Follow by Email

Thursday, 31 July 2014

சாமிகிட்டே போய் சொல்லுவேன்!!


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் நாளாந்தம் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். பல நூறுபேரை பலிவாங்கியுள்ள இந்த உள்நாட்டு யுத்தம் இதுவரை முடிவடையவில்லை. 

நேற்றைய தினம் பலத்த காயங்களோடு மருத்துவமனைக்கு ஒரு 3 வயதுச் சிறுவனை அழைத்து வந்தார்கள். அவன் உடலின் பல பகுதிகளில் குண்டுகளின் காயங்கள் இருந்தது. 

ஈரல்,கல்லீரல் மற்ரும் நெஞ்சுப் பகுதியிலும் காயம் இருந்தது. மருத்துவர்களுக்கே தெரியும் இச் சிறுவனை காப்பாற்றுவது என்பது கடினமான விடையம் என்று. ஆனாலும் அவர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

ஒரு கட்டத்தில் தனது கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்த அச்சிறுவன் அழுதுகொண்டே குறினான் , நான் கடவுளிடம் சென்று நடந்த எல்லாவற்றையும் சொல்லப்போகிறேன் என்றான். 

மருத்துவர்கள் ஆடிப்போனார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினார்கள். 3 வயதுச் சிறுவனுக்கே தான் சாகப் போவது எவ்வாறு தெரிந்தது ? என்று நினைத்தார்கள். அதேபோல சில மணிநேரத்தில் அச்சிறுவன் இறந்துபோனான். ஆனால் அவன் கூறிய வார்த்தைகளும் அவன் படங்களும் இணையத்தில் உலாவி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது !
Post a Comment