Follow by Email

Tuesday, 6 May 2014

தமிழ் மக்களின் ஆதங்கத்தினால்தான் இலங்கைக்கு அமைதி படை அனுப்பப்பட்டது

வடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் ஏனைய அமைச்சர்கள் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் வட மாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்தியாதான் என்பதை நீங்கள் மறுக்க முடிhயது என யாழ் இந்திய துணை தூதரகத்தின் கொன்சல்ட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம் அவர்களுக்கு யாழ் ரில்கோ விடுதியில் இடம்பெற்ற பிரிவுபசார நிகழ்வில் உரையாற்றிய துணைதூதர் மகாலிங்கம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது இந்தியப்படை இங்கே வரும்போது அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதையும் இந்திய அமைதிப்படை வந்த மூன்று மாத காலப்பகுதியில் இங்கே என்ன நடந்தது என்பதையும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை.

இந்திய அமைதிப்படை என்ன தீர்வு காண வந்தார்களோ அதை நடக்க விடாமல் பண்ணியதற்கு இந்திய அமைதிப்படையோ இந்திய அரசாங்கமோ காரணமல்ல என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

வடமாகாண தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமே நிர்ப்பந்தித்தது. இந்தியாவில் சென்றுதான் வடமாகாண தேர்தல் திகதியையும் குறித்தார்கள்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா மூன்றாவது முறையாக புறக்கணிக்க பல காரணங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

இருந்தும், வெளிப்படையாக சொல்ல கூடியதை சொல்கிறேன். ஒரு நாட்டுக்கு வெளியில் இருந்து தாக்கம் கொடுப்பது என்பது இந்திய வெளியுறவு கொள்கையில் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாத விடயம். ஆகவே தான் இந்தியா அவ்வாறான சந்தர்ப்பம் வரக்கூடாது என்று தீர்மானத்தினைப் புறக்கணித்தது.

அவ்வாறு புறக்கணித்ததன் காரணமாகத்தான் இந்தியா, இலங்கை அரசாங்கத்துடன் உட்கார்ந்து பேச முடிகிறது. இந்தியாவும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து மூன்றாவது திருத்தத்தில் பங்கேற்று இருந்தால் இந்தியா கண்டிப்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழர்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய சந்தர்ப்பத்தினை இழந்திருக்கும்.

ஆகவேதான் இந்தியா புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டி வந்தது என்பதையும் இங்கே கூறிக்கொள்கிறேன் என்றார்.
இதன்போது ரில்கோ விருந்தினர் விடுதியின் உரிமையாளர் எஸ்.திலகராஜ் இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கத்திற்கு நினைவு பரிசு ஒன்றினையும் வழங்கினார்.

இந்த பிரிவுபகார நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிற்றம்பலம், யாழ்.வர்த்தக சங்க தலைவர் ஆர்.ஜெயசேகரம் மற்றும் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment