Follow by Email

Saturday, 31 May 2014

பணிந்தது இலங்கை- மோடி மந்திரம் சூப்பர்

இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி , அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இதனை கூறியுள்ளது.

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், பொலிஸ் திணைக்களம் முற்றாக வீழ்ச்சியடையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகாரத்தை மாகாணங்களுக்கு பரவலாக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் மேற்படி தனது முடிவை இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.

செய்திகள் உதவி : இலங்கையில் இருந்து திவா 

கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்…



உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாதவ் இனத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் செய்த அட்டூழியம் இது என்று அச்சிறுமிகளின் தந்தை குமுறியுள்ளார். இந்த சிறுமிகளுக்கு வயது 15 மற்றும் 14 ஆகும். இருவரும் சகோதரிகள்.

கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருவரின் உயிரற்ற உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. புதான் மாவட்டம், கத்ரா ஷதாத் கஞ்ச் என்ற கிராமத்தில்தான் இந்த அட்டூழியம் நடந்துள்ளது.

 இருவரும் முதலில் பலாத்கராம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர். 

சாதி வெறி தலை விரித்தாடும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று உ.பி. இங்கு மத ரீதியாக, சாதி ரீதியாக வெறியர்கள் ஆட்டம் கட்டுக்கடங்காத நிலையே இன்னும் காணப்படுகிறது.

குறிப்பாக சாதி வெறியர்கள் இந்த மாநிலத்தில் அதிகம். மேலும் மதம், சாதி ரீதியிலான வன்முறைகள், கலவரங்களுக்கும் பெயர் போனது உ.பி. தற்போது நடந்துள்ள இந்த சிறுமிகளின் கொலை விவகாரத்தில் 2 போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அச்சிறுமிகளின் தந்தை கூறுகையில், செவ்வாய்க்கிழமை மாலையில் அப்பகுதியில் உள்ள மாந்தோப்புப் பகுதியில் எனது இரு மகள்களையும் கடைசியாக பார்த்துள்ளனர். அப்போது அவர்களுடன் பப்பு யாதவ் என்பவர் இருந்துள்ளார்.

மேலும் இரண்டு பேரும் உடன் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து எனது மகள்களை அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்த எனது உறவினர் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். 

அப்போது பப்பா யாதவுடன் இருந்த ஒருவர் துப்பாக்கியைக் காட்டி எனது உறவினரை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன எனது உறவினர் அங்கிருந்து ஓடி வந்து விட்டார்.

என்னிடம் வந்து தெரிவித்தார். நான் உடனடியாக போலீஸில் புகார் கூறினேன். ஆனால் அவர்களோ குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே பேசினர். என்னையும் தரக்குறைவாக நடத்தினர். அடுத்த நாள் காலையில் எனது இரு மகள்களும் பிணமாக மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என்றார் கண்ணீர் வடித்தபடி.

இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் கோபத்தையும், கொந்தளி்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரு சிறுமிகளும் சார்ந்த தலித் சமுதாயத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் காட்டி வரும் அலட்சியமும் அவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கி தற்போது நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். மற்றொரு போலீஸ் அதிகாரி தலைமறைவாக உள்ளதாக மாவட்ட எஸ்.பி. உதய் ராஜ் சிங் கூறியுள்ளார்.

Friday, 30 May 2014

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கினால்!!



அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கினால் இந்தியாவுடன் இருப்பதா? இல்லை பிரிந்து செல்வதா? என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தும் உரிமை ஜம்மு காஷ்மீரத்துக்கு இயல்பாகவே வந்துவிடும் என்று அரசியல் சாசன வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக ஸ்ரீநகர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரசியல் சாசன வல்லுநர் முசாஃபர் ஹூசைன் பெய்க் அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது மொத்தம் 562 தேசங்கள் இங்கே இருந்தன. இவை பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைந்தவை அல்ல. தனி தேசங்கள். 

பின்னர் இந்த தேசங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவுடன் இந்தியாவின் ஒருபகுதியாகவே இணைந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்குப் போனது. 

இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது இந்த மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே 370வது பிரிவு உருவாக்கப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசன தொடர்பை ஏற்படுத்தியிருப்பது. இப்போது நீங்கள் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் கோரி நீக்கிவிட்டால் இயல்பாகவே ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடுவர். இவ்வாறு முசாஃபர் ஹூசைன் பெய்க் கூறியுள்ளார்.

Wednesday, 28 May 2014

மண்டையோடு சர்ச்!! ஐயையோ திகில்

கிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.

இடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.

அவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை.

காலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.

ஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;

ரத்தம் கொட்டிக்கொண்டுதான் உள்ளது;

உடல்கள் சிதறிக்கொண்டுதான் இருக்கின்றன;

இப்பொழுது எலும்புகளை அள்ளமுடியாது;

மண்டையோடுகளை எண்ண முடியாது;


மில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது.  

எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.


இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.

புனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம். இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.


மண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள். 

இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.


சர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சிற்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது. 

ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார் பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.

படம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint)  பொறித்து வைத்துள்ளார்.


எல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். 

ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.


குழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.


ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.



தொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்!



இவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.

பூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். 

உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து,  அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். 

அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒருவேளை கிண்டலாக “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்?


நன்றி தாமஸ் கட்டுக்கதை பிளாக் 

தகவலுக்கு உரியவர் அல்லது எழுதியவர் வேதபிரகாஷ் 

Monday, 19 May 2014

பல நாடுகளுக்கு மோடி பெயரை கேட்டாலே கொலை நடுங்குது



சிறிலங்காத் தீவுக்கு எதிராக நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் சிறிலங்காத் தலைவர்கள் மிகத் தெளிவான வரையறையான மூலோபாயம் ஒன்றை வகுக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை அன்று கொழும்பு அங்கில ஊடகமான 'டெய்லி மிறர்' எச்சரித்துள்ளது. 

இந்தியாவின் புதிய பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு முன்னர் அல்லது ரஸ்ய அதிபர் விலாடிமிர் புற்றின் 'கிறிமியா' நாட்டிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைள் போல் சிறிலங்கா மீது மோடி அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுப்பதற்காக சிறிலங்காத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மிகத் தெளிவான மூலோபாயத்தை வரைந்துகொள்ள வேண்டும்" என 'டெய்லி மிறர்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 மோடி இந்த மாதம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் சில மாதங்களுக்கு சிறிலங்காவுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் நல்லுறவு பேணப்படலாம் என பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள்  குறிப்பிடுவதாக 'டெய்லி மிறர்' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிறிலங்கா, மலேசியா, பிஜி போன்ற தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு நாடும் இந்தியாவின் பகுதிகளாகும்" என கடும்போக்காளரான மோடி தெரிவித்திருந்ததாக டெய்லி மிறர் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்திய உளவாளி என சந்தேகம்!!




கடந்த 19 ஆண்டு காலமாக தன்னை ஒரு இலங்கை பிரஜை என கூறிக்கொண்டு, சிங்களப் பகுதியான அநுராதபுர நகரத்தில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது இலங்கை போலீஸ்.

premium-idஇவர் இந்திய உளவுத்துறை ‘ரா’-வின் ஏஜென்ட் ஆக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கிறது, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறை எஸ்.ஐ.எஸ்.

தற்போது 44 வயதாகும் இந்த நபர் (மேலே போட்டோ பார்க்கவும்), கடந்த 199-ம் ஆண்டில் கேரளாவிலிருந்து இலங்கை வந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்தபின், தாம் ஒரு இலங்கை பிரஜை என்று தெரிவித்து, ஹம்சா ஜமாலுதீன் என்ற பெயரில் இலங்கை அடையாள அட்டை, பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து, இலங்கையராகவே 19 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில், அனுராதபுர, மற்றும் வவுனியா ஆகிய நகரங்களில் மாறி மாறி தங்கியிருந்துள்ளார்.

மேலேயுள்ளது இலங்கை பாஸ்போர்ட்
மேலேயுள்ளது இலங்கை பாஸ்போர்ட்

வன்னி பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்களில், வவுனியாவுக்கு தெற்கே இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், வவுனியாவுக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

வவுனியா நகருக்கு அருகேயுள்ள ஓமந்தை என்ற இடத்தில்தான், இரு பகுதியையும் பிரிக்கும் செக் பாயின்ட் இருந்தது.

இவர் வவுனியாவில் தங்கியிருந்திருக்கிறார்!

இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த உளவுத் தகவலின்படி நேற்று இவர் தங்கியிருந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தினார்கள்.

அப்போது அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆவணங்களில் சில, இவர் ஒரு இலங்கை பிரஜையாக வளைகுடா நாடுகளுக்கு சென்று பணிபுரிந்த ஆவணங்களாக உள்ளன.

கைது செய்யப்பட்ட நபர், வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியதாக விசாரணையில் கூறியுள்ளார், அத்துடன் இவரது பெயரில் இஷ்யூ செய்யப்பட்ட நிஜ இலங்கை பாஸ்போர்ட் ஒன்றும் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆனால், இவர் தமது 25-வது வயதில் இலங்கை சென்று இறங்கிய இந்திய பாஸ்போர்ட் மட்டும் இவரிடம் இல்லை என்கிறார்கள்.

இலங்கை கண்டியை சேர்ந்த ஒருவர், தமிழகத்தில் உளவாளி என கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானின் ISI உளவாளி என்கிறது Q-பிராஞ்ச். இப்போது, கேரளாவை சேர்ந்த ஒருவர், இலங்னை அனுராதபுரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ‘ரா’ உளவாளியாக இருக்கலாம் என்கிறது, SIS.

என்னங்க நடக்குது இலங்கையிலும் தமிழகத்திலும்? 

ரிஷி 


Sunday, 18 May 2014

மோடியுடன் மோதல் கூடாது! பாக். பத்திரிகை!!


மோடியுடன் பாகிஸ்தான் அரசு மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது என பாகிஸ்தான்   பத்திரிக்கை ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், திடமான மற்றும் சர்ச்சையற்ற அத்ததைய உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய தலைவரை நமது நாடும், மதமும் கவனமாக கையாள வேண்டும்.

தேசிய நலன் கருதி பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த முறை பா.ஜ., இந்தியாவில் ஆட்சி அமைத்த போது பாகிஸ்தான் கடுமையாக நடந்து கொண்டது.

வாஜ்பாயை போன்று மோடி மென்மையாக செயல்பட மாட்டார். அதனால் நவாஸ் ஷெரீப் நிலைமையை புரிந்து கொண்டு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி பிரசாரம் குறித்த செய்தியில் இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை என குறிப்பிட்டதும் இதே பத்திரிக்கை தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இசைப்பிரியாவை இலங்கை இராணுவம்!!

