Follow by Email

Saturday, 22 June 2013

புலிகள் பெயரால் பண வசூல்!!


யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். இது அக்பர் காலத்துப் பழமொழிஇன்று புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தான் புதுமொழி. முள்ளிவாய்க்காலோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக  சொல்லப்படும் புலிகளின் பெயரை சொன்னால் டாலர்களாக குவிகிறது.
ஒரு காலத்தில் இலங்கையில் விடுதலைபுலிகள் ஆதிக்கம் செலுத்திய காலம், இலங்கைக்கு வெளியேயும் அவர்கள் செல்வாக்கு விரிந்திருந்தது. காலத்தின் கட்டாயம் கடைசி காலம் வரை தமிழின காவலனாக களத்தில் நின்றவர்களுக்கு உதவ தயாராக இருந்தவர்கள், தாராளமாக நிதிஉதவி அளித்தார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழ தமிழர்களுக்காக இல்லை என்றே சொல்லாத மனம் கொண்டவர்களாக இருந்தார்கள். அள்ளி அள்ளி கொடுத்தார்கள். அப்படி அள்ளி கொடுத்தவர்கள் கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் வாழ்தமிழர்கள்.
இந்த நிதிஉதவிதான் சிறுக சிறுக வளர்ந்து ஆடையில் இருந்து ஆயுதம் வரை, வெடிமருந்தில் இருந்து விமானம் வரை வாங்க பயன்பட்ட ஊக்கமருந்து.
இலங்கை ஆட்சியாளர்கள் மொழியில் சொல்வதானால் புலிகளுக்கு  முற்றுபுள்ளி விழுந்து விட்டது. ஆனால் முற்றுப் பெறவில்லை புலிகளின் நிதிவசூல்.

இன்னும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு தரப்பு சொல்ல, இன்னும் சிலர், இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் தண்டனை பெற்றுத்தரவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் நிதி தேவைப்படுகிறது என்றுதான் வசூல் செய்யப்படுகிறது.
ஆனால் அந்நிதி வன்னி மக்களுக்கு வந்து சேர்ந்ததா? எந்த வகையில் நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுகிறது? சர்வதேச அளவில் இலங்கையின்  போற்குற்றங்களை விசாரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது புரியாத புதிர்.
புதிரை அவிழ்க்க முன்னாள் புலிகள், வன்னி பகுதியில் இருந்து வந்தவர்கள், புலிகளின் ஆதரவாளர்களிடம் பேசினோம்.

புலிகள் தொடர்பான தகவல்களையும், புலிகளின் வீர தீர பிரதாபங்களையும் பற்றி பேசும் எவருமே தங்கள் அடையாளங்களை தரமறுக்கிறார்கள். புலிகள் வீழ்த்தப்பட்டிருக்கலாம், அழிக்கப்படவில்லை என்கிறார் முன்னாள் விடுதலைபுலி. தன் பெயரை கூட மாற்றி  சிவானந்தன்  என்கிறார். அவர் பெயர் அதுவல்ல.
புலிகள் முழு வலிமைபெறும் சாத்தியமில்லை என்று கூறும் அவர், புலிகள் தொடர்பான தகவல்களை வெளியில் சொன்னால், எங்களுக்கும்  எங்கள் உறவுகளுக்கும் ஆபத்து என்கிறார்.

இதுவரை இலங்கையில் எந்த ஆயுத உற்பத்தியும் செய்ததில்லை. புலிகள் கூட வெளிச்சந்தையில்  இருந்தே ஆயுதங்களை  பெற்றார்கள். மறைமுகமாக புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய எந்த நாடும் இலங்கைக்கு எதிராக திரும்பாது.
புலிகளை தடை செய்து, புலிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவித்து, முற்றிலும் அழித்தொழிக்கும் வரை பொறுமை காத்த மேற்குலக நாடுகள், இலங்கைக்கு எதிராகவும், சிதறிப்போன புலிகளுக்கு ஆதரவாகவும் வரும் என்பது பகல் கனவு என்கிறார் அகிலன். இவரும் ஈழத்தமிழர். கடந்த மாதம் இலங்கையில் இருந்து மலேசியா வந்தவர்.
புலிகளின் நிதி ஆதாரங்களை கவனித்தவர்கள் பலர். எந்த நாட்டு வங்கியிலும் நேரடியாக புலிகள் பணத்தை சேமிக்க வில்லை. நம்பகமான இயக்கத்தினர் வழியாகவும், இயக்கத்தின் அனுதாபிகள் வழியாகவும் பண பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதுஇன்றும் புலிகளின் பல நூறு கோடி சொத்துக்கள் கேட்பாரற்று போய் கிடக்கின்றன.
மிக எச்சரிக்கையாக தன் பெயரை தவிர்க்கும் முரளீதரன் முன்னாள் விடுதலைபுலி. முள்ளிவாய்க்கால் போரில் களத்தில் நின்றவர். புலிகளின் இருப்பிடம் குறைந்து கொண்டே வந்த போதுபிரபாகரன் தப்பிப்போக வழிஏற்படுத்தும் விதமாக 600 பேர் கொண்ட ஒரு அணி முள்ளிவாய்க்காளில் இருந்து கேப்பாபுலவு நோக்கி விரைந்திருக்கிறது. மூன்று நாட்கள் தண்ணீருக்குள்ளேயே நடந்து சென்ற அவர்களால் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தவோ, தடைகளை உடைக்கவோ முடியவில்லை. காரணம் தண்ணீருக்குள்ளேயே சென்றதால் குளிர் சுரம் உடல் சுகவீனம்.

இந்த நேரத்தில் விதி வேறுவிதமாக வேலை செய்ததுவட்டுவாகல் பாலத்தை நெருக்கும் போது, அங்கே ராணுவம் இருந்தது சற்றும்  எதிர்பாராததுநாங்கள் தண்ணீருக்குள் இல்லாமால் கரையில் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும்.
உடல்மறைக்கும் தண்ணீருக்குள் நிற்கும் போது ஆயுதங்களை கையாள முடியாது. ஒரு குண்டு வெடித்திருந்தாலும் அத்தனை பேருக்கும் ஜலசமாதி நிகழ்ந்திருக்கும். அதனால் ஆயுதங்களை தண்ணீருக்குள்ளேயே வீசிவிட்டு   சிவிலியன்கள் போல் ராணுவத்திடம் சரணடைந்தோம் என்கிறார் முரளீதரன்..
இது முக்கியமல்லஅந்த நேரத்திலும் முக்கிய உறுப்பினர்கள் முதுகில் சுமந்து சென்றது துப்பாக்கியுடன் கூடவே டாலர் பேக்ஆயுதங்களை துறந்தபோது, அந்த டாலர்கள்  அடங்கிய பேக்கையும் கடலில் வீசிவிட்டே சென்றிருக்கிறார்கள். இலங்கையில் டாலர்கள் வைத்திருக்கும் நபர்கள் புலிகள் என்பது ராணுவத்தின் சந்தேகம்.
வட்டுக்காவலில் சரணடைந்தவர்களை  கைது செய்து, விசாரணைக்கு பின் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டு, நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர். அங்கிருந்து தப்பி ஏஜண்டுகளுக்கு பணம் கொடுத்து மலேசியா வந்திருக்கிறார். அவரிடம் புலிகள் செய்யும் புர்ணர்வாழ்வு பற்றி கேட்டால், இப்போது உள்ள நிலையில் எதுவும் செய்ய முடியாது என்பது அவர் கருத்து.
புலிகளால் திரட்டப்படும் நிதிபற்றி கேட்டால் பதில் இல்லை, சிரிக்கிறார்.

சாலைகள் சந்திக்கும் இடமெல்லாம் ராணுவ முகாம். இச்சோதனை சாவடிகளை கடக்கும் போதெல்லாம் கேள்விகள், விசாரணை, முழுச்சோதனைஅதோடு  தமிழர் பகுதி மக்களின் குடும்பங்களோடு சேர்த்து எடுக்கப்பட்ட குருப் போட்டோக்கள் ராணுவத்தின் வசம்


சந்தேக நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? குடும்ப உறுப்பினர்கள் யாரும் தலைமறைவாகி இருக்கிறார்களா என்ற கோணத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து விசாரிக்கும் புலனாய்வு பிரிவினர், இவர்களை தாண்டி யாரும் உள்ளே நுழைய   முடியாது  என்பது தான் எதார்த்தம்.

ஆனால் வன்னியில் உறவுகளை இழந்தவர்களும், உடமைகளை இழந்தவர்களும், உடல் உறுப்புக்களை இழந்து முடமாகிப் போனவர்களும் வாழ வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த உதவியும் வரவில்லை. இவர்களை விடாமல் துரத்திக் கொண்டிருப்பது ஒரு புறம் ராணுவம், மறுபுறம் வறுமை, வேலையில்லாத  திண்டாட்டம்.
அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் புலிகளின் உறுப்பினர்கள் சிதறுண்டு போயிருக்கிறார்கள். பழையபடி உத்வேகம் பெறமுடியாது என்பது இவர்கள் கருத்து.
புலிகள் அமைப்பில் உயர்நிலையில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை, புனர்வாழ்வு மையங்களில் தங்கி இருப்பவர்களை  பல கோடிகள் செலவு செய்து, தடுப்பு முகாம்களில் இருந்து மீட்டு செல்வதாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் இயக்கத்தில் செயல்பட்டவர்களை, இயக்கம் உதவும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை என்று காட்டமாக விமர்சிக்கிறது இலங்கை இணையதளங்கள்.
ஆக புலிகளின் பெயரால் வசூல் செய்யப்படும் பணம் யார் யாரோ சொகுசு வாழக்கை வாழபயன்படுகிறது. வழக்கம் போல் அப்பாவிகளுக்கு ஆண்டவன் தான் துணை.


No comments:

Post a Comment