ads

Tuesday 22 January 2013

புத்தாண்டு பலன்கள்!!


மேஷம் 

அது அதற்கு ஒரு கவலை. ஐயாவிற்கு பல கவலை என்று சொல்லமுடியா விட்டாலும், ஓரளவு அனுகூலமாக இருக்கும். 

 உங்கள் செயலும் சொல்லும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். மலையை கில்லி எலியை பிடிக்க முயற்சிக்கப் போவதில்லை. 

இருப்பினும் வேண்டாத சிந்தனையை அறவே  விடவே முடியாது. இதுவரை இருந்த மன உளைச்சல் மறைமுக எதிர்ப்பு குறைந்த மாதிரி இருக்கும். ஆனால் மறையாது.

புத்தாண்டு பஞ்ச் 

துரத்தி வந்த ஆபத்தொன்று தொலைவில் நிற்பதும், அருகில் வந்த அதிர்ஷ்ட  வாய்ப்பொன்று அடுத்தவர் கைக்கு போவதும் கண் கூடு.

ரிஷபம் 

அள்ளி கொடுத்தால் சும்மா... அளந்து கொடுத்தால் கடன்.  கிரகங்களின்  எண்ண ஓட்டம் இதுதான்.

அதாவது... இதனால் ரிஷப   ராசிகாரர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் கிரகங்கள் அளந்து தான் கொடுக்கும்.

இருப்பினும் முக்கியமானவர்களிடம் இருந்து முன்னேற்றமான தகவல் வரும்.புரியாமல் இருந்த பல விவகாரங்கள் புரிய வரும்.

புதிய சிந்தனையில், புதியவர் கூட்டணியில்  புது ரூட்டில் பயணம் செய்யலாம். இருந்தாலும் பைபாஸ் ரோட்டில் பயணம் அல்ல. சிக்னல்கள் நிறைந்த சிக்கலான பாதை என்பதை மறந்து விட வேண்டாம்.

                                                                      புத்தாண்டு பஞ்ச் 

உடன்பாடில்லாத ஒரு விஷயம் ஒதுங்கி போனாலும் வாக்கு கொடுத்த வகையில் வம்பு ஓன்று தேடி வரும்.


மிதுனம் 

ஆல் பழுத்தால் அங்கே அங்கே கிளி. அரசு பழுந்தால் இங்கே  கிளி என்பது போல், உங்களிடம் ஆதாயம் பெற்றவர்கள் அருகில் இருக்கப் போவதில்லை.

அன்பானவர்களின் அலச்சியப்போக்கு தொடரப் போகிறது. அதோடு தட்டிக் கொடுக்காத நிர்வாகத்தின் தலைக்கணம் ஒரு புறம், தட்டிக் கேட்க முடியவில்லையே என்ற தவிப்பு புறம் தொடரும். ஆனாலும் நல்ல பொழுது விடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 


எதிர்கால லச்சியம் ஓன்று ஈடேறாமல் போவதும்,அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து ஆதாயம் பெறுவதும்  நடக்கும்.


கடகம் 
கறக்கிறது ஆழாக்கு உதைக்கிறது பல்லுபோகவாம்.  நான் உங்கள் பணியிட அமைப்பை சொல்றேன்.

நீங்க அமைதியா, பொறுமையா, இருக்கீங்க. இருப்பிங்க, இருக்கணும். அதையே கீபப் பண்ணுங்க.

பல்லக்கில் போன உங்களுக்கு இந்த வருடம் பல்லக்கு தூக்குகிற வருடமாக இருக்கும்.

சந்தோசத்தை தேடி தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு விடை தெரியாது.

அதனால் வாயை திறக்காமல் இருந்தால் வாய்ப்புகள் வாசலில் நிற்கும். அசட்டு துணிச்சலால் ஆபத்தை தேடிக்காதிங்க.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 

உடன் பிறந்தோரின் உதவி கிடைப்பதும், உறக்கமில்லாத இரவுகள் தொடர்வதும் இவ்வருட சிறப்பு.


சிம்மம்

வாழைப்பழம் கொண்டுபோனவன் வாசலில் இருந்தான். வாயை கொண்டுபோனவன் நடுவீட்டில் இருந்தானாம்.

அந்த கதையா எந்தனையோ ஏமாற்றங்களை சந்தித்ச்சாச்சு. உள்ளவனே நல்லது செய்யலை.

இந்த வருடம் அதை மாற்றி அமைக்கும். காணக்கிடைக்காத பொற்காலமே கண்ணெதிரே தெரியும். வாழும் கலையில் வல்லவரான  உங்களுக்கு வாழ கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்ந்து பாருங்க.

                                                                         புத்தாண்டு பஞ்ச் 

நீண்டநாள்  கோரிக்கை ஓன்று நிறைவேறுவதும், வலுவிழந்த வழக்கொன்று வாசலுக்கு வருவதும் இவ்வருட சிறப்பாக இருக்கும். 

கன்னி 

கள்ளன் செய்த சகாயமே காதை அறுக்காமல் தோட்டை கழட்டியதுதான்னு  சொல்ற மாதிரி, இழப்புகள் பலவற்றை சந்தித்தாலும் முற்றிலும் இழந்தது விடவில்லை.

வருட கடைசி  வரைக்கும் இந்த வார்த்தை மாறாமல் இருக்கும். நோயை கொடுத்து பாயில் படுக்க வைக்கிற சனி, எதிர் காலத்திற்காக எதையும் செய்ய விடமாட்டார்.

புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதையும் ஒரு எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வார்.

                                                                   புத்தாண்டு பஞ்ச் 

நஷ்டத்தில் லாபமும் , கஷ்டத்தில் சுகமும், கடைசி வரை கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கும். இது மாறவே மாறாது. 

துலாம்

அரிசி கொண்டு போய் அக்கா வீட்டில் விருந்து சமைச்சு  சாப்பிட்ட மாதிரி ஆதாய விஷயங்களில் அவ்வளவு திருப்தி வராது.  

ஏமாற்றப்படுவோமா என்கிற பயம், மிரட்டும் வழக்குகள், இனம் புரியாத கவலை, எதிர்கால கேள்விக்குறி  என்று ஒரு புறம் நெருக்கடிகள் தோன்றினாலும் வாயில்லாத பூச்சியாக வாழவேண்டி இருக்காது.

கடைசி நேரத்தில் கண்டத்தில் இருந்து தப்பித்த மாதிரி திடீர் அதிர்ஷ்டக் காற்று அடிக்கும்.

                                                                      புத்தாண்டு பஞ்ச் 


சரிவுகள் இல்லை என்றாலும் உறவில் பிரிவுகள் இருக்கும். பழைய வில்லங்க விவகாரம் ஒன்றில் தீர்வு வருவதும், புதுக் கவலை ஓன்று மிரட்டிப் பார்ப்பதும் இவ்வருட விசேசம்.


விருச்சிகம்

முடிச்சவிழ்த்து கொடுத்ததும் இல்லாம இளிச்சவாயன் பட்டமும் கிடைத்தது ஆனாலும் தலை தப்பியது.

அபரீதமான வசதி வாய்ப்பும் வந்தது. விட்டுப் போன VIP அந்தஸ்தும் கிடைத்தது. 

வேண்டியதை சேகரித்து வேண்டியவரை அரவணைத்து, விரும்பிய வாழக்கையை வாழ்ந்தீர்கள். இப்போது அதற்கு ஆபத்து புத்தாண்டு வடிவில் வருகிறது. 

அலைச்சல் திரிச்சளுக்கு பிறகு ஆதாயம் கிடைத்தாலும் அதிர்ச்சியும் காத்திருக்கும். அதோடு சுபகாரியம் நடத்தல், உறவுகள் நெருக்கமாதல், தொழில் வகை முன்னேற்றம் என்பதில் எல்லாம் சிக்கல்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். 

                                                                   புத்தாண்டு பஞ்ச் 

உற்ற உறவுகள் குற்றம் சொல்வதும், சண்டைக்காரர்களுடன் சமாதானம் ஆவதும் இவ்வருட சிறப்பு.

                                                                               தனுசு 


ஏறமுடியாத மரத்தில் எண்ணாயிரம் மாங்காய் காய்த்த மாதிரி இருந்தது இதுவரை.

பெரிய கஷ்டங்களை சந்திக்கா விட்டாலும், ஏளனபிரவியாக மாறிவிடக்கூடாது என்பதில் தான் குறிக்கோளே இருந்தது. அதற்க்கு ஒரு விடிவு காலம் பிறந்த மாதிரி மாபெரும் சபையில் மாலைகள் விழும் மகத்தான ஆண்டாக இது இருக்கும்.

