Follow by Email

Monday, 6 May 2013

பா.ம.க. மகளிர் அணி ஓட்டம்!!




ஆசை யாரை விட்டது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் ஜொலிக்கும் போது, பா.ம.க மகளீர் அணிக்கும் அந்த ஆசை வருவது இயற்கை.

மருத்துவர் ஐயாவும், சின்ன ஐயாவும் சிறையில் இருப்பதால் 1000 பஸ்களை எரித்தாவது அரசாங்கத்தை பணிய வைப்பது என்று களத்தில் குதித்திருக்கிறது பா.ம.க. 

இதனால் மக்கள் சந்திக்கும் துயரத்தை விட, தங்கள் இனமானத்தை கட்டி காப்பதில் குறியாக இருக்கிறார்கள். 

அதற்காக அதன் தொண்டர்கள் எல்லாம் தீவிர வெறியில் திரிய, மகளீர் அணிக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்  கொண்டது.

ஓசூரை அடுத்த அரசனட்டி கிராமத்தில் பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், ஐயா விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திரண்டனர்.

ஆரம்பம் என்னவோ படு அமர்க்களமாக இருந்தது. வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அம்மாவுக்கு அர்ச்சனை பலமாக இருந்தது. 

இந்த தகவல் காவல்துறை காதுக்கு எட்டியது. அப்படியா சங்கதி... இதோ வந்திட்டோம் என்று மகளீர் அணி போராட்ட களத்தை காண வந்தனர் போலீசார்.

தூரத்தில் காக்கிகளை கண்ட  மகளிர் பிரிவு கை கால் எல்லாம் ஆடத்துவங்கியது.

விடு ஜூட் என்று பி.டி. உஷாவை மிஞ்சும் வேகத்தில்  தலைதெறிக்க ஓடி சந்துகளில் நுழைந்து தலைமறைவானார்கள்.

இதை தூரத்தில் இருந்து கவனித்த போலீசார் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி சென்றார்கள்.

கடவுளே..கடவுளே..



Post a Comment