Follow by Email

Sunday, 13 July 2014

இந்தியாவிற்கு எதிராக காய் நாகர்த்தும் சீனா- சிக்குமா இலங்கைஇயற்கைத் துறை­மு­கத்­துடன் கூடிய, திரு­கோ­ண­ம­லையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு மீண்டும் ஒரு சர்வ­தேச காய்­ந­கர்த்­தல்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

திரு­கோ­ண­ம­லையைத் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு அமெ­ரிக்கா நீண்­ட­கா­ல­மா­கவே முயற்­சித்து வந்­தது.

அதனைத் தடுப்­ப­தற்­கா­கவும், இலங்­கையில் அதி­க­ரித்து வந்த அமெ­ரிக்கத் தலை­யீட்­டுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் விதத்­திலும் தான், 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இலங்­கை­யுடன் உடன்­பாடு செய்து கொண்­டது இந்­தியா.

அந்த உடன்­பாட்­டுக்கு அமைய, இந்­தி­யாவின் நலன்­களைப் பாதிக்கக் கூடிய வகையில், வேறெந்த நாட்­டுக்கும், திரு­ கோ­ண­மலை உள்­ளிட்ட இலங்­கையின் துறை­மு­கங்­களை இரா­ணுவத் தேவைக்குப் பயன்படுத்த அனு­ம­திப்­ப­தில்லை என்ற இணக்கம் ஒன்று உரு­வா­னது.

இந்­திய – இலங்கை உடன்­பாட்­டுக்குப் புறம்­பாக, அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வுக்கும், இந்­தியப் பிர­தமர் ராஜீவ் ­காந்­திக்கும் இடையில், பரி­மாறிக் கொள்­ளப்­பட்ட கடி­தங்­களில் இது ­கு­றித்து விப­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­போது, இலங்­கையின் துறை­மு­கங்கள் மீதே அமெ­ரிக்­கா­வி­னது கவனம் இருந்­ததே தவிர, விமா­னப்­படைத் தளங்கள் மீது அதி­க­மான கவனம் இருக்­க­வில்லை. எனவே அவை குறித்து ஏதும் விப­ரிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இப்­போது, இலங்­கையின் துறை­மு­கங்­க­ளையோ, விமா­னத் ­த­ளங்­க­ளையோ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் எண்ணம் அமெ­ரிக்­கா­வுக்குக் கிடை­யாது.

ஏனென்றால், முன்னர், எதி­ரெதிர் முனை­களில் இருந்த இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் இப்­போது ஒரே அணி­யாக வந்து விட்­டன.

இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்த நகர்­வையும், தெற்­கா­சி­யாவில் மேற்­கொள்­வ­தில்லை என்­பதே அமெ­ரிக்­காவின் இப்­போ­தைய கொள்கை.

ஆனால், இப்­போது, இலங்­கையின் துறை­மு­கங்கள், விமா­னத்­த­ளங்கள் மீது சீனா கண்வைக்கத் தொடங்­கி­யுள்­ளது.

1980களில், அமெ­ரிக்­கா­விடம் இருந்து இந்­தியா எத்­த­கைய அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டதோ, அது­போ­லவே இப்­போது சீனா­விடம் இருந்து இந்­தியா எதிர்­கொள்­கி­றது.அமெ­ரிக்­காவை விடவும், வலி­மை­யாக சீனா இலங்­கையில் ஊடு­றுத்து நிலை­கொள்ள முனை­கி­றது.

இலங்­கையின் துறை­மு­கங்கள், விமானத் தளங்­களின் மீது மட்­டு­மன்றி, உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அனைத்­திலும், கால் வைத்து, ஒட்­டு­மொத்­த­மாக இலங்­கையைத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க சீனா முனை­கி­றது.

அதற்­காக சீனா இலங்­கைக்கு என்­று­மில்­லாத அள­வுக்கு- எந்தக் கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றிக் கடன்­களை அள்ளி வீசு­கி­றது.

தெற்­கா­சி­யாவில் தனக்குச் சவால் விடக் கூடிய நாடான இந்­தி­யாவைச் சுற்றி ஒரு வளை­யத்தை அமைப்­பதே சீனாவின் திட்டம். அதனை முற்­றிலும் வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்த வேண்­டு­மானால், இலங்­கையை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம்.

ஹம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­துக் குள் காலடி எடுத்து வைத்த சீனா அதை­ய­டுத்து, விமான நிலை­யங்கள், அனல் மின்நிலை­யங்கள், வீதிகள், ரயில் பாதைகள் என்று கால்வைக்­காத துறை­களே இல்லை.

