நிறைய பேருக்கு ஒரு சந்தேகம். சிவன் காக்கும் கடவுளா? அழிக்கும் கடவுளா?
காரணம் சிவன் அழித்தல் கடவுள் என்று புராணங்கள் சொல்வதுதான் காரணம்.
அதோடு அவர் சுடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு, மயானகரையில் நடனம் ஆடுகிறார், அதனால் அவரை வணக்குவது தவறு என்று நினைப்பவர்கள் கூட உண்டு.
இந்த எண்ணங்கள் யாருக்காவது இருந்தால் தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.
உண்மையில் சிவன் காக்கும் கடவுள். திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த போது, வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை தானே உண்டு, இந்த உலகை அழிவில் இருந்து காத்தவர் சிவன்.
தன்னை வணங்கிய மார்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வரம் தந்து வாழ வைத்தவர் சிவன்.
தன்னை வணங்கும் பத்தர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்.. சாதாரண மனிதனாக பிறந்து தெய்வ நிலைக்கு உயர்ந்த நாயன்மார்கள் வாழ்க்கையை எடுத்து கொண்டால் சிவனை பற்றி தெரிந்து கொள்ளலாம்..
அவரை போற்றி பாடிய சுலோகம் தான் லிங்காஷ்டகம். இதை தினம்தோறும் கேட்பதால் வாழக்கையில் துன்பம் விலகும். . தீவினைகள் அகலும், பிறப்பின் அர்த்தம் புரியும்.
ஆம்..ஈசன் மிகவும் எளிமையானவர் நிறைந்த அன்பை உடையவர்..மிக மிக மென்மையானவர்...
ReplyDelete