Follow by Email

Friday, 7 March 2014

TET – ஆசிரியர் தகுதித் தேர்வு

 பாணர் எழுதிய நூல் – ஹர்ஷசரிதம்
சாளுக்கியரின் பூர்வீகம் – அயோத்தி

சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் – முதலாம் புலிகேசி.

அசுவமேத யாகத்தை நடத்தியவர் யார் – முதலாம் புலிகேசி.

ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த சிறப்புமிக்க மன்னரின் பெயர் – இரண்டாம் புலிகேசி.

வனவாசியைக் கைப்பற்றிய மன்னர் யார் – இரண்டாம் புலிகேசி.

பல்லவ அரசின் முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் யார் – இரண்டாம் புலிகேசி.

இரண்டாம் புலிகேசி எந்த மன்னருடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டார் – பாரசீக மன்னர் குஸ்ரவ்.

இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார் – பல்லவ மன்னர் முதலாம் மகேந்திர வர்மனின் மகனாகிய நரசிம்ம வர்ம பல்லவன்.

பல்லவ அரசினை உருவாக்கியவர் – சிம்ம வர்மன்.

காஞ்சியில் பல்லவப் பேரரசினை நிர்மாணித்து அங்கிருந்து ஆட்சி அதிகாரம் செலுத்தியவர் யார் – சிம்ம விஷ்ணு.

மத்தவிலாசன், விசித்திர சித்தன் மற்றும் குணபத்திரன் என்ற பல்வேறு பட்டங்களில் அழைக்கப்பட்ட அரசன் – முதலாம் மகேந்திரவர்மன்.

விலாச பிரசனம், பகவத் அஜ்கீயம் போன்ற நூல்களை எழுதியவர் – முதலாம் மகேந்திரவர்மன்.

மாமல்லன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மன்னன் யார் – நரசிம்மவர்மன்.

வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்ற மன்னர் – நரசிம்மவர்மன்.

மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக இருந்தது, எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் – நரசிம்மவர்மன்.

தண்டி என்பவர் எந்த அரசரவையில் புலவராக இருந்தார் – இரண்டாம் நரசிம்மவர்மன் அமைச்சரவையில்

இரண்டாம் நரசிம்மவர்மனின் மற்றொரு பெயர் – ராஜசிம்மன்.

காஞ்சியில் கைலாசநாதர் திருக்கோயிலை எழுப்பியவர் – இரண்டாம் நரசிம்மவர்மன்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலைக் கட்டியவர் யார் – இரண்டாம் நரசிம்மவர்மன்.

சங்க காலத்தின் இறுதி சோழ மன்னனின் பெயர்  – கோச்செங்கட் சோழன்

கணைக்கால் இரும்பொறையை வென்றவர் பெயர் – கோச்செங்கட் சோழன்.

நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் ஆகியோர்யோரின் மைந்தர்கள் – இரண்டாம் நரசிம்மவர்மன்.

பல்லவ அரசன் அபராஜிதனைக் கொன்று தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர் பெயர் – முதலாம் ஆதித்யன்.

இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட மன்னர் யார் – சுந்தர சோழன்.

சுந்தர சோழனின் மனைவியின் பெயர் – வானவன் மாதேவி.

பாண்டிய ருலாசினி, நித்ய விநோதகன், நிகிரிலி சோழன், சிவபாத சேகரன், செயங்கொண்ட சோழன் மும்முடிச்சோழன் என பட்டங்கள் பெற்ற அரசனின் பெயர் – ராஜராஜ சோழன்.

சோழர்களின் சிங்கள வெற்றியினை எந்த நூலில் காணலாம் – மகாவம்சம் என்ற பௌத்த நூலில்

பாபரின் தந்தையார் பெயர் – உமர் சேக் மிர்ஸா

பாபரின் இயற்பெயர் என்ன – சாகிருத்தீன் முகம்மது பாபர்.

பாபர் எழுதிய சுயசரிதையின் பெயர் : துசுக் – இ – பாபரி (இது துருக்கி மொழியில் வெளியானது)

மத்திய ஆசியாவில் இருந்து பாபர் அழைத்து வந்த போர் வீரர்களின் பெயர்கள் என்ன? – உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா அலி.

ஹுமாயூன் தனது ஆட்சிக் காலத்தின்போது கட்டிய கோட்டைகள் – தீன்பானா மற்றும் ஜாமி மஸ்ஜீத்.

அக்பருக்கு பாதுகாவலராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் பெயர் – பைராம்கான்.

அக்பரின் படைத் தளபதியின் பெயர் – ராஜா மான்சிங்.

அக்பர் ஆட்சியில் நாட்டின் நிலச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியவர் பெயர் – ராஜா தோடர்மால்.

