Follow by Email

Thursday, 26 June 2014

கேள்விகள் ஆயிரம்

* தக்ஷிணாயனம், உத்தராயனம் என்பவை யாவை?

ஒரு வருஷத்துக்கு இரு அயனங்கள், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆணி ஆகிய ஆறு மாதங்கள் உத்தர அயனம் என்றும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களை தக்ஷிண அயனம் எனவும் கூறுவர்.

* கோள்களிலிருந்து வருகின்ற காந்த அதிர்வு அலைகள் மனிதனின் எந்த பாகங்களோடுஅதிகம் தொடர்பு கொள்கின்றன?

சூரியனிலிருந்து வருகின்ற அலை- எலும்புகளோடும்
புதன் தோல் மீதும், சுக்கிரன்- ஜீவசக்தியோடும்
சந்திரன் இரத்த ஓட்டத்தோடும், செவ்வாய் எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்- ராகு கேது ஓஜஸோடும் தொடர்பு கொள்கின்றன. (யோகி வேதாத்ரி அவர்களின் ஆய்வு இது).

* எது ஒன்றையும் துவங்கும் போது நேரம்¢காலம் பார்ப்பது ஏன்?

மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாய் முடிக்க இயற்கையின் துணை வேண்டும் என்பது நம் முன்னோர்கள் அனுபவபூர்வமாக அறிந்த உண்மையாகும். நமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரனம் என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். 

* வாஸ்து சாஸ்திரம் அவசியம்தானா?

நான்கு சுவர்களை அமைக்கும் போது அதற்குள் உண்டாகும் காந்தக் கலம் மனிதனுக்கு நன்மை செய்வதாகவோ, தீமை செய்பவதாகவோ அமைவது உண்டு. மற்றும் திசைகளும், கோள்களும் இயற்கையும் அருகே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே நன்மையளிக்கக் கூடிய வகையில் திசைகளுக்கேற்றவாறு வீட்டை எவ்வாறு அமைப்பது என்பதை கணித்து வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. 

* கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது? 

சூரியனுடைய மையத்தில் ஏற்படும் ராகு கேது காந்த அலைப்பாதைகளுக்கு நேராக சந்திரன், பூமி வரும் போது சுவடு மறைவு ஏற்பட்டு விடும். இதை கிரகணம் என்று சொல்கிறோம். 

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க் கோட்டில் வரும் போது அங்கு சூரியன் மையத்தில் ராகு அமையும் போது சூரியனிடமிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை அது மறைத்து விடும். இதை சூரிய கிரகணம் என்கிறோம். 

பூரண சந்திர தினத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க் கோட்டில் இருக்கும். அப்பொழுது பூமி சூரியனிடமிருந்து சந்திரன் மேல் படும் வெளிச்சத்தை மறைத்து விடும். அதை சந்திர கிரகணம் என்கிறோம். பூமி, ராகு, கேது என்ற நிழல்கிரகங்களுக்கு   நேராக வரும்போது அந்த மறைவு தெரியும். 

ராகு கேது இரண்டும் கருநிறமான நீண்ட காந்த அலைப் பாதைத்தான். அது நீளமாக வருவதால் பாம்பு என்று சொல்லி வைத்துள்ளார்கள். 

* கிரகண நாட்களில் ஏன் விரதமிருக்கிறார்கள்?

ராகு கேது காநத அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் போது நம் உடலில் ரசாயன மாற்றம் நிகழும். ஜீரண சக்தி குறையும். இச்சமயத்தில் தெய்வ நினைவோடு இருப்பது சிறந்தது. இந்நாட்களில் தாம்பத்ய உறவு கொண்டால் கர்ப்பம் தரித்து பிறக்கும்  குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளுடனும் நற்குணங்களில்லாமலும் இருக்க நேரிடும். 

* அமாவாசை, பௌர்ணமியன்று விரதமிருக்கக் காரணம் என்ன?

அமாவாசையன்று சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகரிக்கும். 

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாக இருக்கும். 

மனநோயாளிகளுக்கு வெறி அதிகப்படும். மரணத் தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரியும். அந்நாளில் குழந்தை உண்டானால் மனவளர்ச்சி குன்றியதாயிருக்கும், தாம்பத்யம் ஆகாது. பௌர்ணமி நாளில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையில் வருகிறது. அந்நாளிலும் மனித உடலில் மாற்றங்கள் நிகழ்கிறது. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களை புனிதமாகவும் விரத நாட்களாகவும் வைத்து து£ய்மையாயிருந்து இறை வழிபாடு செய்வதை முன்னோர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 

* யுரேனஸ், நெப்டியூன், பிளுட்டோ இவற்றை சோதிடர் கணிப்பில் சேர்க்காது விட்டு விட்டார்களே! ஏன் அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களினால் பாதிப்புகள் வருவதில்லையா?

இந்தக் கோள்கள் ஜோதிட சாஸ்திரம் கணிக்கப்பட்டக் காலத்தில் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம். அடுத்து அவை சூரியனிலிருந்து மிகத் தொலைவில் அமைந்திருப்பதால் அவற்றிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் மனிதனை பாதிப்பதில்லை. யுரேனஸ் 178 கோடி மைல் தொலைவிலும் நெப்டியுன் 279 கோடி மைல் தொலைவிலும் புளுட்டோ 366 கோடி மைல் தொலைவிலும் இருக்கிறது. 

* மந்திரம் என்றால் என்ன?

உலக வாழ்க்கையில் மனிதன் ஒரு பொருளையோ, நலத்தையோ, உயர்வையோ அடைவதற்கு ஏற்படுத்திய ஒலி அமைப்புகளுக்கு மந்திரம் என்று பெயர். மந்திரஒலி அமைப்புகள் சொற்களால் அமைக்கப் படுகின்றன. அச்சொற்களை உச்சரிக்கும் போது சொல்லின் முதலுக்கும் முடிவிற்கும் இடைப்பட்ட ஒலியே மந்திரம் எனப்படும். 

மனித வாழ்வில் எந்த சம்பத்து குறைவாக உள்ளதோ அதைப் பெறுவதற்காக அதை நிறைவு செய்ய அதற்குத் தகுந்தாற்போல கடவுளுக்கு உருவம் அமைத்துள்ளார்கள். 

அக்கடவுளுடன் தொடர்புக் கொள்ள அதற்கான தனித்தனி மந்திர ஒலிகளை வடிவமைத்துள்ளனர். அம்மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்கும் போது நாடி நரம்புகளில் ஓர் காந்த அதிர்வு மையம் உருவாகி நம் மனதை இறை உணர்வுடன் தொடர்புக் கொள்ளும் ஆழ் நிலைக்கு மாற்றி அமைக்கிறது. மனமும் மந்திரமும் சரியாய் செயல் படும் போது நம் வேண்டுகோள்கள் இறை சக்தி மூலம் நமக்கு நிறைவேறும் நிலையை அடைகிறது. 

* யந்திரம் என்றால் என்ன?

மந்திரங்களை உச்சரிக்கும் போது உச்சரிப்பவரின்   காந்த சக்தி உயர் நிலைக்கு மாறுகிறது. என்ன தேவையோ அந்த கருத்தை மனம் இணைந்து அனுப்ப ஒரு மீடியம் அல்லது மையப் பொருள் வேண்டும் அது படமாகவோ  தகரமாகவோ இருக்கலாம். அதுவே யந்திரம் எனப்படுகிறது. 

மந்திரங்களை தகட்டில் பதித்து அதை  குறிப்பிட்ட நாட்களுக்கு பூஜையில் வைத்து சக்தி ஏற்றுகிறார்கள். யந்திரங்களிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் இயற்கை சக்திகளுடன், அதாவது ஐம்பூதங்களுடன் இணைந்து எந்த நோக்கத்திற்கு அந்த யந்திரங்கள் எழுதப்பட்டனவோ, அதையருளும் சக்தியுடன் இணைந்து சாதகமாய் உருவெடுத்து பலன் தருகிறது. 

