Follow by Email

Saturday, 23 March 2013

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை.


ஈழத்தில்  இறுதிக் கட்ட போர் நடந்த பொது இலங்கை ராணுவத்தால் அப்பாவி பொது மக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதை குறித்து விசாரணை நடத்தும் படி மீண்டும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக நேற்று வாஷிங்கடனில் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரோரியா நுலன்ட் கீழ் கண்டவாறு கூறினார். 

இலங்கை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 

சர்வதேச சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நாம் முன்வைத்த தீர்மானத்தை வரவேற்று 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

தனது சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். 

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலில் இன்னமும் நிறைவேற்றப்படாத விவகாரங்களுக்குப் பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை, தீர்மானம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு நாம் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தோம். வாஷிங்டனுக்கு வந்த இலங்கையின் மூத்த அதிகாரி உள்ளிட்டோரிடம், நாம் மிகத்தெளிவாகவே கூறியிருந்தோம்.

நீங்கள் முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் நாம் இதேபோன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று அவர்களிடம் கூறியிருந்தோம். 

அது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்தது. ஆனால் எந்த முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை.

மீண்டும், இலங்கை என்ன முடிவுகளை எடுக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும். நாம் முன்னரே கூறியது போன்று, 

அவர்கள் எதையும் செய்யவில்லையென்று சர்வதேச சமூகம் கருதினால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் இலங்கை என்ன செய்கிறது என்று. உருப்படியாக ஏதாவது செய்யுமா? மறுபடியும் அல்வா கொடுக்குமா என்று.

No comments:

Post a Comment