தேவைக்கு ஏற்ப பணம் தேடி வரும். குடும்பத்திலும் குடும்ப தலைவனாய் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்யலாம்.

உங்கள் சக்திக்கு மீறி சுப காரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை தேடி வரும்.

                                                                       புத்தாண்டு பஞ்ச் 

கடன் தொல்லையில் விடுபட்டாலும், உடன்பாடில்லாத விஷயங்களில்  உடன்பட வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.


                                                                                  மகரம் 

குதிரை குருடா இருந்தாலும் கொள்ளு  திங்கிறதிலே குறை இல்லை. என்பது உண்மையாக இருக்கும்.

சில எதிர்பாராத தோல்விகளும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். கூடவே சில யோகங்களும் வரும் என்பதை மறுக்க முடியாது.

விருந்துக்கு போகும்போதே மருந்தும் சாப்பிட்ட மாதிரி அந்த சந்தோசங்களுக்கு இடையே சங்கடமும் தேடி வரும்.

சில விஷயங்கள் பிடிபடாது. எதிலும் துணிந்து இறங்க, துணைக்கு அழைப்பது இறை சக்தியாக இருந்தாலும் நடக்கும் போது நடக்கட்டும் என்று மனதை சமாதானம் செய்து கொள்வீர்கள்.

இருப்பினும் ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்பது போக போகப் புரியும்.

                                                                             புத்தாண்டு பஞ்ச் 

பெரிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதும், புதிய அதிஷ்டம் ஒன்றை சந்திப்பதும் நடக்கும்.



                                                                                கும்பம் 

அவரை போட்டால் துவரை முளைத்தது. துவரை போட்டால் அவரை முளைத்த கதையில் மாற்றம் வரும்.

உங்கள் சொந்த முயற்ச்சியின் மூலம், செய்கிற தொழில் மூலம், பூர்வீக சொத்துக்கள் மூலம், பிள்ளைகளின் அந்தஸ்து உயர்வதின் மூலம், பணமும் பதவியும், உதவியும், தேடி வரப்போகிறது.

உங்களை உதாசீனம் செய்தவர்கள், நீங்கள் உயர்ந்து நிற்பதை பார்ப்பார்கள். நீங்கள் உதவாக்கரை அல்ல, உதாரண புருஷன் என்பது புரியும்.

                                                                           புத்தாண்டு பஞ்ச் 

ஒதுங்கி போன உதவி கரம் ஓன்று திரும்பி வருவதும், விரும்பிய விருப்பம் ஓன்று கசப்பில் முடிவதும் கண்கூடு.


                                                                                   மீனம்

உயிரோடு இருக்கும் போது ஒரு முத்தம் தராதவள் செத்த பிறகா உடன் கட்டை ஏறப்போரா  என்பது உண்மையாகும்.

சென்ற ஆண்டின் சோகங்கள், துரத்தி வந்த துயரங்கள், நிறைவேறாத கோரிக்கைகள், அருகில் வராத அதிஷ்ட வாய்ப்புகள், இந்த ஆண்டாவது வருமா என்பது உங்கள் எதிர்ப்பார்ப்பு.

கவலையை விடுங்கள். ஆரம்பம் என்று ஓன்று இருந்தால் முடிவு என்று ஓன்று இருக்கத்தானே செய்யும். முடிவு சுபமாக இருக்கும் நம்புங்கள்.

                                                                         புத்தாண்டு பஞ்ச் 

ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதி படுவதும், அதிஷ்ட வாய்ப்புகளால் ஆனந்த படுவதும் இவ்வருட சிறப்பு.





Sunday 20 January 2013

தெரியுமா உங்களுக்கு!



அரசு நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் தான் இயங்கும். இது எழுதப்படாத விதி. 

ஏன்?

பொதுமக்களுக்கு சேவை செய்வதாலும், மானியம் அளிப்பதாலும்  வருகிற நஷ்டமா?

அப்படித்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறோம். அரசுகளும் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் கதையே வேறு. 

இப்ப ஒரு கதையை தெரிஞ்சுக்கோங்க. 

ஏர்இந்தியா தன் ஊழியர்களுக்கு கூட மாதாந்திர சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கொடுத்து ஏற்றிக்கொண்டு பறந்ததால் வந்த நஷ்டமா?

இல்லை. ஏர்இந்தியாவிற்கு கடன் பாக்கி வைத்தவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதால் தான் இந்த திண்டாட்டம்.

அடப்பாவிகளா... ஏர்இந்தியாவிற்கே பாக்கி வைக்கிற அளவிற்கு வில்லாதி வில்லன் யார்?

குப்பனும்  சுப்பனுமா கடன் பாக்கி வைத்தவர்கள்.   கோடிகளில்  கொழிக்கும்  தொழில்அதிபர்களும், மத்தியஅரசும்தான் அது.

ஏர்இந்தியா மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், ஏர்இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை 1000 கோடியை தாண்டுகிறது. இந்த அளவிற்கு பாக்கி வர என்ன காரணம்.

அரசு சார்பில் பயணம் செய்தவர்கள்  டிக்கெட்  தொகையும்,  பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் பயண டிக்கெட் கட்டணம் தான் அது.


அதுமட்டும் அல்ல. தன் விமானங்களில் ஐந்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறது ஏர்இந்தியா.

ஏன்?

வி.வி.ஐ.பி.களின் பயணங்களுக்காக தமது ஹாங்கர்களில் நிறுத்தி வைத்திருக்கிறது ஏர் இந்தியா. இவை சாதாரண ரூட்களில் பயணிகளுக்காக ரெகுலராக உபயோகப்படுத்தப் படுவதில்லை.

காரணம், இந்த விமானங்களின் உட்புற  அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர், ஜனாதிபதி மற்றும் வி.வி.ஐ.பி. பயணிகள் பயணம் செய்வதற்கு தனி கேபின்கள், குளியலறை வசதி, கன்பிரன்ஸ் ரூம் என்று இந்த போயிங் விமானங்களின் உட்புறம் முற்றிலும்  மாற்றப்பட்டுள்ளன.

அதனால் இதை மற்ற விமானங்கள் போல பயன்படுத்த முடியாது. அந்த உள்கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று தெரியுமா? இதோ?









பயணம் செய்கிறார்களோ இல்லையோ.. சும்மா தேமேன்னு நிப்பாட்டி வச்சிருந்தாலும் மாதாமாதம் வாடகை கட்ட வேண்டும். அப்படி கட்ட வேண்டிய தொகைதான் 1000 கோடிக்கு மேல் இருக்கிறது. 

இப்ப தெரியுதா ஏன் ஏர்இந்தியா நஷ்டத்தில் ஓடுதுன்னு. 


Friday 18 January 2013

நான் பிரதமரானால்???


இந்தியா பாகிஸ்தானை பொறுத்தவரை, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 

அன்று முதல் இன்று வரை இந்திய தலைவர்கள் பாகிஸ்தானை நட்புடன் நோக்குவார்கள்.  எரிச்சல் மூட்டுகிற மாதிரி எது செய்தாலும் பொறுத்து போவார்கள். 

அது எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சகித்து கொள்வார்கள்.  

இந்தியாவில் குற்றங்கள் செய்துவிட்டு பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரியும் குற்றவாளிகளை பற்றி வாய் திறக்காமல் இருந்தாலும் மவுனம் காப்பார்கள்.    

தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, பயிற்சி கொடுத்து, இந்தியாவில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு உதவி செய்தாலும் வெறுமனே அறிக்கை விட்டு விட்டு போய் விடுவார்கள்.  

இந்திய கரன்சிகளை கள்ள நோட்டுக்களாக அடித்து பொருளாதாரத்தை சீர் குலைக்க இந்தியாவிற்குள் உலாவ விட்டாலும் சரி, இந்திய தலைவர்கள் அமைதி காப்பார்கள். 

இரு நாட்டு எல்லையில் அத்து மீறல், துப்பாக்கி சூடு, வீரர்கள் மரணம் என்று எத்தனை பிணங்கள் விழுந்தாலும் சகிப்பு தன்மைக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு நல்ல தலைவர்கள் இந்தியாவில் இருப்பவர்கள். 

ஆனால் பாகிஸ்தான் தலைவர்கள்  அப்படி இல்லை. அவர்கள் நாட்டு இறையாண்மைக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். 

எல்லையில் எது நடந்தாலும் அப்படியா... அப்படி ஒரு சம்பவமே நடக்கலையே.. என்பார்கள்.  அப்பறம் கொஞ்ச நாள் கழித்து விசாரித்து பார்க்கிறோம் என்பார்கள். அப்பறம் அதை பற்றியே பேச மாட்டார்கள். 

இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யார் உதவி கேட்டாலும் பணமும் பயிற்சியும் கொடுத்து, தங்கள் சொந்த பொறுப்பில் அனுப்பி வைப்பார்கள். 

குண்டு வெடிப்பு, ஆள் கடத்தல்,  தீவிரவாத நடவடிக்கை  என்று இந்தியாவில் செய்து விட்டு பாகிஸ்தானுக்குள் தப்பி வந்தால், சகல மரியாதையோடு தங்க இடம் கொடுத்து, பாதுகாப்பு அளித்து, வெளி உலகத்திற்கே தெரியாமல் பாதுகாப்பார்கள். 

இந்தியாவோடு நல்லுறவை விரும்புகிறோம் என்று அவ்வப்போது அறிக்கை விட்டு பாசத்தை பொழிவார்கள். 

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற மாதிரி தீவிரவாதிகளின் தோளில் ஒரு கை போட்டுக்கொண்டே, மறுகையால் நட்பு கரம் நீட்டுவரர்கள்.

இதுநாள் வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

இப்போது போர் விதிமுறைகளை மீறி, இந்திய சிப்பாய்களை கொன்று, ஒருவர் உடலை சிதைத்து, மற்றவர் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய் இருக்கிறது பாக்கிஸ்தான் ராணுவம். 

இதுநாள் வரை இந்தியா பாகிஸ்தான் நேரடி  யுத்தம் மூலமாகவும், எல்லையில் நடந்த சண்டைகள் வழியாகவும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்களை பலி கொடுத்திருக்கிறோம்.  

இன்னும் காஷ்மீரில் தீவிரவாத தொல்லைகள் ஒழிந்த பாடில்லை. எல்லை தாண்டிய பயங்கரவதத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியவில்லை.  

நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதன் பின்னணியில் பாக்கிஸ்தான் இருக்கிறது என்பது உலகறிந்த ரகசியம். 

இருந்தும் இந்தியா அமைதியாக இருக்கிறது. வெறும் அறிக்கைகளும், கண்டனங்களும், பொறுத்து கொள்ள முடியாது, சகித்து கொள்ள முடியாது, தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம் என்று வெற்று சவடால்கள் மட்டுமே கேட்கிறது. 

இது மட்டும் போதுமா? பாக்கிஸ்தான் பணிந்து விடுமா? தன் தவறுகளை திருத்தி கொள்ளுமா? எல்லை தாண்டிய குற்றங்களுக்கு முற்று புள்ளி வைக்குமா?

இது வெறும் பகல் கனவு.  ஒரு போதும் இது நடக்காது.

இது இந்திய தலைவர்களுக்கு தெரியாதா?

தெரியும். இது நாளையும் தொடரும் என்று தெரியும்.

தெரிந்தும் ஏன் ஆக்க பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட   சந்தேகம்   இல்லை. உலக தலைவர்கள் பலருக்கும் வந்த சந்தேகம் தான்.

தன் சொந்த நாட்டின் இறையாண்மைக்கு இப்படி தொடர்ந்து ஒரு நாடு தொல்லை தரும் போது, இப்படி  சோப்பிளாங்கியாக இருக்கிறதே இந்தியா என்று வாய் விட்டு சொல்லா விட்டாலும், மனதிற்குள் நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

உலகின் எந்த மூளையில் உள்ள சிறு நாடாக இருந்தாலும் இந்த அளவிற்கு பொறுமையாக இருக்குமா என்றால் இருக்கவே இருக்காது.

இந்நிலையில் நான் இந்தியாவின்  பிரதமராக இருந்தால் என்ன செய்வேன்? இதோ என் பதில்?

சொந்த மந்திரி சபையில் ஊழல் பெருச்சாளிகள் பெருகி விட்டதை தடுப்பதை பற்றியோ!

வாங்கும் சக்தியை இழந்து தடுமாறும் மக்களை காக்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதை பற்றியோ!

மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சனையாக இருந்தாலும் சரி, நதிநீர் போன்ற பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஆக்க பூர்வமாக சிந்தித்து நடவடிக்கை எடுப்பது பற்றியோ!

அந்நிய முதலீடு என்ற பெயரில் இந்தியாவிற்குள் கால் பாதிக்கும் வெளிநாட்டு கம்பெனிகளை  கட்டுப்படுத்துவது பற்றியோ!

ஒரு மாநிலத்தின் அடிப்படை மின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியோ!

பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு என்பதை பற்றியோ!

சுண்டைக்கா  நாடானா இலங்கை எத்தனை மீனவர்களை கொன்று குவித்தாலும் கண்ணை முடிக் கொண்டிருப்பதை பற்றியோ நான் பேசவில்லை.

அதை பற்றி பின்னால்  யோசிக்கலாம். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பது மட்டும் தான் இப்போதைய பணி, மற்றவற்றை பின்னால் பார்ப்போம்.

காரணம்  நாம் நிறைய  பாதிக்கக்பட்டிருக்கிறோம். நம்  சொந்த நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீரில் குண்டு வெடிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் தீவிரவாதிகளுக்கு  பயந்து அகதிகளாக வெளியேற வேண்டிய கட்டாய சூழல் இப்போதும் நிலவுகிறது. 

இன்றும் காஷ்மீருக்கு பல சலுகளை அளித்து பல்லாயிரம் கோடிகளை கொட்டி பாதுகாப்பு செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாட்டின் பாதுகாப்புக்கே கேள்வி குறி எழுந்து விட்டது. அதனால் இதற்கு தீர்வு காண்பது முக்கியம்.

இது தான் என் நடவடிக்கை 

எல்லையில் இப்போது நடந்திருப்பது மனித நாகரீகத்தை மீறிய, போர் நடை முறைகளை மீறிய செயல்.  

  1. அந்த கொடூர செயலை செய்த வீரரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்.  அவர் எங்கள் நாட்டு பிரஜை. அவரை இந்தியா வசம் ஒப்படைக்க முடியாது என்பது தான் பாகிஸ்தானின் பதிலாக இருக்கும். 

அப்படி இருந்தால் போர் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற கைதியை ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படும்.

2.   இதற்கு பாகிஸ்தான் உடன் பட தவறினால்...இந்தியாவின் நட்பு நாடு, வியாபார கூட்டாளி என்கிற அந்தஸ்து விளக்கிக் கொள்ளப்படும். ஏற்றுமதி இறக்குமதி, பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும். 

(இதனால்  ஏற்ப்படும் இழப்பை சரிகட்டவும், மாற்று வழி தேடவும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் தேடவும், இழப்புக்களை சரிகட்டவும் குழு அமைக்கப்படும்)

3.   பாகிஸ்தானோடு தூதரக உறவு துண்டிக்கப்படும். பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் உடன் நாடு திரும்ப வேண்டுகோள் விடுக்கப்படும். 

அதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் பிரஜைகள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வரும். 

4.  தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்படும். 

5.  உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்படும்.

அதில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தீராத தீவிரவாத பிரச்சனைகளால் இந்தியா பல பிரச்சனைகளை சந்த்திருக்கிறது. பல்லாயிரம் மதிப்பு மிக்க உயிர்களை இழந்திருக்கிறோம். பல்லாயிரம் கோடி பொருட் சேதத்தை சந்திருக்கிறோம்.

இருந்தும் இதுவரை பொறுமை காத்தோம். பொறுமைக்கும் சோதனையாக  இப்போது நடந்திருக்கும் நாகரீகமற்ற செயலை தாங்களும் அறிவீர்கள். இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும்  இறையாண்மைக்கும், 120 கோடி மக்களுக்கும்  சவால் விடபட்டிருக்கிறது.

எனவே தன்னை தற்காத்துக்  கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டு.  தேச பாதுகாப்பை உறுதிபடுத்த தேவையான அனைத்து நடவடிக்களையும் மேற்கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டு. இதை சர்வதேச சமுகம் உணரும் என்றே நம்புகிறோம்,  என்ற தகவல் அனைத்து நாடுகளுக்கும் சொல்லப்படும்.

6.   இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருப்பது எல்லை தாண்டிய தீவிரவாதம். எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பயிற்சி எடுத்து, கட்டிக்காக்க கஷ்டமாக இருக்கும் நீண்ட எல்லைகள் வழியாக ஊடுருவும் தீவிரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் அக்னி என்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க முயல்வார்கள் என்பது உண்மையே. உயிர் சேதம், பொருள் சேதம், பொருளாதார விரையம், உலக  நாடுகளின் நெருக்கடி என்றெல்லாம் யோசிக்காமல் முழு யுத்த தயார் நிலையில் இருந்தே தீர வேண்டும்.

ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியா மீது எதிர் தாக்குதல் நடத்தினால், சற்றும் யோசிக்காமல் பாகிஸ்தானை ஈவு இரக்கமில்லாமல் தாக்கி, ஆசாத் காஷ்மீர் வரை முன்னேறி செல்லவேண்டும்.

சிறிய நிலப்பரப்பை வைத்திருக்கும் பாகிஸ்தான் தாக்கு பிடிக்க முடியாமல் அணு ஆயுத மிரட்டலை விடுத்தால், சந்திக்க தயார் என்றும், இந்தியாவும் எதிர் தாக்குதல் நடத்தும் என்றும் சொல்ல வேண்டியதுதான்.

அப்படி ஒரு சூழல் வந்தால் உலக வரைபடத்தில்  பாகிஸ்தான் இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் அதற்கு அவசியம் இருக்காது.

இப்போது கொடுக்கும் அடி, எதிர் காலத்தில் இந்தியாவோடு எந்த சச்சரவுக்கும் போக கூடாது என்ற உணர்வை தருகிற மாதிரி தாக்குதல் வியூகம் அமைய வேண்டும்.

பாகிஸ்தான் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டால், காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விட்டால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கு  பயன்படும். இல்லாவிட்டால் தினம் தினம் கோடிக்காணக்கான பணத்தை கொட்டித்தான் தீரவேண்டும்.

Wednesday 16 January 2013

நீயும் நானும் !!




தொடுவானம் நீ!
தொட்டு விடும் முயற்சியில் நான்!
நான் நெருங்க..
நீ விலக...
நான் விலக...
நீ நெருங்க...
என்ன விளையாட்டு இது?

சமுத்திரம் நீ!
அதில் உப்பை தேடும் சிறு பிள்ளை நான்
ஒவ்வொரு துளியும் நீதான் என்பதை
நீயே வந்து சொன்னால் என்ன?

பெருகி பரவும் பிரபஞ்சமே..
உன்னை அளந்து விட துடிக்கிறேன்.
அறிந்து கொள்ள தவிக்கிறேன்.

விஞ்ஞானம் வியர்த்து நிற்கிறது.
மெய்ஞானம் வியந்து நிற்கிறது.
இல்லை என்கிறது ஒரு முனை.
உண்டென்கிறது மறுமுனை
இடையில்
நான் அனாதையாய்...
எப்போது என்னை ஆட்கொள்ளப்போகிறாய்?
இறைவா சொல்!!

- மதிவாணன்

Tuesday 15 January 2013

கண்ணா லட்டு திங்க ஆசையா-விமர்சனம்



பொண்ணுங்களை டாவடிப்பதிலேயே தங்கள் காலத்தை போக்கும் மூன்று நண்பர்கள் தனித்தனியே ஒரே  பெண்ணை காதலிக்க முயல்வதுதான் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் கதை. 

என்ன.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று நினைக்கிறிர்களா... எஸ்.. பாக்கியராஜின் இன்று போய் நாளை வா!  படத்தின் அல்டா உல்டா கதைதான் இது. 

அது பாக்கியராஜின் கை வண்ணம். இது சந்தானத்தின் புது வண்ணம். அதில் காட்சிகளில் வலிமை. இதில் சந்தானத்தின் வசனங்களில் வலிமை.

அது யாரு மூன்று நண்பர்கள்?

பவர் ஸ்டார், சந்தானம், சேது இவர்கள் தான் அந்த மூன்று நண்பர்கள். பவர் ஸ்டாரை வைத்து பெரிய கச்சேரியே  செய்திருக்கிறார்கள் .தன் பங்குக்குக்கு டைமிங் ஜோக் சொல்லி கலகலப்பை ஏற்றுகிறார் சந்தானம். சேது தான் ஹீரோ. கதாநாயகியை  கை பிடிப்பதால். மற்றபடி படத்தில் பெரிய பாத்திரம் இல்லை.

பவருக்கு நடிக்கவே தெரியவில்லை. பூசி மொழுகின மாதிரி  உடம்பு, வடிவேலு மாதிரி பாடி லாங்குவேஜும் இல்லை. உணர்ச்சியற்ற டயலாக்கும் பேசுகிறார். இருந்தாலும் இவர்  வரும்  காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது.


எப்படி?

அதுதான் பவரின் மகிமை.

பத்தாம் வகுப்பு மாணவியை டாவடிக்க முயல்வதும், எங்க அப்பா கல்யாண ஆல்பத்திலே கலர் கலரா சட்டை போட்டுக்கிட்டு நிற்கிறதை பார்த்தேன் என்று பொண்ணு சொல்லும் போது, அடப்பாவி என்பதை விட சிரிப்பலை அடிக்கிறது.

பட்டிமன்ற ராஜாவிற்கும் ஒரு வேடம். பாவம் வழக்கம் போல் வசனம் பேசிவிட்டு போகிறார்.  ஏன் ராஜா சார்... நீங்க நடிச்சு  கலைசேவை செய்துதான் ஆகணுமா? பல படங்களில் பார்த்த அதே முக பாவனை?

கதாநாயகி விஷாகா.  ஆள் ஓகே.  பிணத்திற்கு முன் போடும் குத்தாட்டம் அடேங்கப்பா ரகம்.



மூன்று நாயகர்களுடன்  பாடும் டுயட்டிலும் தன் திறமையை காட்டு காட்டு என்று காட்டுகிறார். இன்னும் சில படங்களில் வலம் வருவார் என்பது உறுதியாகிறது.  பழைய நாயகிகளே உஷார்... !

சிம்புவுக்கும்  கெளதம் மேனனுக்கும் கவுரவ வேடம். நல்ல வேலையாக கவுரமாக வந்து போகிறார் சிம்பு.  தன் பெயரில் மூன்று நான்கு பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கிறது என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு போகிறார்.

பெரிய எதிர் பார்ப்புகள் எதுவும் இல்லாமல் போய், சிரித்து விட்டு  வர ஓகே தான் கண்ணா லட்டு திங்க ஆசையா படம்.


Saturday 12 January 2013

அலெக்ஸ்பாண்டியன் – விமர்சனம்


சக்தி மசாலா, ஆச்சி மசாலா, தனி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகபொடி, மஞ்சள் பொடி எல்லாத்தையும் ஒரு அண்டாவில போட்டு கலக்கி, சந்தனத்தை சாரி... சந்தானத்தை போட்டு குலுக்கி மசாலா + காமடி படம் எடுக்க முயன்றதுதான் மொக்கை மசாலா அலெக்ஸ்பாண்டியன். 

கதை என்னன்னு பார்த்தால் டைரக்டர் அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போது பஸ் டிக்கெட்டுக்கு பின்னால் எழுதி  வச்ச கதை மாதிரி இருக்கு.



அமெரிக்காவில் இருந்து ஒரு கப்பல் நிறைய மருந்து ஏத்திகிட்டு வருது வில்லன் கும்பல்.

அந்த மருந்தை தமிழ்நாட்டுக்குள்ள விற்பனை செய்ய முதல்வர் கையழுத்து வேணும். ஆனால் முதல்வரா இருக்கிற விசு, இந்த மருந்து போலி, பக்க விளைவை தரும்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது அதனால் அனுமதி தர முடியாதுன்னு சொல்றார்.

விடுமா வில்லன் கும்பல். ஒரு சாமியாரை பிடிச்சி காரியத்தை சாதிக்க பார்க்குது. முடியலை என்றதும் முதல்வர் பொண்ணு அனுக்ஷ்காவை கடத்துறாங்க.

கடத்துறது யாரு தெரியுமா.. நம்ம ஹிரோ கார்த்திக் தான்.  அப்பறம் தான் பாருங்க படத்திலே பெரிய டேனிங் பாய்ன்ட்.  ஹீரோயின் ஹீரோ கிட்டே உண்மையை எல்லாம் சொல்லி  தன்னை காப்பாத்த சொல்றாங்க  . ஹீரோ அவரை எப்படிக்காப்பாத்தறார் என்பதே இந்த கரம் மசாலா  படத்தின்கதை .

படத்தோட ஓப்பனிங்  தான் சூப்பர்.  இது மாதிரி ஒரு பவர் மனிதனை பார்த்திருக்கவே முடியாது.



அதாகப்பட்டது..... வில்லன்களால் துரத்தப்படுற அனுஷ்கா ரயில்வே ட்ராக்குல ஓடி ட்ரெயின் ஏற, அப்படியும் அவரைப் பிடிக்கும் வில்லன்களை தன் வீர தீர பராக்கிரமத்தால் நையப்புடைக்கும் கார்த்தி. குறைந்தது 30-40 பேரை அடிக்கிறார்.

துள்ளி துள்ளி.. பாய்ந்து பாய்ந்து..தாவி தாவி உதைக்கிறார். அப்படியும் விடாம குறுக்கால போய் ட்ரெயின புடிக்க ட்ரை பண்றார். மிஸ் ஆயிடுது. அந்த கோவத்திலே  மறுபடி ஒரு 20பேர அடிக்கிறார்.  

(அதுல ஒரு ஆளு ஏர்ல பாஸாகி சந்திர மண்டலத்திலே போய் விழுந்ததா கேள்வி.)

  இப்படி தன் தனி திறமையால் கதாநாயகியை காப்பாத்துறார்.


இதுக்கு  அப்பறம் தான் படத்தோட   மெய்ன் காட்சிகளே ஆரம்பம். ஹிரோ சந்தானத்தோட வீட்டில் தஞ்சமடைகிறார். சந்தானத்துக்கு மூணு தங்கச்சி.

இந்த மூணு தங்கச்சிகளும் கார்த்தியை பார்த்து லிட்டர் லிட்டரா ஜொள்ளு விடுதுங்க.  அடேங்கப்பா.. மாராப்பை விலக்கி போட்டுக்கிட்டு தான் மாமன் கார்த்திக் கிட்டேயே பேசுதுங்க.

நம்மாலும் அப்பா அம்மா விளையாட்டை தவிர மத்த எல்லா விளையாட்டையும் அதுங்க கிட்ட விளையாடுறார்.  விவரம் கெட்ட தங்கச்சிகளை காப்பாத்த அண்ணன் சந்தானம் படுற பாடுதான் காமடி.

படத்துல பாட்டு எதுவும் எடுபடலை.

சரி காதல் கீதல் எதுவும் இருக்கா?

இருக்கு.  கடத்தின வில்லன் கார்த்தி மேலேயே வருது.  ரெண்டு டுயட்டும் இருக்கு. ஆனால் அந்த பருப்பும் வேகலை. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.

தண்ணிக்குள்ள கட்டிக்கிடக்கிற கார்த்திகை  வில்லன்கள் சுமனும், மிலிந்த் சோமனும் புது   டெக்கனிக் கண்டுபிடிச்சு, அதன் பிரகாரம்  புட்பாலால் உதைத்து டார்ச்செர் செய்கின்றனர்.

அப்ப அனுக்ஷா , நீங்கல்லாம் ஆம்பளையா?  முடிஞ்சா அவரை கை கட்டை  அவுத்துவிட்டு அடிங்க பார்க்கலாம் என்று.... இது வரை தமிழ் சினிமா வரலாற்றில் வராத ஒரு வசனத்தை பேசுறார்.

அப்பறம் என்ன நடந்ததுன்னு தெரிந்துக்கனும்னா நீங்க கண்டிப்பா தியேட்டர்ல போய் தான் பார்க்கணும். அப்படி ஒரு திருப்பம்.

இந்த படத்தோட நல்ல காலம் விஸ்வருபம் வராததுதான். மத்த படங்கள் வந்த பிறகு... நான் சொல்ல மாட்டேன். நான் சொல்ல மாட்டேன்.

Wednesday 9 January 2013

நல்ல படங்களுக்கு செய்யும் துரோகம்.


ஒரு படத்தின் வெற்றி தோல்வி எதில்  இருக்கிறது.?

வசூலா?

வெட்டு குத்து சண்டையும், அம்மன டான்சும் போட்ட படங்கள் சில அதை செய்து விடும். 

வேறு எது? 

தரமான கதை அம்சம் கொண்ட சில படங்கள் தோல்வி அடையலாம். காரணம் பல இருக்கும். 

தெளிவான திரைக்கதை இல்லாமல் போய் இருக்கலாம். சரியான நடிகர்கள் தேர்வு இல்லாமல் போய் இருக்கலாம். அல்லது ஒரு பெரிய நடிகரின் படத்தோடு வந்து பார்வைக்கு படமால் போய் இருக்கலாம். 

இப்படி நிறைய இருக்கலாம் என்பது  இருக்கும். 

2012இல் 143 தமிழ் படங்கள் திரைக்கு வந்திருக்கிறது.  இதில் வெற்றி படங்களை பட்டியல் இடுவது என் நோக்கம் அல்ல. 

ஒரு தோல்வி படத்த்தில் சிறந்த நடிப்பை கொடுத்த நடிகருக்கு, அவரை பொறுத்தவரை சிறந்த படம். 

அதே தோல்வி படத்தில் சிறந்த பாடல்கள் இருந்தால் இசையமைப்பாளருக்கு அது வெற்றி படம்தான். அதனால் மார்க் போடவும் போவதில்லை. 

ஆனால் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். இந்த வருடத்தில் பாராட்டும், அதே அளவிற்கு  குட்டும் வாங்கிய படம் நீதானே என் பொன் வசந்தம் மட்டும்தான். 




பத்திரிக்கைகளும் சரி, இணையதளங்களும் சரி நீதானே என் பொன்வசந்தத்தை சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளி விட்டன. 

ஏன்?   அந்த அளவிற்கு குப்பை படமா அது? இல்லை.. இல்லை.. இல்லை...!

பாக்கிஸ்தான் படத்திற்கு விமர்சனம் எழுதிய மாதிரி ஏன் இத்தனை காட்டம்.

இந்த படத்திற்கு வசூல் குறைந்து போனதற்கு இந்த விமர்சனங்களும் ஒரு காரணம். பார்க்க நினைத்த பலரை தடுத்த புண்ணியம் இவர்களை சாரும்.

இந்த விமர்சனங்களால் சமந்தாவின் அற்புதமான நடிப்பு பற்றி பேச ஆள் இல்லை.

அதற்காக அந்த படத்தில் குறைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. காதலர்களுக்கு இடையே நடக்கு ஈகோ மோதல், பொசசிவ் மனப்பான்மையும் தான் படம் நெடுவே வருகிறது. இது இன்றைய  காதலர்களுக்கு புரியும்.


ஆனால் கவுதம் செய்த பெரிய தவறு என்ன தெரியுமா?

சண்டை வருகிறது பிரிகிறார்கள். சில வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள் மீண்டும்  காதலிக்கிறார்கள்  என்று சொன்னதுதான்.

உண்மையான காதலர்கள் இப்படி இருப்பதில்லை. மனவருத்தம் வந்து பிரிந்து போனாலும், அவர்கள் காதல் உண்மையாக இருந்தால் மீண்டும் தொடர்பு கொள்ள முயச்சிப்பார்கள்.

சமந்தாவை வசதியான வீடு பெண். அடிக்கடி வெளிநாடு போகும் பெண் என்று காட்டிய பிறகாவது, ஜீவா தன் நண்பர்கள் வழியாக தொடர்பு கொள்ள முயன்றார்.. என்பதை சில சீன்கள் வாழியாகவது  காட்டி இருக்கலாம்.

ஜீவாவை மாலையும் கழுத்துமாக நிற்கிற அளவிற்கு காட்சியை வளர்க்காமல், திருமண ஏற்பாடுகள் நடக்கிறது என்கிற அளவிற்கு நிறுத்தி இருந்தால் பெண்கள் பக்கம் வரவேற்ப்பு இருந்திருக்கும்.

எப்படியோ.. இனி இதை சரி செய்ய முடியாது. இருந்தாலும் நீதானே என் பொன்வசந்தம் ஒரு நல்ல படம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

யார் ஏற்றுக்கொள்கிறார்கள், யார் மறுக்கிறார்கள் என்பதை பற்றி கவலை இல்லை.

ஓன்று மட்டும் சொல்வேன். விமர்சனங்களை படம் பார்த்து எழுதுங்கள். நிறைய இணையதளங்களில் அவர்கள் படம் பார்த்தார்களோ இல்லையா தெரியவில்லை. காப்பி பேஸ்ட் செய்திருந்ததை பார்த்தேன்.

இது ஆரோக்கியமான விமர்சனம் இல்லை. நல்ல படங்களுக்கு செய்யும் துரோகம்.

2012 இல் வெளிவந்த படங்கள் 




1.    விநாயகா
2.    மதுவும் மைதிலியும்
3.    நண்பன்
4.    வேட்டை
5.    கொள்ளைக்காரன்
6.    மேதை
7.    அன்புள்ள துரோகி
8.    தேனி மாவட்டம்
9.    சேட்டை தனம்
10.    மெரீனா

11.    செங்காத்து பூமியிலே
12.    வாச்சாத்தி
13.    ஒரு நடிகையின் வாக்குமூலம்
14.    தோனி
15.    சூழ்நிலை
16.    விளையாடவா
17.    உடும்பன்
18.    முப்பொழுதும் உன் கற்பனைகள்
19.    அம்புலி
20.    காதல் பாதை

21.    விருதுநகர் சந்திப்பு
22.    ஒரு மழை நான்கு சாரல்
23.    காட்டுப்புலி
24.    சங்கர் ஊர் ராஜபாளையம்
25.    கொண்டான் கொடுத்தான்
26.    அரவான்
27.    நாங்க
28. சேவற்கொடி
29. மாசி
30. கழுகு

31. காதலில் சொதப்புவது எப்படி
32. மகாவம்சம்
33. விண்மீன்கள்
34. காதல் பிசாசே
35. நந்தா நந்திதா
36. மீராவுடன் கிருஷ்ணா
37. முதல்வர் மகாத்மா
38. காதலிச்சிப்பார்.
39. சூரிய நகரம்
40. 3

41. ஒத்தவீடு
42. ஒத்தகுதிரை
43. மழைக்காலம்
44. அஸ்தமனம்
45. நண்டு பாஸ்கி
46. வருடங்கள்-20
47. பச்சை என்கிற காத்து
48. மை
49. அடுத்தது
50. ஒரு கல் ஒரு கண்ணாடி

51. ஊலலலா
52. அதிநாராயணா
53. மாட்டுத்தாவணி
54. லீலை
55. பரமகுரு
56. வழக்கு எண் 18/9
57. காந்தம்
58. கலகலப்பு
59. ராட்டினம்
60. கண்டதும், காணாததும்

61. இஷ்டம்
62. கொஞ்சும் மைனாக்களே
63. உருமி
64. மனம் கொத்திப் பறவை
65. கிருஷ்ணவேணி பஞ்சாலை
66. மயங்கினேன் தயங்கினேன்
67. தடையறத் தாக்க
68. இதயம் திரையரங்கம்
69. பொற்கொடி பத்தாம் வகுப்பு
70. தூதுவன்

71. மறுபடியும் ஒரு காதல்
72. முரட்டுக்காளை
73. சகுனி
74. நான் ஈ
75. நாளை உனது நாள்
76. பில்லா-2
77. மாலைப் பொழுதின் மயக்கத்திலே
78. சுழல்
79. ஆசாமி
80. அட்டக்கத்தி

81. யுகம்
82. மதுபானக்கடை
83. மிரட்டல்
84. தூயா
85. அதிசய உலகம்
86. ஸ்ரீராமகிருஷ்ணர் தரிசனம்
87. பாளையங்கோட்டை
88. பனித்துளி
89. எப்படி மனசுக்குள் வந்தாய்
90. நான்

91. பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
92. ஆச்சர்யங்கள்
93. பூவம்பட்டி
94. ஏதோ செய்தாய் என்னை
95. 18 வயசு
96. பெருமான்
97. அவன் அப்படித்தான்
98. அணில்
99. முகமூடி
100. அரக்கோணம்

101. கள்ளப்பருந்து
102. மன்னாரு
103. பாகன்
104. சுந்தரபாண்டியன்
105. துள்ளி எழுந்தது காதல்
106. நெல்லை சந்திப்பு
107. சாருலதா
108.    சாட்டை
109.    தாண்டவம்
110.    இங்கிலீஷ் விங்கிலீஷ்

111. செம்பட்டை
112. புதிய காவியம்
113. சௌந்தர்யா
114. மாற்றான்
115. அமிர்தயோகம்
116.    கோயம்பேடு பேருந்து நிலையம்
117. திருத்தணி
118. பீட்சா
119. வவ்வால் பசங்க
120. மயிலு

121. சக்ரவர்த்தி திருமகன்
122. ஆரோகணம்
123. யாருக்குத் தெரியும்
124. அசைவம்
125. அஜந்தா
126. போடா போடி
127. துப்பாக்கி
128.    காசிக் குப்பம்
129.    அம்மாவின் கைப்பேசி
130.    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

131.    நீர்ப்பறவை
132.    கை
133.    கும்கி
134.    நீதானே என் பொன்வசந்தம்
135.    கள்ளத்துப்பாக்கி
136.    ஹிட்லிஸ்ட்
137.    லொல்லுதாதா பராக் பராக்
138.    சட்டம் ஒரு இருட்டறை
139.    கண்டுபுடிச்சிட்டேன்
140.    நானே வருவேன்

141.    பயபுள்ள
142.    பாரசீக மன்னன்
143.    பத்தாயிரம் கோடி

Tuesday 8 January 2013

என்னதான் சொல்கிறது ஹிந்துமதம்?


வாழ்க்கையே நம்பிக்கையில்தான் நகர்கிறது. நம்பிக்கை...அதுதான் அச்சாணி. அதுதான் ஆணிவேர்.

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, நல்லது கிடைக்கும் என்ற நம்பிக்கை, நல்லதை பெறுவோம் என்ற நம்பிக்கை.  

அந்த நம்பிக்கைக்கு மதம் என்பது ஒரு அடித்தளம் மட்டும் அல்ல, ஏறிச் செல்லும் ஏணியும் கூட.

அது 

சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், பூஜை புனஸ்காரங்களாகவும், யாகம் வேள்வி, யக்னம் ஹோமம் என்று விரிந்து கொண்டே போகிறது. 

நண்பர்களே எனக்கு அவ்வப்போது தோன்றும் கருத்துக்களை இதே தலைப்பில் தொடர்ந்து எழுதப்போகிறேன். இத் தொடர் மூலம் உங்களை நம்ப வைப்பதில்லை என் நோக்கம். சிந்திக்க கற்று கொடுப்பதுதான்.

இதை நம்பு, இதை ஏற்றுக்கொள், இதை கடைபிடி என்று எந்த கட்டளையும் பிறப்பிக்க போவதில்லை.

சிந்திக்க வைப்பதுதான்.

புகை வருகிறது. அந்த இடத்தில் புகை இருக்கிறது என்பதை விட, அந்த புகைக்கு காரணமான நெருப்பும் இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் என் நோக்கம்.


வாருங்கள் ஹிந்துமஹா சமுத்திரத்திற்குள் இறங்குவோம்.

ஹிந்து மதத்தை பற்றி எல்லோராலும் எழுப்பப்படும் கேள்வியே இதுதான்.

ஹிந்து மதத்தின் திருஷ்டிகர்த்தா யார்?

இயேசுவை போல், புத்தனை போல், நபிகள் நாயகத்தை போல் ஹிந்து மதத்தின் மூல ஆதாரம் யார்? யாரால் தோற்றிவிக்க பட்டது.

இந்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பதில் சொன்ன பலர் சனாதன தர்மம்  என்றார்கள்.

அதாவது ஆதி அந்தமில்லாத மதம் என்று பொருள்.

ஆனால் என் பதில் இதுதான்.


ஹிந்துமதம் என்பது தெய்வ மதம். இறைவனால் சொல்லப்பட்ட கருத்துக்களின் மீது செங்கல் செங்கலாய் அடுக்கி  எழுப்பட்ட மதம் ஹிந்து மதம்.

ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும், சித்தர்களும் ஞான கருத்துக்களை வழிநடத்த வந்த சாரதிகள்.

முதலில் வைதீக மதமாய் தோன்றி, சைவமாக வளர்ந்து, வைணவமாக பிரிந்தாலும் ஹிந்து மதம் தெய்வமதம்தான்.


ஹிந்து மதத்தில் இல்லாத கருத்துக்கள் இல்லை. சொல்லாத விஷயங்கள் இல்லை. வாழ்க்கையில் எது நடத்தாலும் கண்ணதாசன் சொல்வது போல் ஹிந்து மதத்தின் எதிரொலி கேட்கிறது.

நல்லவனை பார்த்தால் ராமன் நினைவுக்கு வருகிறான். கெட்டவனை பார்த்தால் துரியோதனன் மனதில் வந்து போகிறான்.

மாற்றான் மனையாளை பெண்டாள நினைக்கும் சண்டாளனை பார்த்தால் ராவணன் சாட்சியாய்  நிற்கிறான்.


நட்புக்கு கர்ணன், கற்புக்கு சீதை, எளிமையிலும் பெருமையாக வாழ விதுரர் இப்படி ஹிந்து மதத்தின் எதிரொலி அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களிடம்  கேட்கிறது.

திருதிராஷ்டிரனை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் அறிந்தவன். அரசானாக வீற்றிருப்பவன், தர்மத்தின் பக்கம் நிற்காமல் தலை சாய்கிறான்.

ஏன்?

பிள்ளை பாசம் கண்ணை மறைக்கிறது. தம்பி பிள்ளைகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்க வேண்டியவன், தாயைப்போல் அரவணைக்க வேண்டியவன் அறநெறி தவறுகிறான்.

விளைவு?


நூறு பிள்ளைகளை பெற்றும் பெயர் சொல்ல ஒருவர் இல்லாமல் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிந்தார்கள்.

அங்கே விதி சிரித்தது. செய்த வினை சிரித்தது. ஹிந்து மதம் சிரித்தது. தெய்வம் நின்று கொள்ளும் என்ற தத்துவம் சிரித்தது.


இன்றும் நம்மிடையே எத்தனையோ திருதிராஷ்டிரன்கள் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த பெரியவர் அடிக்கடி சொல்வார். நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது.  அதற்காக சொத்துக்கள் சேர்த்தார். மாட மாளிகை கூடகோபுரங்களை கட்டினார். அத்தனையும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த பாட்டுபட்டதா?

இல்லை.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது போல் கடல் கடந்து போய் தேடி வந்தாரா?

இல்லை.

வட்டி ... வட்டி.. வட்டி .. அநியாய வட்டி. கந்து வட்டி, வட்டிக்கு வட்டி.

கடன் வாங்கியவர்களை கசக்கி பிழிந்தார். வட்டி கட்ட தவரியர்கள் மீது மிரட்டல், உருட்டல், என்று சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தினார்.


வாங்கிய கடனை திருப்பி தர முடியாதவர்களிடம் சொத்தை எழுதி வாங்கினார்.  ஆனால் அத்தனையும் நிலைத்ததா? இல்லையே.. அவர் காலத்திலேயே சொத்து அழிந்தது.

விதி பிள்ளைகளின் உருவத்தில் இருந்தது.

ஒருவன் குடித்தே அழித்தான்.

ஒருவன் கூத்தியாளிடம் கொடுத்தே அழித்தான்.

ஒருவன் ஒன்றுக்கும் அற்றவன். ஊதாரியாய் ஊர் சுற்றினான்.


ஒருவன் சூதாடினான்.

ஏழைகளின் வயிற்றில் அடித்து சேகரித்த சொத்து சீட்டு கட்டு கோபுரம் போல் சரிந்தது.

கடைசி காலத்தில் உண்ண உணவின்றி, உடுக்க துணியின்றி, அனாதையாய் தெருவில் கிடந்தார்.

இங்கேயும் விதி சிரித்தது. விநாசகாலே விபரீத புத்தி என்ற தத்துவம் சிரித்தது.

நாலு பிள்ளைகளை பெற்றவனுக்கு நாயோட்டில் சோறு என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

ஹிந்து மதம் சொல்லும் உயரிய தத்துவமே இதுதான்.

எதை விதைக்கிறாயோ அதை வட்டியும் முதலுமாய் அறுவடை செய்வாய்.

வினை விதத்தால் வினை
திணை விதித்தால் திணை.

தொடர்ந்து சொல்வேன். 









Friday 4 January 2013

உனக்குள் ஒரு வெற்றியாளன்


அறிவு செல்வம் அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதை பெற முயலவேண்டியது நம் கடமை.

தன்னம்பிக்கை நூல்கள் நூற்றுக்கனக்கில் இருக்கிறது.ஆனாலும் கடல் கடந்து வாழும் ஒரு தன்முனைப்பு எழுத்தாளர் பேராசிரியர். காதற் இபுராஹீம்.  மலேசியாவை சேர்ந்தவர்.

சமிபத்தில் அவர் எழுதிய உனக்குள் ஒரு வெற்றியாளன் என்ற நூலை படிக்க நேர்ந்தது.

அதில் அள்ளி தெளித்த மாதிரி புத்தகத்தின் இடைஇடையே இந்த அழகான வாழ்வியல் தத்துவங்களை பார்க்க நேர்ந்தது. அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.


இறைவனை முன்னே வை. பின்னே யார் வருகிறார்கள் என்ற கவலை உனக்கு வேண்டியதில்லை. 


பண்பாடற்ற மனிதன் பிறரை குறை குருவான்!
பகுதி பண்பட்டவன் தன்னை தானே குறை குறிக் கொள்வான். 
முழுக்க பண்பட்டவன் யாரையும் குறை கூற மாட்டான். 


உன் முதல் எதிரி உன்னுடைய மனம். அதை முதலில் அடக்கு வெற்றி நிச்சயம். 


பிறர் உணர்வுக்கு மதிப்பு கொடு. பிறகு பார்! உனக்கு கிடைக்கும் மதிப்பை கண்டு நீயே வியப்படைவாய். 


நண்பர்களை பற்றி நல்லது பேசு. விரோதியை பற்றி ஒன்றும் பேசாதே. 



வெற்றியின் ரகசியங்கள்

உன் என்னத்தை மாற்று 
                    உன் நம்பிக்கை மாறும்!
உன் நம்பிக்கையை மாற்று 
                    உன் எதிர்பார்ப்பு மாறும்!
உன் எதிர்பார்ப்பை மாற்று 
                    உன் மனப்பான்மை மாறும்!
உன் மனப்பான்மையை மாற்று 
                    உன் நடவடிக்கை மாறும்!
உன் நடவடிக்கையை மாற்று 
                    உன் செயல்திறன் மாறும்!
உன் செயல்திறனை மாற்று 
                    உன் வாழ்க்கை மாறும் 




பெறத் துன்பப்படு! காக்க கவனமெடு! இழக்க அச்சப்படு!


துன்பத்தில் இருந்து மீள சிறந்த வழி அதற்குள் புகுந்து வெளியேறுவதுதான். 




உன்னுள் இருக்கும் உன்னை விழிப்புற செய்!


சிஷ்யன் தயாரான்ல் குரு தோன்றுவார். 


செல்வத்திற்கு பின் வறுமை வருவதை காட்டிலும் 
வறுமைக்கு பின் செல்வம் வருவது மேல்!


முட்டாள் மேலும் தேடிக் கொண்டிருக்கட்டும் 
நீ இருக்கும் கொஞ்சத்தை அனுபவி!


உழைக்கிறவனுக்கு ஒரு பிசாசு ஆசை காட்டுகிறது!
சோம்பேறிக்கு ஆயிரம் பிசாசுகள் ஆசை காட்டுகின்றன!


முயற்சியின் பகை

  1. சோம்பல் 
  2. மனத்தளர்ச்சி
  3. திறனில் நம்பிக்கையின்மை 
  4. பொறுமையின்மை 
  5. தீர்மானமின்மை 
  6. ஆழமற்ற தன்மை.


தகுதி உள்ளவரைதான் உலகம் உன்னை மதிக்கும்!


வாழ்க்கை மறைபொருளாக  இருக்கிறது. அதனால் தான் அழகாகவும் இருக்கிறது!!


வாழ தெரிந்தவனுக்கு இந்த வையகம் கைகுட்டை அளவுதான்!


நல்லவனாய் பிறப்பது சந்தர்ப்பத்தினால்!
நல்லவனாய் வாழ்வது முயற்சியினால்!!


பிறருக்கு கொடுக்க உன்னிடம் ஒன்றும் இல்லையென்றால்
அவர்களுக்காக பிராத்தனையாவது செய்!


வெளியே எப்படி தோன்ற விரும்புகிறாயோ
அப்படியே ஆகிவிட முயற்சி செய்!


கடுமையான செயலின் சரியான பெயர்தான் சாதனை என்பது.

Wednesday 2 January 2013

ஆண்களுக்கு அவமானமா?

இந்த தளத்தில் உள்ள அனைத்து படங்களும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. 



நம் நாட்டில் பெண்கள் கடந்து வந்த பாதை..!



1. பெண்கள் அடிமைகள். கணவன் இறந்து விட்டால் அவன் மனைவி வாழ தகுதி இல்லாதவள். அதனால் அவள் உடன் கட்டை ஏற வேண்டும். மறுத்தாலும் அதை செய்ய வேண்டும். 

காலங்கள் மாறியது.

2. வீட்டு வேலைகளை செய்யவும், வம்ச விருத்திக்காக குழந்தையை பெற்றுகொடுப்பதும் தான் அவர்கள் கடமை. வேறு எந்த உரிமையும் அவளுக்கு கிடையாது. கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை. 

காலங்கள் மாறியது.

3. கணவன் இறந்த பிறகு தன்னை அலங்கரித்து கொள்வது தவறு. அதனால் அவள் மொட்டை அடித்து கொள்ள வேண்டும். 

காலங்கள் மாறியது.

4. மொட்டை அடித்து கொள்ளா விட்டாலும், கணவன் இறந்த பிறகு வெள்ளை சேலை கட்ட வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் தகுதி அவளுக்கு இல்லை. 

காலங்கள் மாறியது.

5. பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். 

காலங்கள் மாறியது.  இந்த இழிநிலையில் இருந்து இன்று பெண் மீட்கப்பட்டாள் 

6.ஆணுக்கு பெண் சமம். ஆணுக்கு உரிய அணைத்து தகுதிகளும் பெண்களுக்கு உண்டு.



நாடு முழுவதும் ஒரே பரபரப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமையை தடுக்கவும், குறைக்கவும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள், கருத்துக்கள், சட்டங்களை உருவாக்க சட்ட வல்லுனர்களின் பரிந்துரைகள், ஆட்சியாளர்களின் சட்ட முன் வடிவுகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் ஒரே பேச்சு. 

நல்லது.. நல்லதுதான் நடக்கிறது. நாம் பெண்களை மதிக்கிறோம்.  ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் அசைக்க முடியாத அங்கம். 

உயிர் கொடுத்த உத்தமி,  தாயாக வருகிறாள். உடன் பிறந்த அன்பு  சகோதரியாக இருக்கிறாள். இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் மனைவியாக வருகிறாள். 

பெயர் சொல்லும் மகளாகவும், தன் மகன் வழி வம்சத்தை உருவாக்கி தர மருமகளாகவும், வாழையடி வாழையாக பிறர்  வம்சம் வளர பேத்தியாகவும், பெண் பல வடிவங்களில் உறவாக வருகிறாள். 

பெண்களை மதிப்போம். பெண்மையை காப்போம். 

பெண்களை போகப் பொருளாகவும், அடிமையாகவும் நடத்திய அதே ஆணாதிக்க சமுகம் தான் பெண்களை மகாலட்சுமி என்றது.  

ஒருவனுக்கு பெண் தேடும் போது வீட்டுக்கு ஒரு மகாலக்ஷ்மியை கொண்டு வரப்போவதாக சொல்வார்கள். காரணம் மகாலட்சுமி என்பது அன்பின் வடிவம். அமைதியின் சொருபம், பண்பின் பிறப்பிடம். அதனால் பெண்களை மகாலக்ஷ்மி என்றார்கள் நம் முன்னோர்கள். 

எல்லா பெண்களுமே மகாலட்சுமி தான். இதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. 

ஆனால்!

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கொண்டு வரப்படும் சட்டம்,  பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில்,   அப்பாவி ஆண்கள் பாதிக்கப் படுவார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

நான் தவறுகளை அங்கிகரிக்கவில்லை. தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. 

தண்டனையை ஒரே நாளில் நிறைவேற்றுவதா...? (தூக்கு) செய்த தவறை நினைத்து அவன் வாழ் நாள் முழுவதும் தனிமையில் இருக்க வைத்து தண்டிப்பதா என்று கேட்டால்... நான் இரண்டாவது வழியை சொல்வேன். 

குற்றம் செய்தவன் தன் தவறுக்கு வருந்த வேண்டும். அது தான் தண்டனை. தன் ஆயுள் காலம் முழுவதும் என்பதுதான் என் தீப்பாக இருக்கும்.

போகட்டும்.

இன்று .... பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக. கல்வியில், சமுக மதிப்பில், உயர் பதவிகளில் அமருகிற அளவிற்கு பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

அரசியலில், ஆன்மீகதுறையில், அறிவியல்துறைகளில் பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

அதே அளவு  பெண்கள் ஆண்களுக்கு நிகராக வளர்ந்திருக்கிறார்கள். எதில் தெரியுமா?

சிகரெட் புகைப்பதில், மது பானங்கள் அருந்துவதில், இரவு பார்டிகளில் பங்கு கொள்வதில்.  இதற்கு  சதவிகித  கணக்கு  சரியாக வராது. ஆனால் இந்த கலாச்சாரம் பெருகிவருகிறது என்பதை மறுக்க முடியாது.











ஆண்களுக்கு நிகராக பெண்கள் எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை என்பதை நிருபிக்க இந்த வழியிலும் இறங்கி விட்டார்கள் போலும்.

ஆன்மீகம் வளர்ந்தது, தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது என்று சொல்வது மாதிரி, அறிவும் திறைமையும் வளர்ந்தது, ஆனால் ஆடைகள் குறைந்து விட்டதே. நாகரீகம்,பேஷன் என்ற பெயரில் நடக்கும் அலங்கோலங்களை என்ன சொல்வது?

நாம் தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது. அலங்கரித்து கொள்வதும், ஆடை அணிவதும் அவரவர் விருப்பம். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகள் அவசியம்தானே.

பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும், ஆடை அணியவேண்டும் எனபது ஆண் பெண் இருபாலாரும் அறிந்து கொள்வது  அவசியம் தானே.

ஒரு உண்மையை சொல்லப்போனால் நாம் அலங்கரித்துக் கொள்வதும், நேர்த்தியாக ஆடைகளை அணிந்து கொள்வதும் நமக்காக இல்லை. நம்மை பார்ப்பவர்கள் கவுரவமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் இத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறோம். 


என் இஷ்டம் நான் உடுத்துகிறேன் என்றால் இதில் பாதிக்கப்படுவது பலவீனமான பெண்கள் தானே. இதற்கு என்ன தீர்வு இருக்கிறது. சினிமாக்களில் வரும் ஆடை குறைப்பு காட்சிகளுக்கு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?


சட்டம் அனைவருக்கும் சமம். ஒரு குற்றத்தை செய்தவன் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை செய்ய தூண்டியவனும் குற்றவாளியே.

இன்று பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படுகிறது. எனது முந்தைய பதிவில் கூட இதைதான் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால் அந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்த படமால் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கான தீர்வுகளும் ஆராயப்பட வேண்டும்.

நம் நாட்டில் பல சட்டங்கள் தனக்கு வேண்டாதவர்களை பழி வாங்க பயன்படுத்தப்படுவதை அனைவரும் அறிவார்கள்.

இன்றும் மகளீர் காவல் நிலையங்களில் பல ஆண்கள் அரைடவுசருடன் அசிங்கப்பட்டு நிற்கும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதை கேட்பார் யாரும்  இல்லை.  சுயகவுரவம் கருதி ஆண்கள் இதை வெளியில் சொல்வதில்லை என்பதுதான் உண்மை.

குடும்ப சண்டைகளுக்காக மகளீர் காவல்நிலையம் வரும் ஆண்களுக்கு அட்வைசை விட, பட்ட அசிங்கம் தான் ஆறாத ரணமாக இருக்கிறது.

(ஆனாலும் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் சட்ட பாதுகாப்பு வந்த பிறகு வரதட்ச்சனை கொடுமைகள் குறைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.)

பாலியல் வன்கொடுமைகளை குறைக்க உருவாக்கப்படும் சட்டங்கள் பழி தீர்த்துக்கொள்ள பயன்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொது இடத்தில் எப்படி ஆடை அணிவது எனபது வரையறுக்க பட வேண்டும். இதில் பெற்றோரின் பங்கும் இருக்கிறது.

தன் வீட்டு பெண் எப்படி வெளியில் போகிறாள் என்பதை உணர வேண்டும். அவள் படித்தவள் என்கிற கோணத்தில் மட்டும் பார்க்க கூடாது.

இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதின்  காரணமே, கட்டுப்பாடுகள் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்.

ஒரு பெண் தலை குனிந்து நடந்தால், அந்த வீட்டின்  ஆண் தலை நிமிர்ந்து நடக்கலாம். இது ஆணாதிக்க சிந்தனை இல்லை. எதார்த்த உண்மை.

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...