* திலகமிட்டுக் கொள்ளும் காரணம் என்ன? 

குங்குமம் அல்லது மை வைத்துக் கொள்வதை திலகமிடுதல் அல்லது பொட்டு வைத்துக் கொள்ளல் என்பார்கள். குங்குமம் , சாந்து மை இவைகள் பண்டைக் காலத்துப் பெண்கள் சொந்தமாகத் தயாரித்துக் கொள்வார்கள். 

புருவமத்தியில் திலகமிடுவது மங்களமாகக் கருதப்படுகிறது. புருவமத்திக்கு யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ரம் என்று பெயர். இதை நெற்றிக்கண் என்பார்கள். தியானத்தின் போது சிந்தனை இங்கே குவியும் போது குண்டலிணி சக்தி  பிரகாசிக்கும். அப்போது தெய்வத்துடன் தொடர்புக் கொள்ளும் ஆற்றல் வருகிறது. 

சாதாரணமாக குங்குமத்திற்கு மின் கடத்தும் ஆற்றல் இருக்கிறது. நெற்றியில் குங்குமம் இட்டவுடன் அது மூளையின் பீனியல் கிளாண்ட் என்ற பகுதியை து£ண்டிவிட்டு இறைவனோடு தொடர்புக் கொள்ளும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

எனவேதான் கோவிலில் குங்குமம் திருநீறு கொடுத்தவுடன் நெற்றியில் இட்டுக் கொண்டு பின் சிறிது நேரம் அமர்ந்து இறை சிந்தனையுடன் ஒன்றி மௌனமாய் இருந்துவிட்டு வருவது பழக்கமாக இருக்கிறது. 

மற்றபடி, மற்றவரின் பார்வை மற்றும் எண்ண அலைகள் நெற்றிக்கண் என்கிற புருவமத்தி வழியே உட்புகுகின்றன. வசியம், ஹிப்நாட்டிசம் போன்ற சக்திகள் நம்மை ஆட் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் வெளியில் செல்லும் போது வெறும் நெற்றியுடன் போகக்கூடாது என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர். 

‘ ஆரத்தி ஏன் எடுக்கப்படுக்கிறது? 

பொதுவாக மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் அல்லது ஒரு பெண் பெரியவள் ஆகிவிட்டாள் என்று சடங்கு சுற்றும் போது, குழந்தை பிறந்து வீட்டிற்கு வரும் போதோ இது போன்ற சடங்குகள் நடைபெறுகிறது. 

ஆரத்தியில் மஞ்சள் சுண்ணாம்பு இவற்றை நீரில் கரைத்து ஒரு வெற்றிலையைக் கிள்ளிப் போட்டிருப்பார்கள். மஞ்சலும் சுண்ணாம்பு கலந்த நீர் செந்நீரமாக மாறிவிடும். மஞ்சள் கிருமி நாசினி. கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பில் சாந்த சக்தியும் வெற்றிலையில் இரும்பு சக்தியும் உண்டு. 

பொதுவாக மணமக்களும் அல்லது ஒரு பொது நிகழ்வில் முக்கிய பாகமாய் இருக்கும் நபரும் பலருடைய பார்வைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆட்படுகிறார்கள். அது அவருடைய ஒளி உடலில் அதாவது ஓளரா  எனப்படும் வளையத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடும் அதனால் உடல் நிலை பாதிப்படையும். 

ஆரத்தியை கரைத்து மூன்று சுற்று சுற்றி சில சமயம் சூடம் கொளுத்தி கீழே ஊற்றுவார்கள். அதில் ஒளியுடலின் சுற்றித் தொடரும் எதிர் மறை அதிர் வலைகள் சமன் படுத்தப்பட்டு ஒளியுடலின் சலனங்கள் மறைகின்றன. திருஷ்டி சுற்றிப் போடுவதும் இது போலவேதான் சில எதிர்மறை எண்ண அதிர்வுகளிலிருந்து நம் உடலின் ஒளி வளையத்தை காத்து உறுதிப் படுத்துகிறது. 

* இறப்பு வீட்டிற்கு சென்று வந்தப் பின் குளிப்பது ஏன்?

இறந்தவர் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தால் அவர் இருக்கும் இடத்தில் காற்றணுக்களில் நோய் கிருமிகள் பரவி இருக்கும் சா£த்தியம் உண்டு. அடுத்து பிணத்தை இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்கையில் அந்த உடலிலிருந்து துர்வாடை காற்றிகல் கலந்து உடைகளில் தொற்றும் நிலையும் உண்டு. துக்கத்தில் பங்கு பெற வந்தவர்களில் தொற்று நோயாளிகளும் இருக்கலாம் மற்றும் சோகமான எண்ண அலைகளே அவ்வீட்டில் பரவியிருக்கும். 

வீட்டிற்கு வந்து குளிர் நீரில் தலையோடு குளித்து உடைகளைத் துவைத்து உடலையும் சுத்தப் படுத்திக் கொண்டால் மனமும் அதீத சோக உணர்விலிருந்து விடுபடுகிறது. கிருமிகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.

* வாயில் படியில் அமரக்கூடாது, அமர்ந்து உண்ணக் கூடாது, ஏன்?

வாயின் நிலையின் நாலு பக்கங்களும் செவ்வக அமைப்பில் சீராக இருப்பதால் எதிர் மறை சக்திகள் வெளிப்படுகின்றன. இதை ‘டௌசிங்ராட்’ என்ற கருவியின் மூலம் கண்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வாயில் படியில் அமர்வதால் நம் உடலில் எதிர் சக்திகள் உட்புகும் என்பது உறுதியாகிறது. இதனால் தான் வாயிலின் அருகில் உட்புறமோ வெளிப்புறமோ நின்றுக் கொண்டு கொடுத்து வாங்கக் கூடாது என்றும் சொல்லி வைத்துள்ளனர். அரை வட்ட வடிவில் சன்னல்களின் மேற்பகுதியோ அல்லது வாயிலின் மேற் பகுதியோ அமைக்கப்பட்டிருந்தால் அங்கே எதிர் மறை சக்திகள் வெளிப்படுவதில்லை. 

* இரவில் நகம் வெட்டக் கூடாது என்பது ஏன்?

பொதுவாக இரவில் நகம் வெட்டக்கூடாது, முடி வெட்டக்கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர். அதே போல் வெள்ளிக்கிழமை அமாவாசை மற்றும் புண்ணிய நாட்களிலும் இவ்வாறு செய்யக்கூடாது என்பார்கள். 

இரவில் வெட்டப்படும் நகமும், முடியும் நம் உடலில், உடையில் படிந்திருந்து நாம் உண்ணும் உணவோடு கலந்து விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பகலில் இதற்கு வாய்ப்பில்லை. இதுவும் காரணமாக இருக்கலாம்.  

‘ இரவில் வீட்டைக் கூட்டக் கூடாது என்பது ஏன்?

பொதுவாக இரவில் வீட்டைக் கூட்டினால் வீட்டிலிருக்கும் லட்சுமி வெளியேறிவிடும் என்பார்கள். 

பெரும்பாலும் இரவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விடுவார்கள். கூட்டும் போது அழுக்குகளும் து£சுகளும் காற்றி¢ல் பரக்கிறது. அது சுகாதாரக் கேடாகும். அடுத்து அக்காலத்தில் தற்காலத்தைப்போல் மின் வெளிச்ச வசதிகள் அதிகம் இல்லை. அதனால் சரியாக குப்பைகளைக் கூட்ட முடியாது. அடுத்து வீட்டில் தோடு, மூக்குத்தி எதும் சிறு சிறு பொருட்கள் விழுந்திருந்தாலும் பார்வையில் பட வாய்ப்பு இல்லை. எனவே இரவில் கூட்டுவதை இப்படிச் சொல்லி இருக்கலாம். 

‘ அதிகாலையில் எழுவது ஏன் வலியுறுத்திக் கூறப்படுகிறது.  

