Follow by Email

Monday, 23 December 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா திரும்புமா ?

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்டு வந்த தீர்­மா­னத்தை இந்­தியா ஆத­ரித்த பின்னர் இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­களில் ஒரு­வித மந்த நிலை இருந்து வரு­கி­றது.

இரு­நா­டு­க­ளுமே தமக்­கி­டையி­லான உற­வு­களில் எந்தக் கசப்­புணர்வோ, இடை­வெ­ளி­களோ கிடை­யாது என்று அவ்­வப்­போது கூறிக் கொண்­டாலும், ஒரு வெளித்­தெ­ரியா இடை­வெளி நீடித்து வரு­கி­றது.

ஜெனீவா தீர்மானத்தின் போது தொடங்கிய இந்த இறுக்க­நிலை கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர் இன்­னமும் தீவி­ர­ம­டைந்­துள்­ளதே தவிர குறைந்­துள்­ள­தாகத் தெரி­ய­வில்லை.

சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர அரங்கில் இலங்­கையைக் காப்­பாற்­று­வதில் இந்­தியா தனது முழுப்­பங்­க­ளிப்பை செய்­ய­வில்லை. அல்லது முழு­ம­ன­தோடு செய்யக் கூடிய நிலை இருக்­க­வில்லை.

இதுதான் இரா­ஜ­தந்­திர முனையில் இலங்கை – இந்­திய உற­வு­களில் தோன்­றி­யுள்ள முக்­கி­ய­மான இடை­வெ­ளிக்­கான காரணம்.

இரா­ஜதந்­திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த இடை­வெளி இப்­போதைக்கு குறை­வ­டை­வ­தற்­கான சாத்­தி­யங்­களோ அறி­கு­றி­களோ தென்­ப­ட­வில்லை.

இந்த இடை­வெ­ளியைக் குறைக்க கொழும்பும் புது­டில்­லியும் விரும்­பி­னாலும் கூட சில அகபுறக் கார­ணிகள் அதற்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை.

இலங்­கை­யுடன் இந்தியா கொண்­டுள்ள ஆழமான நட்­பு­றவை தொடர்ந்து பேணிக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இந்­தி­யா­வுக்கு இருந்­தாலும் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வாக இந்­தியா கருதும் 13ஆவது திருத்­தச் ­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் விடயம் அந்த நெருக்­கத்­துக்கு சவா­லாக உள்­ளது.

அதி­காரப் பகிர்வு இரு­த­ரப்பு இடை­வெ­ளியை இன்­னமும் குறைக்க விடாமல் அமுக்கி வரு­கி­றது.

அதை­விட உள்­நாட்டு அர­சியல் அழுத்­தங்­களும் இந்­தி­யாவை ஒரு கட்­டத்­துக்கு மேல் இலங்­கை­யுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்­கவே செய்­கின்­றன.

இது இரா­ஜ­தந்­திர அரங்கில் உள்ள முக்­கி­ய­மான இரு­த­ரப்புச் சிக்கல்.

ஆனால், பாது­காப்பு உற­வு­களில் இந்த உற­வுச்­சிக்கல் ஏதும் இருக்­க­வில்லை.

பாது­காப்பு ஒத்­து­ழைப்பு விட­யத்தில், இலங்­கை­யுடன் எந்த இடை­வெ­ளியும் ஏற்­பட்டு விடாமல் பாது­காப்­பதில் இந்­தியா உறு­தி­யாக இருந்து வரு­கி­றது.

தமிழ்­நாட்டு அர­சி­யல்­வா­திகள், புது­டில்­லியின் இந்த இரட்டை அணு­குமு­றையைப் புரிந்து கொள்­ளாமல் திரும்பத் திரும்ப அதற்குள் மூக்கை நுழைத்து முட்டிக் கொள்­கின்­றனர்.

இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் பாது­காப்பு உற­வு­க­ளையும் ஒன்­றுடன் ஒன்று குழப்பிக் கொள்­ளாத இரட்டை அணு­கு­மு­றையை இலங்­கை­யுடன் முதன்­மு­த­லாக அறி­மு­கப்­ப­டுத்­திய நாடு அமெ­ரிக்கா தான்.

இலங்­கையில் போர் முடி­வுக்கு வந்­த­வுடன் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம், என்று ஒரு வழியைக் கடைப்­பி­டிக்கத் தொடங்­கிய போது அது இலங்­கை­யு­ட­னான நெருக்­கத்தைக் குறைக்கும் என்று அமெ­ரிக்கா உணர்ந்­தி­ருந்­தது.

ஆனால், இந்­தியப் பெருங்­க­டலில் இலங்­கையின் அமை­வி­டத்தின் முக்­கி­யத்­ துவம் கருதி இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை சீர்­கு­லை­யாமல் பாது­காத்துக் கொள்­வதில் அமெ­ரிக்கா உறு­தி­யாக இருந்­தது.

இலங்கை விமா­னப்­ப­டைக்கு கடல்சார் கண்­கா­ணிப்­புக்­கான கரு­வி­களைக் கொடுத்தும் பசுபிக் கட்­டளைப் பீடத்தின் மூலம் பயிற்­சிகள், கூட்டுப் பயிற்­சி­களை நடத்­தியும், சில உதவித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தியும் பாது­காப்பு உற­வு­களை கெட்டுப் போகாமல் பாது­காத்துக் கொண்­டது அமெ­ரிக்கா.

இன்று வரை அது சுமு­க­மா­கவே தொடர்­கி­றது.

அதே­வேளை, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளமும் கொழும்பும் கிட்­டத்­தட்ட கீரியும் பாம்பும் என்ற நிலை வரைக்கும் சென்­றுள்­ளது.

இது­போலத் தான் இப்­போது இந்தி­யாவும் இரட்டை அணுகு­முறையைக் கையாண்டு வரு­கி­றது.

தமிழ்­நாடு, புது­டில்­லியில் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்ற நிலையில் இலங்­கை­யு­ட­னான உற­வு­களை சம­நி­லைப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு இந்த இரட்டை நிலைப்­பாடு இந்­திய அர­சுக்கு அவ­சி­ய­மாக உள்­ளது.

அர­சியல் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தமிழ்­நாட்டின் உள்­ளார்ந்த விருப்ப ஈடு­பா­டு­க­ளுக்­காக நெகிழ்ந்து போக நேர்ந்­தாலும், பாது­காப்பு ரீதி­யாக அத்­த­கைய இழுப்­பு­க­ளுக்கு விட்டுக் கொடுக்­காத போக்கை புது­டில்லி அண்­மைக்­கா­ல­மாக கடைப்­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போருக்கு இந்­தியா மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் போர்த்­த­ள­பாட உத­விகள் உள்­ளிட்­ட­வற்றை கொடுத்­தி­ருந்­தது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர் இலங்­கை­யுடன் எத்­த­கைய பாது­காப்பு உற­வு­க­ளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்­நாடு கடு­மை­யான அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தாலும் அவை எது­வுமே கணக்கில் எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

இலங்கைப் படை­யி­ன­ருக்குப் பயிற்சி அளிக்­கப்­படும் விவ­காரம் இலங்கைக் கடற்­ப­டை­யுடன் இணைந்து போர்ப்­பயிற்­சி­களில் ஈடு­படும் விவ­காரம் உள்­ளிட்­ட­வற்றில் தமி­ழகம் எந்­த­ள­வுக்கு முட்டி மோதியும் எதை­யுமே சாதிக்க முடி­ய­வில்லை.

இப்­போதும் கூட இரு­த­ரப்பு கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­களில் நெருக்கம் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் தேவேந்­தி­ர­குமார் ஜோஷி, இலங்­கையில் 5 நாள் பயணம் மேற்­கொண்­டி­ருந்­ததும், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ச புது­டில்­லிக்கு இர­க­சியப் பயணம் மேற்­கொண்­டி­ருந்­ததும் இந்த உறவின் முக்­கிய அடை­யா­ளங்­க­ளாகும்.

இந்­திய கடற்­படைத் தள­பதி காலி கலந்­து­ரை­யா­ட­லுக்­கா­கவே வந்­தி­ருந்­தாலும் மேல­தி­க­மாக மூன்று நாட்கள் இங்கு தங்­கி­யி­ருந்து முக்­கிய கடற்­படைத் தளங்­க­ளுக்கு சென்­ற­துடன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச உள்­ளிட்­டோரைச் சந்­தித்து விட்டே போயி­ருக்­கிறார்.

அத்­துடன், இலங்கைக் கடற்­ப­டையைச் சேர்ந்த நால்­வ­ருக்கு தொழில்­நுட்ப பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வ­தற்­கான, வச­தியை அளிக்­கவும் அவர் இணங்­கி­யுள்ளார்.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜ­பக்ச புது­டில்­லிக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் நோக்கம் குறித்து இன்­னமும் எந்த தக­வலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இரண்டு நாட்கள் புது­டில்­லியில் தங்­கி­யி­ருந்து பேச்­சுக்­களை நடத்தி விட்டு அங்­கி­ருந்து கொழும்பு திரும்­பிய பின்னர் தான் அவர் வந்து சென்ற விவ­கா­ரமே புது­டில்லி ஊட­கங்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது.

அவர் இந்­தியப் பாது­காப்பு அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் குறிப்­பாக, இந்­தியக் கட ற்­படைத் தள­ப­தி­க­ளுடன் இரண்டு நாட்­களும் பேச்­சுக்­களை நடத்­தி­ய­தா­கவும் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனனை சந்­தித்­த­தா­கவும் மட்­டுமே மொட்­டை­யான தக­வ­ல்கள் வெளி­யா­கின.

கொழும்பு திரும்ப முன்னர் அவர் வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்­ஷித்தை சந்­தித்­தது கூட ஒரு மரி­யாதை நிமித்­த­மான சந்­திப்பு என்றே கூறப்­ப­டு­கி­றது.

எனவே அவ­ரது புது­டில்லிப் பய­ணத்தின் அடிப்­படை, அர­சியல் இரா­ஜ­தந்­திர நோக்­கி­லா­னது அல்ல என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

பாது­காப்பு ரீதி­யாக இலங்­கை­யுடன் இந்­தியா நெருக்­கத்தை கொண்­டுள்­ள­தற்கு இரண்டு முக்­கி­ய­மான கார­ணங்­களைக் குறிப்­பி­டலாம்.

முத­லா­வது சீனா­வு­டனும் பாகிஸ்­தா­னு­டனும் இலங்கை கொண்­டுள்ள உற­வுகள் பல­ம­டைந்து வரும் நிலையில் பாது­காப்பு துறை­யிலும் அத்­த­கைய இடை­வெளி ஒன்று ஏற்­ப­டு­வதை அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை.

இந்­தியா எங்­கி­ருந்­தெல்லாம் பின்­வாங்­கு­கி­றதோ அங்­கெல்லாம் மூக்கை நுழைப்­ப­தற்கு சீனா ஆர்வம் காட்­டு­வதால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கை­யு­ட­னான நெருக்­கத்தை குறைத்துக் கொள்ள இந்­தியா தயா­ராக இல்லை.

அடுத்­தது, இந்­தி­யா­வுக்கு அதி­க­ரித்து வரும் கடல்­வழி பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலில் இருந்து பாது­காத்துக் கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்தம் உள்­ளது.

குறிப்­பாக, கடற்­கொள்­ளை­ய­ருக்கு எதி­ரான செயற்­பாடு என்ற போர்­வையில் செயற்­படும் தனியார் பாது­காப்பு அமைப்­பு­களின் மூலம் தீவி­ர­வா­தி­களின் தாக்­குதல் நிக­ழலாம் என்று இந்­தியா அதி­க­ளவில் அச்சம் கொண்­டுள்­ளது.

இந்­தி­யாவைச் சுற்­றி­யுள்ள கடலில் 140 தனியார் ஆயு­தக்­கப்­பல்கள் நட­மா­டு­வ­தாக இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஜோஷி கடந்­த­ வாரம் கூறி­யுள்ளார்.

இந்­தியப் பெருங்­க­டலில் முக்­கி­ய­மான இடத்தில் அமைந்­துள்ள இலங்­கையின் உத­வியும் ஒத்­து­ழைப்பும் இருந்தால் தான் இத்­த­கைய தீவி­ர­வாத தாக்­கு­தல்­களில் இருந்து தப்­பிக்க முடியும்.

எனவே இலங்­கை­யுடன் பாது­காப்பு உற­வு­களை குறிப்­பாக கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தனது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நினைக்­கி­றது இந்­தியா.

அக­தி­களின் வரு­கையை கட்­டுப்­ப­டுத்த இலங்­கை­யுடன் அவுஸ்­தி­ரே­லியா எவ்­வாறு பாது­காப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளதோ அது­போலத் தான் தனக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிக்க இலங்கையுடன் நட்புறவு கொள்வதை விட இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

இந்தியாவின் இந்தப் பலவீனம் தான் இலங்கைக்கு சாதகமாக உள்ளது,

அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியாக வலிய வந்து ஒட்டிக் கொள்ளும் இந்தியாவின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை.

இந்த பாதுகாப்பு உறவுகளை தமிழ்நாட்டின் எந்த அரசியல் அழுத்தங்களாலும் உடைக்க முடியாது.

ஒருவேளை வரும் மே மாதத்துக்குப் பின்னர் புதுடில்லியில் பா.ஜ.க. ஆட்சிப் பீடமேறினாலும் கூட இந்த வியூகத்தில் இருந்து வெளிவர முடியாது.

ஒருபக்கத்தில் இலங்கை அரசுக்கு தலைவலி கொடுப்பதாக காட்டிக் கொண்டாலும் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த இரட்டை அணுகுமுறை தேவைப்படுகிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல் இந்தியாவின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பி விடலாம் என்று தமிழ்நாடோ அன்றி இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளோ எத்தகைய கணக்கைப் போட்டாலும் அது பலிக்கப் போவதில்லை.

நன்றி : நெருடல்.காம் சுபத்ரா

No comments:

Post a Comment