Follow by Email

Wednesday, 18 June 2014

இந்தியாவில் இது சகஜமப்பா!!


இந்தியாவில் காசு கொடுத்தால் எதையும் சாதிக்கலாம்    என்பதற்கு இதுதான் நல்ல உதாரணம். பிரிட்டனில்  உள்ள வட்பேட்டில் வசித்து வருபவர்  சஞ்ஜெய் குமார் என்னும் இந்தியர், இவர் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தார்.

இந்தியாவிற்கு சென்ற தன கணவர் இறந்து விட்டதாக அவர் மனைவி இறப்பு சான்றை இன்சூரன்ஸ் கம்பனிக்கு அனுப்பினார். 



இறப்பு சான்றை அனுப்பி வைத்தே சஞ்ஜெய் குமார் தான். காரணம் இவர் தன்னை சுமார் 1 மில்லியன் பவுன்சுக்கு இன்சூரன்ஸ் செய்து வைத்திருந்திருக்கிறார். 

தான் இறந்துவிட்டதாக கூறி மனைவியுடன் இணைந்து இந்த இன்சூரன்ஸ் காசை அடிக்க இவர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளார்கள். இந்தியாவில் இருந்து இறப்பு அத்தாட்சி பத்திரம் கிடைத்தவுடனேயே, லண்டனில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனி சுமார் 10,000 பவுன்சுகளை அவர்களுக்கு முதல் கட்ட பணமாக கொடுத்துவிட்டார்கள்.

இருப்பினும் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் இதுதொடர்பாக ஆராயும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். பொலிசார் முதலில் அராய்ந்த விஷயமே  வெஸ்டேன் யூனியன் ஆகும். 

அதாவது தான் இறந்துவிட்டதாக சஞ்ஜேய் குமார் சர்டிபிக்கெட்டை அனுப்பி, மறு நாள் 1,500 பவுன்சுகளை அவரது மனைவை வெஸ்டேன் யூனியன் ஊடாக அவர் பெயருக்கு டெல்லிக்கு அனுப்பியுள்ளார். 

இதனைக் கண்டறிந்த பிரிட்டன் பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. சுமார் 9 கம்பெனிகளின் முதலாளியாக  சஞ்ஜே குமார் இருப்பதும், அந்த அனைத்து கம்பெனிகளும் நஷ்டத்தில் உள்ளதும் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்சூரன்ஸ் கம்பெனி காசை வழங்கவில்லை. இது ஒரு பொய்யான விஷயம்  என்பதனை அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

எப்படியும் நாம் மாடிக் கொள்வோம்  என்று தெரிந்துகொண்ட சஞ்ஜேய் குமார், வேறு ஒரு பாஸ்போட்டை தயார் செய்து அதில் லண்டன் வந்து வட்பேட்டில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தங்கியிருந்துள்ளார். 

ஆனால் விடுவார்களா பொலிஸ் ? அவ்வப்போது இவர்களை நோட்டமிட்டு வந்த பொலிசார், சஞ்ஜேய் குமார் மீண்டும் வந்துவிட்டார் என்பதனை அறிந்து, அவர் வீட்டில் உள்ளவேளை பார்த்து அலேக்காக தூக்கிவிட்டார்கள். தற்போது சஞ்யேஜ் குமாருக்கு 30 மாதகால சிறை தண்டனை கிடைத்துள்ளது என அறியப்படுகிறது.

No comments:

Post a Comment