Follow by Email

Thursday, 31 July 2014

மனித கோபுரங்கள்

ஸ்பெயின் நாட்டில் Concurs de Castells’ என்று கூறப்படும் மனிதர்கள் கோபுரங்கள் போட்டி நேற்று நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை ரசித்து பார்க்க நாடெங்கிலும் இருந்து சுமார் 20,000 பேர் கூடியிருந்தனர்.

ஸ்பெயின் நாட்டில் south-west of Barcelona என்ற பகுதியில் இருந்து 60 மைல்கள் தொலைவில் இருக்கும் Tarragona, என்ற நகரில்தான் இந்த மனிதகோபுரங்கள் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பத்து குழுவினர் வந்திருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 500 பேர் வரை இருந்தனர்.

மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி விதவிதமான கோபுரம் போன்று அமைத்து பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தனர். இந்த குழுவினர்களில் உடல் உறுதியாக இருந்தவர்கள் கீழ்ப்பகுதியிலும் லேசான உடலமைப்பை கொண்டவர்கள் அவர்கள் மீது ஏறி நின்றும் கோபுரங்கள் அமைத்த கண்கொள்ளா காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.

இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றார் என்பதை முடிவு செய்ய ஏழு பேர் கொண்ட ஒரு நீதிபதி குழு இருந்தது. இந்த மனித கோபுர போட்டியை 28 வயது David Oliete என்பவர் மிக அற்புதமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார். 

தன்னுடைய எட்டு வருட போட்டோகிராபி பணியில் இதுவரையில் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை தான் போட்டோ எடுத்ததில்லை என்றும், இது தனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும் கூறினார். இந்த போட்டியில் Primer Classificat’ என்ற அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.






Post a Comment