Follow by Email

Friday, 1 February 2013

விஸ்வருபம் - ரிலாக்ஸ் பிளீஸ் வருணுக்கு பதில்


உலகம் முழுவதும் விஸ்வருபத்திற்காக ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் விஸ்வருப கமலுக்காக அழுது ஒப்பாரி வைப்போமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நண்பர் ரிலாக்ஸ் பிளிஸ் வருண். 

உங்களுக்கு ஏன் அந்த சிரமம்.  எருது புண்ணு காக்கைக்கு தெரியுமா என்ன? விட்டு தள்ளுங்க. உங்கள் கேள்விகளுக்கு வருவோம். 

கேள்வி :

விஸ்வரூபத்திற்கு இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் கொதித்தெழுகிறார்கள் என்று நம்புகிறார்கள் கலை, கலை, கலை என்று சினிமாவை கட்டி அழும் கமல்ஹாசனின் விசிறிகள். 

இவர்களைப் பொறுத்தவரையில் சினிமாவை ஒரு கலையாகவும், கமலை ஒரு கலைஞனாகவும் எல்லாரும் பார்க்க கத்துக்கணும் என்கிற எதிர்பார்ப்பு!

பதில்

ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். நடிகர்களை வெறும் கூத்தாடிகள் என்று விமர்சிப்போரும் உண்டு. அவர்களை தங்கள் தலைவர்களாக, ( MGR )  வழிகாட்டியாக எடுத்துக் கொள்வோரும் உண்டு. இது அவரவர் மனநிலையை பொறுத்த விஷயம்.

இவர்களைப் பொறுத்தவரையில் சினிமாவை ஒரு கலையாகவும், கமலை ஒரு கலைஞனாகவும் எல்லாரும் பார்க்க கத்துக்கணும் என்கிற எதிர்பார்ப்பு!

இதில் என்ன தப்பிருக்கு. சினிமா என்பதே கலைதான். அதில் பங்கு பெறுகிற அனைவருமே கலைஞர்கள் தான். இதில் கமலஹாசன் மட்டும் விதிவிலக்கா என்ன?

கேள்வி :

இஸ்லாமியர்கள் பார்வையில் விஸ்வரூபம்..

இந்தப்படம் முழுக்க முழுக்க  தீவீரவாதம் பற்றியது. இதில் தீவிரவாதிகளாக வருபவர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள். "எங்களை ஏன் இப்படியே தீவிரவாதிகளாகவே காட்டுறீங்க?" என்கிறார்கள் இஸ்லாமியர்கள். 

அதனால் இப்படத்தை தடை செய்யச் சொல்லி வேண்டுதல் விடுத்து, முதல்வர் ஜெயாவின் கருணையில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்கள் இந்தப் பட வெளியீட்டுக்கு!

பதில் :

நியாயமான கேள்விதான். இதில் யாரும் குற்றம் காண முடியாது.  ஐயா... கதையின் களம் ஆப்கன். அங்கே தீவிரவாத செயல்கள் செய்ததது யார்?

அங்கே உள்ள இஸ்லாமியர்கள் தானே. அல்லது குப்புசாமியும், கோவிந்தசாமியுமா?

காவி கட்டிய சாமியார் கையில் துப்பாக்கியோடு திரிந்தார் என்று சொல்ல முடியுமா? சொல்லுங்க.

படத்தை தடை செய்தததுக்கு என்ன காரணம் என்பது உங்கள் மனசாட்சிக்கே தெரியும். அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம் செய்தபோதே தெரிந்து விட்டது தடை  செய்ததின் நோக்கம் என்ன என்பது.

அதுவரை தங்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் அரசு செயல்படுகிறது என்று நினைத்த இஸ்லாமிய கூட்டமைப்பினர், இது வேறு கணக்கு என்பதை புரிந்து கொண்டார்கள்.

கேள்வி :

சரி நம்ம கமல் கதாபாத்திரம் இந்தப்படத்தில் ஒரு  இஸ்லாமியர் இல்லையா?னு கேட்டால்..நம்ம ஹீரோ கமல் இந்தப்படத்தில் ஒரு பார்ப்பனராக நடித்து உள்ளாராம்! ஒருவேளை "இஸ்லாமியப் பார்ப்பனரா" என்னனு எனக்குத் தெரியலை.

பதில் :

விஸ்வருபம் கதையில் கமல் பாத்திரம் பார்ப்பனர் அல்ல. இந்திய முஸ்லிம் அவர். அவரது மனைவிதான் ஐயர்.  அதனால் இஸ்லாமிய பார்ப்பனர் என்று நீங்கள் புதிய ஜாதியை உருவாக்க வேண்டாம்.

கேள்வி :

கமலையும், கமல் விசிறிகளையும், நடுநிலைவாதிகளையும் பொறுத்தவரையில் இது ஒரு கற்பனைக் கதை என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ளணும்! 

