Follow by Email

Wednesday, 18 June 2014

சிவனும் ஏசுவும் அல்லாவும் இலங்கைக்கு துணை வருவார்களா??

ஒரு பக்கத்தில் அளுத்கமேயில் சிங்கள காடையர்கள் முஸ்லீம்களை தாக்கி பெரும் சேதங்களை விளைவிக்கிறார்கள். மறு முனையில் இனங்களுக்கு இடையே நல்லெண்ணத்தை உண்ணாக்கவேண்டும் என்று விமானப்படையினர் பாடுபடுவதாகவும் கூறப்படுகிறது. 

சமகாலத்தில் இப்படியெல்லாம் செய்ய மகிந்தரால் மட்டும் தான் முடியும் போல இருக்கே. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் சேட்டை தொடர்கிறது. 





இதில் வேடிக்கையான விஷயம்  என்னவென்றால், விமானப்படையினர் கிறீஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதும், பள்ளிவாசல் மற்றும் சைவ கோவில்களுக்கு சென்று வழிபாட்டிலும் ஈடுபட்டுவருகிறார்களாம்.

முள்ளிவாய்க்காலில் விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த பாவத்தை கழுவ தங்களுக்குள் இருக்கும் இந்த குற்ற உணர்வைப் போக்கவே இவர்கள் இவ்வாறு ஈடுபட்டு வருகிறார்கள் என்று யாழ் வாசி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆனால் கொலைசெய்யப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டாமா ? இவர்கள் செய்த பாவங்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும். அதனை விடுத்து இன நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப தாம் பாடுபடுவதாக இவர்கள் கூறிவருவது அனைத்தும் கண் கட்டு வித்தையே.

செய்தி அதிர்வு
Post a Comment