Follow by Email

Wednesday, 2 April 2014

மாற்றி சொல்லும் மலேசிய அரசு!!



கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8 ஆம் தேதி திடீரென காணாமல் போனது. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா என மர்மம் நீடிக்கிறது.

சுமார் 14 நாடுகள் தெற்கு சீன கடல், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கப்பல், விமானம், சாட்டிலைட் மூலமாக சல்லடை போட்டு தேடியும் மாயமான விமானம் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. 

இறுதியில், ஆஸ்திரேலியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என மலேசியா தெரிவித்தது. இதற்கு சீன பயணிகளின் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்த முழுமையான விபரங்களை மலேசியா தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாயமான விமானம் குறித்த விசாரணையில் மலேசியா முறையாக கவனம் செலுத்தவில்லை என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது. தற்போது, அதை மெய்ப்பிக்கும் வகையில் மாயமான விமானத்தில் இருந்து இறுதியாக பைலட்டுகள் பேசிய வார்த்தைகளில் சில திருத்தங்களை மலேசிய அரசு வெளியிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பிலும் மலேசிய அரசு மீது சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

விமானம் மாயமாவதற்கு முன்பு தகவல் தொடர்பு கருவிகள் திட்டமிட்டு அணைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டது. அதற்கு முன்பு விமானத்தில் இருந்த 2 பைலட்களில் ஒருவர் தரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, 'ஆல் ரைட் குட் நைட்' என்று கூறியதாக முன்பு மலேசிய அரசு தெரிவித்தது.

விமானிகள் பேசிய முழு உரையாடலையும், அதற்கான சில விளக்கங்களையும், இதோ பாருங்கள்:

மலேசிய விமானம் MH370-ன் காக்பிட்டில் இருந்து, கோலாலம்பூர் கன்ட்ரோல் டவருடன் நடத்தப்பட்ட உரையாடல் (இதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம், கோலாலம்பூர் நேரம். உரையாடல் நள்ளிரவு 12 மணி 36 நிமிடம் 30-வது வினாடியில்  தொடங்குகிறது)

00:36:30 மலேசிய விமானம் MH370: ATC, this is MH370, good morning

(ATC என்பது, ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்)

டவர்: Good morning, MH370, This is KL control tower, please remain in A10 32R

(ரன்வே இலக்கம் 32-க்கு செல்லுமுன் விமானம் டாக்சி வேயில் நிற்பதை குறிக்கிறது. ரன்வே இலக்கங்கள் 1 முதல் 36 வரை இருக்கும். இவை 360 டிகிரியின் ஒவ்வொரு 10 பாகையை குறிக்கும். ரன்வே 09 என்பது, கிழக்கு நோக்கிய 90 டிகிரி. ரன்வே 18 என்பது தெற்கு நோக்கிய 180 டிகிரி. அந்த வகையில் கோலாலம்பூரின் 32R ரன்வே 320 டிகிரி. இதில் R என்பது வலது பக்கம் – Right)

00:36:50 மலேசிய விமானம்: A10, MH370 copies that

(தகவலை சரியாக கிரகித்துக் கொண்டதை உறுதி செய்ய திரும்ப சொல்வார்கள்)

00:38:43 டவர்: MH370, please get on the runway from 32R A10

(டாக்சி-வேயில் இருந்து ரன்வேக்கு செல்ல அனுமதி)

மலேசிய விமானம்: runway from 32R A10, copy that

(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)

00:40:38 டவர்: MH370, position 32R, runway ready, permitted to takeoff. Good night

(டேக்-ஆஃப் செய்ய அனுமதி)

மலேசிய விமானம்: position 32R, runway ready, permitted to take off. MH370 copies that. Thank you, goodbye.

(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது) 

00:42:05 மலேசிய விமானம்: MH370 has left the port

(விமானம் கோலாலம்பூர் ரன்வேயை விட்டு மேலெழுந்து விட்டது)

00:42:10 டவர்: MH370 position confirmed, flight altitude 180, follow the command and turn right, target IGARI waypoint.

(IGARI வேபாயின்ட் என்பது வான் பாதை லொகேஷன். மலேசியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையே உள்ள வான் பாதையின் நடுவே IGARI உள்ளது. அதாவது, அந்த இலக்கை வைத்து விமானத்தை செலுத்துமாறு சொல்கிறது டவர்)

00:42:40 மலேசிய விமானம்: Alright, altitude 180, direction IGARI waypoint, MH370 copies that

(altitude 180 என்பது, தரையில் இருந்து 18,000 அடி உயரம். அந்த உயரத்தில் IGARI வான்பாதை லெகேஷனை நோக்கி விமானம் செல்வதாக விமானி சொல்கிறார்)

00:42:52 டவர்: MH370, you’ve entered KL Radar 132.6, good night

(கோலாலம்பூர் ராடார் 132.6-ல் மலேசிய விமான நகர்வு பதிவாக தொடங்குகிறது)

மலேசிய விமானம்: 132.6, MH370 copies that

(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)

00:46:51 மலேசிய விமானம்: KL ATC, This is MH370

(காக்பிட்டில் இருந்து டவரை அழைக்கிறார் விமானி)

டவர்: MH370, please climb to flight altitude 250

(இந்த இலக்கத்தை எப்போதும் நூறால் பெருக்க வேண்டும். அதாவது 250X100 = 25,000 அடி உயரத்துக்கு மேலெழ அனுமதி வழங்கப்படுகிறது)

00:46:54 மலேசிய விமானம்: MH370 is climbing to flight altitude 250

(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)

00:50:06 டவர்: MH370, climbing to flight altitude 350

(35,000 அடி உயரத்துக்கு மேலெழ அனுமதி வழங்கப்படுகிறது)

00:50:09 மலேசிய விமானம்: This is MH370, flight altitude 350

(தகவல் சரியாக கிரகிக்கப்பட்டது)

01:01:14 மலேசிய விமானம்: MH370 remaining in flight altitude 350

(35,000 அடி உயரத்திலேயே தொடர்ந்து பறக்கிறது விமானம்)

01:01:19 டவர்: MH370

(‘சரி’ என்பதற்கு பதிலாக விமானத்தின் இலக்கத்தை குறிப்பிடுவார் ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்)

01:07:55 மலேசிய விமானம்: MH370 remaining in flight altitude 350

(35,000 அடி உயரத்திலேயே தொடர்ந்து பறக்கிறது விமானம்)

01:08:00 டவர்: MH370

(சரி)

01:19:24 டவர்: MH370, please contact Hu Chi Minh City 120.9, goodnight

(விமானம் மலேசிய வான் எல்லையை கடக்க போகிறது. இனி தொடர்புகளை வியட்நாம் ஹோ சி மிங் சிட்டி விமான நிலைய டவருடன் 120.9 அலைவரிசையில் ஏற்படுத்திக் கொள்ள சொல்கிறது மலேசிய டவர்.

01:19:29 மலேசிய விமானம்: All right, good நைட்

இதுதான் முதலில் வெளியான ரேடியோ உரையாடல்.  

இந்நிலையில், மலேசிய போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்ட்ரோல் ரூம் அதிகாரிகளுடன் மார்ச் 8 ஆம் தேதி "குட் நைட் மலேசியன் 370" என்று பைலட் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உரையாடல் இது தான்.

MAS 370 (Kuala Lumpur to Beijing)
PILOT-ATC RADIOTELEPHONY TRANSCRIPT
Departure from KLIA: 8 March 2014

ATC DELIVERY

12:25:53 MAS 370:-  Delivery MAS 370 Good Morning

12:26:02 ATC:-  MAS 370 Standby and Malaysia Six is cleared to Frankfurt via AGOSA Alpha Departure six thousand feet squawk two one zero six

12:26:19 ATC:-  MAS 370 request level

12:26:21 MAS 370:-  MAS 370 we are ready requesting flight level three five zero to Beijing

12:26:39 ATC:-  MAS 370 is cleared to Beijing via PIBOS A Departure Six Thousand Feet squawk two one five seven

12:26:45 MAS 370:-  Beijing PIBOS A Six Thousand Squawk two one five seven, MAS 370 Thank You

12:26:53 ATC:-  MAS 370 Welcome over to ground 12:26:55 MAS 370 Good Day.

 LUMPUR GROUND

12:27:27 MAS 370:-  Ground MAS370 Good morning Charlie One Requesting push and start

12:27:34 ATC:-  MAS370 Lumpur Ground Morning Push back and start approved Runway 32 Right Exit via Sierra 4.

12:27:40 MAS 370:-  Push back and start approved 32 Right Exit via Sierra 4 POB 239 Mike Romeo Oscar

12:27:45 ATC:-  Copied

12:32:13 MAS 370:-  MAS377 request taxi.

12:32:26 ATC:-  MAS37….. (garbled) … standard route. Hold short Bravo

12:32:30 MAS 370:-  Ground, MAS370. You are unreadable. Say again.

12:32:38 ATC:-  MAS370 taxi to holding point Alfa 11 Runway 32 Right via standard route. Hold short of Bravo.

12:32:42 MAS 370:-  Alfa 11 Standard route Hold short Bravo MAS370.

12:35:53 ATC:-  MAS 370 Tower 12:36:19 ATC (garbled) … Tower … (garbled) MAS 370 1188 MAS370 Thank you.

 LUMPUR TOWER

12:36:30 MAS 370:-  Tower MAS370 Morning

12:36:38 ATC:-  MAS370 good morning. Lumpur Tower. Holding point.. [garbled]..10 32 Right

12:36:50 MAS 370:-  Alfa 10 MAS370 12:38:43 ATC 370 line up 32 Right Alfa 10. MAS 370 Line up 32 Right Alfa 10 MAS370.

12:40:38 ATC:-  370 32 Right Cleared for take-off. Good night. MAS 370 32 Right Cleared for take-off MAS370. Thank you Bye.


LUMPUR APPROACH

12:42:05 MAS 370:-  Departure Malaysian Three Seven Zero

12:42:10 ATC:-  Malaysian Three Seven Zero selamat pagi identified. Climb flight level one eight zero cancel SID turn right direct to IGARI

12:42:48 MAS 370:-  Okay level one eight zero direct IGARI Malaysian one err Three Seven Zero

12:42:52 ATC:-  Malaysian Three Seven Zero contact Lumpur Radar One Three Two Six good night MAS 370 Night One Three Two Six Malaysian Three Seven Zero

 LUMPUR RADAR (AREA)

12:46:51 MAS 370:-  Lumpur Control Malaysian Three Seven Zero

12:46:51 ATC:-  Malaysian Three Seven Zero Lumpur radar Good Morning climb flight level two five zero

12:46:54 MAS370:-  Morning level two five zero Malaysian Three Seven Zero

12:50:06 ATC:-  Malaysian Three Seven Zero climb flight level three five zero

12:50:09 MAS370:-  Flight level three five zero Malaysian Three Seven Zero

01:01:14 MAS370:-  Malaysian Three Seven Zero maintaining level three five zero

01:01:19 ATC:-  Malaysian Three Seven Zero

01:07:55 MAS370:-  Malaysian…Three Seven Zero maintaining level three five zero

01:08:00 ATC:-  Malaysian Three Seven Zero

01:19:24 ATC:-  Malaysian Three Seven Zero contact Ho Chi Minh 120 decimal 9 Good Night

01:19:29 MAS370:-  Good Night Malaysian Three Seven Zero

பதிவு செய்த உரையாடலையே மாற்றி சொல்லும் மலேசிய அரசு உண்மைகளை  மறைக்கிறது, ஏதோ விபரீதம் நடந்துள்ளது. அதை மலேசிய அரசு மூடி மறைக்கிறது. உண்மை என்ன என்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சீன அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment