இந்த சௌந்தர்ய லஹரீ பாடல்கள் கைலாய மலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்தாக ஒரு தகவல் சொல்கிறது. இதை மேருமலையில் புஷ்பதந்தர் என்பவர் எழுதி வைததார் என்றும், அதைப் படித்த கௌடபாதர் என்ற முனிவர் ஸ்ரீஆதிசங்கருக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
லிங்கபுராணத்தில் விநாயகர் துதியில், சௌந்தர்ய லஹரீ, மாகமேருமலையில் விநாயகப் பெருமானால் எழுபட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு கதை.
ஸ்ரீ ஆதிசங்கரர் கைலாயம் சென்றிருந்தபோது சிவபெருமானிடமிருந்து இந்த ஸௌந்தர்ய லஹரீ பாடல்களை பெற்று வந்ததாகவும், வரும் வழியில் நந்திதேவர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம் பாடல்களின் ஒரு பகுதியைப் பிடுங்கிக் கொள்ள எஞ்சிய முதல் பாகத்தில் 41 செய்யுட்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆதிசங்கரர் சிவபெருமானிடம் வேண்ட, எஞ்சியவற்றை நீயே பாடிக்கொள் என்று சிவபெருமான் கூற, 59 பாக்களை ஆதிசங்கரரே பாடி முழுமையான நூலாக்கினார் என்று கூறப்படுகிறது.
எப்படி இருப்பினும் இதை பாடி நூலாய் தொகுத்தவர் ஆதிசங்கரபெருமானே என்பதை எல்லோரும் பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர்.
தேவி ஸ்தோத்திரங்களில் தலை சிறந்த ஸ்தோத்திரமாக கருதப்படுகிறது ஸௌந்தர்ய லஹரீ. நமஸ்கரித்தல், ஆசி கூறுதல், சித்தாந்தை எடுத்துரைத்தல், பராக்கிரமத்தைப் புகழ்தல், பெருமைகளை விளக்குதல், பிரார்த்தனை செய்தல் என்ற அறுவகைப்பட்ட அனைத்து லக்ஷணங்களும் ஸௌந்தர்ய லஹரியில் உள்ளன.
1. ஆனந்த லஹரீ
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதிசக்த: ப்ரபவிதும்
நசேதேவம் தேவோ நகலு குசல: ஸ்பந்திதிது- மபி
அதஸ்-த்வா மாராத்தயாம் ஹரிஹர-விரிஞச்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத- புண்ய : ப்ரபவதி
பலன்: சுபம், கார்ய ஸித்தி
கருத்து: சிவன் உலகைப் படைக்கிறார். அதற்கான திறமை அவருக்கு வேண்டும். அவர் சக்தியுடன் சேர்ந்திருப்பதாலேயே அத்திறமை அவருக்கு கைவருகிறது. திருமால், சிவன், பிரம்மா இம்மூவர்களாலும் ஆராதிக்கப்படுகிற உன்னை வணங்கவோ, துதிக்கவோ புண்ணிம் செய்திருந்தால் மட்டுமே முடியும்.
யந்திரம்- ஸ்ரீசக்ரம், மாமேரு. தினமும் 1001 முறை 12 நாட்கள். கிழக்கு முகமாக இருந்து ஜபிக்க வேண்டும். சிவப்பு மலர்கள்- நைவேத்யம்- வெல்லம் நெய்கலவை, அன்னம்.
2. பாத தூளி மகிமை
தனீயாம்ஸம் பாம்ஸும் தவசரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகோ- னவிகலம்
வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப்ஜதி பஸிதோத்தூளன விதிம்.
பலன்: உலகம் உன் வசம்
கருத்து: பிரம்மா உன் திருவடித் தாமரை தூசுகளிலிருந்து சிறு அணு கிடைக்கப்பெற்று அதைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார். அப்படிப் படைக்கப்பட்ட உலகினை ஆதிசேஷனும்( விஷ்ணுவும்) தன் ஆயிரம் தலைகளால் தாங்கிநிற்கிறார். சிவனும் அத்துளிகளையே விபூதியாக அணிந்து கொள்கிறார்.
யந்திரம்- ஸ்ரீசக்ரம்/மகாமேரு. பாராயணம் தினம் 1000 முறை, 45 தினங்கள். வடக்குமுகம் அமர்ந்து, குங்கும அர்ச்சனை. நைவேத்யம், தேங்காய் பழம், பால் பாயாசம்.
3. முக்தி தரும் பாதக் கமலம்
அவித்யானா- மந்தஸ்திமிர- மிஹிர- த்வீபநகரீ
ஜடானாம் சைதன்ய- ஸ்தபக- மகரந்த- ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி- குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு -வராஹடஸய பவதி
பலன்: சகல கலையும் அமையும்
கருத்து: உன் பாதத்தூளி, அறிவிலிகளின் மன இருளை அகற்றும் சூரியத்தீவின் நகரம் போல் ஒளிபொருந்தியது. மூடர்களுக்கு, கற்பகத் தருவிலிருந்து வழிகின்ற அறிவெனும் தேன் போன்றது.
ஏழைகளுக்கு நினைத்தை கொடுக்கவல்ல சிந்தாமணி இரத்தினமாகவும், பிறவிக் கடலில் மூழகிக்கிடப்பவர்களுக்கு, பூமியை கடலிலிருந்து மீட்டு வந்த விஷ்ணுவின் வராக அவதாரத்தின் கோரைப்பற்களைப் போன்றதாகவும் இருக்கிறது.
யந்திரம் ஸ்ரீ சக்ரம்/ மகாமேரு.தினமும்1008முறை, 45 நாட்கள்.வடகிழக்கு முகமாய் அமர்ந்து, வெள்ளைமலர்கள். நைவேத்யம் உளுந்து வடை, தேன் அன்னம், வெற்றிலை பாக்கு.
4.பாத கமலங்களின் அளவற்ற சக்தி.
த்வ- தன்ய: பாணிப்ப்யா- மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித- வராபீத்ய பிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபிச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ
பலன்: பயநிவர்த்தி ரோக நிவர்த்தி
கருத்து: மற்ற தேவர்கள் தங்களது இருகரங்களால் பக்தர்களுக்கு அபய வரமளிக்கின்றனர். நீ அவ்வாறு செய்யாமல் அவர்களை காத்துக் கருணைப் புரிகிறாய். பக்தர்களின் வேண்டுதல்களுக்கு மேலாகவே பலனை அளிக்கிறாய். உன்னுடைய பாதங்களே பயத்திலிருந்து காக்கவும், வேண்டியதை வழங்கவும் செய்ய வல்லது.
யந்திரம் ஸ்ரீசக்ரம்/மகாமேரு. தினசரி 1000முறை.36 நாட்கள் வடகிழக்கு முகமாய் அமர்ந்து. குங்கும அர்ச்சனை. நைவேத்யம்- கரும்பு துண்டுகள், எலுமிச்சை பழச்சாறு பால், அன்னம்.
5.தேவி பூஜையின் மகிமை
ஹரீஸ்-த்வா- மாராத்த்யா ஜன ஸௌபாக்ய- ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப- மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன- லேஹ்யேன வபுஷா
முனீன- மப்- யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்
பலன்: குடும்ப ஒற்றுமை நிலவும், ¢கணவனின் அன்பு பெருகும்
கருத்து: துதிக்கும் பக்தர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் தந்தருளும் தேவியே, மகாவிஷ்ணு உன்னைத் துதித்து, மோகினி வடிவத்தை எடுத்து , சிவனையே மனம் மயங்கச் செய்தார்.
உன்னைத் துதித்த மன்மதன் ரதியின் கண்களுக்கு மட்டும் அழகிய வடிவுடன் காட்சியளிக்கிறான். அருந்தவ முனிவர்களின் மனங்களையும் மயங்க வைக்கும் சக்திப் பெற்றுத் திகழ்கிறான்.
யந்திரம் ஸ்ரீசக்கரம்/மகாமேரு . படத்தில் உள்ள யந்திரம் செய்து கையில் கட்டிக் கொள்ள வேண்டும். தினசரி 2000 முறை 30 நாட்கள் ஐபம். கிழக்கு முகமாய் அமர்ந்து. சிவப்பு மலர்கள், நைவேத்யம்- பாசிபருப்பு பொங்கல்
தொடரும் ...
No comments:
Post a Comment