Follow by Email

Wednesday, 30 January 2013

வெற்றி பெறுவோம் கமல் பேட்டி



விஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம், நீதி கிடைக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள  தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன்  வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. 

அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்பட மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். 

எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். 

தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். 

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார். 

இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக கமல் தன பேட்டியில் சொன்னதை  தொடர்ந்து, கமலின்  ரசிகர்கள் தங்களால் இயன்ற  நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களை, கமலிடம் அளிக்க அங்கு வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment