ads

Tuesday, 13 February 2018

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்


இதன் வீடியோ வடிவம் காண : https://youtu.be/AGrzL8ncjw4

ராசி மண்டலத்தில் முதல் ராசி மேஷம். முதல் நட்சத்திரம் அசுவினி.  இதன் அதிபதி கேது. இது ஒரு ஆண் நட்சத்திரம். தாமஸ குணமுள்ள நட்சத்திரம். வாதநாடி நட்சத்திரம்.

அமைதியாக இருந்தாலும், தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  நினைத்த காரியத்தை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். பிடிவாத குணமிக்கவர்கள். அளவுக்கு அதிகமான துணிச்சலும் அசாத்திய தன்னம்பிக்கையும் தங்கள் சொத்தாக கொண்டவர்கள்.

சில சமயம் தங்கள் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு அதனால் பெரும் துன்பங்களை சந்திப்பதும் உண்டு.  வாலிப வயதில் வளம் பெறுவார்கள் என்பது ஜோதிட வாக்கு. இவர்களின் தனித்த யோகம் என்பது இருபத்து ஐந்து வயதில் இருந்து துவங்கும்.

அசுவினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம்.  கேது ஒரு ஆன்மீக கிரகமாக இருப்பதால்  இயற்கையாகவே இவர்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகம் இருக்கும்.  மருத்துவர்களை உருவாக்கும் நட்சத்திரமாக சொல்லப்படுகிறது. ஆளுமை திறன்மிக்க துறைகள்,

அறிவால் வழிநடத்தும் துறைகளில் அதிகம் பிரகாசிப்பார்கள். குடும்ப அமைப்பை பொறுத்தவரை உண்மையாக நேசிப்பவர்கள்.  சிக்கனவாதிகள். தாம்பூலப் பிரியர்கள். சிலருக்கு இடுப்பில் மச்சமிருக்கும்.  பொதுவாக சுறுசுறுப்பு குறைவாக இருக்கும். மூலம், முதுகு தண்டு பிரச்சனை, கைகால் வலி, ஒற்றை தலை வலி போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பது ஜோதிட குறிப்பு. 

நட்சத்திர அதிதேவதை -:  சரஸ்வதி
பரிகார தெய்வம்                        -: விநாயகர்
நட்சத்திர கணம் (குணம்)- -: தேவகணம்
விருட்சம்                                        -: எட்டி  (பாலில்லா மரம்)
மிருகம்                                           -:  ஆண் குதிரை
பட்சி                                                -:  ராஜாளி
கோத்திரம்                                    -:  அகத்தியர்

ராசியான நிறம் சிகப்பு. இளமஞ்சள், வெள்ளை நிறங்கள் இயன்ற அளவு தவிர்க்க வேண்டும். 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,சே, சோ, ல ஆகியவை. தொடர் எழுத்துக்கள் செ சை முதலியவை ஆகும்.



Sunday, 11 February 2018

நீர் அருந்தா விட்டால் வரும் ஆபத்து




சருமத்தில் சுருக்கம், கன்னத்தில் வெடிப்பு, கருப்பு புள்ளிகள், தோல்சிவந்து காணப்படுதல், முட்டி, மூட்டு எலும்பு இணைப்புகளுக்கு உரிய இடத்தில் தோல் கருத்து, நிறம் மாறுதல் ஏற்படுகிறதா? அல்லது ஏற்பட்டு இருக்கிறதா? 

திடீரென நாக்கு உலந்து போச்சா, கடுமையான தாகத்தை உணர்றீங்களா? 

லேசாய மயக்கம் வர்ற மாதிரி இருக்கா? கூடவே தலைவலியும் ஆரம்பமாகுதா? அப்படியானால் உங்கள் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு விட்டது. உடனடியாக தண்ணீர் பருக வேண்டும் என்பது அவசியம். 

ஒரு நாள் ஒன்றுக்கு 8கிளாசுக்கு குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையும் அறிவுருத்துகிறது. 

ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டால், கூட்டம் சேராதீங்க, காற்று வரட்டும் விலகி நின்னுங்கப்பா என்று சொல்வதும், உடனடியாக அவர் முகத்தில் பளிச் பளிச்சென தண்ணீரை தெளித்து, அவர் கண் விழித்ததும்,  அருந்த நீர் கொடுப்பதும் இயல்பான ஒன்று. அதாவது மனிதன் உயிர்வாழ பிராண வாயும், தண்ணீரும் அவசியம். பொதுவாக மனித உடல் என்பது தசை எலும்பு, ரத்தத்தால் ஆனது என்று சொல்லப்பட்டாலும், அது அத்தனைக்கும் மூலப்பொருள் தண்ணீர்தான்.  தாயின் வயிற்றில் இருக்கும்போதே பனிக்குடத்தில் தண்ணீரில்தான் மிதக்கிறோம். பிறந்து வந்த பிறகும் உடலில் 60சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது என்கிறது மருத்துவம். 

