Follow by Email

Sunday, 29 December 2013

நவராத்திரி


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் அருள்புரியும் சக்தியின் அம்சங்களை வழிபாடு செய்யும் ஒன்பது இரவுகளே நவராத்திரிகள் எனப்படுகின்றன. 

ஒன்பது இரவுகள் பத்து பகல்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி எனப்படுகிறது.

சக்தியின் அம்சங்களான துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்று மூப்பெரும் தேவியரை இத்தினங்களில் வழிபாடு செய்து வணங்குகிறார்கள்.  

வட இந்தியாவில் இவ்விழா பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  குஜராத், மகாராஷ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், பஞ்சாபின் வடபகுதி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்த சக்தி  வழிபாட்டினை மிகவிசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

வருடத்தில் நான்கு முறைகள் இந்த நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை சாரதா நவராத்திரி,  வசந்த நவராத்திரி,  ஆஷாட நவராத்திரி அல்லது வராஹி நவராத்திரி,   பௌஷநவராத்திரி அல்லது சியாமளா நவராத்திரி  எனப்படுகின்றன.   

இவற்றில் வசந்த நவராத்திரியும், சாரதாநவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பருவநிலை மாற்றம் பெறும் வசந்த கால ஆரம்பத்திலும், குளிர்கால ஆரம்பத்திலும் இந்த இரு நவராத்திரிகளும் கொண்டாடப்படுகின்றன.

 இந்த சித்திரை  மற்றும் புரட்டாசி மாதங்களை யமனின் கோரப்பற்கள் என்கிறார்கள். ஏனெனில் இந்த பருவ சூழல் மனிதர்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தக் கூடியதாம். 

இதனால்தான் சித்தர்கள் இந்த இரண்டு மாதங்களையும் வழிபாட்டிற்காக ஒதுக்கிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. 

சாரதா நவராத்திரி எனப்படும் நவராத்திரியே பெருவாரியான இந்து பெருமக்களால் கொண்டாடப்படும் மகாநவராத்திரி ஆகும்.

குளிர்காலம் ஆரம்பிக்கும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தமிழுக்கு புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை முடிந்த முதல் தினத்தில் ஆரம்பமாகிறது. 

நவராத்திரியில் ஆண்கள் பங்குபெற்றாலும் பொதுவாக பெண்களாலேயே இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இல்லத்தின் சக்திகள் உலகத்தின் சக்தியை வழிபடும்நாட்களே நவராத்திரி தினங்கள். 

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி என்பது வசந்தருது ஆரம்பமாகும் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தமிழுக்கு சித்திரை மாதத்தில்  கொண்டாடப்படுகிறது



இந்த வசந்த நவராத்திரியை ஒட்டி ஒரு கதை சொல்லப்படுகிறது.

முன்னொருகாலத்தில் அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சிசெய்து வந்தான். அவனுக்கு லீலாவதி, மனோரமா என்று இரண்டு மனைவிகள். 

துருவசிந்து ஒரு நாள் வேட்டைக்கு சென்ற சமயத்தில் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டு உயிரிழந்தான். 

 மனோரமாவின் மகனான சுதர்ஷனன் என்ற இளவரசனுக்கு அயோத்தியின் அரசனாக முடிசூட்டும் ஏற்பாடுகள் முறைப்படி  நடந்தன.

ஆனால் துருவசிந்துவின் இன்னொரு மனைவியான லீலாவதியின் தகப்பனும் உஜ்ஜயினியின் அரசனுமான யுதஜித் என்பவன், தன் பேரனும் லீலாவதியின் மகனுமான சத்ருஜித் என்பவனே அயோத்தியின் அரசனாக வேண்டும் என்று விரும்பினான். 

அதற்கான முயற்சியில் இறங்கினான். இதை மனோரமாவின் தகப்பனும் கலிங்கநாட்டு அரசனுமான வீரசேனன் என்பவன் விரும்பவில்லை. 

தங்கள் பேரனை அரசனாக்கும் முயற்சியில் இரண்டு அரசர்களுக்கும் போர் மூண்டது. போரில் வீரசேனன் கொல்லப்பட்டான். 

மனோரமாவும் அவனது  மகன் சுதர்சனனும் உயிர்தப்பி ஓடி காட்டிற்குள் பரத்வாஜ் ரிஷியின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். ரசகுமாரனின் உதவியாளனாகிய ஒரு நபும்ஸகனும் அவர்களுடன்  இணைந்து கொண்டான். 

தன் பேரனை அயோத்தியின் அரசனாக்கிய யுதஜித், சுதர்ஷனனை தேடிக் கொல்லும் நோக்கில் காட்டிற்குள் தன்  வீரர்களை அனுப்பி வைத்தான். 

பரத்வாஜ் ரிஷியின் ஆசிரமத்தில் தாயும் மகனும் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களை கைதிகளாக தன்வீரர்களுடன் அனுப்பி வைக்கும் படி தூது அனுப்பினான்.  அடைக்கலம் புகுந்தவர்களை காப்பது என் கடமை என்று பரத்வாஜ் உறுதியாய் கூறிவிட்டார்.

சீற்றம் கொண்ட யுதஜித்திடம், அவனது மந்திரிகள் ரிஷிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறி அமைதிப்படுத்தி, அவனை உஜ்ஜயினிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரமத்தில் இருக்கும் துறவி ஒருவர் சுதர்ஷனனுடன் வந்த நபும்சகனை சமஸ்கிருத மொழியில் கிலீபா என்று அழைத்தார்.

சுதர்சனனும் அவனை க்லி.. க்லீம் என்று அழைத்தான்.. நாளடைவில் அது க்லீம் என்றாகியது. க்லீம் என்பது சமஸ்கிருதத்தில்  ஆற்றல்மிக்க அன்னையின் பீஜ அட்சரமாகும். 

அந்த வார்த்தை அரசகுமாரனுக்கு ஒருவித அமைதியையும் இன்பத்தையும் தந்ததால் , அவன் அந்த வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்து தவநிலையை எய்தினான். 

ஜப எண்ணிக்கையின் வீர்யம் அன்னையை  அவன் முன் தோன்றச் செய்தது. சுதர்சனனுக்கு காட்சிதந்த சக்திதேவி அவனுக்கு சக்தி  வாய்ந்த அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கியருளினாள். 

ஒருமுறை பனராஸ் அரசனின் ஒற்றர்கள் பரத்வாஜ் ஆசிரமம் வழியாகச் செல்லும் போது, சுதர்சனனையும் அவன் ஆயுதங்களை கையாளும் திறமையையும் பார்த்து, அவன் தங்கள் அரசனின் மகள் இளவரசி சசிகலாவிற்கு சரியான கணவனாக அமைவான் என்று எண்ணி,  அரசனிடம் கூறினார்கள். 

அரசன் சுதர்சனை முறைப்படி வரவழைத்து தன் மகளை அவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகளைச்  செய்தான்.

இதை அறிந்த யுதஜித் பனராஸ் மீது படையெடுத்து வந்தான். சுதர்சனன் தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த ஆயுதங்களின் துணையோடு யுதஜித்தைத் தோற்கடித்து தன் மாமனாரையும் காப்பாற்றினான். சக்தி தந்த ஆயுதங்கள் யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தொழித்தது.

சுதர்சனன், சசிகலா திருமணம் விமரிசையாக நடந்தது.  அனைவரும் தேவியை , அவரது மந்திரங்களை உச்சரித்து போற்றி வணங்கினர்.   

மனம் மகிழ்ந்த சக்தி, அவர்களின் முன் தோன்றி தன்னை  வருடந்தோறும் இதே  வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள் உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து  நன்மைகள் விளையும் என்று அருளி  மறைந்தாள். 

அதன் பின் சுதர்சனன் தன் மாமனாரிடம் விடைபெற்று தன் மனைவியுடன் பரத்வாஜ் ஆசிரமம் அடைந்தான். அவனை வாழ்த்திய முனிவர் அவனை அயோத்தியின் அரசனாக முடிசூட்டி வைத்தார். 

சுதர்சனன் தன் நாட்டு மக்களோடு வருடந்தோறும்  வசந்த காலத்தில் தேவிக்கு விழா எடுத்து வணங்கி மகிழ்ந்தான். இதுவே வசந்த கால நவராத்திரி ஆயிற்று. 

சுதர்சனனின் வழிதோன்றல்களாகிய இராம லக்ஷ்மணர்கள் சீதையைக் கண்டுபிடித்து மீட்டு வரும் முயற்சியில் வெற்றிபெற  புரட்டாசி மாதத்தில் வரும்  சாரதா நவராத்தியில் தேவியை வணங்கி வேண்டிக்கொண்டனர் என்று  இராமாயணம் கூறுகிறது.

சாரதா நவராத்திரி

உலகெங்கும் வாழும் இந்து பெருமக்கள் அனைவராலும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே இந்த சாரதா நவராத்திரி ஆகும். 

