இன்று நேற்றல்ல, பன்னெடும் காலம் தொட்டே பாம்பு வழிபாடு நடைமுறையில் இருக்கிறது.
இன்றும் பலர் பாம்புக்கு பால் வார்ப்பதையும், பாம்பு புற்றுக்கு முட்டை வைப்பதையும் நடைமுறையில் பார்க்கலாம்.
ஜாதகத்தில் நாகதோஷ அமைப்பு இருந்தால் ராகு கேதுவிற்கு பரிகாரம் சொல்வதும், பின் பாம்புக்கு பால் வைக்க சொல்வதும் ஜோதிடர்களிடம் எழுதபடாத சட்டமாகவே இருக்கிறது.
சாமானிய மனிதர்களும் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செய்கிறார்கள்.
என்ன காரணம்?
அதை வெறும் பாம்பாக மட்டும் பார்க்காமால் ராகராஜன் என்றும், நாக கன்னி என்றும் வேறு விதமாக நமக்கு வேதங்கள் அறிமுகம் செய்ததும் ஒரு காரணம்.
அதோடு மகாவிஷ்ணு பாம்பின் மீதுதான் துயில் கொள்கிறார்.
முருகனுக்கு கால் பக்கம் இந்த பாம்புதான் காவல் இருக்கிறது.
அவர் அண்ணன் விநாயகருக்கு இடுப்பில் அரைஞான் கயிராக இருப்பது பாம்பு.
பரமசிவன் கழுத்தில் ஒரு அணிகலன் மாதிரியே எப்போதும் நீங்காமல் இருப்பது பாம்பு.
இதே பாம்புதான் பார்வதிக்கு கை விரல் மோதிரமாக இருக்கிறது.
அதோடு நின்று விடவில்லை. பல தெய்வங்களுக்கு காவல்காரன் மாதிரி இந்த பாம்புதான் இருக்கிறது.
அவ்வளவு ஏன்? இந்த பூலோகம் என்னும் பூமி பந்தையே நாகராஜன் என்னும் பாம்புதான் தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கிறது.
அதோடு
வாசுகியே நமஹா
தச்சகாயா நமஹா
கார்கோடக நமஹா
சங்கபாலா நமஹா
குளிகாய நமஹா
பத்மாய நமஹா
மகா பத்மாயா நமஹா
என்று பாம்பு வழிபாட்டை சொல்கிறது அஷ்ச்டோத்திர நவமாளி .
சரி ......இது மட்டுமே பாம்பு வழிப்பாட்டிற்கு காரணம் இல்லை.
சரி இந்த நாகதோஷம் என்பது என்ன?
நாக தோஷம் மட்டும் அல்ல, செவ்வாய் தோஷம் பற்றியும் பாப்போம்.
செவ்வாய் என்பது நம் உடலில் ரெத்தத்தை குறிக்கும் கிரகம். அதோடு சிற்றின்ப கிரகமும் இதுதான். ஒருவரின் ஆண் பெண் உறவு நிலைகளை சொல்வதுதான் செவ்வாய் தோஷம்.
உதாரணமாக ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால், எந்நேரமும் படுக்கையறை சிந்தனையோடு இருப்பார்.
அவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் என்னாகும்?
அந்த பெண் ஒத்துழைக்காது. தலையை வலிக்குது, அசதியா இருக்கு, மனசு சரியில்லை, விரதம் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கொண்டே இருக்கும்.
அப்பறம் அவர்களுக்குள் மன வேற்றுமை என்பது வராமல் இருக்காது. நாக தோஷமும் இந்த கதைதான்.
ஓன்று எழில், அல்லது சந்திரனோடு, பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு எட்டில் ராகு கேது இருந்தால் நாக தோஷம் என்று பெயர்.
இந்த ராகு கேது செவ்வாயோடு அல்லது சுக்கிரனோடு இருந்தாலும் அடுத்து நான் சொல்ல போகும் விஷயத்திற்கு ஒத்து போகும்.
நீங்க டிஸ்கவரி சானல் பார்ப்பது உண்டா. அதில் பாம்பு எப்படி தன் துணையோடு உறவு கொள்கிறது என்பதை பற்றிய படம் எதுவும் பார்த்ததுண்டா.
பாம்பு தன் துணையோடு ஒன்றோடு ஓன்று பின்னி பிணைந்து தான் உறவு கொள்ளும்.
இந்த நாக தோஷம் உள்ளவரும் இப்படித்தான். இது உறவு என்பதோடு நின்று விடாமல் திருமண தாமத்திற்கும் ஒரு காரணமாக இருந்து விடுகிறது.அதனால் பாம்பு வழிபாடு, பரிகாரம் என்ற பெயரில் வந்து விட்டது.
நம் சிந்தனை என்ன வென்றால்... இந்த நாகதஷ வழிபாடிற்காக காட்டு பாம்பிற்கு பால் வைப்பதும், முட்டை வைப்பதும் சரியாக படவில்லை.
நீங்கள் வழிபாடு செய்ய வேண்டுமா? ஆலயம் செல்லுங்கள். அங்கே இருக்கும் ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்யுங்கள். அதை விடுத்து பாம்பு புத்திற்கு பால் வார்க்க வேண்டாம். இது அறிவான செயலாக படவில்லை.
நன்றாகச் சொன்னீர்கள். நன்றி !
ReplyDelete