இரவில் து£க்கத்தைக் குறைத்து பகலில் து£ங்குவதால் ஆரோக்கியம் கெடுகிறது. அதிகாலை பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. அப்போது தியானம் செய்பவர்கள் மனத் தெளிவு பெறுகிறார்கள். காலை வேளை து£ங்குபவருக்கு தமோ குண வளர்ச்சி அதிகமாகும். அறிவு வளர்ச்சி தடையாகும். 

மாணவர்கள் காலையில் எழுந்து படித்தால் மனதில் தெளிவாய் பதியும். சூரியன் உதித்தெழுவதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது. அப்போது சரஸ்வதி விழித்திருந்து செயல்படும் நேரம் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் தலையின் இடப்பக்க மூளைப் பகுதி சுறுசுறுப்பாக இருக்கிறது. இதில்தான் கல்வி, அறிவு ஞாபகசக்தி மையம் இருக்கிறது. எனவே மாணவர்கள் அதிகாலை எழுந்து படித்தால் மனதில் பதியும். 

* எண்ணைக் குளியலால் என்ன பயன்?

தேக உஷ்ணம் தணியும், தோல் நலமுறும், தேகத் தசை நன்கு மசாஜ் செய்யப்டுவதால் விறைப்பு, வாயுப்பிடிப்பு இருக்காது. சுளுக்கு ஏற்படாது. உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். உடல் இளமையுடன் இருக்கும். வேர்க்குரு, சொரி உண்டாகாது. 
 * எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள் எது?

 வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும் எண்ணெய்¢தேய்த்துக் கொள்ளலாம். பிறந்த நாள் இக்கிழமைகளில் வரும் தினத்தில் எண்ணெய் தேய்த்தல் ஆகாது.

கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் சில நாட்களில் கட்டாயம் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும் அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, துவாதசி, விரதநாட்கள், ஞாயிறு, வியாழன் கார்த்திகை, பிதுர்தினங்கள் போன்ற நாட்களில் எண்ணெய் தேய்க்கக் கூடாது.

சூரியன் உதயமான பின்னால்தான் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டும்.
தீபாவளி தினம் மேற்கூரிய எல்லாவற்றிலிருந்தும் விலக்கு பெறுகிறது. அன்று எந்தக் கிழமையென்றாலும், அமாவாசை என்றாலும், சூரிய உதயத்திற்கு முன்னாலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம்

* காலையில் யார் முகத்தில் விழிக்கலாம்?

 அன்றாடம் காலையில் தூங்கி எழுந்தவுடன் இறைவனின் படங்களைப் பார்க்கலாம். கோபுரம், சூரியன், படுக்கையில் இருந்தபடியே உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டு அகல விரித்து கைவிரல்களைப் பார்க்கலாம். கைகளின் நுனியில் லட்சுமி இருப்பதாகவும், நடுவில் சரஸ்வதியும், கீழ்ப்புரத்தில் பார்வதியும் இருப்பதாக எண்ணி  தியானித்து வணங்கலாம். தெய்வீக அம்சங்கள் நிறைந்த பொருட்களைப் பார்த்து நாளைத் துவக்குவது நல்லது.


தொகுப்பு : சிந்தனை சிற்பி மதிவாணன் 

2 comments:

 1. பலமுறை உணர்ந்து இருக்கிறேன்...

  அமாவாசையன்று சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகரிக்கும்.

  அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாக இருக்கும்.

  மனநோயாளிகளுக்கு வெறி அதிகப்படும். மரணத் தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரியும். அந்நாளில் குழந்தை உண்டானால் மனவளர்ச்சி குன்றியதாயிருக்கும், தாம்பத்யம் ஆகாது. பௌர்ணமி நாளில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையில் வருகிறது. அந்நாளிலும் மனித உடலில் மாற்றங்கள் நிகழ்கிறது. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களை புனிதமாகவும் விரத நாட்களாகவும் வைத்து து£ய்மையாயிருந்து இறை வழிபாடு செய்வதை முன்னோர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

  ReplyDelete
 2. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete