Follow by Email

Thursday, 21 March 2013

ஐநாவில் நிறைவேறியது தீர்மானம்!!









இலங்கைக்கு எதிராக  அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா நாடு முழுவதும் ஏற்ப்பட்ட எழுச்சியை அடுத்து ஆதரவு அளித்துள்ளது.

இந்தியாவோடு ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.

இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

ஆதரவு 25

இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா,மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக் குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி,பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரி கோஸ்ட்

எதிர்ப்பு 13

இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா,ஐக்கிய அரசு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிபைன்ஸ், குவைத், மவுரிடானியா.

நடுநிலை 8


இந்தியாவின் சார்பில்  திலிப் சின்கா பேசுகையில்; இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

அனைத்து மக்களின் சம உரிமை அவசியம். இங்கு நடந்த சம்பவம் குறித்து நம்பகத்தன்மையுடனான தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை ஆணையர் இலங்கையை பார்வையிட வேண்டும்.

13 வது சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அண்டை நாடான இலங்கை உறவை முறித்து கொள்ள முடியாது. இருப்பினும் இங்கு நடந்த சம்பவங்கள் குறித்து பொருட்படுத்தாமல் இருக்கவும் முடியாது.

அதே நேரத்தில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது இந்தியாவுக்கு விருப்பமில்லை என்றார்.


சரி இலங்கை என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது . இது எதிர்மறையான தீர்மானம் இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வுப்பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள புகார்கள் தவறானவை. இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது.





No comments:

Post a Comment