Follow by Email

Thursday, 30 May 2013

வேதம் கண்ட விஞ்ஞானம்





தொடரும் ....

அம்மா என்னும் தெய்வம்!!



ராஜஸ்த்தானில், நீதிகேட்டு நீதிமன்ற படியேறுகிறாள் ஒரு தாய். என் மகனும், மருமகளும் என்னை துன்புறுத்துகிறார்கள் என்பது அவரின் குற்றசாட்டு. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  வீட்டுக்குள் நடப்பவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலோட்டமாக இந்த செய்தியை பார்த்துவிட்டு ஒரு வீடியோ தொகுப்புக்குள் போனேன். அங்கே திலிப் மேத்தாவின் THE FORGOTTEN WOMAN என்ற என்ற ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது



பொட்டில் அடித்த மாதிரி இருக்கிறது. இது பழைய படம்தான். ஆனால் ஒரு சமூகஅவலத்தை  கேமரா மொழியில் பேசுகிறது.

உத்திரபிரதேச மாநிலம் மதுராவுக்கு அருகில் உள்ளது விருந்தாவனம். புராண காலத்தோடு தொடர்புப்படுத்தி  பேசப்படும் ஊர். பகவான் கிருஷ்ணர் குழந்தை பருவமாக இருந்த காலத்தில் கோபியர்களுடன் கொஞ்சி விளையாடிய இடம் என்ற சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இங்கே இறந்தால் நேரடியாக சொர்க்கம்தான் என்ற ஆழமான நம்பிக்கையும் இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும், வயதான தாயை கவனிப்பதை பாரமாக நினைக்கும் பிள்ளைகளும் விதவை தாயை இங்கே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்

தனித்து விடப்படும் விதவை தாய்கள், எங்கே போவது? தங்குமிடம் எது? சாப்பாட்டிற்கு என்ன வழி என்று தெரியாமல் அலைமோதுவதை பார்க்கும் போது, இரும்பு மனமும் இளகிப் போகும்.

ஏனிந்த அவலநிலை

வாழ்க்கையே நம்பிக்கையில்தான் சுழல்கிறது. நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையை குறிக்கும் சொல் அல்ல. உற்ற உறவுகளின் மேல் உள்ள நம்பிக்கை. இந்திய சமூகத்தில் பெண்களுக்கான வாழ்க்கை கட்டமைப்பே உறவுகளின் பின்னணியில் அமைந்திருக்கும்

முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல், ஒரு பெண்  இளம் வயதில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறாள். பருவத்தில் கணவனின் துணையோடு வாழ்கிறாள். முதுமையில் பிள்ளைகளின் பாதுகாப்பில் வாழ்கிறாள்.

இந்த உறவுகள் பொய்த்துப் போகும்போது, இருந்தும் இல்லாமல் ஆகும் போதும் என்னாகும் என்பதுதான் விருந்தாவானக் காட்சிகள்

ஒவ்வொரு தாயும் பத்து மாத தவத்திற்கு பின் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள். தன் இறுதி காலத்தில் பிள்ளைகளால் பாதுகாக்கப் படுவோம் என்ற நம்பிக்கைதான்,   குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்க்க தூண்டுகிறது

வம்சம் தழைக்க வந்த வாரிசாகவும், வாழ்க்கையின் இறுதியில் காக்கும் நம்பிக்கை சுடராகவும் பிள்ளைகளை  பேணி வளர்த்த தாயிக்கு முதுமை என்பது இன்னொரு குழந்தை பருவம்.

இது அனைவருக்கும் பொதுவான நிலைதான். தான் வளர்த்த பிள்ளைகள் தன்னை காக்கும் என்ற நம்பிக்கையை நசுக்கும் போது, யாரை நொந்துக் கொள்வது?

தேவதைகள் ஆசிர்வதித்ததில்லை. எல்லா சாத்தான்களும் சபித்திருக்கின்றன என்ற மேத்தா வரிகள்தான் நினைவுக்கு வருகிறது

இருக்கட்டும்

முன்பு மாதிரி இல்லை விருந்தாவனம். படத்தில் காட்டப்படுவது  போல் உணவுக்கும் உடைக்கும்  அலையும்  அவலநிலை இன்றில்லை. தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் நிலையும் இன்றில்லை. பொட்டி பொட்டியான அறைக்குள் முடங்கிப் போகும் பரிதாப நிலை   மாறியிருக்கிறது. உதவும் உள்ளம் கொண்டோர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மாநில அரசாங்கமும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது என்பது ஆறுதலான அம்சமே.