வட இந்தியாவில் மட்டுமன்றி தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு,  கர்நாடகா, ஆந்திரா , கேரளா மாநிலத்திலும் இந்த நவராத்திரிவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இல்லத்தில் கொலுவைத்து , தினசரி   வழிபாடு செய்து பெண்கள் கூட்டமாக இந்த நவராத்திரி வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். அம்மன் கோயில்களிலும் அம்மனை துர்கையாக, லக்ஷ்மியாக, சரஸ்வதியாக அலங்கரித்து,   கொலுப்பொம்மைகள் வைத்து    வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். 

‘ஓர் ஆத்மாவானது, ஓர் அறிவு பெற்ற உயிராய்  பூமியில் தோன்றி,   பிறவிகள் தோறும் தனது நிலையில் உயர்ந்து , ஞானியாய்  மலர்ந்து இறுதியில் இறைவனை அடைகிறது’  என்பதையே தத்துவார்த்தமாக  இந்தக் கொலுப்பொம்மைகள் கூறுகின்றன. 

சக்தியின் ஒன்பது அம்சங்களை ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யவே இந்த ஒன்பது நாட்கள் என்று கூறப்படுகிறது ,  தற்காலத்தில் முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபட்டும், அடுத்து வரும் மூன்று நாட்களில் மகாலக்ஷ்மியையும், அதனடுத்து வரும் மூன்றுநாட்களில் சரஸ்வதியையும் வழிபாடு செய்து, இறுதி நாளில் மகிஷாசுரனை துர்காதேவி அழிக்கும் நிகழ்வோடு இவ்விழா முற்றுபெறுகிறது. 

மகிஷன் என்ற எருமைத் தலை கொண்ட அசுரனை அழிக்க , அனைத்து தெய்வங்களும் ஆயுதங்கள் அளிக்க, அம்பிகையானவள் துர்கை அவதாரம் எடுத்து சிங்கத்தின் மீதேறி, ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிஷனின் தலையை சீவித் தள்ளினாள் என தேவி மகாத்மீயம் கூறுகிறது. 

போரில் துர்கை வெற்றிபெறும் நிகழ்வே விஜயதசமியாக கொண்டாடப்படுக்கிறது. 

பத்தாவது நாளில் கோயில்களில் பெரும்பாலும் சண்டிஹோமம் நடைபெறுகிறது. சண்டி என்பவள் முப்பெரும்தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

பெண்கள் பெரும்பாலும் இந்த பத்துநாட்களும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்கின்றனர்.

மதிவாணன் 


hindu gods

aiyappan

gayathiri

kamachi

rathakannan

maha lakshmi

Friday, 27 December 2013

இதுதான் நிஜம் - short film

நெடுந்தீவு முகிலனின் "தோட்டி" குறும் படம் - 2013

வார்த்தைகள் இல்லாமலே வலிக்கிறது இதயம்.


Monday, 23 December 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா திரும்புமா ?

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்டு வந்த தீர்­மா­னத்தை இந்­தியா ஆத­ரித்த பின்னர் இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­களில் ஒரு­வித மந்த நிலை இருந்து வரு­கி­றது.

இரு­நா­டு­க­ளுமே தமக்­கி­டையி­லான உற­வு­களில் எந்தக் கசப்­புணர்வோ, இடை­வெ­ளி­களோ கிடை­யாது என்று அவ்­வப்­போது கூறிக் கொண்­டாலும், ஒரு வெளித்­தெ­ரியா இடை­வெளி நீடித்து வரு­கி­றது.

ஜெனீவா தீர்மானத்தின் போது தொடங்கிய இந்த இறுக்க­நிலை கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர் இன்­னமும் தீவி­ர­ம­டைந்­துள்­ளதே தவிர குறைந்­துள்­ள­தாகத் தெரி­ய­வில்லை.

சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர அரங்கில் இலங்­கையைக் காப்­பாற்­று­வதில் இந்­தியா தனது முழுப்­பங்­க­ளிப்பை செய்­ய­வில்லை. அல்லது முழு­ம­ன­தோடு செய்யக் கூடிய நிலை இருக்­க­வில்லை.

இதுதான் இரா­ஜ­தந்­திர முனையில் இலங்கை – இந்­திய உற­வு­களில் தோன்­றி­யுள்ள முக்­கி­ய­மான இடை­வெ­ளிக்­கான காரணம்.

இரா­ஜதந்­திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த இடை­வெளி இப்­போதைக்கு குறை­வ­டை­வ­தற்­கான சாத்­தி­யங்­களோ அறி­கு­றி­களோ தென்­ப­ட­வில்லை.

இந்த இடை­வெ­ளியைக் குறைக்க கொழும்பும் புது­டில்­லியும் விரும்­பி­னாலும் கூட சில அகபுறக் கார­ணிகள் அதற்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை.

இலங்­கை­யுடன் இந்தியா கொண்­டுள்ள ஆழமான நட்­பு­றவை தொடர்ந்து பேணிக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இந்­தி­யா­வுக்கு இருந்­தாலும் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வாக இந்­தியா கருதும் 13ஆவது திருத்­தச் ­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் விடயம் அந்த நெருக்­கத்­துக்கு சவா­லாக உள்­ளது.

அதி­காரப் பகிர்வு இரு­த­ரப்பு இடை­வெ­ளியை இன்­னமும் குறைக்க விடாமல் அமுக்கி வரு­கி­றது.

அதை­விட உள்­நாட்டு அர­சியல் அழுத்­தங்­களும் இந்­தி­யாவை ஒரு கட்­டத்­துக்கு மேல் இலங்­கை­யுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்­கவே செய்­கின்­றன.

இது இரா­ஜ­தந்­திர அரங்கில் உள்ள முக்­கி­ய­மான இரு­த­ரப்புச் சிக்கல்.

ஆனால், பாது­காப்பு உற­வு­களில் இந்த உற­வுச்­சிக்கல் ஏதும் இருக்­க­வில்லை.

பாது­காப்பு ஒத்­து­ழைப்பு விட­யத்தில், இலங்­கை­யுடன் எந்த இடை­வெ­ளியும் ஏற்­பட்டு விடாமல் பாது­காப்­பதில் இந்­தியா உறு­தி­யாக இருந்து வரு­கி­றது.

தமிழ்­நாட்டு அர­சி­யல்­வா­திகள், புது­டில்­லியின் இந்த இரட்டை அணு­குமு­றையைப் புரிந்து கொள்­ளாமல் திரும்பத் திரும்ப அதற்குள் மூக்கை நுழைத்து முட்டிக் கொள்­கின்­றனர்.

இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் பாது­காப்பு உற­வு­க­ளையும் ஒன்­றுடன் ஒன்று குழப்பிக் கொள்­ளாத இரட்டை அணு­கு­மு­றையை இலங்­கை­யுடன் முதன்­மு­த­லாக அறி­மு­கப்­ப­டுத்­திய நாடு அமெ­ரிக்கா தான்.

இலங்­கையில் போர் முடி­வுக்கு வந்­த­வுடன் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம், என்று ஒரு வழியைக் கடைப்­பி­டிக்கத் தொடங்­கிய போது அது இலங்­கை­யு­ட­னான நெருக்­கத்தைக் குறைக்கும் என்று அமெ­ரிக்கா உணர்ந்­தி­ருந்­தது.

ஆனால், இந்­தியப் பெருங்­க­டலில் இலங்­கையின் அமை­வி­டத்தின் முக்­கி­யத்­ துவம் கருதி இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வு­களை சீர்­கு­லை­யாமல் பாது­காத்துக் கொள்­வதில் அமெ­ரிக்கா உறு­தி­யாக இருந்­தது.

இலங்கை விமா­னப்­ப­டைக்கு கடல்சார் கண்­கா­ணிப்­புக்­கான கரு­வி­களைக் கொடுத்தும் பசுபிக் கட்­டளைப் பீடத்தின் மூலம் பயிற்­சிகள், கூட்டுப் பயிற்­சி­களை நடத்­தியும், சில உதவித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தியும் பாது­காப்பு உற­வு­களை கெட்டுப் போகாமல் பாது­காத்துக் கொண்­டது அமெ­ரிக்கா.

இன்று வரை அது சுமு­க­மா­கவே தொடர்­கி­றது.

அதே­வேளை, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளமும் கொழும்பும் கிட்­டத்­தட்ட கீரியும் பாம்பும் என்ற நிலை வரைக்கும் சென்­றுள்­ளது.

இது­போலத் தான் இப்­போது இந்தி­யாவும் இரட்டை அணுகு­முறையைக் கையாண்டு வரு­கி­றது.

தமிழ்­நாடு, புது­டில்­லியில் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்ற நிலையில் இலங்­கை­யு­ட­னான உற­வு­களை சம­நி­லைப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு இந்த இரட்டை நிலைப்­பாடு இந்­திய அர­சுக்கு அவ­சி­ய­மாக உள்­ளது.

