ads

Monday 2 June 2014

ஜோதிடம் ஏன் பொய்க்கிறது?

நான் ஜோதிடம் பார்த்துதாங்க எல்லாம் செய்தேன். அவங்க சொன்னதை கேட்டுத்தான் அதன் வழி சென்றேன். ஆனால் என்ன நடந்திச்சு பார்த்திங்களா? இப்ப கடனாளியாக நிற்கிறேன்- ஒருவர் அங்கலாய்க்கிறார்.

ஒரு ஜோதிடருக்கு நாலு ஜோதிடரை அணுகி பொருத்தம் பார்த்துதான் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.  முகூர்த்தம் கூட அவங்க குறிச்சுக் கொடுத்த நேரம்தான்.  என்ன புண்ணியம்? ஆறுமாதம் கூட வாழ்க்கை நிலைக்கலை என்று சொல்லி கண் கலங்குகிறார் பெண்ணை பெற்றவர்.

விதி என்பதின் மேல் எனக்கு அளவில்லா நம்பிக்கை உண்டு. சரியோ தப்போ, ஜோதிடப்படித்தான் எல்லாம் செய்யுறேன். சில நேரம் சரியா வருது? பலநேரம் தப்பாக போகுது.  யாரை நொந்துக்கிறது? விதியையா? விதியை கணித்து சொன்ன ஜோதிடரையா? விதியை சொல்லும் ஜோதிடத்தையா? என்று விரத்தியாக பேசுகிறார் இன்னொறுவர்.

சரி.. இந்த விமர்சனங்கள் வர காரணம் என்ன? எங்கே தவறு நிகழ்கிறது? 
ஆராய்வோம். 

ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும். ஏழைக்கு ஆசை வார்த்தை காட்டிய மாதிரி, யோகமற்ற ஜாதகத்தை யோகவான் என்று சொல்ல வேண்டியதில்லை. 

அதற்காக காலம் முழுவதும் அல்லாடப் போகிறாய் என்று கல்லை தூக்கி தலையில் போட வேண்டிய அவசியமும் இல்லை.  கிரக நிலைகளை கணித்து உங்கள் ஜாதகத்தில் இப்படியான கிரக நிலைகள் இருப்பதால் எதையும் நிதானமாக செய்யுங்கள். 

உள்ளதை வைத்து நல்லது செய் என்பது போல், வருவதை வரவில் வைத்து, செய்ததை செலவில் வைத்து உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அணுப்பு என்பார் என் குருநாதர்.   உண்மையும் அதுதான்.  

ஒகே. கிரகங்கள் எப்படி இருந்தால் யோகங்கள் தடுமாகிறது? 

உதாரணமாக சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுகிற குருபகவானும் சுக்கிரனும் கூட பெறும் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப பாவத்தன்மை பெறுகிறது.  ஒருவருக்கு அளவில்லா யோகத்தை தரும் இவர்கள், இன்னொறுவருக்கு அழவைத்து வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

அதனால் லக்னத்திற்கு என்ன நிலை பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே கிரகபலம் வருகிறது. 

1. என்னதான் கிரகங்கள் யோகநிலையில் அமர்ந்து விட்டாலும், லக்னம் மற்றும் லக்னத்திற்கு உரிய கிரகங்கள் பலம் குன்றி விட்டால், அந்த யோகத்தை பெறும் தகுதி அல்லது பாக்கியம் கிடைப்பதில்லை. 

லக்னாதிபதி 6,8,12 லிருக்க,  மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன்கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளுடனோ இருத்தால் யோகங்கள் தடுமாடுகிறது. 

3. யோகங்கள் ஒருபுறம் இருக்க, அந்த யோகத்தை வலுவிழக்க செய்யும் புனர்பூதோஷம், காலசர்ப்ப தோஷம், பாவகர்த்தாரி யோகம் போன்ற பாதகத்தை தரும் அமைப்புகள் இருந்தால் யோகநிலை வழி மாறிவிடுகிறது. 

4. ஜாதகத்தில் அதிக எண்ணிக்கையில்  பாபர்கள் வலுத்தும், சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தால் யோகத்தின் வலிமை பின்னடவை சந்திக்கிறது. 

5. லக்னாதிபதியை விட, ராசிநாதனை விட  6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தால் முன் சொல்லிய நிலைதான். 

6. என்னதான் யோகநிலைகள் இருந்தாலும் அதற்கான திசைகள் இளம் பருவத்திலேயே வரவேண்டும்.  இளம் பிராயத்தில் யோகதிசை என்ன செய்யும்? அப்பா அன்பாக பார்த்துக் கொள்வார். சாக்லெட், விளையாட்டுப் பொருள் எல்லாம் விதம் விதமாக கிடைக்கும். 

அதுவே முதுமையில் வரும் யோகதிசை கூட இப்படித்தான்.  நோய் ரொம்பப் படுத்தாது.  கவனித்துக் கொள்ள ஆட்கள் இருப்பார்கள். பெரிய அலைச்சல் திரிச்சல் இல்லாமல் வாழ்க்கைப் போகும்.  இவை இரண்டை விட வாலிபத்தில் வரும் யோகதிசைதான் சிறப்பு. 

7. வலுப்பெற்ற தொழில்பாவம் இருக்கிறது. ஆனால் அதனோடு இரு பாவகிரகங்கள் சேர்ந்து இருப்பதாக வைத்துக் கொண்டால், சேர்ந்த கிரகத்தின் தன்மைக்கு ஏற்ப நஷ்டத் தொழிலையும், அதனால் கஷ்டத்தை அவர் சந்தித்தே தீரவேண்டும். 

8.. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட, கூட்டாளி சரியில்லா விட்டால், நமக்கு யோகநிலைகளை கட்டிப்போட்டு நஷ்டங்களை தருகிறது.  அதற்கும் ஜாதகத்தில் ஓர் இடம் இருக்கும். 


ஓகே... இது போல் உங்கள் ஜாதகத்தில் எத்தனையோ யோக மற்றும் சங்கடம் தரும் கிரக நிலைகள் இருக்கலாம். அவற்றை தெரிந்து அறிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அருகில் உள்ள நல்ல ஜோதிடரை அணுகுங்கள். அல்லது என்னையும் நீங்கள் அணுகலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்/

http://astrology.dinamani.com/sri-krishnan/http://astrology.dinamani.com/sri-krishnan/



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...