அக்பரின் மிகப்பெரிய சீர்த்திருத்த முறைக்கு என்ன பெயர் – மன்சப்தாரி முறை.

நூர்ஜஹானின் மற்றொரு பெயர் – மெகருன்னிஸா.

முதலாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு – 1767 – 1769.

இரண்டாம் மைசூர் போர் எந்தபிரபு ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்றது – வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு.

மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு – 1790 – 1792.

நான்காம் மைசூர் போர் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்த பிரபுவின் பெயர் – வெல்லஸ்லி பிரபு.

அடையாற்றுப் போர் நடைபெற்ற ஆண்டு – 1746.

இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு – 1749 – 1754.

முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு – 1746 – 1748.

ஆதிசங்கரர் பிறந்த ஊர் – கேரள மாநிலத்தில் உள்ள காலடி.

ஆதிசங்கரர் எதன் வழியைப் பின்பற்றினார் – ஞான மார்க்கம்.

ஆதிசங்கரரின் மற்றொரு பெயர் – பிரசன்ன புத்திரர்.

பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் சிருங்கேரி என்பது யாருடைய மடங்கள் – ஆதிசங்கரர்.

ஜோதிஷ பீடம், கோவர்தன பீடம், சாரதா பீடம், சிருங்கேரி பீடம் இந்த நான்கு பீடங்களும் யாருக்குச் சொந்தமானது – ஆதிசங்கரர்.

விஷ்ணுவின் பக்தர் பெயர் – மத்வாச்சாரியர்.

மத்வாச்சாரியரின் சித்தாந்தம் எப்படி அழைக்கப்பட்டது – துவைதம்.

மத்வாச்சாரியர் இயற்றிய நூலின் பெயர் – பிரம்ம சூத்திரம்.

ராமானுஜர் பிறந்த ஊரின் பெயர் – தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர்.

கிருஷ்ணரை வணங்குவதின் மூலமே மோட்சத்தை அடைய முடியும் என்று கூறியவர் – நிம்பார்க்கசாரியார்.

பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் பெயர் – நிம்பார்க்கசாரியார்.

கபீர், ரவிதாஸ், பிபா, தனா,சேனா ஆகியோர் யாருடைய சீடர்கள் – ராமநந்தர்.

வட இந்தியாவின் பக்தி இயக்கத்தின் முதல் சீர்திருத்தவாதி யார் – ராமநந்தர்.

அல்லா என்றாலும் ஹரி என்றாலும் ஒன்றே என வலியுறுத்தியவர் – கபீர்.

பக்தி மார்க்கத்தின் மூலமே பிரம்மத்துடன் இணைய முடியும் என்று வலியுறுத்தியவர் – வல்லபாச்சாரியார்.

சத்சாரிக சூத்திரம், மத்யமிகா சூத்திரம், பிரஜ்னபரிமித சூத்திர சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியவர் – நாகார்ச்சுனர்.

புத்த சரிதம், சரிபுத்ர பிரகாரன், சூத்திர அலங்காரம் நூல்களை எழுதியவர் – அஸ்வகோஷர்.

குமாரசம்பவம், சாகுந்தலம், விக்ரம ஊர்வசியம், மேகதூதம், ரகுவம்சம், மாளவிகாக்னி மித்ரம் போன்ற நூல்களை எழுதியவர் – காளிதாசர்.

நாகாநந்தம், ரத்னாவளி, பிரியதர்ஷிகா போன்ற நூல்களை எழுதியர் – ஹர்ஷவர்த்தனர்.

ஹர்ஷ சரிதம், காதம்பரி நூல்களை எழுதியவர் – பாணபட்டர்.

மகாவீர சரிதம், உத்தர் ராம சரிதம் நூல்களை எழுதியவர் – பவபூதி.

அஹமதியா இயக்கத்தை பரீத் கோட்டில் நிறுவியர் பெயர் – மீர்ஸா கலாம் அஹமது.

தேவ சமாஜத்தை லாகூரில் நிறுவியவர் பெயர்  – சிவ்நாராயண் அக்னி ஹோத்ரி.

பிரம்ம சமாஜம் தோன்றிய ஆண்டு – 1828

நாம்தாரி இயக்கம் தோன்றிய ஆண்டு – 1841

பிரார்த்தனா சமாஜம் தோன்றிய ஆண்டு – 1867.

தியாசபிகல் சொசைட்டி அல்லது பிரம்ம ஞானசபை சென்னையில் தோன்றிய ஆண்டு – 1893.

இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களின் குறைகளையும் துன்பங்களையும் முகம்மதியர்கள் தங்களின் சுய நலத்திற்காக பயன்படுத்தி கொண்ட சதித்திட்டமே சிப்பாய் கலகம் என்று கூறிய வரலாற்று அறிஞர் – ஜேம்ஸ் அவுத்ராம்.

