Follow by Email

Tuesday, 26 March 2013

உயிரைத்தவிர அனைத்தும் தருகிறோம் - ராஜபக்ஷே



இலங்கை, கிழக்கு மாகாணம் அம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை அதிபர்  ராஜபக்ஷே, இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த இந்த  மண்ணின் மீது உரிமை இருக்கின்றது.

சிங்கள, தமிழ், முஸ்லிமாகிய  உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய்நாடு இதுதான். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம். 

உங்களில் எவரையும் இந்த தாய்நாட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களாக்க  நாம் நினைக்கவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். மண்ணின் மைந்தர்கள்.

யுத்தத்தின்போது துரதிஷ்டவசமாக இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நம்புறவங்க நம்பலாம்.


No comments:

Post a Comment