Follow by Email

Wednesday, 11 June 2014

இப்படியும் சில கிரேடிட் கார்டுகள்!!

ஷாப்பிங் ,சுற்றுலா ,ஆகியவற்றில் எந்த தொந்தரவும் இன்றி நாம் ஈடுபட கடன் அட்டைகள் சிறந்த தேர்வு ஆகும். இந்த உலகத்தில் பணமில்லாமல் நாம் எதையும் பெற முடியாது. எங்கும் செல்ல முடியாது. நமது வங்கி கணக்கிலிருக்கும் பணத்தினை எந்த நேரமும் சுலபமாக பயன் படுத்த, கடன்/பற்று அட்டைகள் சிறந்த தேர்வாகும்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் கடன்/பற்று அட்டைகளின் உபயோகம் பெரும் அளவில் உள்ளது. ஆனால் தற்போது அத்தியாவசியம் என்ற நிலை மாறி மேல்தட்டு மக்களின் நாகரீகத்தை பிரதிபலிக்கும் அடையாளமாக கிரேடிட் கார்டுகள் உருவெடுத்துள்ளன.
 மேல்தட்டு வகுப்பினர் தாங்கள் செல்லும் அனைத்து இடத்திலும் தங்களின் அந்தஸ்த்தின் அடையாளமாக இந்த கிரேடிட் கார்டுகளை காட்டி கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். கிரேடிட் கார்டுகளை அனைவராலும் வாங்க முடியும், ஆனால் உலகில் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது அதை நாம் பார்க்க மட்டும் தான் முடியும். அப்படிபட்ட, நாம் கனவாக கொண்டிருக்கும் 5 விலை உயர்ந்த கிரேடிட் கார்டுகளை இங்கே முன்னிலைப்படுத்தியுள்ளோம்.
06-1391668977-1-sberbankvisainfinitegoldcard
ஸ்பேர் பாங்க் விசா 

முடிவற்ற தங்க அட்டை சாதாரணமாக நாம் கடன் அட்டையையோ அல்லது பற்று அட்டையையோ தொலைத்து விட்டால் ,நாம் கவலை கொள்ள தேவை இல்லை.நாம் இன்னொரு அட்டையை பெற்று விடலாம். ஆனால் மேலே குறித்துள்ள இந்த அட்டையை தொலைத்து விட்டால் நம் பாடு திண்டாட்டமே. இந்த அட்டை பரிசுத்தமான திடமான தங்கம் மற்றும் 26 வைரங்கள், மேலும் ஒரு சிறந்த முத்து ஆகியவற்றினால் ஆனது.
 இந்த அட்டையை பெற 1,00,000 டாலர்கள் தேவை. அட்டையின் கட்டணமாக 65,000 டாலர்கள் செலவாகும் மீதியுள்ள 35,000 டாலர்கள்வாடிக்கையாளரின் கணக்கில் பாதுகாப்பாக இருக்கும். ஒரு வருடம் முடிவடைந்த பின் அட்டையின் கட்டணமாக வருடத்திற்கு 2,000 டாலர்கள் செலுத்த வேண்டும்.
06-1391668984-2-dubaifirstroyalemastercardதுபாய் ராயல் மாஸ்டர் அட்டை 

இந்த அட்டையின் ஓரங்கள் தங்கத்தினால் அலங்கரிக்கபபட்டுள்ளது. மேலும் அழகான வைரம் பாதிக்கப்பட்டு நம்மை ஈர்க்கிறது. இந்த அட்டையின் நன்மை யாதெனில், எல்லையின்றி செலவிடும் வசதி ஆகும் ஷாப்பிங், விடுதியில் உணவு, மது அருந்துதல், ஓட்டலில் அறை ஏற்பாடு செய்தல்,ஹெலிகாப்டர் மற்றும் படகு சவாரி, போலோ மற்றும் கோல்ஃப் கிளப் நுழைவு என இந்த அட்டை பயன்படக்கூடிய இடங்களின் பட்டியல் முடிவின்றி நீண்டு கொண்டே செல்கிறது.
 இந்த அட்டை அரச குடும்பத்தினருக்கும் மற்றும் குறிப்பிட தகுந்த நிகர உயர்ந்த சொத்து மதிப்பு கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அட்டை ஒரு வகை கைவினை பொருளாகும். மிக நுட்பமான முறையில் நாள் ஒன்றுக்கு 9 அட்டைகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டிருப்போரின் எண்ணிக்கை 200-க்கும் குறைவாகவே உள்ளது.
06-1391668992-3-americanexpresscenturionஅமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ்ஸ் செஞ்சுரியன் இந்த அட்டையை வழங்கும் முன் வாடிக்கையாளரின் நிகர சொத்து மதிப்பு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த அட்டையை பெற விரும்புவரின் சராசரி நிகர வருவாய் 6.5 மில்லியன் டாலராக இருக்க வேண்டும்.
மதிப்புமிக்க இந்த அட்டை டைட்டானியதால் ஆனது. இந்த அட்டையை பெற இணைப்பு கட்டணம் 5,000 டாலர்கள் ஆகும் மற்றும் வருட கட்டணம் 2,500 டாலர்கள் ஆகும். இந்த பிளாட்டினம் அட்டையின் கவரக்கூடிய சலுகை யாதெனில் அவசர மருத்துவ சேவைகள் ஆகும்.
06-1391668999-4-jpmorganchasepalladiumcardஜேபி மோர்கன் பல்லாடியம்
இந்த கிரேடிட் கார்டு பல்லாடியம் என்ற உலோகத்தாலும், 23 கேரட் தங்க கலவையினாலும் ஆனது. பாதுகாப்பான செயல்பாட்டிற்காக இதில் மறைக்குறியாக்கி பதிக்கப்பட்ட சிப் உள்ளது. ஜேபி மோர்கன் என்ற தனியார் வங்கியுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அட்டை வழங்கப்படுகிறது. இதற்கான வருடாந்திர கட்டணம் 595 டாலர் ஆகும் 5 மில்லியன் டாலரை சராசரி வருவாயாக கொண்டவர்கள் மட்டுமே இந்த அட்டையை பெற முடியும்.
06-1391669009-5-royalbankofscotlandcouttsworldsilkcardராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து கவுட்ஸ் வேர்ல்ட் சில்க் அட்டை

கவுட்ஸ் என்பது இங்கிலாந்தின் 300 வருட பழமையான வங்கி. இது ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்துக்கு சொந்தமானது. இந்த சில்க் அட்டை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அட்டையினை பெற ஆரம்ப கட்டணம் 30,000 டாலர் ஆகும். மேலும் மாதாந்திர செலவிற்கான குறிப்பிட்ட வரம்பை கொண்டுள்ளது. வசூலிக்கப்படும் வருடாந்திர கட்டனத்தை விட வழங்கப்படும் அதிக நன்மைகள் இந்த அட்டையை அதிகம் விரும்பப்படுகிற மதிப்புமிக்க அட்டையாக்குகிறது.
தகவல் இலக்கியா.காம்

No comments:

Post a Comment