சிப்பாய் கலகத்தை இன வெறிக்கு எதிரான போர் என்று முழங்கிய வரலாற்று அறிஞர் – மெட்லி.

நாட்டுப்பற்றற்ற சுயநலமிக்க சிப்பாய்களின் கலவரமே இது. அதற்கு சுதேச தலைமையோ பொதுமக்கள் ஆதரவோ கிடையாது என்று முழங்கிய வரலாற்று அறிஞர் – சர் ஜான் சீலி.

சிப்பாய் கலகத்தை முதல் இந்தியப் போர் என்று வர்ணித்த வரலாற்று அறிஞர் – வி.டி.சவர்கார்.

சிப்பாய் கலகத்தை இது ஒரு படைக்கலகமே தவிர ஆங்கில ஆட்சியை ஒழிக்க வேண்டுமென தொடங்கப்பட்டது அன்று என்றும் இதற்கு துப்பாக்களில் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் ஒரு வாய்ப்பாக பயன்பட்டது என்றும் கூறிய வரலாற்று அறிஞர் – சர்ஜான் லாரன்ஸ்.

தாதாபாய் நௌரோஜி, எம்.ஜி.ரானடே, சுரேந்திரநாத் பானர்ஜி, பத்ருதீன் தையாப்ஜி, கோபால கிருஷ்ண கோகலே, தீன் ஷா வாச்சா இவர்கள் யார் – மிதவாதிகளில் முக்கியமானவர்கள்.

பரீந்திர குமார் கோஷ், ஜதீந்திரநாத் பானர்ஜி மற்றும் பிரமோதா மித்தரால் 1902ஆம் ஆண்டு கல்கத்தாவில் புலின்தாஸ் என்பவரால் தொடங்கப்பட அமைப்பின் பெயர் – அனுசீலன் சமிதி.

சவர்கார் சகோதரர்களால் 1899ஆம் ஆண்டு மகராஷ்டிரத்தில் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயர் – மித்ர மேளா.

ஹர்தயாள் மற்றும் சோகன் சிங் பத்னா ஆகியோர் 1917ஆம் ஆண்டு தொடங்கிய அமைப்பின் பெயர் – காதர் இயக்கம்.

யாருடைய ஆலோசனையின் பெயரில் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் – கோபாலகிருஷ்ண கோகலே.

காந்தி முதன் முதலில் அஹிம்சை மற்றும் சத்தியம் ஆகியவற்றை யாரிடம் இருந்து கற்றுக்கொண்டார் – ராஜ்சந்திர ராவ்ஜிபாயிடம்.

சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு – 1917.

அஹமதாபாத் வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டு – 1918.

முதல் உலகப்போர் முடிந்தவுடன் இந்தியத் தீவிரவாத இயக்கத்தையும், பயங்கரப் புரட்சிவாதிகளையும் அடக்கும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டத்தின் பெயர் – ரௌலட் சட்டம்.

கருப்புச் சட்டம், சாத்தான் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டத்தின் பெயர் – ரௌலட் சட்டம்.

சௌகத் அலி என்ற அலி சகோதரர்கள் 1920ஆம் ஆண்டு உருவாக்கிய இயக்கத்தின் பெயர் – கிலாபத் இயக்கம்.

முதல் வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு – லண்டனில் 1930நவம்பர் 12முதல் 1931ஜனவரி 19வரை நடைபெற்றது.

1772ஆம் ஆண்டு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டவர் – வாரன் ஹேஸ்டிங்ஸ்.

இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் – வாரன் ஹேஸ்டிங்ஸ்.

1784ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏசியாடிக் சொஸைட்டி ஆஃப் பெங்கால் யாரால் தொடங்கப்பட்டது – வில்லியம் ஜோனஸ்.

கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதியின் பெயர் – எலிஜா இம்பே.

ஆங்கில இந்தியாவின் தலைநகராக விளங்கிய நகரம் எது – கல்கத்தா.

உரிமையியல் மேல் முறையீட்டு மன்றத்தின் பெயர் – சாதர் திவானி அதாலத்
குற்றவியல் மேல் முறையீட்டு நீதி மன்றத்தின் பெயர் – சாதர் நிஸாமத் அதாலத்.

ரோகில்கண்டைக் கைப்பற்ற அயோத்தி நவாப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் ஈடுபட்ட போரின் பெயர் – ரோகில்லாப் போர் ; நடைபெற்ற ஆண்டு 1774.

முதலாம் ஆங்கிலேய மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு – 1775 – 1782.

இரண்டாம் ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு – 1780 – 1784.

மூன்றாவது ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு – 1790 – 1792.