அர­சியல் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தமிழ்­நாட்டின் உள்­ளார்ந்த விருப்ப ஈடு­பா­டு­க­ளுக்­காக நெகிழ்ந்து போக நேர்ந்­தாலும், பாது­காப்பு ரீதி­யாக அத்­த­கைய இழுப்­பு­க­ளுக்கு விட்டுக் கொடுக்­காத போக்கை புது­டில்லி அண்­மைக்­கா­ல­மாக கடைப்­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போருக்கு இந்­தியா மறை­மு­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் போர்த்­த­ள­பாட உத­விகள் உள்­ளிட்­ட­வற்றை கொடுத்­தி­ருந்­தது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர் இலங்­கை­யுடன் எத்­த­கைய பாது­காப்பு உற­வு­க­ளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்­நாடு கடு­மை­யான அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வந்­தாலும் அவை எது­வுமே கணக்கில் எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

இலங்கைப் படை­யி­ன­ருக்குப் பயிற்சி அளிக்­கப்­படும் விவ­காரம் இலங்கைக் கடற்­ப­டை­யுடன் இணைந்து போர்ப்­பயிற்­சி­களில் ஈடு­படும் விவ­காரம் உள்­ளிட்­ட­வற்றில் தமி­ழகம் எந்­த­ள­வுக்கு முட்டி மோதியும் எதை­யுமே சாதிக்க முடி­ய­வில்லை.

இப்­போதும் கூட இரு­த­ரப்பு கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­களில் நெருக்கம் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் தேவேந்­தி­ர­குமார் ஜோஷி, இலங்­கையில் 5 நாள் பயணம் மேற்­கொண்­டி­ருந்­ததும், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ச புது­டில்­லிக்கு இர­க­சியப் பயணம் மேற்­கொண்­டி­ருந்­ததும் இந்த உறவின் முக்­கிய அடை­யா­ளங்­க­ளாகும்.

இந்­திய கடற்­படைத் தள­பதி காலி கலந்­து­ரை­யா­ட­லுக்­கா­கவே வந்­தி­ருந்­தாலும் மேல­தி­க­மாக மூன்று நாட்கள் இங்கு தங்­கி­யி­ருந்து முக்­கிய கடற்­படைத் தளங்­க­ளுக்கு சென்­ற­துடன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச உள்­ளிட்­டோரைச் சந்­தித்து விட்டே போயி­ருக்­கிறார்.

அத்­துடன், இலங்கைக் கடற்­ப­டையைச் சேர்ந்த நால்­வ­ருக்கு தொழில்­நுட்ப பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வ­தற்­கான, வச­தியை அளிக்­கவும் அவர் இணங்­கி­யுள்ளார்.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜ­பக்ச புது­டில்­லிக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் நோக்கம் குறித்து இன்­னமும் எந்த தக­வலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இரண்டு நாட்கள் புது­டில்­லியில் தங்­கி­யி­ருந்து பேச்­சுக்­களை நடத்தி விட்டு அங்­கி­ருந்து கொழும்பு திரும்­பிய பின்னர் தான் அவர் வந்து சென்ற விவ­கா­ரமே புது­டில்லி ஊட­கங்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது.

அவர் இந்­தியப் பாது­காப்பு அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் குறிப்­பாக, இந்­தியக் கட ற்­படைத் தள­ப­தி­க­ளுடன் இரண்டு நாட்­களும் பேச்­சுக்­களை நடத்­தி­ய­தா­கவும் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனனை சந்­தித்­த­தா­கவும் மட்­டுமே மொட்­டை­யான தக­வ­ல்கள் வெளி­யா­கின.

கொழும்பு திரும்ப முன்னர் அவர் வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்­ஷித்தை சந்­தித்­தது கூட ஒரு மரி­யாதை நிமித்­த­மான சந்­திப்பு என்றே கூறப்­ப­டு­கி­றது.

எனவே அவ­ரது புது­டில்லிப் பய­ணத்தின் அடிப்­படை, அர­சியல் இரா­ஜ­தந்­திர நோக்­கி­லா­னது அல்ல என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

பாது­காப்பு ரீதி­யாக இலங்­கை­யுடன் இந்­தியா நெருக்­கத்தை கொண்­டுள்­ள­தற்கு இரண்டு முக்­கி­ய­மான கார­ணங்­களைக் குறிப்­பி­டலாம்.

முத­லா­வது சீனா­வு­டனும் பாகிஸ்­தா­னு­டனும் இலங்கை கொண்­டுள்ள உற­வுகள் பல­ம­டைந்து வரும் நிலையில் பாது­காப்பு துறை­யிலும் அத்­த­கைய இடை­வெளி ஒன்று ஏற்­ப­டு­வதை அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை.

இந்­தியா எங்­கி­ருந்­தெல்லாம் பின்­வாங்­கு­கி­றதோ அங்­கெல்லாம் மூக்கை நுழைப்­ப­தற்கு சீனா ஆர்வம் காட்­டு­வதால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கை­யு­ட­னான நெருக்­கத்தை குறைத்துக் கொள்ள இந்­தியா தயா­ராக இல்லை.

அடுத்­தது, இந்­தி­யா­வுக்கு அதி­க­ரித்து வரும் கடல்­வழி பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலில் இருந்து பாது­காத்துக் கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்தம் உள்­ளது.

குறிப்­பாக, கடற்­கொள்­ளை­ய­ருக்கு எதி­ரான செயற்­பாடு என்ற போர்­வையில் செயற்­படும் தனியார் பாது­காப்பு அமைப்­பு­களின் மூலம் தீவி­ர­வா­தி­களின் தாக்­குதல் நிக­ழலாம் என்று இந்­தியா அதி­க­ளவில் அச்சம் கொண்­டுள்­ளது.

இந்­தி­யாவைச் சுற்­றி­யுள்ள கடலில் 140 தனியார் ஆயு­தக்­கப்­பல்கள் நட­மா­டு­வ­தாக இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஜோஷி கடந்­த­ வாரம் கூறி­யுள்ளார்.

இந்­தியப் பெருங்­க­டலில் முக்­கி­ய­மான இடத்தில் அமைந்­துள்ள இலங்­கையின் உத­வியும் ஒத்­து­ழைப்பும் இருந்தால் தான் இத்­த­கைய தீவி­ர­வாத தாக்­கு­தல்­களில் இருந்து தப்­பிக்க முடியும்.

எனவே இலங்­கை­யுடன் பாது­காப்பு உற­வு­களை குறிப்­பாக கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தனது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நினைக்­கி­றது இந்­தியா.

அக­தி­களின் வரு­கையை கட்­டுப்­ப­டுத்த இலங்­கை­யுடன் அவுஸ்­தி­ரே­லியா எவ்­வாறு பாது­காப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளதோ அது­போலத் தான் தனக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிக்க இலங்கையுடன் நட்புறவு கொள்வதை விட இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

இந்தியாவின் இந்தப் பலவீனம் தான் இலங்கைக்கு சாதகமாக உள்ளது,

அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியாக வலிய வந்து ஒட்டிக் கொள்ளும் இந்தியாவின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை.

இந்த பாதுகாப்பு உறவுகளை தமிழ்நாட்டின் எந்த அரசியல் அழுத்தங்களாலும் உடைக்க முடியாது.

ஒருவேளை வரும் மே மாதத்துக்குப் பின்னர் புதுடில்லியில் பா.ஜ.க. ஆட்சிப் பீடமேறினாலும் கூட இந்த வியூகத்தில் இருந்து வெளிவர முடியாது.

ஒருபக்கத்தில் இலங்கை அரசுக்கு தலைவலி கொடுப்பதாக காட்டிக் கொண்டாலும் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த இரட்டை அணுகுமுறை தேவைப்படுகிறது.

இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல் இந்தியாவின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பி விடலாம் என்று தமிழ்நாடோ அன்றி இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளோ எத்தகைய கணக்கைப் போட்டாலும் அது பலிக்கப் போவதில்லை.

நன்றி : நெருடல்.காம் சுபத்ரா

Thursday, 19 December 2013

தேவயானி கோப்ரகடே மீது புகார் கொடுத்த சமையல்காரி சங்கீதா புகைப்படம்

அமெரிக்காவில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வருபவர், தேவயானி கோப்ரகடே (வயது 39).

அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, அமெரிக்க போலீசார் பெண் தூதர் தேவயானியை கைது செய்தனர். 

தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பும்போது வீதியில் அவரை கைது செய்த போலீசார், தேவயானிக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.

அத்துடன் அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதுடன், போதை வழக்கில் கைதான கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்து அவமரியாதை செய்தனர். 

இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இருதரப்பு உறவிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இதுவரை புகார் கொடுத்த பெண்ணின் புகைப்படமோ, அவர் கணவர் பிலிப்  படமோ வெளிவரவில்லை. அந்த அளவிற்கு ரகசியம் காக்கப்படுகிறது. அவர்கள் இவர்கள்தான்.


அமெரிக்காவில் இந்தியப் பெண் தூதர் தேவயானி கைது விவகாரம், இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு வேதனை வேறு மாதிரியாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக அவரது வக்கீல் டானா சூஸ்மேன் கூறுகையில், இந்தப்பிரச்சினையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான கவனத்தை, இப்போது தேவயானியின் கைது தொடர்பாக அதிகாரிகளும், ஊடகங்களும் திசை திருப்பிவிட்டன. இது கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது’’ என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘தேவயானி உரிய சம்பளத்தை என் கட்சிக்காரருக்கு தரவில்லை. அதுமட்டுமல்ல, அவர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வேலை வாங்கப்பட்டுள்ளார். இனியும் இதை சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்’’ என்றார்.

சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘‘இந்த தருணத்தில் எனது கட்சிக்காரர் வெளியே வரமாட்டார். ஊடகங்களுடன் பேசவும் மாட்டார்’’ என அவர் கூறினார்.

பேஸ்புக்’ தகவலால் அடையாளம் கண்டுபிடிப்பு!!

சவுதி அரேபியாவில் சுயநினைவிழந்த தமிழர் ‘பேஸ்புக்’ தகவலால் அடையாளம் கண்டுபிடிப்பு!!



விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, போய்குனம் பகுதியை சேர்ந்த தணிகைவேலு (33) சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். அவர் திடீரென மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு நினைவுத் திறனை இழந்துவிட்டார்.

நினைவுத் திறனை இழந்த தணிகைவேல் சவுதியில் உள்ள ஜெட்டாவில் இந்திய தூதரக அலுவலகம் முன் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததால் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சுயநினைவிழந்ததால் அவர் யார் என்ற விவரம் தெரியாமல் தவித்த அதிகாரிகள் அவரை எப்படி தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது என திணறிவந்தனர்.

பல்வேறு முயற்சிகளுக்குபின் தூதரக அதிகாரிகள் செந்தமிழ் நல மன்றம் என்ற தமிழ் அமைப்பை அணுகினர். அவர்கள் அவரது தற்போதைய புகைப்படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டனர். 

அவரது புகைப்படத்தை 8000 பேர் பகிர்ந்துள்ள நிலையில் அதில் ஒருவர் அவரை கண்டுபிடித்து, அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் என அரபு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தணிகவேலு மனைவியிடம் அவரது விசாவின் நகல் இருந்ததையடுத்து, உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகள், சவுதி தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவரை இந்தியாவிற்கு அனுப்ப ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்திய பணியாளர்கள் அவரின் மருத்துவ செலவையும், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செலுத்தவேண்டிய அபராதம் மற்றும் இந்திய பயணத்திற்கான விமான கட்டணத்தையும் செலுத்த முன்வந்தனர். 

இந்திய தூதரக அதிகாரிகள் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதுவரை அவரை அங்குள்ள மருத்துவமனையில் வைத்திருக்க இந்திய தூதரக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Wednesday, 18 December 2013

நேதாஜி வீர உரை விடியோ

இலங்கையின் போர் குற்ற வீடியோ



video

நான் தனி நபர் அல்ல-தேவ்யானி கோப்ரகேட்

அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகேட் தான் காவல்துறையால் கையாளப்பட்ட விதம் தன்னை கண்ணீர் சிந்தி அழச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். 

தனது இந்திய வெளியுறவு துறை சகாக்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் அமெரிக்க காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் குறித்தும் விவரித்துள்ளார். 

”என் கையில் விலங்கிட்டு அழைத்துச் சென்றார்கள். ஆடைகளை களைந்து சோதனை செய்தார்கள். குற்றவாளிகளுக்கும் போதை மருந்து பழக்கம் உள்ளவர்களுக்கும் நடத்தப்படும் சோதனைகளை என் மீதும் நடத்தினார்கள்.

போதை மருந்து குற்றவாளிகள் அடைக்கப்பட்ட சிறையில் என்னையும் அடைத்தார்கள். இதெல்லாம் நடந்தபோது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பல முறை அழுதுவிட்டேன், 

இருப்பினும் நான் அங்கே தனி நபர் அல்ல. இந்திய நாட்டின் பிரதிநிதி என்ற நினைவு என்னில் இருந்துகொண்டே இருந்தது. எனவே என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டேன்” என்று தனக்கு ஏற்பட்ட வேதனையை விவரித்துள்ளார் கோப்ரகேட்.

மேலும் சில படங்கள் 











கிட்லருக்கே தண்ணி கட்டிய நேதாஜி !!



ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரைச் சந்திக்க பெர்லின் சென்றிருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஹிட்லரின் மாளிகையில் அவரது உதவியாளர்கள் நேதாஜியை வரவேற்று அழைத்துக் கொண்டுபோய் ஓர் அறையில் உட்காரச் சொன்னார்கள். அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் சுபாஷ் சந்திரபோஸ்.

யாரையும் அவ்வளவு எளிதில் நம்பவோ, சந்திக்கவோ மாட்டாராம் நாஜிகளின் தலைவரான அடால்ப் ஹிட்லர். தன்னைப் போலவே உருவமுள்ள மூன்று, நான்கு டூப்புகளை எப்போதும் தன்னைச் சுற்றி வைத்திருப்பாராம். சுபாஷ் சந்திரபோஸ் அமர்ந்திருந்த அறைக்கு அடால்ப் ஹிட்லர் போன்ற தோற்றமுடைய டூப் ஒருவர் வந்தார்.

அங்கிருந்த ஏதோ ஒரு பொருளைக் காட்டி அதை வேறு இடத்தில் மாற்றி வைக்கும்படி அங்கிருந்த அதிகாரி ஒருவருக்குக் கட்டளை இட்டுவிட்டு அகன்றார் அவர். எந்தவிதச் சலனமுமில்லாமல் நேதாஜி அதைப் பார்த்தும் பார்க்காமல் தனது புத்தகத்தில் மூழ்கி இருந்தார். ஹிட்லர் போலவே தோற்றமுள்ள இரண்டு, மூன்று டூப்புகள் அந்த அறைக்கு வந்தார்கள்.

ஒருவர் நேதாஜியின் எதிரிலேயே அமர்ந்தார். அப்போதும் சலனமே இல்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டார் நேதாஜி. வேறொருவராக இருந்தால், ஹிட்லர் என்றாலே பயத்தில் நெளிவார்கள். எழுந்து நின்று சல்யூட் அடிப்பார்கள். குனிந்து வணங்குவார்கள். வந்திருந்த நபர் புன்னகை புரிந்துவிட்டு அகன்று விடுவார்.

எதையுமே சட்டை செய்யாமல் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் அந்த இந்தியரைப் பார்த்து ஹிட்லரின் உதவியாளர்களும், உளவுத் துறையினருமே வியப்பில் ஆழ்ந்து விட்டனர். இவற்றைப் பற்றி ஹிட்லரிடம் சென்று தகவல் அளித்தனர். கடைசியாக ஹிட்லர் வந்தார். சுபாஷ் சந்திரபோஸின் தோளைத் தொட்டார்.

தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்து விட்டு எழுந்த சுபாஷ் சந்திரபோஸ், “ஹலோ மிஸ்டர் ஹிட்லர்’ என்று கைகுலுக்கத் தனது கரங்களை நீட்டியபோது, அடால்ப் ஹிட்லருக்கே அதிர்ச்சி. “”எப்படி நீங்கள் நான்தான் ஹிட்லர் என்று அடையாளம் கண்டு கொண்டீர்கள்..? என்று கேட்ட ஹிட்லரிடம், நேதாஜி சுபாஷ்போஸ் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்- எனது தோளில் கையை வைக்கும் தைரியம் வேறு யாருக்கு வரும்..?

ஒரிஜினலுக்கும் டூப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடக் கண்டுபிடிக்கத் தெரியாதவன் போராளியாகவும், தலைவனாகவும் இருக்க முடியாது!” அனைவரும் “ஹெய்ல் ஹிட்லர்!’ என்ற முழக்கத்துடன் சல்யூட் அடித்துக் குனிந்து வணக்கம் தெரிவிக்கும் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், முதன்முறையாகக் குனிந்து வணக்கம் செலுத்தி நேதாஜி சுபாஷ்போûஸ வரவேற்றுத் தனது அறைக்கு அழைத்துச் சென்றார்…!

நன்றி குருவி 

இது அமெரிக்க சதியா?



அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதன் பின்னணியில் இருப்பது இந்திய வம்சாவழி அட்டர்னியான பிரீத் பஹாராதான் காரணமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஒபாமா அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற போது தென் நியூயார்க் மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் பஹாரா. 

அமெரிக்காவை மட்டுமின்றி உலகை உலுக்கிய பங்குச் சந்தை உள்பேர மோசடி வழக்கில் சிக்கியவர் இலங்கைத் தமிழர் ராஜரத்தினம். இந்த வழக்கில் இந்தியரான ரஜத் குப்தாவும் கைது செய்யப்பட்டார். 

இந்த உள்பேர வழக்கில் ரஜத் குப்தா கைது செய்யப்பட்ட போது அரசு தரப்பு வழக்கறிஞரான பிரீத் பஹாரா ஊடகங்களால் பாராட்டப்பெற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கூட உள்பேர மோசடி வழக்கில் இந்திய தொழிலதிபரான சந்தீப் அகர்வால் கைது செய்யப்பட்டதிலும் பிரீத் பஹாராதான் முக்கியப் பங்கு வகித்தவர். 

