Follow by Email

Thursday, 7 March 2013

இறுதிகட்ட போரில் பிரபாகரன் தங்கிருந்த பதுங்கு குழி வீடு!


இலங்கை ராணுவத்தோடு யுத்தம் நடந்த போது, பாதுகாப்பான பதுங்கு குழியில் தங்கி இருந்தபடிதான் பிரபாகரன் தன் சகாக்களை வழிநடத்தினார். 

அவர் அப்படி தங்கி இருந்த இடம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் வீதியில் மூன்று கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ள இப்பதுங்கு குழி, ஒரு வீடு போன்ற அமைப்பில் தான் காணப்படுகிறது. 

வெளியில் இருந்து பார்ப்பதற்கு வீடு போல் இருந்தாலும், வீட்டின் தரை தளத்தின் கீழே நான்கு அடுக்கு தட்டுக்கள் போல் பாதாள வீடு இருக்கிறது.  

இன்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் ராணுவத்தின் கட்டப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அந்த வீட்டை பார்க்க பொதுமக்கள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். 

இன்று அந்த வீடு ஒரு சுற்றுலாதளம் போல் காட்சியளிக்கிறது.  

படங்கள் மற்றும் செய்திகள் உதவி  : கதிரேசன்பிள்ளை, கனடா 









No comments:

Post a Comment