மனித உடலில் மூளை 75 சதவீதம் நீர் சத்து கொண்டதாம், ரத்தத்தில்  92 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. வலிமையான எலும்புகள் கூட 22 சதவீதம் தண்ணீரால் ஆனதாம். தசைகள், தசைநார்கள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இன்னொரு வியப்பூட்டும் செய்தி தெரியுமா?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. ரத்தத்தில் ரத்தசிவப்பனுக்கள், வெள்ளை அனுக்கள், பிளேட்லட்டுக்கள் என மூன்று வகையான அனுக்களும், திரவ நிலையில் பிளாஸ்மாவும் இருக்கிறது. 100 மில்லி ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் அதாவது தண்ணீர் திரவமும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் கலந்து இருக்கும். 

இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் து?ரம் எவ்வளவு தெரியுமா, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீட்டராம்., ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். ஆக அந்த ரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால், கெட்டியானால் எவ்வவு பெரிய விபரீதத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

உண்ணும் உணவு ஜீரனமாக, கழிவுகளை வெளியேற்ற இன்னும் பல வேலைகளுக்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் அளவு உடலில் குறைவு ஏற்படும்போது உடல் சோர்வு, நீர் குறைவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உடல் இயக்கத்தை இயல்பான நிலைக்கு வைத்துக் கொள்ள முயலும் போது ஆக்ஸிஜன் குறைபாடு, நீர்தேவையை பூர்த்தி செய்து கொள்ள தேவையில்லாமல் கொழுப்பை உற்பத்தி செய்தல், உடலில் உள்ள நீர்ம கழிவுகள் வியர்வை வழியே வெளியேற முடியாமல் தேங்குவதால் அமிலத்தன்மை அதிகமாதல், அதனால் கிருமிகள் உருவாதல், சிறுநீரகம் பாதிக்கப்படுதல், நீர்சத்து குறைவதால் கழிவுகள் பெருங்குடலுக்கு செல்லாமல் தங்கி மலச்சிக்கல் உருவாதல், எலும்பு மூட்டுகள் பாதிப்புக்கு உள்ளாதல், இதைவிட முக்கியமாக புறத்தோற்றத்தில், தோல்களில் சுருக்கம், கரும்புள்ளிகள், படர்தாமரை போன்று தோல் மாற்றமடைதல் என்று ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன. 

சுவாச இழப்பு, ரத்த இழப்பு எப்படி மரணத்தை நோக்கி அழைத்து செல்கிறதோ, அதைப்போல் நீர் இழப்பும் ஆபத்தானது. அதனால் தினந்தோறும் 2லிட்டருக்கு குறையாமல் நீர் அருந்துவோம்.  தாகம் எடுக்கா விட்டாலும் தண்ணிர் அருந்த வேண்டும். 


Tuesday, 12 December 2017

ஒரு எச்சரிக்கை பதிவு



வணக்கம்.  இந்த தளத்தில் இருந்து வெளியான கட்டுரைகளை காப்பி செய்து, வரி மாறாமல்பேசி வீடியோ செய்து, யூடியூபில் பதிவேற்றம் செய்யும் நண்பர்களே... நண்பிகளே.. உங்கள் கவனத்திற்கு. 

இந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள்.  நானும் ஒரு தளம் நடத்துகிறேன். எனது தளத்தில் உள்ள கட்டுரைகளை நீங்கள் பேசி வெளியிட்டால், பின்னால் நானும் பேசி வெளியிட்டால், யார் முன்னால் போட்டது, யார் பின்னால் போட்டது, யார் உண்மை, யார் பொய், யார் காப்பி... என்பதெல்லாம் பார்ப்பவர்கள் ஒவ்வொறுவருக்கும் போய் சொல்ல முடியாது.

என் கட்டுரைகள் பல தளங்களில் இருக்கிறது பார்த்திருக்கிறேன்.  அதெல்லாம் பிளாக்கர். சரி போகுதுன்னு விட்டுட்டேன்.  நான் மேலும் கட்டுரைகள் எழுதாமல் நிறுத்தியதின் காரணமும் இந்த காப்பி பேஸ்ட் தொல்லைதான்.

ஆனால் யூடியூப் அப்படியல்ல. என் அறிவை திருடி நீங்கள் சம்பாதிக்க முனைவதை ஏற்க முடியாது. என் தளத்தில் இருந்து கட்டுரைகள் எடுத்திருந்தால் இந்த பதிவுக்கு பின் எந்த வீடியோ பதிவு வந்தாலும் ( தேதியை கவனிப்பேன்) கூகுளுக்கு ஆதாரத்தோடு புகார் செய்வேன். 

Friday, 24 November 2017

கும்பராசி புத்தாண்டு பலன்கள்

கும்பராசியில் பிறந்தவர்களுக்கு 2018 புத்தாண்டுப் பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம். 

https://youtu.be/_C-wF5jj0hM

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...