Follow by Email

Friday, 31 October 2014

[Exclusive] Making of I (Tamil)

விஷால் நடத்திய ரெய்டு



தீபாவளிக்கு அவர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளி வந்துள்ள படம் பூஜை. எனவே மீண்டும் சிடி வேட்டைக்கு கிளம்பிய விஷாலின் பார்வை இம்முறை கொங்கு மண்டலம் பக்கம் போயுள்ளது. 

பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் திருட்டு விசிடிகளை விற்பனை செய்த கடைகளுக்குள் தனது ஆட்களுடன் நுழைந்து ஷட்டரை மூடிவிட்டு சிடிகளை பறிமுதல் செய்துள்ளார் விஷால். பூஜை மட்டுமின்றி, கத்தி சிடியையும் பறிமுதல் செய்துள்ளார் விஷால். 

பிறர் தயாரிப்பில் வெளியான படங்களை விற்பனை செய்தாலும் விஷால் விடுவதில்லையாம். உங்கள் வீட்டுக்குள் வந்து நகையை திருடினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா, எங்கள் படத்தை மட்டும் ஏன் திருடுகிறீர்கள் என்று சிடி விற்பனை செய்பவர்களை பார்த்து கடுமையாக திட்டி தீர்த்து வருகிறாராம் விஷால். 

சமீபத்தில் இதுபோன்ற ஒரு ரெய்டு வீடியோவாக எடுக்கப்பட்டு அது யூடியூப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் விஷாலின் வேட்டையை பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளலாம்.