2009ம் ஆண்டிற்குப்பின் தொடர்ச்சியாக எமது உறவுகள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட பல ஆதாரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை.சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது. 

அவ்வாறான ஆதாரங்களை பல்வேறு பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தி அதன் நம்பகத் தன்மையை நிரூபித்த பின்னர் அவற்றை பெரும்பாலும் பிரித்தானியாவின் புகழ் பெற்ற ஊடகங்கள் உலகிற்கு வெளிக் கொண்டு வந்த வண்னம் உள்ளன. 

இவ்வாறான சாட்சிகளும் காட்சிப்பதிவுகளும் உலகின் மனச்சாட்சியை உலுப்ப ஆரம்பித்த பின்னனியில் இலங்கை மீது ஓர் சர்வதேச விசாரணையை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் இப்போது இடப்பட்டிருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று , முள்ளிவாய்க்கால் அவலத்தின் 5ம் ஆண்டை நினைவு கூறும் தருணத்தில் , இறுதியுத்தத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, மற்றும் அவரது தோழி உட்பட பலர் உயிருடன் பிடிக்கப்பட்டு கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் தமிழர் பேரவைக்கு கிடைத்திருக்கின்றதன.

இவர்கள் இலங்கை இராணுவக் காவலரணுக்கு அருகாமையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படமும், இசைப்பிரியா தனிமையில் இருத்தப்பட்டு அவரைச்சுற்றிலும் பல இலங்கை இராணுவத்தினர் வேடிக்கை பார்க்கும் புகைப்படமும் , இவருடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படமும் கிடைக்கப்பட்டிருக்கின்றது.

இக் கைதுகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முகங்கள் மிகத்தெளிவாக அடையாளம் காணக்கூடியதக உள்ளது, அதேவேளை இப் புகைப்படங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Friday, 16 May 2014

கெஜ்ரிவால்



ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மோடி அலையையும் இந்த கெஜ்ரிவால் அலை பாதிக்கவில்லை. 

தேர்தல் பிரசாரத்தின்போது கெஜ்ரிவால் வாங்கிய அடியை விட அவரது கட்சிக்கு குறைந்த அளவிலான சீட்களிலேயே வெற்றி கிடைத்துள்ளது சோகத்துற்குரிய சமாச்சாரம்தான். 

இக்கட்சிக்கு பஞ்சாபில் ஒரு இடத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அதேசமயம் கெஜ்ரிவால் தோல்வியுற்றுள்ளார் வாரணாசியில். 

தேர்தல் பிரசாரத்தின்போது நான்கு முறை கெஜ்ரிவாலுக்கு அடி விழுந்தது. கன்னத்தில் அடி, மை ஊற்றுவது போன்ற களேபரங்கள் நடந்தேறின. 

ஆனால் அதற்கெல்லாம் நிவாரணமாக ஏதாவது குறிப்பிடத்தக்கத வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாங்கிய அடி அளவுக்குக் கூட சீட் கிடைக்காதது நிச்சயம் கஷ்டமான விஷயம்தான். 

இதுதான் ஆம் ஆத்மியின் முதல் நாடாளுமன்றத் தேர்தல். டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஷீலா தீட்சித்தை வெல்ல முடிந்த கெஜ்ரிவாலால், வாரணாசியில் நரேந்திர மோடியை வீழ்த்த முடியாமல் போய் விட்டது. 

அதேசமயம், பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பரவலாக 2வது இடம் கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் அக்கட்சி 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இத்தேர்தலில் 350க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை ஆம் ஆத்மி நிறுத்தியது. ஆனால் 4 இடங்களுக்கு மேல் அதற்குக் கிடைக்காமல் போவது அக்கட்சியினரை யோசிக்க வைத்துள்ளது. 

நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் விவரம்



நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் முதன்முறையாக 49ஓ எனப்படும் முறை கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி வரிசையில், மேலேயுள்ள யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய ஒரு பொத்தான் வைக்கப்பட்டது. 

நாட்டில் கட்சிக்கொடிகள் பல பறக்கும் நிலையில், இந்த பட்டனுக்கு அவ்வளவாக வேலை இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான். 

ஏனெனில் சில தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்குதான் அதிகம் பேர் 'வாக்களித்துள்ளனர்'. 

அந்த சாதனையில் முதலிடம் தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான். இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர். 

இதைப்போல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. எல்லா கட்சிக்கும் நாங்கள்தான் மாற்று என்று கூறிய ஆம் ஆத்மிக்கு பதிலாக, நோட்டாவுக்கு மக்கள் வாக்களித்துள்ளதை வைத்துப் பார்த்தால், ஆம் ஆத்மியை மக்கள் ஒரு மாற்றாக நினைக்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. 

ஏனெனில் மேற்கண்ட மூன்று தொகுதிகளிலுமே நோட்டாவை விட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். 


நாடு பிரம்மச்சாரிகள் கையில்!

பிரதமர் நாற்காலியில் ஒரு புதிய பிரம்மச்சாரி வருகிறார். திருமணமானவர் என்றாலும் கூட மோடியும் இப்போதும் தனிக்கட்டைதான். 


பாஜகவிலிருந்து பிரதமர் பதவிக்கு வந்துள்ள 2வது பிரம்மச்சாரியும் இவர்தான். இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. ஆனால் நமது மோடியோ, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி. 

நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு நீண்ட கால பேச்சலர். 



டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வகிக்கப் போகும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேச்சலர். 



திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்னொரு பேச்சலர்.




மோடி!!






Thursday, 15 May 2014

பிரபாகரன், மே 18-ம் தேதி உயிர் தப்பியது எப்படி?



இந்த மாதம் (மார்ச்) 18-ம் தேதி, இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள், வெளி நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே தினத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனுக்கு இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்துவதில்லை என முடிவாகியுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டு 5 ஆண்டுகளின் பின், அவரது மரணத்தை அறிவிப்பது என வெளிநாட்டு புலிகள் மத்தியில் முன்பு முடிவாகி இருந்தது.

“அதை இந்த மாதம் 18-ம் தேதி நடைமுறைப் படுத்த வேண்டும்” என வெளிநாட்டு புலிகளில் ஒருதரப்பும், “இன்னும் கொஞ்ச காலம் விட்டுப் பிடிக்கலாம்” என மற்றொரு தரப்பும், கடந்த சில வாரங்களாகவே முறுகல் நிலையில் பேச்சுவார்த்தைகள் நடத்தின.

ஒரு கட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை முறிவடைந்து, “யார் வந்தாலும், வராவிட்டாலும் பிரபாகரனுக்கு நாம் அஞ்சலி செலுத்த போவதாக அறிவிக்கப் போகிறோம்” என வெளிநாட்டு புலிகளின் ஒரு பிரிவினர் உறுதியாக இருந்தனர். (இந்தப் பிரிவினர், யுத்தம் நடந்தபோது இலங்கையில் இருந்துவிட்டு, 2009-ம் ஆண்டு மே மாதத்துக்கு பின் வெளிநாடு வந்தவர்கள். விநாயகத்தின் தலைமையில் இயங்குபவர்கள்)

அப்படி நடந்து விட்டால், கதை கந்தலாகி போய்விடும் என புரிந்து கொண்ட எதிரணியினர் (இவர்கள் 2009-க்கு முன்பிருந்தே வெளிநாடுகளில் ‘புலி விவகாரங்களை’ கவனித்துக் கொண்டிருந்தவர்கள், நெடியவன் படைப்பிரிவு என அறியப்பட்டவர்கள்), சில நலன் விரும்பிகளின் மத்தியஸ்தத்துடன் மீண்டும் பேசி, ஒரு டீலுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆண்டு மாவீரர் தினத்தின் போது (நவம்பர் 27) அஞ்சலி செலுத்துவது என கொள்கையளவில் முடிவாகியுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், பிரபாகரன் உயிர் தப்பி விட்டார்.

ஆனால், இந்த டீலுக்கு வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட போதிலும், விநாயகம் அணியினர் கடும் கோபத்துடனே உள்ளனர்.

காரணம், ஒவ்வொரு ஆண்டும், இப்படியான விஷயங்களில் (பிரபாகரன் அஞ்சலி, மாவீரர் தின நிகழ்வுகளை இரு பிரிவாக வைக்காமல் ஒன்றாக வைப்பது.. ect etc) கடைசி நிமிடம் வரை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் தாம் நினைத்ததை சாதித்து விடுவது நெடியவன் குரூப்புக்கு வாடிக்கையாக போய்விட்டது என்பதுதான்.

சரி. வெளிநாட்டு விடுதலைப் புலிகளின் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? ஒரு சிறிய பின்னணி சொல்லி விடலாம்.

விநாயகம் அணியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவினர். பொட்டு அம்மானின் கீழ் இருந்தவர்கள்.

யுத்தம் முடிந்தபின் இந்தியா, மலேசியா, அல்லது இந்தோனேசியாவுக்கு சென்றுவிட்டு, பின் ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு வந்தவர்கள். இவர்களை தவிர ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து, நெடியவன் படையணியின் ‘நடவடிக்கைகள்’ பிடிக்காமல் இதில் சேர்ந்தவர்களும் உள்ளார்கள்.

இதில், ஈழப் பிரதமர் உருத்திரகுமார் ‘ஸ்கைப்’பில் நடத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, விநாயகம் அணிக்கு ஆதரவு.

தமிழ் ஈழப் பிரதமர் எதற்காக விநாயகம் அணியை ஆதரிக்க வேண்டும்? அதற்கும் ஒரு பின்னணி உள்ளது.

யுத்தம் முடியும்வரை வெளிநாடுகளில் புலிகளின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்த நெடியவன் அணியினர், யுத்தம் முடிந்தபின் புலம் பெயர்ந்தவர்களை பங்குபோட மற்றொரு அமைப்பாக தமிழீழ அரசு வந்ததை விரும்பவில்லை. பல விதத்திலும் இடைஞ்சல் கொடுத்துப் பார்த்தார்கள்.

அப்படியிருந்தும் தமிழீழ அரசு அமைந்து விட்டது (அட, வெளிநாட்டில்தானுங்க).

இதையடுத்து, முதலில் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களை வைத்து ‘கலைச் சொல் தாக்குதலை’ நடத்தினர்.

துரோகி.. அடிவருடி.. எலும்பு சூப்பி.. ஒட்டுண்ணி.. வெட்டுக்கிளி.. பட்டுப்பூச்சி.. என்றெல்லாம் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

இந்திய உளவுத்துறை ‘ரா’வின் ஏஜென்ட், சி.ஐ.ஏ.வின் ஏஜென்ட் என்றெல்லாம் கட்டுரைகள் பாய்ந்து வந்தன (இந்த இரு உளவுத்துறை பெயர்கள் மட்டும்தான் அவர்களுக்கு தெரியும்)

ஆனாலும், தமிழீழம் (நாடுகடந்த) சுருண்டு விடவில்லை.

இந்த இடத்தில்தான், நெடியவன் படையணி, தமது பிரம்மாஸ்திரத்தை உபயோகிப்பது என்ற அகிலமே நடுங்கக்கூடிய முடிவை எடுத்தார்கள்!

நெடியவன் படையணியினர், இறுதி பிரம்மாஸ்திரமாக தமிழீழ அரசை நடுங்க வைக்க ‘தேசிய நடவடிக்கை’ எடுக்க தயாரானார்கள்.

தமிழீழ அரசு ஆட்களோ, பெரும்பாலும் கோட் சூட் ஆசாமிகள் (இதற்குள்ளும் நெடியவன் படையணி ஆட்கள் ஊடுருவியுள்ளது வேறு விஷயம்).

இவர்கள் ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ என்று அழைத்து கூட்டம் நடத்தியபோது, நெடியவன் படையணியின் ‘தேசிய மனிதநேய செயற்பாட்டாளர்கள்’, தமது பாணியில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, “டேய்.. பனங்கிழங்கு” என்று கூச்சலிட்டபடி, குபீரென பாய்ந்தார்கள்.

ஈழம் பற்றி பேசிக்கொண்டிருந்த கோட் சூட் கனவான்கள், வனிதாமணிகள் வெலவெலத்துப் போனார்கள்.

பாவம், அவர்களுக்கோ, இந்த ‘தேசிய நடவடிக்கை’யில் முன்பின் பரிச்சயம் கிடையாது. பாதிப் பேருக்கு வேட்டி கட்டிக்கூட பழக்கமில்லை.

இந்த லட்சணத்தில், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பாய்ந்த ம.நே.தே. செயற்பாட்டாளர்களை எப்படி எதிர்கொள்வது?

“Why are they calling us பனங்கிழங்கு” என்று அலறியபடி சிதறியோடினார்கள். இதில் வெளியிட முடியாத வார்த்தைப் பிரயோகங்களுடன், துரத்திச் சென்ற வீர வேங்கைகள், தமிழீழ அமைச்சர்களையும், பிரதானிகளையும் விரட்டியடித்தார்கள்!

நல்லவேளையாக லேப்டாப்பில், ஸ்கைப் மூலம் பேசி்க்கொண்டிருந்த பிரதமருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், லேப்டாப் தூள் தூள்.

இதனால் அடுத்த கூட்டம் போட முடியாத நிலை, தமிழீழ அரசுக்கு ஏற்பட்டது.

அந்த நேரத்தில்தான் நெடியவன் படையணிக்கு எதிரணியாக, விநாயகம் அணி காட்சிக்குள் வந்தது. சினிமாவில், வில்லன்களிடம் இருந்து தப்பிக்க ஹீரோவிடம் போய் முறையிடுவது போல, விநாயகம் அணியின் கைகளை பற்றிக் கொண்டார் பிரதமர்.

“யாமிருக்க பயமேன்” என அபயம் அளித்த விநாயகம், தமிழீழ அரசு ‘தேசிய செயல்பாட்டு’ அபாயத்தில் இருந்து தப்ப, ஒரு உபாயம் செய்தார்.

விநாயகம் அணியின் ஆட்கள் கிளம்பிச் சென்று, நெடியவன் அணியின் லண்டன் மனிதநேய தேசிய செயற்பாட்டாளர் தலைவரை போட்டு புரட்டியெடுத்து, நையப்புடைத்து விட்டார்கள்.

பல ஆண்டுகளாக லண்டனில் ஹம்பர்கர் சாப்பிட்டுக்கொண்டு ‘தேசிய சேவை’யில் ஈடுபட்டவரை, வன்னியில் குரக்கன் ரொட்டியும், மான் இறைச்சியும் சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் அடித்தால்… எப்படியிருக்கும்?

உங்கவீட்டு அடி, எங்கவீட்டு அடி அல்ல.. செம அடி!

அத்துடன் தமிழீழ அரசுக்கு எதிரான நெடியவன் படையணியின் ‘தேசிய செயல்பாடு’ முடிவுக்கு வந்தது.

(அடி வாங்கிய வெட்கத்தை மறைக்க, “சிங்கள புலனாய்வு கைக்கூலிகள் எமது மனிதநேய தேசிய செயற்பாட்டு வீரரை தாக்கினர். சிங்களவரின் தாக்குதலை சிங்கிளாக நின்று சமாளித்து, வெற்றிகரமாக தளம் திரும்பினார் எம் வீரவேங்கை” என ஒரு அறிக்கை வெளியானது, இதன் உச்சக்கட்ட தமாஷ்)

இதுதான், இவர்களது பின்னணி.

விநாயகம் அணியினரோ, “பிரபாகரனின் மரணத்தை நேர்மையாக அறிவித்து, அஞ்சலி செலுத்தலாம். அதுதான், நாம் தலைவருக்கு கொடுக்கும் மரியாதை.

இலங்கை ராணுவமே, “பிரபாகரன் போர்க்களத்தில் நின்று இறுதிவரை போராடி உயிரிழந்தார்” என்று சொல்கிறார்கள்.

ஆனால் நாமோ, “பிரபாகரன் வன்னியில் 3 லட்சம் மக்களையும், 30 ஆயிரம் போராளிகளையும் அம்போவென விட்டுவிட்டு, தான் மட்டும் தப்பியோடி, அடையாளம் தெரியாத இடத்தில் பதுங்கியிருக்கிறார்” என்று சொல்வது, அவரை கேவலப்படுத்துவதாக உள்ளது” என்கிறார்கள்.

அதற்காகவே, இந்த மாதம் 18-ம் தேதி அவரது மரணத்தை முறைப்படி அறிவிக்கலாம் என்றார்கள். நெடியவன் படையணி அதற்கு இணங்கவில்லை.

கடந்த ஆண்டும் இதே நிலைப்பாட்டில் விநாயகம் அணியினர் இருந்தபோது, நெடியவன் அணியினர் ஒரு டீல் போட்டார்கள்.

“தலைவர் இறந்ததை உடனே அறிவிக்க முடியவில்லை. இப்போது திடீரென அறிவித்தால் நன்றாக இருக்காது. ஒரேயடியாக 5-வது ஆண்டு நிறைவின்போது அறிவிக்கலாம் என்றார்கள்.

அதை விநாயகம் அணியினர் நம்பி, ஏற்றுக் கொண்டார்கள் (பாவம், பொட்டு அம்மான். அவரது ஆட்கள், இவ்வளவு வெகுளிகளாக உள்ளார்களே!).

அந்த 5-வது ஆண்டு நிறைவுதான், வரும் 18-ம் தேதி வருகிறது.

இப்போது நெடியவன் அணியினர், “மே-18 நினைவுகூரல் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் அனைவருக்கும் – பொதுமக்கள் உட்பட – பொதுவான நிகழ்வு. ஆனால், நவம்பர் 27 நினைவுகூரல், விடுதலைப் புலிகளின் மாவீரர்களுக்கு மாத்திரமானது. அதில் தலைவரை நினைவுகூருவதுதான் சரியானது” என டெக்னிகலாக கூறியதை, விநாயகம் அணியினர் இம்முறை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதையடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்த 18-ம் தேதி உயிர் தப்பியுள்ளார்.

ஆனால், வரும் நவம்பர் 27-ம் தேதி, அவரது உயிருக்கு ஒரு கண்டம் இருக்கிறது. அதிலும் தப்பித்து கொள்வாரா பார்க்கலாம்.

ரிஷி–

(இந்தக் கட்டுரைக்காக நாம், நெடியவன் படையணியினரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தமது தரப்பு நியாயத்தை தெரிவித்தனர். கட்டுரை நீளமாகி விட்டதால், அதை மற்றொரு கட்டுரையாக நாளை தருகிறோம்)

Saturday, 10 May 2014

புலிகளின் சகோதரப்படு கொலை!!



புலிகளின் சகோதரப்படு கொலைகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலி !

ரெலோ  ஈபிஆர்எல்எப்  மீதான புலிகளின் படுகொலைகளே புலிகளின் ஈழப்போராட்டத்தின் தோல்வியாகும் தமிழர்களின் ஜக்கியத்தை குலைத்து மக்களை கொலை செய்து அடிபணியவைத்து அந்த மக்களின் போராட்த்திற்க்கு தலைமை கொடுத்ததே புலிகளின் வெற்று இராணுவ போராட்டமாகும் இது புலிகள் அழிந்த பின்னரும் தமிழர் உரிமைப் போராட்டத்தில் பாதிப்புக்களை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழீழ போராட்ட வரலாற்றில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலையை மட்டும் காரணமாக எடுத்துக் காட்டி எமது தமிழர் உரிமைப்போராட்ட தோல்வியினை எழுதிவிட முடியாது.

எமது போராட்ட வராலாற்றில் தனிமனிதர்களின் சாகசங்களும் கொலை வெறிகளும் தன்னை மட்டும் முன்நிறுத்தி அல்லது தான் சார்ந்த இயக்கத்தை மட்டும் முன்னனிறுத்தி போராட்டத்தை தனது தலைமையில் மட்டும் செய்துவிடலாம் என்ற பிரபாகரனின் அரசியல் வறுமையுமே போராட்ட தோல்விக்கான முதல் காரணங்களாகும்.

போராட்டத்தை இராணுவ வெற்றியாக மட்டும் முன்னிறுத்திய புலிகளின் தனிமனித ஆயுத வெறியே இன்றய தமிழர்களின் போராட்ட தோல்விக்கான அடிப்படைக் காரணங்களாகும்.

ஜக்கியத்தை கட்டியெழுப்பி சகபோராளி இயக்கங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு கொண்ட போராளிகளை கொன்று குவித்தே புலிகள் போராட்டத்தை தோல்வியில் முடித்துள்ளனர்.

