டாடினோம். அதற்கு கொடுக்கும் விலைதான் இந்த சாதி கலவரங்கள்.

தீவிர கம்னியூஸ்ட்டுகள் சொல்வது மாதிரி அரசியல் பிழைப்புவாதிகள்.

இவர்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. ஊரைப்பற்றியும் கவலை இல்லை. நாட்டைப்பற்றியும் கவலை இல்லை. வாழ்க்கையோடு போராடும் மக்களை பற்றியும் கவலை இல்லை.

அரசியலில் இவர்கள் பிழைத்திருக்க வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்,  என்பதற்கு நேற்றும்...இன்றும்... நமக்கு தரும் பதில்கள்.



பதில்கள் இருக்கட்டும். முடிவுதான் என்ன?

இந்த நாட்டில் எது நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது ஜனம்.

சூரையாடப்படுவது மக்களின் பொது சொத்து.

எழவு விழுந்தாலும் எரிக்கப்படுவது பேருந்து.

இது என்ன நடைமுறை?

இந்த நாட்டில் யாருக்குமே பொறுப்பில்லை.

இந்த தேசத்தின் மீதும், தேசத்தின் வளர்சியின் மீதும், தேசத்தின் கவுரவத்தின் மீதும் அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அக்கறை இல்லமால் இருக்கலாம். காரணம் ...அவர்கள் செய்வது பண அரசியல். அதற்கு தேவை பிணம். அதற்காக எதையும்  செய்வார்கள்.

ஆனால் ... அப்பாவி மக்களே..அறியா சகோதரர்களே... கற்றுணர்ந்த தம்பிகளே ஒரு நிமிஷம்.



யார் சரி? யார் தப்பு என்று வாதம் செய்ய வரவில்லை.

இன்று நடப்பது, நடந்து கொண்டிருப்பது சரியா? என்பது மட்டும் தான் என் கேள்வி!!

ஏன் இந்த வெறியாட்டம். எதன் பொருட்டு இத்தனை ஆர்ப்பாட்டம்?



மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.  சக மனிதர்களை நேசிக்க வேண்டும். சகிப்பு தன்மையை வளர்க்க வேண்டும். சகோதரத்துவம் மலர வேண்டும். இதைதான் அறம் வளர்த்த பெரியோர்கள் நமக்கு சொல்லி தந்தார்கள்.

ஆனால் நடப்பது என்ன?

நீங்கள் இன்று பகடைக்காயாக உருட்டப்படுவது தெரியுமா? யாரோ மெத்தையில் படுத்துக்கொண்டு, பென்ஸ் காரில் பவனி வர, உங்கள் உயிரோடும், ஒன்றும் அறியாத அப்பாவிகள் உயிரோடும் விளையாடி கொண்டிருக்கிறீர்கள்   என்பது தெரியுமா?



நீங்கள் நாளைய இந்தியாவின் விடி வெள்ளிகள். நீங்கள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களை நம்பித்தான் இந்த தேசம் காத்திருக்கிறது.

உங்களில் ராமதாஸ்கள் வேண்டாம், திருமாவளவன்கள் வேண்டாம், கிருஷ்ணசாமிகள் வேண்டாம், சேதுராஜ்கள் வேண்டாம், ஸ்ரீதர்வாண்டையார்கள் வேண்டாம், ஜான் பாண்டியன்கள்  வேண்டாம், தமிரசன்கள் வேண்டாம்... !! இன்னும் விடுபட்டு போன ஜாதி தலைவர்கள் வேண்டாம்.

உங்களில் இருந்து எதிர் பார்ப்பது கல்வி கண் திறந்த காமராஜ்கள் , ஏழை மக்கள் இதயம் புரிந்த M G .ராமசந்திரன்கள், எளிமையின் சின்னம்  ஜோதிபாசுகள் நல்லிதயம் படைத்த வாஜ்பாய்கள்.

வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

இதே நிலை நீடித்தால் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுவேன்.





Wednesday, 1 May 2013

முதலாளி தின வாழ்த்துக்கள்!!




அனைத்து முதலாளி நண்பர்களுக்கும் வணக்கம். 

தொழிலாளர் தினத்தில் முதலாளி வாழ்த்தா? 

என்ன அதிர்ச்சியா இருக்கா? 

பின்னே என்னங்க.  மற்றவர் பார்வையில் தான் நீங்கள் தொழிலாளி. உங்களுக்கு நீங்கள் தானே முதலாளி. 

நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்கள் தான் எஜமான். உங்கள் வாழ்க்கையின் சகலத்திற்கும், சந்தோசத்திற்கும் நீங்கள் தான் போஸ். இதில் மாறுபட்ட கருத்து இருக்கா?

இருக்காது. அதனால் சொல்கிறேன்  முதலாளி தின வாழ்த்துக்கள்!!

சரி... இன்று உலகம் முழுவதும்127வது சர்வதேச மே தினம் அதாவது  தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த கொண்டாட்டத்தின் பின்னணியை நீங்கள் தெரிந்து   வைத்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த பதிவு. 

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. 

ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாயமாக  வேலை செய்ய வேண்டும் என  நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கசக்கி பிழிந்த முதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்பு குரல்கள் எழத் துவங்கியது. ஆங்காங்கே என்பது பல்வேறு நாடுகளில்.

இருப்பினும் இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம்  போராடதொடங்கியது. தங்கள் போராட்டத்தில் ஆறு  முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே  நடத்தியது. அதில் முக்கியமானது  10 மணி நேர வேலை கோரிக்கை.

1830ம் ஆண்டுகளில்  பிரான்சில் துணி நெய்யும்  நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் வேலை செய்தே ஆக வேண்டிய  சூழ்நிலையில் இருந்தனர்.

இந்த நிலையை மாற்ற அவர்கள்  பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தையும்  நடத்தினர்.

சின்ன சின்ன போராட்டங்கள் பெரிதாகி 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அசைந்து கொடுக்க வில்லை முதலாளிகள். கடைசியில் இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

அதன் பிறகு 26 ஆண்டுகள் கழித்து  ஆஸ்திரேலியாவில்  மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர்.

இதுதான் உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இது நடந்தது 1856இல்.

ரஷ்யத் தொழிலாளிகள் அந்நாட்டின் மன்னன் சார்  ஆட்சியின் கீழ்  பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும் இடைவிடாது போராட்டங்களை நடத்தினார்கள்.

1896 ஏப்ரல் மாதத்தில் லெனினின் பெரும் முயற்ச்சியின் பேரில் தொழிலாளர் போராட்டம் திசை மாறி அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொண்டது. அதுதான்   ரஷ்யப் புரட்சிக்கு அடித்தளமாக மாறியது.

1886இல் போராட்ட வடிவம் ஒருமுகப் படுத்தப்பட்டது. இது நடந்தது அமெரிக்காவில்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற புது இயக்கம் ஓன்று உருவாக்கப்பட்டது.

இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை  நடத்தியது.

அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவல் தான்  மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

அக்காலகட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்கள் சம்பித்தன.

 அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.

இந்த வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க தொழில்  நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இரயில் போக்குவரத்து தடைபட்டது. ஒரே வரியில் சொல்லப்போனால் அமெரிக்காவே சம்பித்தது.

மே 3, 1886 அன்று  3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.

அந்த கூட்டத்தில் நடந்த  கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.

2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. கடைசியில் அது வன்முறையில் முடிந்தது.

போராட்டத்தில்  கலந்து கொண்ட ஒருவரால் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு போலிஸ்காரர்  பலியானார்.

இது தொடர்பாக தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர் காவல்துறையினர் . இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. வழக்கின் இறுதியில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்  கூடியது.

1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

Tuesday, 30 April 2013

இந்தியாவாகும் மலேசியா - ஸ்பெஷல் ரிப்போர்ட்


மலேசிய அரசியல் களம் எப்போதுமே ஒரு மாறுபட்ட தன்மை கொண்டது. உலக அரசியல் பேசாத ஒரு நாடு என்றால் அது மலேசியாதான். 

அவரை பற்றி இவரும், இவரை பற்றி அவரும் அறிக்கை விடுவார்கள், மற்றபடி மாறும் உலக சூழ்நிலை, அதில் மலேசியாவின் பங்கு என்பதை பற்றி யாரும் மூச்சு விடுவதே இல்லை.

சில தமிழ் தலைவர்கள்  அதிக பட்சம் இலங்கை தமிழர்களை பற்றி பேசுவார்கள். 

தமிழகத்தில் இன உணர்வோடு பேசி போராடும் தமிழ் தலைவர்களை சுயநலவாதிகள் என்று வர்ணிக்கும் இலங்கை தமிழர்கள் மாதிரி, மலேசிய தமிழ் தலைவர்கள் இந்தியாவை குற்றம் சொல்வதோடு  சரி. 

தங்கள் நாட்டு தலைமையை எதிர்க்க, இலங்கை தமிழர்களுக்கு  ஆதரவு குரல் கொடுக்க சொல்ல தைரியம் இருக்காது. 

அதிகபட்சம்  ராஜபெச்சே கொடும்பாவியை எரித்து விட்டு தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள்.

போகட்டும்.



எதிர்வரும் மே 5ம் தேதி பொதுத்தேர்தலை சந்திக்கிறது மலேசியா.

இந்தியா என்றில்லை. எந்த நாட்டு  அதிபர்  வேட்பாளாராக இருந்தாலும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யப்போகும் நலத்திட்டங்களை சொல்வது வழக்கமான ஒன்றுதான். செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதும் வழக்கமான ஒன்றுதான்.

இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரிசான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது.

தேர்தல் நெருங்கிய பிறகு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார் நஜீப். இது அவருக்கு நல்ல பெயரை தேடி தந்தாலும், மாகாதீர் முஹமட்டுக்கு எதிரான கோவம், வெறுப்பு, முகமதுநஜீப்பை பூதம் மாதிரி விழிங்கி விடும் போலிருக்கிறது. .



1957 இல் சுதந்திரம் பெற்ற பிறகு இதுநாள் வரை ஆட்சியில் இருக்கும் பாரிசான், இப்போது அக்னி பரீட்சையை சந்திக்கிறது என்பதுதான் உண்மை.



துங்கு அப்துல் ரகுமான், நுன் அப்துல் ரசாக், துன் உசேன் ஆன், மகாதீர் முகமட், அகமது படாபி, என்று மாறி இப்போது முகமது நஜீப் வசம் ஆட்சி இருக்கிறது. ஆனால் இந்த முறை வலுவான எதிரியை களத்தில் சந்திக்கிறது பாரிசான்.

கே. அடிலான் கட்சியின் தலைவர் அன்வர் தான் அந்த வலுவான எதிரி.

மகாதீர் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் அன்வர். கட்சிக்குள் அவர் வலுப்பெறுவதை விரும்பாத மகாதீர், அன்வரை பழிவாங்கும் விதமாக  ஓரின புணர்ச்சி  வழக்கை போட்டு சிறைக்கு அனுப்பி, அவமானப் படுத்தியதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அதற்கு பாரிசான்,  விலை தரும் தருணம் வந்து விட்டது போலவே காட்சியளிக்கிறது தேர்தல் களம்.



மலேசிய இந்தியன் காங்கிரஸ்  மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த போது, தமிழ் மக்களின் பாதுகாவலானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது ஹின்ட்ராப்.

ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் வெளியே வந்த பிறகும் தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது ஹின்ட்ராப்.

ஆனாலும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழ் மக்களிடம் இப்போது ஹின்ட்ராப் விலை போய் விட்டது என்ற விமர்சனம் வெளிப்படையாக ஒலிக்கிறது.

அதோடு,  கே அடிலான் கட்சி தலைவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இது ஆளும் கட்சிக்கு இனிப்பான செய்தி அல்ல.

நஜீப்பும் கூட இந்திய அரசியலை உற்று நோக்கினாரோ என்னவோ,  பல இலவச திட்டங்களை அறிவித்தார்.  பொங்கலுக்கு அரிசியும் கொடுத்தார். இப்போது பண பட்டுவாடாக்கள் கூட நடக்கிறது போல் இருக்கிறது.

கே. அடிலான் கட்சி தலைவர் அன்வர் பொது கூட்டத்தில் பேசும் போது இது தானாக கூடிய கூட்டம். காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல என்று பகிரங்கமாகவே சொல்கிறார்.

இதை பார்க்கும் போது இந்திய அரசியல் வாதிகள் போலவே மக்களுக்கு இலவசம், பிரியாணி, பணம் கொடுத்து தங்கள் வாக்கு வங்கியை வளர்ந்து  கொள்ளும் நடைமுறையை  மலேசிய தலைவர்களும் கற்றுக் கொண்டு விட்டார்கள் போலவே தெரிகிறது.

எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் நிறம் ஒன்றுதான். மொத்தத்தில் இந்தியாவாகிறது மலேசியா  .

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...