அப்புறம் இதில் வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை கலையுணர்வுடன், கலைத்துவமாக, ஒரு காதாபாத்திரங்களாக மட்டும் அனைவரும் பார்க்க வேண்டும்! 

ஆமா, பார்ப்பானாக வரும் கமலையும்தான்! மதச்சாயம் பூசி இந்தப்படத்தில் வரும்  யாரையும் நீங்க பார்க்கப்படாது! அதுபோல் ஒரு திறந்த மனது இஸ்லாமிய சகோதரர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது!

பதில் :

சினிமா என்பது நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருந்தாலும், கற்பனை கதைதான்.

எந்த மனிதனும் சந்தோசமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் உடனே பாட்டு பாடிக்கொண்டு திரிவதில்லை. படத்தில் நோஞ்சான் ஹீரோ கூட 50 பேரை பந்தாட முடியும். நிஜவாழ்க்கையில் அதற்கு வாய்ப்பே இல்லை.

தீவிரவாதிகள் என்று வந்து விட்டால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை சொல்லித்தான் தீரவேண்டும்.

பொது இடத்தில், வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பவர்களை நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி. அவர்களை புத்தர்கள் புனிதர்கள் என்று ஏற்றுக்கொள்வது உங்கள் மனோநிலையாக இருந்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது.

எனக்கு விளங்காத   விஷயம் ஒன்றுதான். படத்தில் காட்டப்படும் ஆப்கன் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் என்பதால், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை  யார் தீவிரவாதிகள் என்று சொன்னது.

இஸ்லாமியர்களை  யாரும் அந்நியப்படுத்தி பார்ப்பதில்லை. இன்னும் விளக்கமாக சொல்வதானால்  யாருமே வெறுமனே இஸ்லாமியர் என்று சொல்வதில்லை.

இஸ்லாமிய சகோதரர்கள் என்று ஒரு இணைப்பு சொல்லோடு தான் சொல்வார்கள். காரணம் இஸ்லாமியர் என்று சொன்னால் அன்னியபடுத்தி பேசுகிறார்கள் என்ற எண்ணம் வந்து விடக்கூடாது என்ற என்ற எண்ணத்தில் தான். தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள்

அடுத்து ...இது வரலாற்று கதை கூட இல்லை. புனை கதைகள் இருக்கும் என்று சொல்ல.

இது ஆப்கனில்  நேற்றும் இன்றும் நடந்த உண்மை சம்பவங்கள், கற்பனை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.  இதில் கோவப்பட ஒன்றும் இல்லை.

கேள்வி :

மிகவும் அப்பாவியான, உலகமே அறியாத, உலக நாயகன் கமல், அவருடைய  இஸ்லாமிய சகோதரர்கள் எல்லாம் இவருடைய கலை ஆர்வத்தையும், இவர் நல்ல எண்ணத்தையும்  "சரி யாக" புரிந்து கொள்வார்கள் என்றும் விஸ்வரூபம் படத்தைப் பாராட்டுவார்கள்  என்றும் நம்பி மோசம் போய்விட்டார் போல் தெரிகிறது.   

கமலின் இஸ்லாமிய சகோதரர்கள்  அனைவரும் இந்தப் படத்தை கலைக் கண்ணோடும், இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மதச்சாயம் பூசாமலும், பார்ப்பாரகள், மேலும் இந்தப் படத்த்தை முழுமனதாகப் பாராட்டுவார்கள் என்று ஏமாந்து நிற்கிறார் உலகம் அறியாத உலக நாயகன் கமல்!

பதில் :

உண்மைதான். கமல் ஏமாந்து தான் நிற்கிறார். கண்முன்னால் நடந்த ஒரு நிகழ்வை படம் பிடித்து காட்டும் போதே, இப்படி நடக்கிறதே என்று.

உண்மை எப்போதுமே கசக்கும்.

கேள்வி :

கமல்ஹாசன் என்கிற இந்த அப்பாவிக் கலைஞன்  தற்போது படும் இன்னல்களுக்காக நாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைத்து அழுவோமா?

பதில் :

நீங்கள் அழ வேண்டாம். சிரியுங்கள். சத்தம் போட்டு சிரியுங்கள். பார்த்தாயா கமல் படும் பாட்டை என்று சிரியுங்கள். பெரிசா பீத்திக்கிட்டு அலையும் கமலுக்கு பாடம் என்று சிரியுங்கள்.  அதை யாரும் தடுக்க போவதில்லை.

கேள்வி :

இல்லைனா "உன்னைப்போல் ஒருவன்" வெளியிட்ட போதே அந்தப் படத்தை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்ட, விமர்சித்த விதத்திலிருந்து  இவர் பாடம் கற்று, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதை அதோட இவர் நிறுத்தி இருக்கணுமா?

இது விவாதிக்க வேண்டிய விடயம்!

பதில் :

உண்மைதான் கமல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். இன்னும் அவர் நிஜ வாழ்க்கையில் கற்று கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.


http://timeforsomelove.blogspot.in/2013/01/blog-post_24.html

No comments:

Post a Comment