சிவில் சர்வீஸ் முறை யார் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது – காரன் வாலிஸ் பிரபு காலத்தில்.

நீதித்துறை சீர்திருத்தம் மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் – காரன் வாலிஸ் பிரபு.

இந்தியாவில் முதன் முதலில் காவல் துறை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது – காரன் வாலிஸ் பிரபு காலத்தில்.

தீயணைப்படைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1798.

தீயணைப்புப் படைத் திட்டம் யார் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது – வெல்லெஸ்லி பிரபு.

முதன் முதலில் துணைப்படைத் திட்டத்தை ஏற்றவர் – ஹைதராபாத் நிஜாம் (1798)

நான்காவது ஆங்கில மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு – 1799.

பேசின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு – 1802.

1809ஆம் ஆண்டு ரஞ்சித் சிங்குடன் அமிர்தசரஸ் ஒப்பந்தம் யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது – முதலாம் மின்டோ பிரபு.

பட்டயச் சட்டம் எந்த  ஆண்டு நிறைவேற்றப்பட்டது – 1813.

பட்டயச் சட்டம் யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது – முதலாம் மின்டோ பிரபு.

ஆங்கில நேபாள போர் நடைபெற்ற ஆண்டு – 1814 – 1816.

மராட்டிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பம்பாய் மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1818.

1817ஆம் ஆண்டு சிந்தியா ஒப்பந்தம் யார் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது – ஹேஸ்டிங்ஸ் பிரபு.

சென்னை மாகாணத்தில் ரயித்துவாரி முறை யார் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது – சர் தாமஸ் மன்றோ கவர்னராக இருந்தபோது.

முதலாம் பர்மியப் போர் நடைபெற்ற ஆண்டு – 1824 – 1826.

பரத்பூர் இணைக்கப்பட்ட ஆண்டு – 1826.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் – வில்லியம் பென்டிங் பிரபு.

நவீன மேற்கத்திய கல்வியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் – வில்லியம் பென்டிங் பிரபு.

சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு – 1829.

நீதிமன்ற மொழியான பாரசிகத்தை ஒழித்து அந்தந்த மாநிலங்களின் மொழியை நீதிமன்ற மொழியாக்கிய பெருமை யாரைச் சாரும் – வில்லியம் பென்டிங் பிரபு.

ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835, மார்ச் 17ஆம் நாள்.

ஆக்ரா மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1834.

சமய மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு சொத்தில் உரிமை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது யாருடை ஆட்சிக்காலத்தில் – வில்லியம் பென்டிங் பிரபு.

மெக்காலே மினிட்ஸ் என்று புகழ்பெற்ற கல்விச் சீர்திருத்தம் யாருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது – வில்லியம் பென்டிங் பிரபு.

முதல் ஆப்கானிய போர் நடைபெற்ற ஆண்டு – 1836 – 1842.

யாருடைய ஆட்சிக் காலத்தில் பத்திரிகை சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது – மெட்காப் பிரபு.

முதல் சீக்கியப் போர் நடைபெற்ற ஆண்டு – 1845 – 1846.

பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் – முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.

விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1856.
இரண்டாம் சீக்கியப் போர் நடைபெற்ற ஆண்டு – 1848 – 1849.
தொல்பொருள் துறை யாருடைய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது – டல்ஹௌசி பிரபு.
தபால் மற்றும் தந்தி முதல் இணைப்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1854.

ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுப் பணித் துறை யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது – டல்ஹௌசி பிரபு.

சந்தாலர்கள் எழுச்சி ஏற்பட்ட ஆண்டு – 1855 – 1856.

கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர் யார் – கானிங் பிரபு.

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதி – கானிங் பிரபு.

கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1857.

கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது – கானிங் பிரபு.

வருமான வரி முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – 1858.

1859ஆம் ஆம்டு ஐரோப்பிய போர் வீரர்களின் கிளர்ச்சிக்கு மற்றொரு பெயர் – வெள்ளை கலகம்.

வஹாபி இயக்கம் யாருடைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது – முதலாம் எல்ஜின் பிரபு.

ஐரோப்பாவுடன் தந்தி தொடர்பு யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது – ஜான் லரான்ஸ் பிரபு.

இந்திய வனத்துறை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது – ஜான் லரான்ஸ் பிரபு.

இந்திய ஆயுதச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது – 1878.

தாய்மொழி பத்திரிகை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1878.

சிவில் சர்வீஸ் தேர்விற்கான வயது வரம்பு 21ல் இருந்து குறைக்கப்பட்டது யாருடைய ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது – லிட்டன் பிரபு.

TET – ஆசிரியர் தகுதித் தேர்வு  தளத்தில் இருந்து திரட்டப்பட்டது.

No comments:

Post a Comment