இப்­போது, சீனாவின் கவனம் நடுத்­தரக் கைத்­தொ­ழில்­களின் மீதும் திரும்பி விட்­டுள்­ளது.

இதனால் உள்ளூர் தொழில் நிறு­வ­னங்கள் முடங்கும் நிலை ஏற்­பட்­டாலும் ஆச்ச­ரி­ய­மில்லை.

இத்­த­கைய சூழலில் தான், சீனக்­கு­டாவில், விமானப் பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க சீனாவுக்கு அனு­ம­தி­ய­ளிக்கும் முடிவை இலங்கை அர­சாங்கம் எடுத்­தி­ருக்­கிறது. கடந்த மே மாதம் 29ஆம் திகதி இதற்­கான முடிவு இலங்கை அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

40.3 மில்­லியன் டொலர் செலவில், சீனக்­கு­டாவில் விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைக்க, சீனாவின் தேசிய வான் பொறி­யியல் இறக்­கு­மதி, ஏற்­று­மதிக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள அனு­மதி இந்­தி­யா­வுக்குப் பெரிதும் சவா­லான விட­ய­மாக மாறி­யுள்­ளது.

18 சீன பொறி­யியல் நிபு­ணர்­களைக் கொண்ட குழு, இலங்­கைக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் பின்னர் இந்த முடிவு அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டது.

இதன்­படி, சீனக்­குடா விமா­னப்­படைத் தளத்தில் உள்ள விமா­னப்­படைப் பயிற்சி நிலை­யத்­துக்கு அரு­காக, இந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலையம் அமைக்­கப்­ப­ட­வுள்ளது.

இந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலையம் எதற்­காக அமைக்­கப்­ப­ட­வுள்­ளது – இதனால், இலங்­கைக்கு என்ன இலாபம் -சீனா­வுக்கு என்ன இலாபம் – இந்­தி­யா­வுக்கு என்ன பாதிப்பு – இந்த விட­யங்கள் தான் முக்­கி­ய­மாக ஆரா­யப்­பட வேண்­டி­யவை.

இலங்கை விமா­னப்­ப­டை­யிடம் உள்ள சீன விமா­னங்கள் அனைத்­தையும், பரா­ம­ரிக்­கத்­தக்க – பழு­து­ பார்க்­கத்­தக்க – புதுப்­பிக்­கத்­தக்க - முழு வச­தி­க­ளையும் கொண்­டதாக இந்தப் பரா­ம­ரிப்பு நிலையம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதா­வது, சீனாவில் உற்­பத்தி செய்­யப்­பட்ட அனைத்து விமா­னங்­க­ளி­னதும், உற்­பத்­திக்குப் பிந்­திய சேவைகள் அனைத்­தையும், வழங்­கு­வ­தற்­கான தளம் இது.

இலங்கை விமா­னப்­ப­டை­யிடம் இப்போது, சீனா, ரஷ்யா, அமெ­ரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடு­க­ளிடம் வாங்­கப்­பட்ட பெரு­ம­ளவு விமா­னங்கள் உள்­ளன.

உத்தியோ­க­பூர்­வ­மாக உறுதி செய்­யப்­பட்­டாத நிலையில் இவற்றில், வை-12 போக்­கு­வ­ரத்து விமா­னங்கள் - 09 , எம்.ஏ-60 பய­ணிகள் விமா­னங்கள் - 02, எவ்-7 ஜெட் போர் விமா­னங்கள் 12, பி.ரி-6 எனப்­படும் ஒற்றை இயந்­திர அடிப்­படைப் பயிற்சி விமா­னங்கள் - 08, கே-8 ஜெட் பயிற்சி விமா­னங்கள் - 06 ஆகி­யவை தான், சீனா­விடம் வாங்­கப்­பட்­டவை.

அமெ­ரிக்க, ரஷ்ய, உக்­ரே­னியத் தயா­ரிப்பு விமா­னங்­க­ளுடன் ஒப்­பிட்டுப் பார்க்கப் போனால், சீனத் தயா­ரிப்பு விமா­னங்கள் விமா­னப்­ப­டை­யிடம் குறைவு தான்.

மொத்தம் 37 சீனத் தயா­ரிப்பு விமா­னங்கள் இப்­போது விமா­னப்­ப­டை­யிடம் உள்­ளன. அதே­வேளை, அமெ­ரிக்­கா­விடம் வாங்­கப்­பட்ட 40 விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­களை விமா­னப்­படை வைத்­தி­ருக்­கி­றது. 
ரஷ்­யா­விடம் வாங்­கப்­பட்ட 53 விமா­னங்கள், ஹெலி­க­ளையும் விமா­னப்­படை பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

ஆனால், அமெ­ரிக்­கா­வு­டனோ, ரஷ்­யா­வு­டனோ இத்­த­கைய விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைப்­ப­தற்­கான உடன்­பாட்டை செய்து கொள்ள இலங்கை முன்­வ­ர­வில்லை.

இந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைக்க சீனா­வுக்கு அனு­மதி அளித்­தது பெரிய விவ­கா­ரமே இல்லை.

அதனை சீனக்­கு­டாவில் அமைப்­ப­தற்கு அனு­மதி அளித்­தது தான், சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக உள்­ளது.

இயற்கைத் துறை­மு­க­மான திரு­கோ­ண­மலை, இந்­தியப் பெருங்­கடல் வழி­யாகச் செல்லும் கப்­பல்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் ஒரு பெருந்­த­ள­மாகப் பயன்­ப­டுத்தக் கூடி­யது.

அதுவும் இந்­தி­யா­வுக்கு மிக அரு­காக உள்­ளது.

கூடவே, விசா­ல­மான விமான ஓடு­பா­தையும் இருக்­கி­றது.

பிரித்­தா­னிய ஆட்­சிக்­கா­லத்தில் அமைக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய எண்ணெய் குதங்­களும் உள்­ளன.

இவை தற்­போது இந்­தி­யாவின் ஐ.ஓ.சி. நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இத்­த­கை­ய­தொரு கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்க இடத்தில் காலூன்றக் கிடைத்த வாய்ப்பை சீனா எப்­படித் தான் நழு­வ­விட விரும்பும்?

சீனக்­கு­டாவில், மெது­வாக விமானப் பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுத்து. அங்கே தனது பொறி­யி­ய­லா­ளர்­க­ளையும், தனக்­கான வச­தி­களைக் கொண்ட கட்­ட­மைப்பு ஒன்­றையும் உரு­வாக்கி விட்டால், பிற்­கா­லத்தில் அதனை ஒரு விரி­வான இரா­ணுவ மைய­மாக மாற்றிக் கொள்­ளலாம் என்று சீனா கணக்குக் போட்­டி­ருக்­கலாம்.

இலங்­கையை தன்­வசம் வளைத்துப் போடு­வ­தற்கு சீனா வழக்­க­மாக கையாளும் அதே தந்­திரம் தான் இங்கும் கையா­ளப்­பட்­டுள்­ளது.

இந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைப்­ப­தற்குத் தேவை­யான நிதியை, அதை உரு­வாக்­க­வுள்ள சீனாவின் வான் பொறி­யியல் ஏற்­று­மதி இறக்­கு­மதிக் கூட்­டுத்­தா­ப­னமே வழங்கப் போகி­றது.

குறைந்த வட்டி, தள்­ளு­படிச் சலு­கைகள் என்று காட்டி இந்த வாய்ப்பை தன் பக்கம் இழுத்­தி­ருக்­கி­றது சீனா.

இந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைப்­பதன் மூலம், இலங்­கைக்கு கிடைக்­க­வுள்ள இலாபம் என்­ன­வென்றால், விமா­னப்­ப­டை­யிடம் உள்ள சீனத் தயா­ரிப்பு விமா­னங்­களை இங்­கேயே சீர­மைத்து, பழுது­ பார்த்து, புதுப்­பித்துக் கொள்­ளலாம்.

இத்­த­கைய சேவை­க­ளுக்­காக சீனா­வுக்கு கப்­ப­லிலோ, விமா­னத்­திலோ அனுப்பி, மீளப் பெறு­வ­தற்கு ஏற்­படும், செலவு குறையும்.

அதை­விட, குறு­கிய காலத்­துக்­குள்­ளேயே, இத்­த­கைய சேவை­களை மேற்­கொண்டு விடவும் முடியும்.

இத­னை­விடப் பெரிய அனு­கூ­லங்கள் என்று இலங்­கைக்கு எதுவும் இல்லை.

சீனாவைப் பொறுத்­த­வ­ரையில், இந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைப்­பதன் மூலம், சீனக்­கு­டாவில் தனது காலை ஊன்­று­வ­துடன் மட்­டு­மன்றி, அதற்கு அப்­பாலும், நீண்­ட­கால நலன்­களை அடைய முடியும்.

இந்தப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைப்­பதன் மூலம், தனது ஒரு தொகுதி பொறி­யி­ய­லா­ளர்­களை சீனக்­கு­டாவில் தொடர்ச்­சி­யாகத் தங்­க­வைக்கப் போகி­றது சீனா.  அது பாது­காப்பு ரீதி­யான ஒரு நேரடி அனு­கூலம்.

அதை­விட, இந்தப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைத்துக் கொடுத்தால், இலங்கை விமா­னப்­படை ஒரு கால­கட்­டத்தில், சீனாவின் முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்குள் வந்து விடும்.

இங்கு வேறு விமா­னங்­களை பரா­ம­ரிக்கும் வச­திகள் இருக்­காது.

பொது­வாக விமா­னங்கள் விற்­கப்­படும் போது, விற்­ப­னைக்குப் பிந்­திய சேவை­களை குறித்த தயா­ரிப்பு நிறு­வ­னமே பொறுப்­பேற்கும்.

எனவே, சீனக்­கு­டாவில் சீன நிறு­வ­னத்­தினால் அமைக்­கப்­படும், விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் சீன விமா­னங்­களைத் தவிர, மற்­றைய நாட்டுத் தயா­ரிப்பு விமா­னங்­களைப் பரா­ம­ரிக்க முடி­யாது.

உதா­ர­ணத்­துக்கு, சபு­கஸ்­கந்தை எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை எடுத்துக் கொள்­ளலாம்.

ஈரான் அமைத்துக் கொடுத்த இந்த சுத்­தி­க­ரிப்பு ஆலையில், அந்த நாட்டு மசகு எண்­ணெயை மட்­டுமே சுத்­தி­க­ரிக்க வச­திகள் உள்­ளன.

இதனால், தான், ஈரான் மீதான அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தாரத் தடையால் அது அடிக்­கடி மூடப்­ப­டு­கி­றது.

அது­போலத் தான், சீனக்­கு­டாவில் சீனா அமைக்கும் விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை வேறு தேவைக்குப் பயன்­ப­டுத்­தவும் வழி­யி­ருக்­காது.

அதே­வேளை, தற்­போ­துள்ள 37 சீனத் தயா­ரிப்பு விமா­னங்­க­ளுக்­காக இந்தப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை விமா­னப்­ப­டையால் வைத்­தி­ருக்க முடி­யாது.

எனவே, இனிமேல், சீனத் தயா­ரிப்பு விமா­னங்­களை மட்­டுமே, விமா­னப்­படை கொள்­வ­னவு செய்யும்.

அதுவும், கூடிய விரைவில், விமா­னப்­ப­டை­யிடம் உள்ள மிக் -27, கிபிர் ஆகிய 15 ஜெட் போர் விமா­னங்கள் கழித்து ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளன.

அவற்­றுக்குப் பதி­லாக, புதிய விமா­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­வது குறித்து விமா­னப்­படை ஆராய்ந்து வரு­கி­றது.

இத்­த­கைய சூழலில் தான், சீனக்­கு­டாவில் விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைக்கப் போகி­றது சீனா.

புதிய விமானக் கொள்­வ­னவின் போது, இதுவும் கருத்தில் எடுத்துக் கொள்­ளப்­படும்.

இங்­கேயே பரா­ம­ரித்துக் கொள்­ளலாம் என்­பதால், சீன விமா­னங்­களைக் கொள்­வ­னவு செய்ய விமானப்படை முனையும்.

அல்லது சீனாவே அதற்கு நெருக்குதல் கொடுக்கவும் கூடும்.

ஆக, இலங்கை விமானப்படையை, கூடிய விரைவில், முற்றிலும் சீன விமானங்களைக் கொண்டதாக மாற்றுவதற்கு சீனாவுக்கு பெரும் உதவியாக அமையும்.

அடுத்து, இதனால், இந்தியாவுக்கு என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது?

இந்தியாவுக்கு மிக அருகாக அமையக் கூடிய இந்த விமான பராமரிப்பு நிலையத்தை, சீனா தனது இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிட, இந்தியாவுக்கு மிக அருகாக அமையக் கூடிய இந்த இராணுவ நிலையால், இந்தியாவின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும்.

அதைவிட திருகோணமலைத் துறைமுகத்தையும், எண்ணெய்க் குதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்தியாவின் திட்டம் மெதுவாக வலுவிழந்து போகும்.

இப்படியாக, இலங்கை மீதான இந்தியாவினது செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு, சீனா அதனை வசப்படுத்திக் கொள்ளும்.

இது தான் இந்தியாவுக்கு உள்ள பிரச்சினை.

இந்தப் பிரச்சினையை இந்தியா எப்படிக் கையாளப் போகிறது?

வெறும் எதிர்ப்போடு நிறுத்திக் கொள்ளப் போகிறதா - அல்லது தடுப்பதற்காக செயலில் இறங்கப் போகிறதா?

தமிழ்வின் சுபத்ரா

No comments:

Post a Comment