Follow by Email

Friday, 14 March 2014

விமானத்தை கண்டுபிடிக்க மை போட்டு பார்த்த மலேசியா!!

கடந்த, 7ம் தேதி இரவு, மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, 'மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. 

அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை, அந்த விமானம் இழந்தது.ஒரு வாரம் கடந்தும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை. 

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் காத்து கிடக்கிறார்கள். ஏதாவது தகவல் வந்து விடாதா என்று?





விமானத்தை தேடும் பணியில், வியட்நாம் , தாய்லாந்து, இந்தோனோசியா, பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட, 10 நாடுகளைச் சேர்ந்த 34 விமானங்களும், 40 கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

இந்த விமானத்தை தேடும் பணி, இரண்டு நாட்களுக்கு முன், அந்தமான் கடல் பகுதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த பணி மேலும் இந்திய பெருங்கடல் வரை விரிவுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் அதிகம் பேர் சீனர்கள். கடைசி துளி நம்பிக்கை இருக்கும் வரை தேடுதல் நிறுத்தப்படாது என்று சீனா அறிவித்து உள்ளது. தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்து உள்ளது. 







இவை அனைத்தும் நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் நடக்கும் தேடல். 

விமானம் விபத்துக்கு உள்ளானதா? அப்படி ஆகி இருந்தால் உடைந்த பாகங்களோ, மனித உடல்களோ மிதந்திருக்கும். அப்படி எதுவும் இதுவரை நடக்க வில்லை. 

கடத்தப்பட்டிருந்தால் பிணைய தொகை, அல்லது கோரிக்கைகள் வந்திருக்கும். அதுவும் இல்லை. 

வேறு எங்காவது தரை இறங்கி இருந்தால் இந்நேரம் தகவல் தெரிந்திருக்கும். 

என்னதான் நடந்தது என்று தெரியாமால் தேடுதல் பணியில் உள்ள நாடுகள் குழம்பி கொண்டிருக்க, மலேசியா பெரும் காமடி கூத்தை அரங்கேற்றி இருக்கிறது. 

கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மந்திரவாதிகளை அழைத்து வந்து மை போட்டு பார்த்தது. இந்த கன்றாவியை நீங்களே பாருங்கள்.



















இந்த முட்டாள் தனத்தை என்ன சொல்ல. 
Post a Comment