சந்தீப் அகர்வால், ஹரியானாவை சேர்ந்ஹ்டவர். shopclues.com என்ற இணையதளத்தின் நிறுவனரும் ஆவார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் உள்பேர மோசடி வழக்கில் 76வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். 

இந்த வழக்கில் அகர்வாலுக்கு 25 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்படவும் கூடும். 

இந்த நிலையில்தான் அமெரிக்க தூதரக அதிகாரி தேவ்ய்பானி கோப்ராகாடே விவகாரம் வெடித்தது. தேவ்யானி மீதான விசா மோசடி விவகாரத்திலும் தேவ்யானிக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞராக பிரீத் பஹாராதான் செயல்பட்டு வருகிறார். 

தற்போது தேவ்யானி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட இருக்கிறது. 

இப்படி தொடர்ந்தும் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் பலரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரீத் பஹாராவினால் சிக்க வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது மத்திய அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத் தொடர்ந்து பிரீத் பஹாரா தற்போது கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். 

பிரீத் பஹாரா, உள்நோக்கத்துடன் இந்திய தொழிலதிபர்களை இலக்கு வைத்து செயல்படுகிறாரா? அவருக்குப் பின்னால் இருக்கும் சக்தி எது? ஆகியவை தொடர்பாகவும் மத்திய அரசு விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா திட்டமிட்டுச் செய்திருக்கிறது !!


நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கண்டனம் செய்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சரியானது இல்லை என்றும் ஏற்புக்கு உரியது இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.

இதனிடையே, தேவயானி கோபர்கடேயை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் தூதரகத்தில் பிரதிநிதியாக நியமித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.


இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது நேரடியான பதிலை அளிக்க மறுத்துவிட்டார். 

அவ்வாறு தேவயாணி நியமிக்கப் பட்டிருந்தால் ஐ.நா.விடம் அங்கீகார பதிவு செய்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் அவருக்கு ராஜதந்திர விதிவிலக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.

இதனிடையே,தேவயானி கைது விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

மாநிலங்களவையில் இவ்விவகாரத்தால் ஏற்பட்ட கூச்சலால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மாநிலங்களவையில் இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்திய அரசின் குரல் அமெரிக்காவில் ஒலித்திருக்கும் என நம்புவதாக கூறியதோடு, நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்ப்பார்கவில்லை என்றார்.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெயிட்லி பேசுகையில் வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில் இந்தியா மென்மையாக நடந்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.



திமுக உறுப்பினர் கனிமொழி பேசுகையில் ஒரு இந்திய பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடுரம் வருத்ததிற்கு உரியது என்றும், வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலத்தை இந்தியா எட்டியுள்ளதாகவும் கூறினார்.


இந்நிலையில் இந்திய பெண் அதிகாரி தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதாலயே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் மத்திய அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறி விட்டதாக தெரிவத்தார்.

புகார் கொடுத்தவரின் கணவர் அமெரிக்கா சென்றார்

இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக் காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை செய்ததன் மூலம்,இந்தக் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகக் கருதுவதாகவும இந்திய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய ராஜிய அலுவலர்கள் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய,பணியாளர்களை அமர்த்திக்கொள்ள இந்திய அரசு ஒரு தொகையை அவர்களது சம்பளத்திலேயே சேர்த்து தருகிறது என்றும், அதிலிருந்துதான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என்.ரவி கூறினார்.

பணிபெண்கள் ஊதியம் உள்நாட்டு சட்டங்கள்பாற்பட்டே அமைந்திருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு தரப்படும் ரொக்க சம்பளம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது, 

அவர்களுக்கு வழங்கப்படும், இலவச வீட்டுவசதி, இலவச உணவு, மின்சாரம், தண்ணீர் செலவு போன்றவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் பொதுவாக சுமுகமாக இருக்கும் இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு தற்காலிக விரிசலை ஏற்படுத்தும் என்றும், ஆனால் போகப்போக இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார். 

ஆனாலும், இந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயத்தின் வடு அழியாது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா இந்த சம்பவத்தில் , புகார் கொடுத்த பெண்ணின் கணவருக்கு விசா வழங்கி, அவர் டிசம்பர் 10ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரே, டிசம்பர் 11ம்தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, அமெரிக்கா இதைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது என்றார் ரவி.

அவமானப்பட்ட இந்திய பிரபலங்கள்!!

அமெரிக்காவில் தூதரக பணியாளர் தேவ்யானி விவகாரம், இந்தியாவுடனான உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு உரைக்கும் வகையில் பாதுகாப்பு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.



இந்திய பிரபலங்களை இப்படியெல்லாம் அமெரிக்கா அவமதிப்பது ஒன்றும் புதியதும் அல்ல. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமையே அவமானப்படுத்தியது அல்லவா அமெரிக்கா.  இதோ அந்த பட்டியல் 




அப்துல்கலாம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் ஷூவை கழற்றச் சொல்லி சோதனையிட்டு அமெரிக்கா அவமானப்படுத்தியது.












நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸையும் அக்குவேறாக ஆணிவேறாக சோதனை நடத்தி அவமானப்படுத்தியது அமெரிக்கா.





ஹான் என்ற பெயரை வைத்து அவர் தீவிரவாதியோ  என்ற கோணத்தில் துருவி துருவி விசாரிக்கப் பட்டார். பல மணி நேரம் சோதனை என்ற பெயரில் தடுத்து நிருத்தபட்டார்.







கமலஹாசனும் அமெரிக்காவின் அதிதீவிர விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்.









இந்திய தூதர் மீரா சங்கரும் கூட அமெரிக்க விமான நிலையத்தில் தோளில் தட்டி உட்கார வைக்கப்பட்டார்.








2010ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் இத்தகைய அவமானகரமான சோதனைக்குள்ளானவரே.









ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஹர்தீப் புரியின் டர்பனை கழற்றச் சொல்லி அவரை தடுத்தும் வைத்து அவமதித்தனர் அமெரிக்கர்கள்.









2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய கீர்த்திகா பிஸ்வாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.







இந்த பட்டியலில் இப்போது தேவயாணி 

Wednesday, 11 December 2013

விடுதலைபுலிகளின் முடிவு - நடந்தது இதுதான்.

புலனாய்வு கட்டுரை எழுதுவதில் விறுவிறுப்பு ரிஷி தனித்திறமை வாய்ந்தவர்.  இவர் எழுதிய பல கட்டுரைகள் அருகில் இருந்து பார்த்த மாதிரி துல்லியமான விபரங்களுடன் வரும்.  அவர் இப்போது எழுதியிருக்கும் ஒரு கட்டுரையை இப்போது உங்களுக்காக வெளியிட்டு இருக்கிறேன்/  படித்து பாருங்கள். உண்மை புரியும். 


சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?

ப.சிதம்பரம், “ …இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், பிரபாகரன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு..

…இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு, தனி நாடு கேட்க முடியாது. இந்தியாவில் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தனி நாடு கோருகின்றனர். அதை சரி என்று இந்தியா ஏற்றுக் கொள்கிறதா? அப்படித்தான் இலங்கை ஏற்கவில்லை..” என்றார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, “இலங்கைப் போரில் இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றதும், புலிகள் தரப்பில் நடேசன் மூலமாக, குமரன் பத்மநாதன் வழியே இந்திய அரசிடம் உதவி கேட்டனர். மத்திய அமைச்சர் சிதம்பரம் அதற்கு முயற்சி மேற்கொண்டு, புலிகள் தரப்பிலும் இலங்கை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள பழ.நெடுமாறனும் வைகோவும், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அவர்கள் மூலம் தனி நாடு பெறலாம்’ என்று கூறி புலிகளை குழப்பிவிட்டனர். அதனால் நிலைமை மாறிப்போனது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்த சலசலப்பு, தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஒரு தரப்பினர், “கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்தபின் இவர்கள் கதை விடுகிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மற்றொரு தரப்பினரோ, “இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோர் இறந்து விட்டதால், தாம் கூறுவதை மறுத்துப் பேச ஆளில்லை என்பதால், தேர்தல் சமயத்தில் இவ்வாறு திசை திருப்பி விடுகிறார்கள்” என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இவர்கள் கூறுவது நிஜமா? அல்லது காங்கிரஸ்காரர்கள் ‘எமது பேச்சை கேட்டிருந்தால், பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கலாம்’ என்று கூறுவது நிஜமா என்பதில் பலத்த சர்ச்சை. (நெடுமாறன் ஐயா, சீமான் ஆகியோருக்கு இந்த சர்ச்சையில் சிக்கல் கிடையாது. காரணம், அவர்களுக்கு பிரபாகரன் உயிருடன் உள்ளார்)

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறோம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோரை தவிர, புலிகள் தரப்பில் இந்த விவகாரத்தை டீல் பண்ணிய மூவர் இன்னமும் உயிருடன் உள்ளார்கள். இந்தியாவில், அமைச்சர் ப.சிதம்பரத்தை தவிர, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய வேறு இருவர், இன்னமும் இந்தியாவிலேயே உள்ளார்கள்.