அரசியல் போராட்ட தெளிவற்ற அமைப்பினாலும் ஆயுதங்களை மட்டும் கொண்ட போராட்டத்தை வென்றிடலாம் என்ற உலக போராட்ட வரலாற்று தெளிவற்ற தனிமனித குறும் புத்தியின் விளைவே புலிகளின் போராட்ட தோல்விக்கான காரணங்களாகியிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்த இனப்படுகொலைகள் இனவாத அரசியல் போன்று உலகில் பல நாடுகளிலும் நடைபெற்ற அனுபவத்தினை முதல் பாடமாக கொண்ட அவைபற்றி கருத்து தெரிவித்த பலரை புலிகளே கொன்று குவித்தனர் மக்களின் சமூகத்தின் கருத்து என்ன? மக்களின் பிரதிபலிப்பு என்ன என்பதைப்பற்றி அக்கறையற்ற போராட்டமாக அதிலும் தனிமனிதனையே நம்பிய போராட்டத்தின் தோல்விகளே புலிகளின் ஈழப்போர் முடிவாகும் அதுமட்டுமல்ல இன்னும் சிலர் அதையே போராட்ட வடிவம் என்றும் சுத்த இராணுவ நடவடிக்கைகளே போராட்டம் என்ற எண்ணத்துடன் இன்றும் வாழ்கிறார்கள் அதையே மீண்டும் போராட்டம் என்று எண்ணி மீண்டும் அப்படியான ஒரு பயங்கரவாதத்தை ஆரம்பிக்கலாம் என்ற கனவுடன் இருக்கிறார்கள்.

போராடும் சமூகத்தில் போராடும் நாட்டில் போராடும் அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளின் ஒன்றிணைந்த இயக்கமே போராட்டம் என்பதை புலிகள் குறிப்பாக பிரபாகரன் புரிந்து கொள்ள தவறுகிறார் என்பதை 1980 களிலிருந்து கூறிக்கொண்டிருக்கும் பல ரெலோ ஈபிஆர்எல்எப் போராளிகள் பலர் இன்றும் வாழ்கிறார்கள் ஆனால் எல்லாமே தலைக்கு மேல் போய்விட்டது இனி என்ன என்ற விரக்தியில் வாழும் இவர்களில் பலர் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர தயங்குகிறார்கள் போராடும் சமூகத்தில் போராடும் நாட்டில் போராடும் அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளின் ஒன்றிணைந்த இயக்கமே போராட்டம் என்ற யதாரத்தத்தை உடைப்பதே புலிகளின் பிரபாகரனின் அரசியலாக இருந்திருக்கின்றது.

இலங்கை அரச இராணுவத்துடன் மோதுகைகள் ஜக்கியமாக மக்களின் உரிமைப்போரை வென்று கொள்ளுதல் இலங்கையின் இதர சிங்கள் மொழி பேசும் மக்களுடன் இணைவு போன்ற விடயங்களில் புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ் மக்கள் பொறுப்பு நிற்க்க வேண்டியிருக்கின்றது.

யாழ் சுதுமலையில் 1985களின் முற்பகுதியில் புலிகளின் அச்சுவேலி பதுங்கு தளம் கிட்டுவின் முகாம் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டதும் புலிகளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவானது இந்த நேரத்தில் சென்னையிலிருந்து பிரபாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க தலைவர் சிறீ சபாரத்தினம் ரெலோ போராளிகளை உடனடியாக கிட்டுவை பாதுகாக்கும் பணியில் இறங்கு மாறு பணித்திருந்தார் அதற்கு அமைவாக இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பை உடைத்து புலிகள் தப்பியோட ரெலோ போராளிகளே வழிசமைத்தனர் இந்த சம்பவத்தில் முன்னின்று இராணுவ நடவடிக்கைகளை நடாத்திய ரெலோ போராளிகள் இன்றும் ஜரோப்பாவில் வாழ்கிறார்கள்
புலிகளை ரெலோ சுதுமலையில் மட்டுமல்ல அச்சு வேலியில் அச்சுவேலி தோப்பு என்னும் இடத்தில் பண்டிதரின் முகாம் இலங்கை புலனாய்வுத்துறையின் இன்றய முக்கிய பதவி வகிக்கும் கபில கெந்த விதாரணவின் தலைமையின் கீழ் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட போதிலும் ரெலேவினரே புலிகளுக்கு தப்பி ஓடி பாதை போட்டுக் கொடுத்தனர் என்பதும் வரலாறு புலிகளை ரெலோவும் சிறிசபாரத்தினமும் இன்னோரன்ன பல இடங்களில் பாதுகாத்தும் பிரபாகரனுக்கு அடைக்கலமும் கொடுத்து பாதுகாத்துள்ள வரலாறு இனன்னமும் தமிழ் மக்களில் பலருக்கு தெரியாதவிடயங்களே காரணம் புலிகளின் காலங்களில் இப்படியாக உண்மை வரலாறுகளை பலர் சுதந்திரமாக எழுத முடியாது இருந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட கபில கெந்த விதாரணவின் தலைமையிலேயே ரெலோவின் அராலி தெற்கு முகாம் ஒன்றும் தாக்கப்பட்டு ரெலோவின் போராளிகள் கொல்லப்பட்டனர் (அன்று கப்படன்)

1980களில் ரெலோவினால் மேற்கொள்ப்பட்ட நீர்வேலி வங்கி கொள்ளை சம்பவ காலத்திற்க்கு முன்பாக உமா மகேஸ்வரனுடன் ஏற்ப்பட்ட பிணக்கு காரணமாக உமாகேஸ்வரன் பிரிவினரால் தனக்கு ஆபத்து ஏற்ப்படலாம் என்றுஅன்றய காலத்தில் பிரபாகரன் ரெலோவின் உறுப்பினராக மீள ரெலோவில் இணைந்திருந்தார் அன்று பிரபாகரனை இயக்கத்தில் இணைப்பதில்லை என்று ரெலோ முடிவு எடுத்திருந்த போதிலும் தங்கத்துரையும் சிறீசபாரத்தினமுமே பிரபாகரனும் போராளி எமக்கு அதில் முரண்பட எதுவுமில்லை என்று பிரபாகரனை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என முன்மொழிவு செய்திருந்தனர்.

நீர்வேலி வங்கி கொள்ளையின் போது திட்டமிடப்பட்டபடி  பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அலுவல் எந்தவொரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எம்தோழ்ரகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய எத்தனித்தால் அவரை உடனடியாக சுட்டு கொல்லுவது என்பதே ஆனால் பிரபாகரனின் துப்பாக்கி இயங்காது போனதும் இதனால் மீள துப்பாக்கியை இயக்க வேண்டிய நிலை உருவாகி தாமதாகியதால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரபாகரனை குறிவைத்ததாகவும் அதே வேளை இந்த சம்பவத்தை பிரபாகரன் அறிந்திருக்கவில்லை என்றும் இதை உடனே அவதானித்த சிறீசபாரத்தினம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தி பிரபாகரனை பாதுகாத்தார் என்பது சிறீசபாரத்தினத்தின் வாயால் அறிந்திருந்தோம். அன்றய காலங்களில் துப்பாக்கி பாவிப்பதில் எல்லா ரெலோ உறுப்பினர்களும் மிகவும் தேர்ந்தவர்களும் அல்ல !!

இந்த சம்பவத்தை மறந்த கிட்டு சிறீசபாரத்தினத்தை கொலை செய்த முறை மனித குலத்திற்கே வெட்கக்கேடானதாகும். சிறீசபாரத்தினத்தை கொலை செய்ய பிரபாகரனே ஆணை வழங்கியதாக பின்னர் கிட்டு ஜரோப்பாவில் அது தனது தலைவரின் கட்டளை என்று லண்டனில் கோல்போனில் தமிழர் தகவல் நடுவம் நடாத்திய புலிகளுடன் சந்திப்பு கூட்டத்தில் கிட்டு கூறினார் இது தான் புலிகளின் வரலாறு உதவி செய்தவைனையே கொல்வதும் தனது சகோதரர்களையே பழிவாங்குவதுமாகும்.

இந்த காலத்தில் இந்த சம்பவத்தின் பின்னர் யாழ் ஈழநாடு பத்திரிகையில் நான் உயிருடன் இருக்கும் வரையில் ரெலோ செய்த நன்றிக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருநதார். இந்த இராணுவ நடவடிக்கையில் பாக்கிஸ்தானில் விசேட பயிற்ச்சி பெற்ற கொமாண்டோக்கள் கெலிக்கெப்டர்கள் மூலம் கிட்டுவின் பதுங்கு முகாம்களை தாக்கியிருந்ததும் இந்த மாதிரியான தாக்குதல் முதல்முறையாக பரீட்சிக்கபபட்டதும் பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

அன்ற ரெலோவின் ஆதரவு இன்றி புலிகள் தப்பியிருந்திருக்க முடியாததை புலிகள் பிற்காலத்தில் அது போன்ற இதர தமிழ் போராட்ட அமைப்புக்களின் ஜக்கிய உணர்வை தவறாகவே புலிகள் புரிந்து கொண்டிருந்தனர் என்பது புலிகள்  ரெலோ ஈபிஆர்எல்எப்  போன்ற அமைப்புகள் மீறு செய்த படுகொலைகள் சான்றாகின்றது.

இப்படியான புலி அமைப்பு தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் போன்றதொரு முடிவிலேயே இட்டுச்செல்வாரகள் என்பதை அன்றிலிருந்தே பல முன்னாள் போராளிகள் கருத்து கொண்டிருந்தனர் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது. இந்த கருத்தை ரெலோவின் தலைவர் தங்கத்துரை மீண்டும் இலங்கை சிறைச்சாலைகளிலிருந்தும் வெளிப்படுத்தியிருந்துள்ளார் என்பதும் இங்கு நினைவுபடுத்துவது நன்று.

அதேபோன்று யாழ் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொலைக்கு காரணமாக இருந்து தாக்குதலை நடாத்த வேண்டாம் என ரெலோவும் சிறைச்சாலைகளிலிருந்து தஙிகத்தரை போன்றோரும் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் வேண்டு கோள்விடுத்திருந்தனர் இப்படியான கண்மூடித்தனமாக இலங்கை இராணுவத்தினரை கொல்வது போராட்டமல்ல இது மேலும் எமது தமிழர் உரிமைப் போராட்டததை தவறாகவே வழிநடாத்தும் என்பதை அன்றய காலங்களில் பல முன்னாள் போராளிகளும் பல தடவைகள் பல இடங்களில் குறிப்பிட்டும் வலியுறுத்தியும் வந்துள்ளனர் அக்காலங்களில் சுத்த இராணுவ அமைப்பாகவே புலிகள் அமைப்பை மற்றய தமிழ் போராட்ட அமைப்புகள் கணித்து வைத்திருந்தனர் என்பதும் இங்கு நினைவு படுத்துவது அவசியம் இந்த கருத்தை முன்வைத்தவர்களில் பல ரெலோ தோழர்கள் பல ஈபிஆர்எல்எப் தோழர்கள் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ரெலோ இயக்க தலைவர்கள் கைது செய்ப்பட காலங்களில் சிறீசபாரத்தினம் ரெலோவின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதும் பிரபாகரன் தான் புலிகள் இயக்கத்தை இயக்கப்போவதாக கூறி இவர்களின் குழுவிலிருந்து வெளியேறி இராணுவ தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தவர் இக்காலங்களில் எமது தலைவர்களை சிறையிலிருந்து வெளியே எடுக்கும் முயற்ச்சிகளில் இருக்கிறோம் என ரெலோவினர் கேட்டதும் பிரபாகரனுக்கு ஆச்சரியமான விடயமாக இருந்தது காரணம் தான் குழுவிலிருந்து வெளியேறியது ஒரு தவறான விடயமாகவே தங்கத்தரை குட்டிமணி போன்றோர் கருதுவார்கள் என்பதேயாகும் குட்டிமணி தங்கத்தரை போன்றோர்கள் வெலிக்கடை சிறையிலிருந்து தப்பி வந்தால் தனது உயிருக்கும் தனது திட்டங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என்றே நாட்டை குழப்ப வேண்டும் என்றே திருநெல்வேலியில் இராணுவத்தை தாக்கினார் என்பது இன்றும் பல ரெலோ உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது இப்படி தாக்குதல் செய்ய வேண்டாம் என புலிகளிடம் கேட்ட ரெலோவின் உறுப்பினர் இன்றும் லண்டனில் ரெலோவுடன் இணைந்து இயங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்களை ரெலோவின் முதல் தொகுதி இராணுவப் பயிற்ச்சியாளர்கள் எல்லோரிடமும் இந்த கருத்து இருந்திருக்கின்றது என்பது இன்று அவர்களுடன் பேசும் போது புரிந்து கொள்ளலாம்.

புலிகள் ஒரு சுத்த இராணுவ கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறார்கள் இது மக்களின் போராட்டத்திற்க்கு பாதமாகமான விளைவுகளை உருவாக்கி போராட்டத்தை ஆதாழ பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் மக்களை அணிதிரட்டுதல் என்பது வேறு இராணவத்தினரை கொல்லுதலும் இராணுவத்தினரை கொல்லுவதன் மூலம் போராட்டத்தை வெளிப்படுத்ததல் என்பது பயங்கரவாதமே என்ற கருத்தை பலரால் வெளிப்படுத்தப்படடிருந்தது  குறிப்பாக ஈபிஆர்எல்எப் ரெலோ அமைப்புக்களின் மக்கள் சந்திப்பு கூட்டங்களிலும் பல பயிற்ச்சி பாசறைகளிலும் அரசியல்வகுப்புக்களிலும் எடுத்துக் கூறப்பட்டிருந்ததை இங்கு நினைவு படுத்துவது நல்லது.

ரெலோ அமைப்பினுள் ஏற்ப்பட்ட உட்பூசல்களின் போது பிரபாகரன் ரெலோவினுள் இருந்த சில தனது ஆட்களை தெரிவு செய்து துப்பாக்கி வழங்கி சிறீசபாரத்தினத்தை கொலை செய்ய இந்தியாவில் தூண்டியிருந்தார் அத்துடன் சில ரெலோ தோழர்கள் தங்கும் இடங்களுக்கு புலிகளின் உறுப்பினர்கள் போய் சிறீசபாரத்தினம் தவறானவர் எம்மிடம் வந்து சேருங்கள் எனவும் கேட்டனர் இதன் போது ரெலோ உறுப்பினர்கள் புலி உறுப்பினர்களை விறகுகட்டையால் அடித்து விரட்டியிருந்தனர் . இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட புலிகளும் அடித்துவிரட்டிய ரெலோ உறுப்பினர்களும் இன்றும் ஜரோப்பாவில் கனடாவில் வாழ்கின்றார்கள்.

இந்த சம்பவத்தின்போது குட்டிமணிஃதங்கத்துரை போன்றோர்களின் சகோதரிகளைே சிறீசபாரத்தினத்தின்மீதான் இந்த திட்டங்களை வல்வெட்டித்துறை தொடர்புகள் மூலம் அறிந்து சிறீசபாரத்தினத்தை காப்பாற்றினார்கள்.

ரெலோவை அழிக்க புலிகளும் பிரபாகரனும் எவ்வளவு முயற்ச்சித்திருக்கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த சம்பவ காலத்தில் நான் ரெலோவின் இயங்குனராக இந்தியாவில் செயற்ப்பட்டிருந்தேன்.

தமிழர் போராட்ட அமைப்புகளின் ஜக்கியம் இன்றி தமிழ் உரிமைப்போராட்டம் சாத்யமற்றது என்ற புரிதலின் அடிப்பபைடயில் ரெலோ ஈபிஆர்எல்எப் ஈரோஸ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஈஎன்எல்எப் என்று கூட்டுமுன்னணியை உருவாக்கியிருந்தனர் இந்த கூட்டு முன்னணியின் அவசியத்தையும் பலத்தையும் புரிந்து கொள்ளாத புலிகள் கூட்டுமுன்னணியை உடைத்தெறியும் நோக்குடனேயே கூட்டுமுன்னணியில் இயங்க முன்வந்திருந்தனர் பின்னர் ஒருவருட காலத்துக்குள் இந்த கூட்டு முன்னணியின் முக்கிய உறுப்பு அமைப்புகளான ரெலோ ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் கொன்று குவித்தனர் அன்றய காலத்தில் குறிப்பாக பிரபாகரனின் கருத்தில் இயக்கங்களின் தவைர்களை கொன்றால் அந்த அமைப்பு அழிந்துவிடும் அந்த அமைப்பு உறுப்பினர்களை தனது இயக்கத்தில் இணைத்து விடலாம் என்ற பலமான நம்பிக்கையுடன் இருந்தவர் இதற்காக பல உதாரணக் கொலைகளையும் புலிகள் செய்திருந்தனர் அதில் ரெலா மற்றும் ரெலி இயக்ங்களின் மீதான தாக்குதல்களாகும் அந்த அமைப்புக்களின் மீதான தாக்குதல்களுடன் அந்த அமைப்புக்கள் தொடர்ந்து இயங்க முடியாது போயிருந்ததே.

இக்காலங்களில் மக்களின் உரிமைப்போரட்டத்தை அக்கறையுடன் நேசித்த ரெலோ  ஈபிஆர்எல்எப் தலைவர்கள் புலிகளின் பிரபாகரனின் இந்த சதிப்பின்ணியை கவனமெடுத்து பார்க்காமலேயே பிரபாகரனுடன் கூட்டமைப்பில் இணைத்துதிருந்தனர் பின்னர் புலிகள் உள்ளிருந்து கொலை செய்தனர் ரெலோ ஈபிஆர்எல்எப அமைப்பு தலைவர்கள் தோழர்களை கொலை செய்தனர்.

புலிகள் ரெலோ ஈபிஆர்எல் மீதான தாக்குதல்காலங்களில் இலங்கை இராணுவம் புலிகளால் தாக்கப்படும் ரெலோ இயக்கத்தை அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை தம்மிடம் வந்து சரணடையுமாறு கேட்டிருந்தபோதும் தலைவர் சிறீசபாரத்தினம் அன்று இலங்கை அரசிடம் சரணடையவில்லை மாறாக யாழ் கல்வியங்காட்டு பகுதியில் சுற்றிவர நிலக் கண்ணி வெடிகளை போட்டு மக்களுக்கு என்ன நடந்தாலும் சரி என்று தன்னை பாதுகாக்க முன்னவரவில்லை.

(இலங்கை இராணுவம் ரெலோவையும் சிறீசபாவையும் சரணடையுமாறு வேண்டு கோள்விடுத்த பலாலி படைத்தறை தளபதி பின்னர் தனது சுயசரிதை புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்)

புலிகளுக்கு எதிராக எந்த ஒரு ரெலோ போராளியோ சிறீசபாரத்தினமே தன்மை பாதுகாக்க இலங்கை அரசிடம் சரணடையவில்லை அன்று ரெலோவின் போராளிகள் இலங்கை அரசிடம் சரணடைவது என்பத தமிழ மக்கள் உரிமைப போராட்டததை காட்டீக்கொடுப்பதாகவே இருக்கும் என்றே சிறீசபாவும் ரெலோ போராளிகளும் கருத்து கொண்டிருந்தனர் அன்று அவர்கள் இலங்கை அரசிடம் சரணடைந்து புலிகளை பழிவாங்குதலே போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் புலிகளின் வரலாறு வேறாகியிருந்திருக்கும்.

புலிகள் தமது இறுதிக்காலத்தில் மக்களை கேடயமாக பயன்படுத்தியும் தாம் தப்பிக்க முயற்ச்சித்து தோற்றுப் போனவர்கள் என்பது வரலாறு அதே போன்று உதவி செய்கின்றோம் என்றவர்கள் புலிகளை கைவிட்டதே வரலாறு.

புலிகள் எதை சகோதர இயக்கங்களுக்கு விதைத்தார்களோ அதையே அறுவடை செய்தார்கள்

இன்று புலிகளின் முன்னாள் உள்ள நல்ல உதாரணம் கருணா பிள்ளையான் போன்றோர்கள் இலங்கை அரசிடம் சரணடைந்த பின்பு புலிகளுக்கு நடைபெற்ற பின்னடைவும் அழிவும் புலிகளின் வரலாற்று முடிவும் சான்றாக இருக்கின்றது.

இந்தியாவின் பக்க துணையின்றி தமிழர் உரிமைப்போராட்டத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்நிதிருந்தவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினமாகும் அவர் ஜேர்மனிக்கு வந்திருந்த போது பத்திரிகைக்கு வெளியிட்டிருந்த செய்தி தமிழீழப்போராட்ட வெற்றி என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்தது என்பதாகும் அக்கருத்து இன்ற வரையிலும் உண்மையாகவே இருக்கின்றது இந்த சர்வதே அரசியல் பின்னணியை சரியாக புரிந்து கொள்ளாத புலிகள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தியையும் இந்திய தமிழர்களையும் கொலை செய்தது   புலிகள் அழிந்த பின்னும் புலிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது.

ரஜீவ் காந்தியையும் அவருடன் சேர்த்து தமிழ்நாட்டு தமிழர்கள் 13 பேரையும் புலிகள் கொலை செய்திருந்தனர். ரஜுவ் காந்தி புலிகளுக்கு உதவிகள் செய்திருந்த போதிலும் புலிகள் கொல்லுவதற்க்கு தயங்கவில்லை இது கொலைகளால் தீர்வு காணும் முயற்ச்சியே புலிகளின் தோல்விக்கும் காரணமாகியது.

முள்ளிவாக்காலில் தமிழர் போராட்ட முடிவும் புலிகளின் அழிவும் புலிகள் தமக்கு தாமே தேடிக்கொண்ட அரசியல் தெளிவற்ற பயங்கரவாதத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டதின் வினையே யாகும்.

அதுமட்டுமல்ல தமிழர் போராட்டத்தை இன்றுள்ள பலவீனமான நிலைக்கு தள்ளிவிட்டிருப்பதும் புலிகளின் தவறே அன்றி தமிழ் மக்களின் தவறு அல்ல!!

புலிகளும் புலிகளின் தலைமைகளும் முரண்பாடுகள் வேறுபாடுகள் அரசியல் குரோதங்கள் யாவற்றிக்கும் கொலை செய்வதாலேயே பதில் அளித்துள்ளார்கள் இதற்க்கு பல உதாரணங்கள் உள்ள போதிலும் ஒன்றை இங்கு நினைவு படுத்தலாம்.

யாழ் திருநெல்வேலியில் கிட்டுவுக்கு எதிராக மேற்கொள்ப்பட்ட கிரனைட் தாக்குதலில் கிட்ட கால் இழந்தார் இந்த சம்பவம் நடைபெற்ற உடனேயே புலிகளின் தளபதி அருணா தமது தடுப்பு காவலில் வைத்திருந்தத 

ஈபிஆர்எல்எப் தோழ்ரகள் 45 பேரையும் கொலை செய்தனர் இக்கொலையின்போது தப்பியோடிய சில் ஈபிஆர்எல்எப் தோழ்ரகளும் லண்டனில் இருக்கிறார்கள் இதற்கிடையில் தமது இயக்கத்திள் இருந்த மாத்தையா பிரிவினரா அல்லது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒத்துழைத்தார்களா? ரெலோவின் ஊறுப்பினர்களா என்றெல்லாம் சந்தேகம் கொண்டு கொலைக்கா தேடி அலைந்தார்கள் பல யாழ் மக்களுக்கு தெரிந்த விடயம் புலிகளிள் அழிவின் பின்னரே இது தீப்பொறியினரே தாக்குதல் செய்தனர் என்பது அம்பலத்துக்கு வந்தது. -இதுவே புலிகளின் போராட்ட கால கையாளுகைகளாகும்.

ரெலோ இயக்கத்தின் தலைவர்களையும் போராளிகளையும் அன்று ஒலிபெருக்கி மூலம் சரணடைய கொரியும்  வீதிகளில் டயர் போட்டும் .விறகு பொட்டும் உயிருடன் எரித்தபல புலி உறுப்பினர்கள் இன்றும் இலங்கையிலும் ஜரோப்பாவிலும் கனடாவிலும் அமைதியாக கனவான்களாக வாழ்கிறார்கள் என்பத ஒவ்வொரு முன்னாள் ரெலோ போராளிகளும் அவர்கள் முகத்தை பாரத்துக்கொண்டே நடக்கிறார்கள்  என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருக்கிறார்கள்.

இன்னும் எத்தனையோ விடயங்களை தமிழ் மக்கள் அறிய வேண்டிய தேவைகள் இருக்கின்றது இந்த விடயங்களை தொகுத்து பார்க்காமல் புலிகளின் போராட்டம் என்ற ஒற்றை கருத்துக்குள் கடந்த 30 வருட ஆயுதப்போராட்டதை போட்டுவிட முடியாதாகும்.

அன்றய புலிகள் இன்றய புலிகள் புலிக்கொடி புலிச்சின்னம் புலி அமைப்புக்கள் புலிகளின் போராடடம் யாவும் சகோதரப் படுகொலையின் சின்னங்கள் என்பதை பலர் அறியாமலே இன்று அந்தக கொடியினை உயரத்திப்பார்க்கிறார்கள் புலிக்கொடியின் சிகப்பு நிறம் சகோதரப்படுகொலையின் இரத்தமேயாகும்.

ஈழப் போராட்டத்தின் தமிழர் உரிமைப் போராட்டத்தின் வெற்றியானது இந்திய பெருமக்களின் நலனுடன் பின்னிப் பிணைந்ததே என்பதை நாம் நன்கு உணர வேண்டும். – சிறீசபாரத்தினம் (1984)

இன்று ஜரோப்பாவிலும் உலகெங்கும் வாழும் முன்னாள் ரெலோ போராளிகள் சார்பாக துரோகிகள் யார் என்பதை வெளிப்படுத்தவும்இ தலைவர் அமரர் சிறீசபாரத்தினத்தை ஞாபகப்படுத்தும் முகமாகவும் ரெலோ தோழர்கள் படுகொலை செய்ப்பட்ட இந்த வாரத்தில் இதை வெளியிடுவதற்காக எழுதப்பட்டது.

தகவல்களை திரட்டும் போது சபாரட்னத்தின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரை சந்தித்தேன். எனினும் சபாரட்னம் துப்பாக்கி ஏந்திய நிலையில் நான் எப்போதும் பார்த்ததில்லை என அவரது மெய்ப்பாதுகாவலர் சொன்னார். நான் ஆச்சரியமடைந்தேன். – சீ.ஏ. சந்திரபிரேம.

(இக் கருத்துக்களை எல்லா தளங்களிலும் பகிர்ந்து புலிகளால் படுகொலை செய்ப்பட்ட தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ போராளிகளுக்கு அஞ்லி செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.)

புலிகளின் சகோரப்படு கொலைகளால் கொல்ப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலிகள் !!! !! !!

-ரெலோ லண்டன்.

அவர்களும் நம்மவர்கள்தான்!

நான் ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்றுவேன்” என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். 

இந்தக் குடியேறல்களின் வரலாறு என்ன, இப்படிச் செய்ய முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல்  பலர் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தின் செராம்பூர் என்ற ஊரில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது “மே 16-ம் தேதி மக்களவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் ஊடுருவியவர்கள் அனைவரும் பெட்டி, படுக்கையுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்” என்றார். 

இது ஏதோ பொதுக்கூட்டத்தில் மக்களிடையே கைத்தட்டலைப் பெறுவதற்காகப் பேசியது என்று விட்டுவிட முடியாது. இந்திய மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் – ஏன் பா.ஜ.க-வுக்குமே – சில விஷயங்களை விளக்க வேண்டியது நம்முடைய கடமை.

நாட்டை வளர்ப்பவர்கள்

‘வெளிநாட்டவர்கள்’ என்று தாங்கள் நினைப்பவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் உரிமை அரசுக்கு இருக்கிறது என்று 1946-ல் இயற்றப்பட்ட இரக்கமற்ற ஒரு சட்டம் இடம்தருகிறது. 

‘தாங்கள் இந்த நாட்டில்தான் தொடர்ந்து வசித்துவருகிறோம், வெளிநாட்டவர்கள் அல்ல’ என்று ஆதாரங்களைக் காட்டி அதை நீதிமன்றத்தில் நிலைநாட்டுவது, அப்படி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மக்களின் பொறுப்பு என்கிறது சட்டம்! வங்கதேசம் உள்ளிட்ட பக்கத்து நாடு களில்கூட இத்தகைய பயங்கரமான உட்பிரிவுகளைக் கொண்ட சட்டம் தான் அமலில் இருக்கிறது. 

பெரும்பாலான நாடுகளுக்கு இத்தகைய சட்டம்தான் அப்பாவிகளைத் துன்புறுத்தும் ஆயுதம். நாடுகளுக்கு இடையிலான எல்லையில் சரக்குகளையும் கூலிக்கு வேலை செய்வோரையும் மட்டும் அனுமதிப்பதே நாடுகளின் ‘எல்லைப் பாதுகாப்புப் பணி’யாக இருக்கிறது. 

இப்படி வெளிநாட்டவர்களை உள்ளே வர அனுமதித்துவிட்டு, பிறகு அவர்களைச் ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக’ மாற்றிவிடுகின்றன அரசுகள். ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் வேலையில் ஈடுபடும் இவர்கள் வெறும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

உலகம் முழுக்க நாடற்ற அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 120 லட்சமாக இருக்கும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நாடற்றவர்கள் என்று அழைக்கப்படுவோரில் அகதிகளும் அரைக்குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர். 

அவர்களை அடையாளம் காண்பதும் கணக்கெடுப்பதும் மிகமிகச் சிரமம். ஆண்கள், பெண்கள், சிறுவர் – சிறுமியர் என்று கலந்து வாழும் இந்த மக்கள், தேசிய அரசுகளால் ஒதுக்கப்பட்டவர்கள், அந்த நாடுகளின் சட்டங்களால் சட்டவிரோதக் குடிமக்களாக ஆக்கப்பட்டவர்கள். “இந்த மக்கள் மீது இரக்கம் காட்டத் தேவையில்லை. அப்படிக் காட்டுவது அறிவுஜீவிகளின் வெட்டிவேலை” என்று பாரதிய ஜனதாவும் அவர்களைப் போன்ற சிந்தனை உள்ள கட்சிகளும் நினைக்கக்கூடும். 

ஆனால், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், பிற நாடுகளை, மதத்தைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நற்சிந்தனை உலகில் பல்வேறு மக்களிடையே நிலவுவதால்தான் இந்துக்களும் இந்தியர்களும் பிற நாடுகளில் அகதிகளாக மாறும் நிலைமை யிலும் கண்ணியமாக நடத்தப்படுகின்றனர்.

இனம், மதம், நாடு ஆகியவற்றை அடையாளம் காட்டி, திரிக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் மக்களை விரோதி களாகக் கற்பிதம்செய்துகொண்டு வெறுக்கும் கும்பல்களின் ஆதரவைத் தேர்தல் காலத்தில் பெற்றுவிட அரசியல் கட்சிகளும் இந்த அப்பாவிகளைப் பலிகடாவாக்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. 

தேர்தல் முடிந்துவிட்டால் இந்த அகதிகளையே மிகவும் கடினமான – சில வேளைகளில் உயிருக்கு ஆபத்தான – வேலைகளில், எந்தவித நஷ்ட ஈடும் தர வேண்டியிராத ஒப்பந்தங்களின் அடிப்படையில், குறைந்த கூலி கொடுத்து கசக்கிப் பிழிந்து தங்களுடைய வீடுகளிலும் தொழில்நிறுவனங்களிலும் கட்டுமானத் தளங்களிலும் வேலை வாங்குகின்றனர் முழு குடியுரிமை பெற்ற சட்டபூர்வக் குடிமக்கள்!

சும்மா உட்கார்ந்து சாப்பிடுவதில்லை

ஒரு நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றம்சாட்டப்படும் மக்கள் யாரும், தாங்கள் குடியேறிய நாடுகளில் சும்மா உட்கார்ந்துகொண்டு மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை. காரணம், அப்படிச் சாப்பிட அவர்களுக்கு வாய்ப்பே இல்லை. 

நம்மில் பெரும்பாலானவர்களைப் போலவே அவர்களும் தாங்கள் புகுந்த நாடுகளில் கடுமை யாக உழைக்கின்றனர். தாங்கள் வாழுமிடத்தில் எப்படி நடத்தப்பட்டாலும் உள்ளூர் மக்களிடம் அன்பாகவும் நட்புடனும் பழகுகின்றனர். அந்தந்த ஊர்களையே அவர்களுடைய சொந்த ஊர்களாகக் கருதுகின்றனர். அந்த ஊர் மக்கள் பேசும் மொழியைக் கற்றுக்கொண்டு அதையே பேசுகின்றனர்.

தங்களுடைய முழு உழைப்பை அளிக்கின்றனர். நகர்ப்புறங் களில் வேலை தேடிக் குடியேறுவோர் குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி, பாதை என்று அடிப்படை வசதி எதுவும் இல்லாத சேரிப் பகுதியில் எவர் கண்ணிலும் படாமல் வாழ்கின்றனர். 

மனிதர்களாக வாழ அவர்களுக்கு நாம் எந்த வசதியும் செய்துகொடுக்காதபோதும், அவர்கள் நமக்காக உழைத்து வாழ்கின்றனர். ஆனால், அரசியல் கட்சித் தலைவர்களோ அவர்களை அந்த இடத்திலிருந்து விரட்டிவிட்டு, அந்த இடத்தையும் நிலங்களையும் நமக்கு மீட்டுத்தருவதாக மேடை களில் முழங்குகின்றனர்.

வங்கதேசத்தில் ‘பிகாரிகள்’ என்று அழைக்கப்படுகிற உழைக்கும் மக்களும், ஐக்கிய அரபு சிற்றரசில் ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்று பட்டம் கட்டப்பட்டவர்களும், அமெரிக் காவில் உள்ள இந்திய டாக்சி டிரைவர்களும் இப்படித்தான் அந்தந்த நாடுகளின் பொருளாதாரம் வளம்பெறக் கடுமையாக உழைத்துவருகின்றனர். 

பாஸ்போர்ட்டுகள் வாங்கவும் அடையாள அட்டை பெறவும் பொதுச் சேவைகளைப் பெறவும் அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிட்டவும் மிகக் குறைந்த கூலி அல்லது சம்பளத்துக்கு வேலைசெய்துகொண்டு அவர்கள் படாதபாடு படுகின்றனர். ‘

நீ யார்?’, ‘எங்கிருந்து வந்தாய்?’, ‘உனக்கு இங்கென்ன வேலை?’ என்று இடைவிடாமல் தன்னை நோக்கித் தொடுக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், தான் வாழும் நாடு எதுவோ, எந்த நாட்டுக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி வேலை செய்கிறோமோ, அதுதான் என் நாடு என்று பதிலாக அல்ல – வரலாறாகப் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள்.

மனிதாபிமானமுள்ள அரசுகள் தேவை

உயிரை உருக்கும் வறுமையிலிருந்து தப்பிக்கவோ, பாரபட்சமாக நடத்தும் அரசின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவோ எல்லை கடந்துவரும் மக்கள், தங்களுக்கென்று இருந்த சில உடமைகளையும் சலுகைகளையும் உரிமைகளையும் அங்கேயே உதறிவிட்டுத்தான் வருகிறார்கள். 

அவற்றைச் சட்டென்று கையை நீட்டிப் பறித்தோ, மோடியைப் போல ஓர் அறிவிப்பு செய்தோ பழைய நிலைக்கு அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த முடியாது. சுதந்திரம் அடைந்த பிறகு, நம் நாட்டின் மேற்கிலும் கிழக்கிலும் லட்சக் கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊரைவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்தபோது ஏற்பட்ட ரணங்களும் வலிகளும் இன்னும் மறையவில்லை. 

மீண்டும் அதே போன்ற துயரங்கள் தொடர வேண்டுமா? இதைச் செய்துதான் நம் நாட்டில் வளர்ச்சியைக் கொண்டுவரப்போகிறோமா? அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்படியான மனித உரிமைகள் என்ற கருத்துக்கு, பா.ஜ.க-வின் “குறைந்தபட்ச அரசு – நிறைந்த நிர்வாகம்” என்ற கோஷம் எட்ட முடியாத தொலைவில் இருக்கிறது.

(கட்டுரையாளர் ‘மனித உரிமைகள், சுற்றுச்சூழல் நீதி’ ஆய்வு மாணவர்.)
‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி.

புலிகளின் இன்னொரு முகம் -31

சாதாரணமாக தில்லை இரகசியங்களை வெளியிடுபவரல்ல. ஆனால் புலிகளின் கடுமையான சித்திரவதைகள் அவரை நிலைகுலைய வைத்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. நான் அவரை சிறைச்சாலைக்குள் கண்டபொழுது அவர் இருந்த கோலமும் இந்த உண்மையை ருசுப்படுத்துவதாக இருந்தது.

தில்லை கைது செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்பதாக என்னிடம் இருந்த சில முக்கியமான ஆவணங்களையும், புத்தகங்களையும் அவரது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருந்தேன். அதற்கான காரணம், சில வேளைகளில் புலிகள் என்னைக் கடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இருந்து வந்ததுதான். 

பெரும்பாலும் எல்லா இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டுப் பாதுகாப்புத்தேடி வெளியேறிவிட்ட சூழ்நிலையில், என்போன்ற ஓரிருவர்தான் அங்கு தங்கியிருந்தோம். எனவே என்னைப் போன்றவர்கள் கூட ஏன் அங்கு இருக்க வேண்டும் என்ற சிந்தனை புலிகளிடம் உருவாகக்கூடும் என எண்ணினேன்.

என்னைக் கைதுசெய்த 1991 டிசம்பர் 26ம் திகதிக்கு ஒரு மாதம் முன்னதாக நான் கொழும்பு சென்று வந்திருந்தேன். புலிகளிடம் அனுமதி சீட்டு (பாஸ்) பெற்றே சென்றேன். 

அப்பொழுது கொழும்பு பயணம் கேரதீவு – சங்குப்பிட்டி பாதையூடாக பூநகரியைத் தொட்டே செல்ல வேண்டும். நான் சென்ற வாகனத்தைப் பூநகரில் வழிமறித்த புலிகள், அதில் பயணம் செய்தவர்களின் அடையாள அட்டைகளைத் துருவித்துருவி ஆராய்ந்ததுடன் சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்களை கூட்டிச் சென்றார்கள். அந்தப் பாதையால் வந்த எல்லா வாகனங்களிலும் இது நடந்தது.

1990ல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆதரவுடன் புலிகள் முழு வடக்கு கிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். 

அன்றே அவர்கள் மாற்று இயக்க உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள், இந்திய அமைதிப்படையுடன் சாதாரண முறையில் பழகியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோரைக் கடத்தி தமது வதை முகாம்களில் வைக்கத் தொடங்கியிருந்தனர். 

அந்த முகாம்களில் மிகப்பெரியது துணுக்காய் வதைமுகாம். அங்கு சுமார் நான்காயிரம் பேர் வரை தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மிகச் சிலரே உயிர் தப்பிப் பிழைத்தார்கள்.

அம்புறோஸ் என்ற புலிகளின் புலனாய்வாளன் என்னுடன் ஒருமுறை கதைக்கும் போது, “நீங்கள் அதிஸ்டசாலி. நாங்கள் எங்கடை நிர்வாகங்களை ஒழுங்குபடுத்தி, முறைப்படியான சிறைச்சாலைகளை அமைச்ச பிறகு கைதுசெய்யப்பட்டிருக்கிறியள். 

அதுக்கு முதல்லை பிடிபட்டிருந்தால் துணக்காயிலைதான் கிடந்திருப்பியள்” என்று கூறினான். இப்பொழுது நான் இருக்கும் முகாமே இப்படியென்றால், துணுக்காய் முகாம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.

நான் நவம்பரில் கொழும்பு சென்ற போது புலிகள் யாழ்ப்பாணத்தில் தமக்கு எதிரானவர்களை வகைதொகையில்லாமல் கைது செய்கிறார்கள் என்ற செய்தி அங்கும் பரவி இருப்பதைக் கண்டேன். எனவே பலர் – தோழர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்கள் கூட என்னைத் திரும்பி யாழ்ப்பாணம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர். 

ஆனால் நான் இன்னொருவரைப் பிணை வைத்து புலிகளிடம் அனுமதிச் சீட்டுப் பெற்று வந்ததால், நான் திரும்பிப் போகாவிட்டால் அவரைக் கைதுசெய்து வைத்துவிடுவாhகள் என்பதால், நான் எப்படியும் திரும்பிப் போகவேண்டிய நிலையில் இருந்தேன். 

அத்துடன் எனது மனைவியையும் குழந்தையையும் யாழ்ப்பாணத்தில் தனியே விட்டுவிட்டு, நான் மட்டும் பாதுகாப்புத்தேடித் தப்பியிருக்க முடியாது. எனவே திரும்பி யாழ்ப்பாணம் சென்று, புலிகளின் கைகளில் சிக்கிக் கொண்டேன்.

புலிகளிடம் சிக்கிக்கொண்டபடியால், இனி நான் அவர்கள் எனக்கு முன்னரே கைதுசெய்த தோழர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை ஒளிக்க முடியாது. நான் எதிர்பார்த்ததிற்கு மாறாக அவர்கள் தில்லை, செல்வி போன்றவர்களைக் கைதுசெய்திருந்தபடியால், குறிப்பாகத் தில்லையுடன் நான் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து அவரிடம் நிறைய விடயங்களைக் ‘கறந்திருப்பது’ தெரிந்தது.

நான் தில்லையிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்திருந்த புத்தகங்களில் கிடைப்பதற்கரிய சில மார்க்சிசப் புத்தகங்களும் இருந்தன. அத்துடன் ஆவணங்களில் கட்சியின் முக்கிய அறிக்கைகளுடன் சில கடிதங்களும் இருந்தன. 

அதில் ஒரு கடிதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த புலிகளுக்குச் சார்பான ‘மறுமலர்ச்சிக் கழக’த்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவரஞ்சித் என்பவர் எனக்கு எழுதிய கடிதம். 

அவர் நாட்டைவிட்டு வெளியேறி நோர்வேயில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சூழலில், சாதாரணமாக என்னிடம் சுகம் விசாரித்து அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.

சிவரஞ்சித் புலிகளின் ஒரு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், அவரும் அவரது துணைவியார் ரதியும் என்னுடன் அன்புடன் பழகியவர்கள். அதற்கொரு காரணம், வழமையான புலிகளின் பாணியைவிட்டு சிவரஞ்சித் எல்லோருடனும் சகஜமாகப் பழகியமையாகும். 

சிவரஞ்சித்தின் இந்தப் போக்குக் காரணமாகவும், புலிகளின் சில கொள்கைகளுடன் அவர் ஒத்துப் போகாததாலும், புலிகளுக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, அவரை அவர்கள் ஒதுக்கி வைக்கும் ஒரு சூழலும் ஒரு கட்டத்தில் உருவானது.

சிவரஞ்சித்தை புலிகள் ஒதுக்கிய பின்னர், சிவரஞ்சித் தம்பதியினர் வாடகைக்குக் குடியிருந்த நல்லூர் பண்டாரக்குளம் வீதி வீட்டையும் புலிகள் உளவு பார்த்து வருவதாக நான் கேள்விப்பட்டிருந்தேன். 

ஒருமுறை சிவரஞ்சித்தின் துணைவியின் உறவினரான சண் என்பவர் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியும் இருந்தனர். சிவரஞ்சித் மறுமலர்ச்சி கழகப் பொறுப்பகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது நெருங்கிய நண்பரான தில்லை போன்றவர்களுடன் இணைந்து இன்னொரு வெளியீட்டைக் கொண்டு வந்திருந்தார். அது புலிகளுக்குப் பிடிக்கவில்லை.

குறிப்பாக “போராட்டத்துக்குள் போராட்டம்’ என்றொரு பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். அதில் தமிழீழ தேசியப் போராட்டத்தை நடாத்துகின்ற அதேநேரத்தில், தமிழ் சமுதாயத்துக்குள் நிலவுகின்ற சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை போன்றவற்றுக்காகவும் போராட வேண்டுமென்பதே அந்தப் பிரசுரத்தின சாராம்சம். 

இந்தக் கருத்து புலிகளுக்கு ஏற்புடையதல்ல. தமிழீழம் அமைப்பதற்கான போராட்டம் நடைபெறுகையில், வேறு எந்தப் பிரச்சினைகளுக்காகவும் போராடக்கூடாது என்பதே புலிகளின் நிலைப்பாடு.

தமிழர்கள் தமிழ் தேசியத்துக்காக மட்டும்தான் போராட வேண்டும், மற்றெந்தக் கோரிக்கைகளுக்காகவும் போராடக்கூடாது என்ற கருத்தும், தமிழர்களுக்கு ஒரேயொரு அமைப்புதான் தலைமைதாங்க வேண்டும் என்ற கருத்தும், புலிகளால் உருவாக்கப்பட்து என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் உண்மையில் அந்தக் கருத்தை முதலில் உருவாக்கியவர்கள் புலிகள் அல்ல.

தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தான் அந்தக் கருத்தின் பிதாமகர் என்பதை, இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவரான தோழர் மு.கார்த்திகேசன் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்தேன். 

தோழர் கார்த்திகேசன் 1940களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளை உருவாக்கும் பொருட்டு கட்சியால் அனுப்பப்பட்டு அங்கு சென்று கட்சி வேலைகளை முன்னெடுத்த போது, தொழிலாளர்களும் விவசாயிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் உரிமை மறுக்கப்பட்ட பெண்களும் தமது உரிமைகளுக்காக தமது சமூகத்துக்குள்ளேயே போராடுவது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.

நிலப்பிரபுத்துவ பழமைவாதத்தின் பிடியில் சிக்கிக்கிடந்த யாழ்ப்பாணத்தில் தோழர் கார்த்திகேசன் விதைத்த இந்தப் புதுமைக் கருத்துக்கள், அவரை எல்லோரும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் முதற் தடவையாக செல்வநாயகத்தை ஒரு பொது நிகழ்ச்சியின் போது கார்த்திகேசன் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய நிர்வாகிகளில் ஒருவர் கார்த்திகேசனை செல்வநாயகத்துக்கு அறிமுகப்படுத்திய போது, “நீங்கள்தான் தமிழர்களில் இரண்டு விதமான தமிழர்களைப் பற்றிப் பேசித்திரியும் கார்த்திகேசனா?” என செல்வநாயகம் தன்னிடம் வேண்டா வெறுப்பாகக் கேட்டதாக கார்த்திகேசன் ஒருமுறை என்னிடம் கூறினார்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்பவர்கள் தமிழ் தேசியம் மட்டும்தான் பேச வேண்டும் எனபதும், ஏகப்பிரதிநிதித்துவத் தலைமைதான் இருக்க வேண்டும் என்பதும், பிற்காலத்தில் புலிகளால் துப்பாக்கி முனையில் நடைமுறைப்படுத்தப்பட்டதே தவிர, அது புலிகளுக்கு முன்னரே அவர்களது பிதா மகர்களால் (‘தந்தை’ செல்வா) உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், அது புலிகள் அழிந்த பின்னரும் இன்றும் தொடர்கின்றது என்பதும் தான் உண்மை. 

அப்படிப் பார்க்கையில் பன்மைக் கருத்துக்களும், பல்வகைத் தலைமைகளும் நிலவுகின்ற சிங்கள சமூகத்தின் ஜனநாயகத் தன்மை, தமிழர்களுடையதைவிட பலபடி முன்னேற்றகரமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், புலிகளுக்குப் பிடிக்காத சிவரஞ்சித், எனக்கு நோர்வேயிலிருந்து எழுதிய கடிதம் தில்லையிடமிருந்து புலிகளின் கைகளுக்குக் கிடைத்ததால், காந்தி அந்தக் கடிதம் குறித்தும் எனக்கும் சிவரஞ்சித்துக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் துருவித்துருவி என்னிடம் விசாரித்தான். 

அவனது சந்தேகம் சிவரஞ்சித் நோர்வே சென்ற பின்னர் நான், தில்லை போன்றவர்களுடன் தொடர்பு வைத்து தங்களுக்கு எதிராக வேலை செய்கிறோம் என்பதுதான். அதில் எந்தவித உண்மையும் இல்லையென்று எவ்வளவோ நான் விளக்கியும் காந்தி அதை நம்பத் தயாராக இருக்கவில்லை.

ஆனால் சிவரஞ்சித் பின்னர் இலண்டன் சென்று வாழத் தொடங்கிய பின்னர்,IBC Radio தொடர்ந்தும் புலிகளின் அமைப்புகளுடன் சேர்ந்து வேலைசெய்ததாகவும், புலிகளுக்குச் சார்பான இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி வானொலிக்கு பொறுப்பாக இருந்ததாகவும் கேள்விப்பட்டேன். 

அங்கும் சில கட்டங்களில் புலிகளுடன் முரண்பட்டதாகவும் கூட அறிந்தேன். நான் 1993 யூன் மாதம் புலிகளின் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர், இலங்கைக்கு தனது குழந்தையுடன் வந்த சிவரஞ்சித்தின் துணைவி ரதி ஸ்ரான்லி வீதியிலிருந்த எமது புத்தகக்கடைக்கு வந்து என்னைச் சந்தித்ததுடன், யாழ்.அத்தியடி புது வீதியிலிருந்த எமது வீட்டுக்குச் சென்று எனது மனைவி மகளுடனும் அளவளாவிவிட்டுச் சென்றார். இது அந்தக் குடும்பம் என்மீது கொண்டிருந்த உண்மையான அன்பின் நிமித்தம் என எண்ணுகிறேன்.

அதேநேரத்தில் தில்லைமீது மிகவும் பிரியம் வைத்திருந்த சிவரஞ்சித், தில்லை புலிகளால் கடத்தபபட்டபோது மிகவும் மனம் நொந்து போயிருந்ததாகவும், பின்னர் தில்லை புலிகளால் படுகொலை செய்யப்பட்டமை அறிந்து கதறி அழுததாகவும் கேள்விப்பட்டேன். புலம்பெயர் நாடுகளில் தற்பொழுது வாழ்ந்துவரும் தில்லையுடன் பழகிய வேறுபலரும் அவ்வாறு மனம் வெதும்பியதாகவும் அறிந்தேன். 

ஆனால் என்னுடனும் தில்லையுடனும் மிகவும் நெருக்கமாகப் பழகி, தான் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் எங்கள் இருவரையும் அந்த நெருக்கடியான நேரத்தில் கொழும்புக்கு அழைத்து அளவளாவிய, பலருக்கும் பரிச்சயமான தற்போது இலண்டனில் வாழ்ந்து வருகின்ற புலிகளின் தீவிர விசுவாசியாக மாறிப்போய்விட்ட பத்மநாப ஐயர், தில்லையின் படுகொலை குறித்து என்ன கருத்துக் கொண்டிருந்தார் என அறிய நான் பல வழிகளிலும் முயன்றும் அது முடியவில்லை. என்னுடனும் அந்தக் கொழும்புச் சந்திப்பின் பின்னர் ஒருபோதும் தொடர்பு கொண்டதும் கிடையாது. புலிகள் இயக்கத்தின் விசுவாசிகளாக இருந்த இரு வௌ;வேறான நிலைப்பாடுகளைத் தெரியப்படுத்தவே இதை இங்கு குறிப்பிட்டேன்.

தில்லையிடமிருந்து புலிகளிடம் சிக்கிய இனனொரு கடிதம், செல்லத்துரை என்ற எனது நண்பரொருவர் கனடாவிலிருந்து எனக்கு எழுதிய கடிதமாகும். செல்லத்துரையும் புலிகளுக்குப் பிடிக்காதவர் என்பதால், அந்தக் கடிதமும் எனக்குப் பெரும் தலைவலியாக (தலைமீது அடியாகவும்) மாறியது.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

கோபம் தலைக்கேறியதால் துடுப்பாட்ட மட்டையால் பந்துவீச்சாளரை தாக்கமுயற்சி!

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கைரோன் பொலாட் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் மிச்லெ ஸ்டாக் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

மிச்செல் ஸ்டாக் வீசிய பௌன்சர் பந்து ஒன்றை எதிர்கொண்ட பொலாட் ஓட்டமெதனையும் பெறமுடியாத நிலையில் கோபமடைந்தார். 

இந்நிலையில் அடுத்த பந்து வீச்சினை ஸ்டாக வீசும் தருணத்தில் பொலாட் பந்தினை எதிர்கொள்ளாது விக்கெட்டினை விட்டு விலகினார். எனினும் ஸ்டாக் பந்தினை வீசினார். 

மேலும் கோபமடைந்த பொலாட் அவரை தாக்கும் வகைiயில் துடுப்பாட்ட மட்டையை வீசி எறிந்தார்.தற்போது இந்த சம்பவம்  ஐ.பி.எல்லில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது