Follow by Email

Wednesday, 18 June 2014

பில்லேடனை தூக்கியது போல்!!


பின் லேடனை பாக்கிஸ்தானுக்குள் புகுந்து, சுட்டுக்கொன்ற அமெரிக ஆப்பரேஷனுக்கு பின்னர், நடந்த வெளிநாட்டு கடத்தல் இதுவாகத்தான் இருக்க முடியும். 

ஆம் லிபிய நாட்டில் உள்ள பென்காசியில் அமெரிக்க தூதரகத்தை எரித்து நாசம் செய்து, அங்கே வேலை பார்த்த நபர்கள் பலரைக் கொன்ற "அபு கத்தாலாவை" அமெரிக்கா கடந்த 2 தினங்களுக்கு முன்னர் லிபியாவுக்குள் புகுந்து தூக்கியுள்ளார்கள். 

லிபிய அரசுக்கு தெரியாமல் சுமார் 12 விசேட டெல்டா படையினர்(ELITE DELTA FORCE) 3 காரில் பென்காசி நகரில் புகுந்து அபு கத்தாலாவை தூக்கியிருக்கிறார்கள். அதுவும் 60 நொடியில். மேலும் ஒரு துப்பாக்கி தோட்டவைக் கூட அவர்கள் பாவிக்கவில்லை. உயிர்சேதம் எதுவும் இல்லை. 

இதேவேளை லிபிய அரசிற்கு தெரியாமல் 2 அமெரிக்க ஆளில்லா வேவு விமானங்கள் வேறு இந்த கடத்தலுக்கு துணைபோய் உள்ளது என்ற அதிர்சி தகவலையும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. அப்படி என்றால் லிபியாவின் ராடர் அவதானிப்பு நிலையம் என்ன செய்தது ?

இந்த கடத்தல் எவ்வாறு நடந்தது ? வாருங்கள் சுவாரசியமான விடையத்திற்கு போகலாம் !

அமெரிக்க தூதரகத்தை எரித்து, எரிந்துகொண்டு இருக்கும் தூதரகம் முன்னால் கம்பீரமாக போஸ் கொடுத்த ஆள் தான் இந்த அபு கத்தாலா. இவர் சில வருடங்களாக லிபியாவில் தான் வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா இவரை நாடு கடத்தும் படி பல முறை கேட்டது. ஆனால் அது நடக்கவில்லை. 

தமது நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவர் மீது வழக்கு போடுவோம் என்று லிபியா அறிவித்தது. ஆனால் அது நடந்த பாடாக இல்லை. அபு கத்தாலா மிகவும் சுதந்திரமாக பென்காசி நகரில் வசித்து வந்தார். பலத்த பாதுகாப்பும் அவருக்கு இருந்தது. 

அமெரிககாவை மிரட்டும் ஒரு நபராக, தனது சொந்த இடத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் அவர் இருந்தார். அவரை பென்காசியில் இருந்து தூக்கவேண்டும் என்று அமெரிக்க சி.ஐ.ஏ நிறுவம கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முடிவெடுத்துவிட்டது.

ஆனால் ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று நினைப்பீர்கள். பென்காசியில் அவர் தங்கும் இடத்தை அடிக்கடி ஆளில்லா விமானம் மூலம் நோட்டமிட்ட அமெரிக்கா அவர் தங்கும் இடத்தை அப்படியே படம் எடுத்து.  அதுபோன்ற ஒரு மாதிரி கிராமத்தையே உருவாக்கி இருக்கிறது. அட்டை(பேப்பர்களை) கொண்டு சினிமா படத்தில் "செட்" போடுவது போல அமைத்துள்ளார்கள். 

அவரின் இருப்பிடம் எவ்வாறு இருக்கும், அதற்கு எத்தனை வாசல் அங்கே எத்தனை காவலாளிகள் இருப்பார்கள் என்பது எல்லாம் அமெரிக்கா வேவு விமானம் மூலம் அறிந்து வைத்துள்ளது. 

டெல்ட்டா அணியில் உள்ள 12 பேரும், பல மாதங்களாக அபு கத்தாலாவை எப்படி கடத்துவது என்று அங்கே ஒத்திகை பார்த்து இருக்கிறார்கள். அபு கத்தாலா போல ஒருவர் அங்கே இருப்பார். (அமெரிக்க செட்டப்பில்) அவரை எப்படி பிடிப்பது ? காவலாளிகளை எப்படி சமாளிப்பது என்று மாதக் கணக்கில் பயிற்சி எடுத்துள்ளார்கள்.

இறுதியாக அவர்கள் அனைவரும் லிபியா சென்று, அங்கே 3 வாகனங்களை எடுத்து பென்காசியில் உள்ள அபு கத்தாலா வீட்டுக்குச் சென்று சுமார் 60 நொடிகளில் அவரை கைதுசெய்து அங்கிருந்து கொண்டுசென்றுவிட்டார்கள்.  

அங்கே நின்ற காவலாளிகள் எவரும் சுடவும் இல்லை, சுடக் கூடிய சந்தர்பத்தை டெல்டா படையினர் ஏற்படுத்தவும் இல்லை. குறிப்பாக அனைத்து காவலாளிகளையும் ஒவ்வொருவராகப் பிடித்து மயக்கமடைய வைத்துள்ளார்கள். அங்கிருந்து அபு கத்தாலாவை கொண்டு சென்று, அமெரிக்க கடற்படை கப்பலான (USS New York) க்கு கொண்டுசென்றுவிட்டார்கள். இக் கப்பலில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளதாம். அதாவது அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை பின் லேடன் தகர்த்தவேளை அவை இரண்டும் விழுந்து மண்ணோடு மண் ஆனாது. ஆனால் அதில் உள்ள இருப்புகளை எடுத்து அமெரிக்கா , இந்த போர் கப்பலை செய்துள்ளதாம்.

அந்தக் கப்பலுக்கே அபு கத்தாலாவை தற்போது கொண்டுசென்றுள்ளார்கள். இங்கிருந்து அவர் அவரை அமெரிக்கா கொண்டுசெல்ல இருக்கிறார்கள். ஆனால் இச்செயலானது லிபியாவை ஆத்திரமூட்டியுள்ளது. 

சம்பவ தினத்தன்று கூட 2 அமெரிக்க உளவு விமானங்கள் பென்காசி நகரின் மேல் இருந்துள்ளது. முழு ஆப்பரேஷனும் முடியும் வரை தரையில் உள்ளவர்களுக்கு வான் பாதுகாப்பு மற்றும் வானில் இருந்து வேவு தகவல் அனைத்தும் கிடைத்துள்ளது. 

ஒரு நாட்டிற்குள் புகுந்து, அன் நாட்டு இராணுவத்திற்கே தெரியாமல் இப்படி ஒரு காரியத்தை செய்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயம். . ஆனால் அமெரிக்கா இதனை நியாயப்படுத்தியுள்ளது. இருப்பினும் அபு கத்தாலாவை தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்று லிபிய தற்போது கோரியுள்ளதோடு அமெரிக்காவின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளது. ஆனால் இந்த விடையம் தொடங்கி நடந்து முடியும் வரை எதனையும் லிபிய அரசு அறிந்திருக்கவே இல்லையாம். 

காலையில் செய்தியைப் பார்த்து தான் , தமது நாட்டு மண்ணில் இப்படி ஒரு கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அந்நாட்டு தலைவர்கள் அறிந்துள்ளார்கள்.

எல்லாம் சரி.  இதே பாணியில் மும்பை வெடிகுண்டு வழக்கு குற்றவாளி. நிழல் உலக தாதா தாவுத்தை நம் ரா எப்போது பிடிக்கும்?

No comments:

Post a Comment