Follow by Email

Tuesday, 11 March 2014

மலேசிய விமான கடத்தலில் நடந்தது என்ன????

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.55க்கு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த போயிங் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சீன தலைநகர் பீஜிங்க்கு புறப்பட்டு சென்றது. 

ஆனால், கிளம்பிய ஒரு மணி நேரத்தில் விமானம் காணாமல் போய்விட்டது


இதில், இந்தியாவை சேர்ந்த 4 பேரும், கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி ஒருவரும் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான நிறுவன ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறைக்கும் விமானத்துக்கும் இடையிலான தொடர்பு திடீரென துண்டானது.

வியட்நாம் வான் எல்லையில் தெற்கு சீன கடலுக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருப்பது ரேடாரில் கடைசியாக தெரிந்துள்ளது. 



அதன் பிறகு விமானம் பற்றிய எந்த தகவலும் இல்லாததால், கடலில் விழுந்து விமானம் நொறுங்கியிருக்கலாம் எனவும், விமானத்தில் இருந்த 239 பேரும் பலியாயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. 

இதில் பயணம் செய்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. சீனாவே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.





விமானம் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் நாட்டு கடற்படை கப்பல்களும், விமானங்களும் முழுவீச்சில் விமானத்தை தேடி வருகின்றன. இந்த தேடுதல் 4ம் நாளாக நேற்றும் தொடர்ந்தது.


மலேசியாவிலிருந்து 2 ஜெட் விமானங்களும், சிங்கப்பூரில் இருந்து 2 போர் கப்பல்களும், கடற்படை விமானம், சீனாவில் இருந்து 2 மீட்பு கப்பல்கள், அமெரிக்காவின் எப்பிஐ, தேசிய பாதுகாப்பு குழு என சர்வதேச நாடுகள் இணைந்து விமானத்தை தேடி வருகின்றன. மொத்தம் 40 கப்பல்கள், 22 விமானங்களும் இரவு, பகலாக தேடுதல் பணியில் ஈடுபட்டும் இதுவரை மாயமான விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இரு ‘மர்ம மனிதர்கள்’, பற்றிய பரபரப்பு தகவல்கள் மீடியாக்களில் உலாவிக்கொண்டு இருக்கின்றன. போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இவர்கள் இருவருக்கும், விமானம் மாயமானதற்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது. அவர்கள் இவர்கள்தான்.


இவர்கள் தாய்லாந்தில் உள்ள ட்ராவல் ஏஜென்சி மூலம் விமான டிக்கெட் பெற்று விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள். இரு பயணிகளுக்காக பணம் செலுத்தி டிக்கெட் எடுத்த நபரின் பெயர், அலி. இவர் ஈரானியர்.

இந்த இரு ‘மர்ம நபர்களுக்காக’ டிக்கெட் எடுக்கப்பட்ட தாய்லாந்து நாட்டு ட்ராவல் ஏஜென்சி,

பயணம் செய்ய வழங்கப்பட்ட இ.டிக்கெட்
டிக்கெட்டின் விலை 19,560 தாய்லாந்து பாட். (சுமார் 600 அமெரிக்க டாலர்) இரு டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த இ-டிக்கெட் இலக்கங்களில் இஷ்யூ செய்யப்பட்டுள்ளன. 7842280116099, 7842280116100.

தாய்லாந்துக்கு வந்த இரு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் திருட்டுப் போயின. 

இவர் ஒரிஜினல் லுய்கி மரால்டி

விமானத்தில் பயணம் செய்த டுப்ளிகேட் லுய்கி மரால்டி
இவர்களில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியன் கோசெல், தமது நாட்டுக்கு போய்விட்டார். இத்தாலியரான லுய்கி மரால்டி, இன்னமும் தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

“இந்த இரு பாஸ்போர்ட்டுகளை வைத்துக்கொண்டு எப்படி இரு பயணிகளால் விமானத்தில் ஏற முடிந்தது?” என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இன்டர்போல்.

இந்த இரு பயணிகளும் தமது பாஸ்போர்ட்டில், சீனாவுக்கான விசா எதையும், கோலாலம்பூர் விமான நிலைய மலேசியன் ஏர்லைன்ஸ் செக்-இன் கௌண்டரில் காட்ட வேண்டியது, அவசியமில்லை என்பது உண்மைதான். காரணம், இருவரும் பீய்ஜிங்கில் ட்ரான்சிட் பயணிகள். சீனா இமிகிரேஷனுக்கு போக அவசியமற்றவர்கள்.