ஆனால் மரத்துப் போன மனிதம்தானே,  தாயின் புனிதம் அறியாமல் வீதிகளில் விட்டிருக்கிறது. எந்தவொரு குடும்பத்திலும் பெண்தான் ஆணிவேர். அட்சாணி. கோடிகளை தேடுவது ஆணாக இருந்தாலும், குடும்ப தேர் குடைசாயாமல் இருக்க பெண்ணே  காரணம், அவள் தான் சர்வமயம். சக்திமயம்

இந்தி உணர்ந்தவர்கள் குறைவு. பெண்களை அடிமைகளாக பார்த்த ஒரு சமூகத்தின் பார்வையில் இன்னும் மாற்றம் இல்லை என்பதற்கு விருந்தாவனம்  ஒரு சாட்சி



திருவாரூரில் பிறந்தால் மோட்சம். சிதம்பரத்தை தரிசித்தால் மோட்சம். திருவண்ணாமலையை நினைத்தால் மோட்சம். காசியில் இறந்தால் மோட்சம் என்பது நம்பிக்கை. முதியர்கள் சிலர் உறவுகளை துறந்து  மோட்சகதிக்காக காசிக்கு வருகிறார்கள்

இவர்களில் பலர் உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்களும்  இருக்கிறார்கள். வாழும் வரை வாழ்க்கை. வாழ்க்கைக்கு பின் மோட்சம் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.  

இந்த நம்பிக்கையின் கடைசி வரிதான் விருத்தாவனத்தில் இறந்தால் சொர்க்கம் என்பதும்

ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் தாங்களாகவே தனிவழி தேடுகிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை என்பது தான் உண்மை



இந்த அபலை தாய்கள்,  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது மாதிரி யாரோ ஒருவருக்கு சகோதரி, யாரோ ஒருவருக்கு மனைவி, யாரோ ஒருவருக்கு தாய்

துரத்தும் உறவுகளும், தூக்கியெறிந்த  பந்தங்களும், எந்த ஒரு குற்ற உணர்சியும் இல்லாமல் வாழ்கிறார்கள். குடும்பம் நடத்துகிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களில் நாளை முதிய தாய்களும் இருக்காலாம். இதுதான் யதார்த்தம்.


Tuesday, 28 May 2013

நடிகைகள் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரீசாந்த்!!

வில்லனான வில்லங்க ஹீரோ 


கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதுமே ஒரு மயக்கும் சக்தி இருக்கும். இது சாதாரண பள்ளி மாணவனை மட்டும் அல்ல, பாலியுட், ஹோலியுட் நடிகைகளை கூட இவர்கள் பக்கம் இழுத்து வந்துவிடும். காரணம், பணம், புகழ் இது இரண்டுமே முக்கிய காரணி.

சிலர் பொது மேடைகளில் தோன்றுவதோடு நின்று விடுவார்கள்.இன்னும் சிலர் ஆட்ட சூட்சுமத்தை அறிந்து கொள்ள அந்தரங்கம் வரை வந்து செல்வார்கள். இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்துள்ளார் ஸ்ரீசாந்த். 

இச்சுசுஇச்சுசூ சொல்லுடா தங்கம் 

இது எப்படி இருக்கு?

அதோ மஞ்சகலர் தொப்பி வைச்சிருக்கிறவர்தான் புக்கி.

சொல்லுங்க பாஸ்.. ஜோடிப்பொருத்தம் ஓகேவா 


கேட்ச் மிஸ்சாகலை 

எப்படியும் இந்த மேட்சுல ஒரு கோடி தேறும்ன்னு நினைக்கிறேன். 

சும்மா 

அக்கா மாதிரி இருந்தாலும் ஆள் செம கட்டை.

போலிஸ் பிரச்சனை எல்லாம் வராது பயப்படாதே.

சொன்னா நம்ப மாட்டே. நான் நிஜ கிரிக்கெட் ஆடி ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா? 

கடவுளே இந்த மேச்சுல ஒரு ரெண்டு கோடியாவது புக்கிகிட்டே இருந்து வரணும். அருள்புரி. 

அம்பது லட்சம் தர்றேன்னு சொல்லிட்டு, இப்போ அஞ்சுலட்சம் தான் தரமுடியும்ன்னு சொல்றான். இது நியாயமா?

Sreesanth CCTV After Fixed Match - Full Video


ஸ்ரீசாந்த்  புக்கிகளை சந்தித்ததாக கருதப்படும் CCTV வீடியோ இது
இதில் ஶ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோருடன் புக்கிகள் பேசியதாக கூறப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.


IPL SPOT Fixing Tamil Version

Tuesday, 21 May 2013

பேஸ்புக் மெயிலை தடுப்பது எப்படி?


பேஸ்புக் பயனீட்டாளர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே, அவர்கள் மெயில் ஐடிக்கு வரும் வாசகர் கமாண்டுகள்.  

ஒரு வாரம் கவனிக்காமல் விட்டு விட்டால் பல நூறு மெயில்கள் வந்து இன்பாக்ஸ் நிறைந்து விடும். கீழே உள்ள படம் மாதிரி.


இதை தடுப்பது எப்படி? 

முதலில் அக்கவுண்ட் செட்டிங் செல்லுங்கள். அதை கிளிக் செய்யுங்கள்.



அடுத்த விண்டோ ஒப்பன் ஆகும். அங்கே நோட்டிபிக்கேஷன் என்பதை கிளிக் செய்யுங்கள். 


மீண்டும் வேறு விண்டோ ஒப்பன் ஆகும். 



அதில் only notifications about your account, security and privacy என்பதை தேர்வு செய்து பின் குளோஸ் செய்து விடுங்கள். இனிமேல் உங்களுக்கு அனுப்பப்படும் மெயில்கள் தவிர வேறு பேஸ்புக் மெயில் எதுவும் வந்து உங்கள் இன்பாக்ஸ்சை நிரப்பாது ஓக்கேவா. 

Sunday, 19 May 2013

வேதம் கண்ட விஞ்ஞானம்


Pa. Muthukumarasamy




தொடரும் 

இலங்கைக்கு ஒரு சபாஷ்!!



நல்லது ஒன்னு!!

கடந்த மே 5ம் தேதி மலேசிய பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுவரொட்டிகளையும், விளம்பர பேனர்களையும் நகரெங்கும் வைத்திருந்தார்கள். 

நகர மாமன்றத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் தாங்கள் வைத்த விளம்பர தட்டிகளை அகற்றிவிட வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் மாமன்றமே அதை அகற்றும்.  

அவ்வாறு மாமன்றம் அகற்றினால், வேட்பாளர்கள் செலுத்திய வைப்பு தொகை ( டெபாசிட் ) திரும்ப தரப்பட மாட்டாது என்று விளம்பர படுத்தி இருந்தார்கள். 

நல்ல விஷயம். நம் நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்தலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 

இங்கே சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம். தாங்களாகவே வாக்குகள் பெற முடியாமல் வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள். 

அதனால் பேனர்களை அகற்ற என்று கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம். வேட்பாளரே பேனர்களை அகற்றி விட்டால் அத்தொகையை திரும்ப கொடுத்து விடலாம்.   

நல்லது இரண்டு!!




இலங்கையை திட்ட, தலையில் குட்ட ஆயிரம் காரணம் இருக்கும். பாராட்ட ஒரு விஷயம் இருக்கு. அது இதுதான்.

தங்கள் நாட்டு பிரஜைகள் வெளிநாட்டுக்கு விசா மூலம் செல்கிறார்கள் என்றால், இந்தியா மாதிரி ஏனோ தானோ என்றில்லாமல் மிக கவனமாக இருக்கிறது.

முதலில் விசா காப்பி சம்மந்தப்பட்ட நபருக்கு வந்ததும், அதை பெற்று மிக கவனமாக ஆராய்கிறார்கள். விசாவின் உண்மைத்தன்மை எப்படி, விசா கொடுத்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பது முதல் அலசல்.

இது உறுதி செய்யப்பட்ட உடன், வெளிநாடு செல்லும் நபருக்கு அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றிய முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அடுத்து.. அந்த நாட்டின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் பற்றியும், குறைந்த பட்சம் பேசும் மொழி அறிவும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

மருத்துவ சான்று பெற்று தங்கள் நாட்டு பிரஜைகள் வெளிநாட்டுக்கு செல்லும் போது, விசா கால அளவான முழு காலத்திற்கும் அனுமதி தருவதில்லை. முதலில் ஒரு மாதம் மட்டுமே அனுமதி கிடைக்கிறது.

வேலைக்கு வந்தவர், வேலை செய்யும் இடம் பிடித்தால் மேற்கொண்டு விசா நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அவருக்கு பிடிக்க வில்லை என்றால் விசா நீட்டிப்பு செய்யாமல் தங்கள் நாட்டு பிரஜையை திரும்ப அனுப்பி விடுகிறது இலங்கை.

இந்த நடைமுறைகளால் யாரும் கொத்தடிமைகளாக சிக்கும் அவலம் குறைந்து விடுகிறது. இதை நம் நாட்டிலும் நடைமுறை படுத்தினால் என்ன?

Thursday, 16 May 2013