மத்திய அரசின் திட்டத்தை குழப்பினார்கள் என்று காங்கிரஸ் தரப்பால் குற்றம் சாட்டப்பட்ட பழ.நெடுமாறன், வைகோ ஆகியோரை, மேலே சொன்ன கணக்கில் சேர்க்கவில்லை. இவர்கள் இருவரை தவிர, இந்த விவகாரத்தில் தொடர்புடைய வேறு இருவர் இந்தியாவில் உள்ளார்கள்.

அவர்களில் ஒருவர், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமான, ஆனால் அரசியல்வாதி அல்லாத நபர். இரண்டாவது நபர், இந்தியாவின் தேசிய கட்சி ஒன்றின் தமிழகத்தை சேர்ந்த மாநில அரசியல்வாதி.



இவர்கள் இருவருக்கும் இந்த விவகாரத்தில் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விவகாரம் பற்றி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறுவதை பார்த்தால், இது ஒரு தடவை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போன்ற தோற்றம் ஏற்படுகிறது அல்லவா? ஆனால், நிஜம் அதுவல்லை.

இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இரு கட்டங்களுக்கும் இடையே சில மாதங்கள் இடைவெளி உண்டு. முதலாவது கட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோருக்கு தொடர்பு உண்டு. இரண்டாவது கட்டத்தில் தொடர்பு இல்லை.

சரி. அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதுபோல, “மத்திய அரசு சொன்னதை கேட்டிருந்தால், பிரபாகரன் ஒருவேளை உயிர் தப்பியிருக்கலாம்” என்பது எந்தளவுக்கு உண்மை?

அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் (விறுவிறுப்பு.காமில் நாமே பல தடவைகள் விமர்சித்துள்ளோம்), இந்த விஷயத்தில் அவர் கூறுவது, ஏறக்குறைய நிஜம். கே.எஸ்.அழகிரி கூறுவதும் அப்படியே.

இத்தனை ஆண்டுகளாக விறுவிறுப்பு.காம் படித்துவரும் வாசகர்களுக்கு, நாம் காங்கிரஸ் ஆதரவு மீடியாவோ, காங்கிரஸ் அனுதாபியோகூட அல்ல என்பது புரிந்திருக்கும். இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் அமைச்சர் சிதம்பரம் கூறுவது ஏறக்குறைய நிஜம் என்று, எமக்கு தெரிந்த விஷயங்களில் அடிப்படையில் சொல்கிறோம். We firmly stand on it.

சரி. உண்மையில் இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? இதோ, முழுமையான விபரங்கள்:

இந்த விவகாரம், யுத்தத்தின் இறுதி நாட்களில் தொடங்கியது அல்ல. யுத்தம் முக்கால் பங்கு முடிவடைந்து, கிளிநொச்சி நகரம் எந்த நேரத்திலும் ராணுவத்தால் கைப்பற்றப்படலாம் என்று இருந்த நிலையில், 2009-ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

அந்த நிலையில் தமிழ் மீடியா பிரசாரம், “விடுதலைப் புலிகள் தந்திரமாக பின்வாங்கி செல்கிறார்கள்” என்பதாக இருந்தது. ஆனால், நிஜ நிலைமை அப்படி இருக்கவில்லை. ராணுவ படைப்பிரிவுகளின் வெவ்வேறு திசையிலான தாக்குதல்கள் காரணமாக, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரத்தையும் கைவிட்டு, கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த கிளிநொச்சி அடுத்து ராணுவத்தின் கைகளில் விழப் போகிறது என்று புலிகள் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது. கிளிநொச்சியை கைவிட்டு பின்வாங்கினால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனை புலிகளின் தளபதிகள் மட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.
மீடியாக்களில் காட்டப்பட்ட பிம்பம் வேறு என்ற போதிலும், நிஜ நிலைமை இலங்கைக்கு வெளியே மிகச் சிலருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில், வட அமெரிக்காவில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனால் ‘நிலைமை படுமோசம்’ என்ற தகவல் 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

வட அமெரிக்காவில் வசித்தவருக்கு, தமிழக அரசியல் வட்டாரங்களில் நல்ல தொடர்பு உண்டு. அவர் தமக்கு கிடைத்த தகவல் பற்றி, இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருடன் விவாதித்திருக்கிறார். “இந்திய மத்திய அரசால், ஏதாவது செய்ய முடியுமா” என்று கேட்டிருக்கிறார்.

பின்னாட்களில் இந்த விஷயம் தெரியவந்தபோது வட அமெரிக்காவில் வசித்தவரிடம் நாம் ஒரு கேள்வி கேட்டோம். “தமிழகத்தில் ஈழ அரசியல் பற்றி அதிகம் பேசும் பலர் இருக்க, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், ஏன் இந்த இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டீர்கள்?” என்பதே நாம் அவரிடம் கேட்ட கேள்வி.


“இந்திய தேசியக் கட்சியின் இந்த தமிழக தலைவர் ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாதவர். மிகவும் நியாயமானவர். இவர் மூலம் செய்யப்படும் இப்படியான காரியங்களை தமது சுய அரசியல் லாபத்துக்காக வெளியிடவோ, பயன்படுத்தவோ மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் அவருடன் இதுபற்றி பேசினேன்” என்பது நமக்கு கூறப்பட்ட பதில்.

அந்த நம்பிக்கையை, குறிப்பிட்ட அரசியல் தலைவர் இன்னமும் காப்பாற்றி வருகிறார் என்பது, தமிழக அரசியலின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்று.

இந்த தமிழக தலைவர், அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியிருக்கிறார்.

இவர் தெரிவிப்பதற்கு முன்னரே, இந்திய உளவுத்துறை மூலம், விடுதலைப் புலிகளின் அப்போதைய இக்கட்டான நிலை அமைச்சர் சிதம்பரத்துக்கு தெரிந்திருந்தது. ஆனால், புலிகள் தரப்பில் இருந்து யாரும், அமைச்சர் சிதம்பரத்துடனோ, மத்திய அரசுடனோ தொடர்பில் இருக்கவில்லை.

தமிழகத் தலைவர், ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம், அந்த சந்தர்ப்பத்தில் முதல் தடவையாக மத்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு indirect தொடர்பு ஏற்பட்டது.

வட அமெரிக்காவில் உள்ளவர் யார்? அவருடன் தொடர்பில் உள்ள புலிகளின் தளபதி (நா.நடேசன்) யார்? என்ற விபரங்களை கேட்டு தெரிந்துகொண்ட அமைச்சர் சிதம்பரம், இதுபற்றி ஆலோசித்து சொல்வதாக தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. அந்த தகவல், வன்னியில் இருந்த நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், அடுத்தடுத்த தினங்களில் டில்லிக்கும், சென்னைக்கும், அமெரிக்காவுக்கும், வன்னியில் உள்ள புலிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடராக செய்திப் பரிமாற்றம் நடந்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவுக்கும், டில்லிக்கும் இடையே சில நேரடி உரையாடல்களும் இடம்பெற்றன. அமைச்சர் சிதம்பரத்தின் சில சந்தேகங்களுக்கான பதில், வன்னியில் இருந்து பெறப்பட்டு தெரிவிக்கப்பட்டது.

சரியாக சொல்வதென்றால், இது ஜனவரி 1-ம் தேதி (2008) நடந்தது. அன்று மாலை வன்னியில், பரந்தன் நகரை ராணுவம் நெருங்கிக் கொண்டிருந்தது. பரந்தன் வீழ்ந்தால், அடுத்த இலக்கு கிளிநொச்சி நகரம்தான் என்பது புலிகளுக்கு தெரிந்திருந்தது.

ஜனவரி 2-ம் தேதி, காலை 11.15க்கு இலங்கை ராணுவ தலைமையகம் நியூஸ் பிளாஷ் ஒன்றை அரசு டி.வி. சேனல் ரூபவாஹினியில் வெளியிட்டது. “பிளாஷ்: கிளிநொச்சி எந்த நிமிடமும் விழலாம். கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்திக்கு தயாராக இருங்கள்”. ஆனால், அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த அப்டேட்டும் இல்லை.

சுமார் 3 மணிக்கு, இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், விசித்திரமான தகவல் ஒன்று இருந்தது. “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்பதே அந்த செய்தி.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியாக இல்லை. ஆனால், “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை கைப்பற்றப்பட்டது” என்கிறது பாதுகாப்பு அமைச்சு.

பரபரப்புக்கு காரணம், இந்த நெடுஞ்சாலை, கிளிநொச்சி ஊடாக செல்கிறது! அப்படியானால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு விட்டதா?

இந்த நேரத்தில் பா.நடேசன் அமெரிக்காவில் இருந்த நபரை தொடர்புகொண்டு, “கிளிநொச்சி ராணுவத்திடம் எந்த நிமிடமும் வீழ்ந்து விடும். நாம் முல்லைத்தீவு நோக்கி நகர்கிறோம். இந்திய மத்திய அரசை தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்து, ஏதாவது செய்ய சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து டில்லிக்கு போகுமுன், “கிளிநொச்சி நகரை தெற்கில் இருந்து 57-ம் டிவிஷன் படைப்பிரிவு நெருங்கிவிட்டது. வடக்கே இருந்து நகர்ந்து வரும் அதிரடிப்படை-1 கரடிப்போங்கு ஜங்ஷனை கைப்பற்றிவிட்டு, கிளிநொச்சியை அண்மித்து விட்டது” என்ற செய்தியை வெளியிட்டது ராணுவ தகவல் மையம்.

இந்த அவசர சூழ்நிலையில் அமைச்சர் சிதம்பரம், தமது நிலைப்பாட்டையும், மத்திய அரசின் நிலைப்பாட்டையும் தெளிவாக தெரிவித்தார். இப்போது அவர் கூறிய அதே வார்த்தைகளைதான் அப்போதும் (2008-ல்) இடைப்பட்ட தொடர்பாளர்கள் மூலம் பா.நடேசனுக்கு தெரிவித்தார்.

“இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது” என்றார் ப.சிதம்பரம்.

இந்த தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது. 

அமைச்சர் சிதம்பரத்தின், “இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் தற்போதைக்கு ஈழத்தை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது” என்ற தகவல், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சி நகரை மட்டுமன்றி, கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் ராணுவம் நுழைந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், புலிகளின் தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்தது. அதில், இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் அனுப்பிய தகவல் ஆராயப்பட்டது.

ஆலோசனையில் கலந்துகொண்ட தீபன், “ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும். அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்” என்ற நிஜ கள நிலைமையை தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள், அதை மறுத்தனர். முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாக தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனையில், ‘ஈழம்’ கொள்கையை கைவிடுவதாக அறிவிப்பது குறித்து பலத்த விவாதம் நடந்தது. அதில், 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் ஒன்று ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.

2002-ம் ஆண்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாங்காக்கில் தொடங்கியபோது, “நாட்டை பிரித்து ஈழம் அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகள் ஈழம் கொள்கையை கைவிட்டால்தான், பேச்சுவார்த்தையை தொடங்க முடியும்” என இலங்கை அரசு சார்பில், ஜி.எல்.பீரீஸ் (தற்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளவர்) நிபந்தனை விதித்தார்.

அப்போது, புலிகளின் சார்பில் கலந்துகொண்ட குழுவின் தலைவர் ஆன்டன் பாலசிங்கம், “எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையை கைவிட தயார்” என தெரிவித்தார். அதையடுத்தே, பேச்சுவார்த்தைகள் அப்போது தொடங்கின.

“இப்போதும், அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையை கைவிட்டால், இந்தியாவால் எந்த விதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்” என்பது சில தளபதிகளின் கருத்து.

இது நடந்துகொண்டிருந்தபோது, புலிகளின் சம்மதத்துடன் அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் உயர்மட்டத்தில் உள்ளவர்களை சந்தித்து புலிகள் தரப்பில் பேசுவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்த முயற்சிகள் வெற்றியடையும் கட்டத்தில் இருந்ததாக வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. (கடந்த பாகத்தில் நாம் குறிப்பிட்ட அமெரிக்கா வாழ் தமிழருக்கும், இதற்கும் தொடர்பு கிடையாது)

வாஷிங்டனின் முடிவை பார்த்துவிட்டு, புதுடில்லியிடம் செல்லலாம் என்பதே புலிகள் தலைவர் பிரபாகரனின் கருத்தாக இருந்தது.

அதேநேரத்தில், “போர் நிலைமை புலிகளுக்கு மிக மோசமாக இருந்த காரணத்தால், புதுடில்லியின் ஆஃபர் என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது” என தீபன் தெரிவித்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைச்சர் பா.சிதம்பரம், “ஈழம் கொள்கையை கைவிடுவதாக புலிகள் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் டில்லி மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபடும்” என தெரிவித்திருந்தார். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதா என்ற விவாதமும் நடந்தது.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன், விசித்திரமான முடிவு ஒன்றை எடுத்தார். “ஈழம் கொள்கையை கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்” என்பதே, அந்த முடிவு.

அத்துடன், புதுக்குடியிருப்பில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது. இந்த முடிவை டில்லிக்கு தெரிவிக்கும் பொறுப்பு பா.நடேசனிடம் வழங்கப்பட்டது.

நடேசன், தம்முடன் தொடர்பில் இருந்த அமெரிக்கா வாழ் தமிழரிடம் இது குறித்து தெரிவித்தார். அதன்பின், தமிழகத்தில் உள்ள தேசிய கட்சியின் தலைவருக்கும் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா வாழ் தமிழர், டில்லியில் இருந்த அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடியாக பேச முயற்சி செய்தார். அது முடியவில்லை. அமைச்சர் சிதம்பரத்தின் உதவியாளர் (காரைக்குடியை சேர்ந்தவர். முன்னாள் பத்திரிகையாளர்) ஒருவருடன் மட்டுமே பேச முடிந்தது.

ஆனால், தமிழகத்தில் இருந்த தேசியக் கட்சித் தலைவரால், அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொள்ள முடிந்தது. “ஈழம் கொள்கையை கைவிடுவது தொடர்பான ப்ரபோசலை புதுடில்லியே தயாரித்து கொடுத்தால், புலிகளின் தலைமை அதை பரிசீலிக்க தயார்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் ரகசியமாக தயாரித்தது யார் தெரியுமா? அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்பட தயாரித்தார்.
மிக ரகசியமாக தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை கொடுப்பதற்கு முன், அமைச்சர் சிதம்பரம் விதித்த நிபந்தனை: “இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது”

அமைச்சர் சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணம், முல்லைத்தீவுக்கு போய் சேர்ந்தது. அவரது நிபந்தனையும் பா.நடேசனிடம் தெளிவாக, மிக அழுத்தமாக கூறப்பட்டது.

இந்த விஷயங்கள் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன (தமிழகத்தில் மே மாதம் 13-ம் தேதி நடந்தது. அதே மாதம் 18-ம் தேதி யுத்தமும் முடிந்தது). அப்போது தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை பற்றி சுருக்கமாக சொல்லிவிடலாம்.

அப்போதுதான், இந்தக் கட்டுரையில் நாம் கூறப்போகும் சில விஷயங்கள் புரியும்.

2009 லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில், வைகோவின் ம.தி.மு.க. இணைவதாக இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா, “இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஈழம் அமைத்துக் கொடுப்பது” என அறிவிப்பதாக நிலைப்பாடு எடுத்திருந்தார். வைகோ கொடுத்த ஆலோசனை காரணமாகவே அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தார் என்று பின்னர் (தேர்தல் நெருங்கியபோது) பரவலாக நம்பப்பட்டது.

வைகோவும், தமது பேட்டிகளில் ஈழம் அமைப்பது தொடர்பாகவே கருத்து கூறிக்கொண்டு இருந்தார். ஈழத்தமிழரின் சில வெளிநாட்டு மீடியாக்கள் ஜெயலலிதாவை ‘ஈழத்தாய்’ என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருந்தன.

மேலே குறிப்பிட்டதுதான், தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை.

இந்த நிலையில்தான், ப.சிதம்பரம் தயாரித்த ப்ரபோசல், பா.நடேசனின் கைகளுக்கு போனது. புலிகளின் தலைவர் பிரபாகரனிடமும் கொடுக்கப்பட்டது.

“இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது” என்று அமைச்சர் சிதம்பரம் விதித்திருந்த நிபந்தனையை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா, அல்லது தமிழகத்தில் உள்ள தமக்கு தெரிந்தவர்களுக்கு கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் விலாவாரியாக கூறிவிட்டார்.

விபரம் அறிந்த வைகோ கொதித்தார். “இது காங்கிரஸ் கட்சியின் சதி” என்றார்.

“நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்க போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையை கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்” என்றார் வைகோ, நடேசனிடம்.

குழம்பிப் போனார் நடேசன்.

நடேசன் அடுத்து தொடர்பு கொண்டது, பழ.நெடுமாறனை. அவரும் வைகோ சொன்னதையே ரிப்பீட் செய்தார். “காங்கிரஸ் அரசை நம்பவேண்டாம். அவர்கள் எப்படி தந்திரமாக செயல்படுவார்கள் என்பதை முன்னாள் காங்கிரஸ்காரனான நான் நன்றாகவே அறிவேன்” என்றார்.

இவர்கள் இருவரும் சொன்னதை, புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கொண்டுபோய் சேர்த்தார் நடேசன்.

அப்போது, பிரபாகரனுடன் வேறு சில தளபதிகளும் இருந்தனர். சிலர், இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரனும் அதையே நம்பியதாக தெரிகிறது.

சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, அமைச்சர் சிதம்பரம் தயாரித்து கொடுத்த ஆவணத்தை எடுத்துவர சொன்னார். அந்த ஆவணத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பேனாவை எடுத்து அதில் ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.
அமைச்சர் சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது.