ஆனால், பாஸ்போர்ட்?

அதை நிச்சயம் மலேசியன் ஏர்லைன்ஸ் செக்-இன் கௌண்டரில் சரிபார்த்திருப்பார்கள்.



இந்த இரு பாஸ்போர்ட்களும், ஆஸ்திரிய மற்றும் இத்தாலிய பாஸ்போர்ட்டுகள். இரண்டுமே வெள்ளை இன நபர்களின் பாஸ்போர்ட்டுகள். அதிலுள்ள பெயர்களும், இத்தாலிய மற்றும், ஆஸ்திரிய பெயர்கள் (கிரிஸ்டியன் கோசெல், லுய்கி மரால்டி). இந்த பெயர்களில் ஆசியர்களோ, அல்லது வேறு இனத்தவரோ (மேலை நாட்டவர்கள் ஏன் போலி பாஸ்போர்ட்டில் பயணிக்க வேண்டும்?) பயணம் செய்தால், எந்தவொரு விமான நிலைய அதிகாரிக்கும் உடனே சந்தேகம் ஏற்படும்.

அப்படியிருந்தும், சந்தேக நபர்கள் இருவர் இந்த பாஸ்போர்ட்டுகளுடன் எப்படி விமானத்தில் ஏற முடிந்தது?  

மாயமாக மறைந்துபோன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு என்ன ஆனது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ள நிலையில், அந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இரு பயணிகளும் யார் என்ற விசாரணையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது, சர்வதேச போலீஸ், இன்டர்போல்.

ஒரேயொரு பாஸிபிளிட்டி உள்ளது. இரு பாஸ்போர்ட்டுகளிலும் உள்ள போட்டோக்களை மாற்றியிருக்கலாம். அப்போது, இந்த பெயர்களில் ஆசியர்களோ, அல்லது வேறு இனத்தவரோ இருக்க சான்ஸ் உள்ளது (இவ்விரு நாடுகளிலும் பிரஜாவுரிமை பெறுவதற்காக சிலர் பெயர்களை சட்டரீதியாக மாற்றுவதுண்டு)

ஆனால், தற்போதுள்ள பாஸ்போர்ட்டுகளில் போட்டோவை மாற்றினால், அதை பாஸ்போர்ட் செக்கிங் எந்திரம் சுலபமாக கண்டு பிடித்துவிடும்.

2005-ம் ஆண்டுக்குப் பின், ஆஸ்திரிய மற்றும் இத்தாலிய பாஸ்போர்ட்டுகளில் ‘ஆல்ட்டர் டிடெக்ட் ஃபீச்சர்’ என்ற அம்சம் உண்டு. பாஸ்போர்ட்டின் போட்டோ பக்கத்தில் உள்ள செலோஃபீன் சற்றே அகற்றப்பட்டாலும், பாஸ்போர்ட் ஸ்வைப் சாஃப்ட்வேர் அதை கண்டுபிடித்துவிடும். இந்த பாஸ்போர்ட் ஸ்வைப் சாஃப்ட்வேர்கள், கோலாலம்பூர் விமானநிலையத்தில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் செக்-இன் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர, இதே பயணிகள், மலேசியன் இமிகிரேஷனையும் கடந்து சென்றிருக்க வேண்டும். அங்கேயும், ஒவ்வொரு இமிகிரேஷன் அதிகாரியின் கம்ப்யூட்டரிலும் பாஸ்போர்ட் ஸ்வைப் சாஃப்ட்வேர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒன்றில் மிஸ் ஆனாலும், மற்றதில் இந்த இரு பாஸ்போர்ட்டுகளும் சிக்கியிருக்கும்.

இதை ஏமாற்ற முடியாதா? அதற்கும் ஒரு வழி உள்ளது.

பல ஆண்டு காலம் விமான நிறுவனத்தில் பணிபுரியும் காரணத்தால், இதற்கு ஒரு வழி உள்ளது என்பது எனக்கு (ரிஷி) தெரியும். அதை வெளிப்படையாக எழுதுவது நல்லதல்ல.

ஆனால், அந்த வழியை இந்த இரு மர்ம பயணிகளும் பயன்படுத்தினார்கள் என்றால், அதற்கு விமான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவரின் உதவி அவசியம் தேவை.


Post a Comment