இந்த ப்ரபோசல் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட தகவல் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசனால், அமெரிக்க தமிழருக்கு சொல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியடைந்தார். இது எப்படி நடந்தது என்று விசாரித்துக்கொண்டு போனபோது, அமைச்சர் சிதம்பரத்தின் ப்ரபோசலுக்கு எதிராக வைகோ, மற்றும் நெடுமாறன் கொடுத்த ஆலோசனை விபரம் அவருக்கு தெரியவந்தது.

அவர் இந்த விஷயத்தை உடனே தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சி தலைவருக்கு சொல்லவில்லை. இந்த ப்ரபோசலை எப்படியாவது புலிகளின் தலைமை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.

“யுத்தம் முடிவை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், இது (சிதம்பரத்தின் ப்ரபோசல்) ஒரு கடைசி நேர சந்தர்ப்பம். இதை தவற விடாதீர்கள்” என பா.நடேசனிடமும், புலிகளின் வேறு சில தளபதிகளிடமும் இரு தினங்களாத திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், பலன்தான் பூச்சியம். “மேல்மட்டத்தில் (பிரபாகரன்) முடிவு எடுக்கப்பட்டு விட்டது. இதை விட்டுவிடுங்கள்” என்ற பதிலே கிடைத்தது.

அவர் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்தார். தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சி தலைவருக்கு விஷயத்தை சொன்னார். அப்படியே அந்த விஷயம் அமைச்சர் சிதம்பரத்துக்கும் சொல்லப்பட்டது.

இதற்கு அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பதில், அமெரிக்க தமிழருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மூலமாக, பா.நடேசனுக்கும் போய்ச் சேர்ந்தது.

அந்தப் பதில்: “இந்த விஷயத்தில் ரகசியம் காக்கும்படி நான் சொன்ன பின்னரும், தமிழகத்திலுள்ள சிலரிடம் புலிகள் இது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அது போகட்டும். புலிகளிடம் ஒரு விஷயம் சொல்லுங்கள். அவர்கள் கடைசி சந்தர்ப்பத்தை தவற விடுகிறார்கள்.

தற்போது இலங்கையில் நடக்கும் யுத்தம் பற்றிய விபரங்கள் உங்கள் தமிழக தலைவர்களுக்கு (வைகோ, நெடுமாறன்) தெரியாது. இலங்கை ராணுவத்தின் பலம், அவர்களால் எதுவரை போக முடியும் என்பதும் உங்கள் தமிழக தலைவர்களுக்கு தெரியாது. ஆனால், உளவுத்துறை மூலம் எமக்கு (மத்திய அரசு) தெரியும். இந்த யுத்தம் இன்னும் சில மாதங்களில் முழுமையாக முடிந்துவிடும். புலிகள் ஜெயிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

புலிகள் இயக்கம் தப்பிப்பதற்கு ஒரே வழி இப்போது யுத்த நிறுத்தம்தான். அதை இந்தியா கொண்டுவர வேண்டுமென்றால் ஒரே வழி, மத்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஈழம் கோரிக்கையை புலிகள் கைவிட்டார்கள் என்று நாம் (மத்திய அரசு) இலங்கை அரசிடம் சொல்லி கன்வின்ஸ் செய்ய வேண்டும். அதற்கு எம்மிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது.

மத்திய அரசில் உள்ள தமிழன் என்ற முறையில் எனது எல்லைகளை தாண்டி, out-of-the-wayயாக இந்த முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் புலிகள் என்னை நம்புவதைவிட, அவர்களது தமிழக கனெக்ஷன்களை நம்புவதாக தெரிகிறது. நல்லது. எனது முயற்சிக்கு எதிராக ஆலோசனை கொடுத்த உங்கள் தமிழக தலைவர்களால் (வைகோ, நெடுமாறன்) பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும், காப்பாற்ற முடிந்தால், எனக்கும் சந்தோஷம்தான். Good luck.”

அமைச்சர் சிதம்பரத்தின் இந்தப் பதிலை, பா.நடேசனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக்கொண்டார் அமெரிக்க தமிழர். அதன்பின் அவர், புலிகள் தொடர்பான எந்த விஷயத்திலும் தலையிடவில்லை.

இதன்பின் யுத்தம் துரிதகதியில் நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது.

இந்த நிலையில்தான், புலிகள் மீண்டும் இந்தியாவை தொடர்பு கொள்ள முயன்றார்கள். (இதற்கிடையே அமெரிக்க திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையை கைவிட வேண்டும்’ என்ற அளவில் இருந்தது. அமெரிக்க திட்டமோ, ஒரு ஸ்டெப் அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்’ என்ற வகையில் இருந்தது)

பா.நடேசன் மீண்டும் அமெரிக்க தமிழரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் அமெரிக்காவிலேயே இல்லை. தமிழகத்தில் இருந்த தேசியக் கட்சித் தலைவரை தொடர்பு கொண்டபோது அவர், ‘என்னை விட்டுவிடுங்கள். நீங்களே நேரடியாக அமைச்சர் சிதம்பரத்துடன் பேசுங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

பா.நடேசனுக்கு அல்லது, வன்னியில் இருந்த புலிகளுக்கு அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடி தொடர்பு கிடையாது.

இந்த நிலையில் வன்னியில் இருந்த பிரபாகரனால் தொடர்பு கொள்ளப்பட்டவர்தான், கேபி. அவர் அப்போது மலேசியாவில் இருந்தார்.
இது நடந்தது, 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில். அப்போது புலிகள் மிகமிக சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டு இருந்தார்கள்.

இன்னும் சில தினங்களில் கதை முடிந்துவிடும் என்பது, யுத்த நிலைமை பற்றி விஷயமறிந்தவர்களுக்கு தெரியும். அதற்கு ஒரு வாரத்துக்கு முன், ‘அமெரிக்க திட்டத்தை’யும் பிரபாகரன் நிராகரித்திருந்தார். (அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும், தளபதிகளையும் வெளியேற்றும் அந்த ‘அமெரிக்க திட்ட’ விபரங்களை ‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ என்ற எமது தொடரின் இறுதி அத்தியாயங்கள் வெளியாகும்போது பாருங்கள்)

“இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பாருங்கள்” என்றார் பிரபாகரன் கே.பி.யிடம்.

இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்” என்றார்.

இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது.

கே.பி. தமது முயற்சிகளில் இறங்கினார். அவற்றில் ஒன்று, வெளிநாட்டு தனியார் செக்யூரிட்டி ஆட்களை வாடகைக்கு அமர்த்தி, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரனையும் வேறு ஓரிருவரையும் வெளியேற்றுவது. புலிகளின் வெளிநாட்டு நிதியை வைத்திருந்த நெடியவன், அதற்கு தேவையான பணத்தை (சுமார் 10 லட்சம் டாலர்) கொடுக்க மறுத்துவிட்டார்.

“பணம் இருக்கிறது. ஆனால், காஸ்ட்ரோ உத்தரவிட்டால்தான் பணம் கொடுக்க முடியும்” என்றார் அவர். அப்போது காஸ்ட்ரோவே உயிருடன் இல்லை. “கடைசியாக காஸ்ட்ரோவுடன் எப்போது பேசினீர்கள்?” என்று கேட்டபோது, “10 நாட்களாக அவரிடம் இருந்து போன் வரவில்லை” என்றார் நெடியவன் அப்பாவியாக!

கே.பி.யின் இரண்டாவது முயற்சி, மீண்டும் டில்லியின் கதவை தட்டுவது.

கே.பி. தொடர்புகொண்டது, தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் நண்பரை. அவர் மூலமாக மீண்டும் அமைச்சர் சிதம்பரத்திடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் சில முயற்சிகளை செய்ததாக தெரிகிறது. ஆனால், அந்த முயற்சிகளை செய்வதற்கு முன்பே, “எனது முயற்சிகள் பலிப்பது சந்தேகமே. யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனி இலங்கை அரசை யாராலும் தடுக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்” என்றார்.

எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

“பா.ஜ.க. ஆட்சி வரட்டும். எல்லாமே ஒரே நாளில் தலைகீழாக மாறும்” என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வை.கோ.

அதுவும் பலிக்கவில்லை.

லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. முடிவு வெளியாகி 48 மணி நேரத்துக்குள் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது.

இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4-ம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த நாள், மே 19-ம் தேதி.

அன்றைய தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன், அமைச்சர் ப.சிதம்பரம், “எனது முயற்சிக்கு எதிராக ஆலோசனை கொடுத்த உங்கள் தமிழக தலைவர்களால் (வைகோ, நெடுமாறன்) பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும், காப்பாற்ற முடிந்தால், எனக்கும் சந்தோஷம்தான். Good luck” என்று கூறியிருந்தார்.

அவர் கூறியது பலித்ததா? ஒரு விதத்தில் பலித்தது!!

வைகோவும், நெடுமாறனும் புலிகள் இயக்கத்தையும் காப்பாற்றி, பிரபாகரனையும் இன்றுவரை உயிருடன் வைத்திருக்கிறார்கள்… தமது அறிக்கைகளில்! (முற்றும்)