Follow by Email

Wednesday, 24 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! 4


முதலில் இருந்து படிக்க

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! 

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! -2

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! -3


ஈழ விடுதலை இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப்., யாழ்ப்பாணத்தில் வைத்து அமெரிக்கர்களாகிய அலன் தம்பதியினரைக் கடத்தியதால், இந்தியாவுக்கு பல சங்கடங்கள் இருந்தன. அவை, சர்வதேச அரசியலுடன் கலந்தவை என்பதால், இந்திரா காந்தி, தாமே நேரடியாக இந்த விவகாரத்தில் இறங்கி செயல்பட்டார்.

அதற்கு பல காரணங்கள் இருந்தன.

கடத்தல் இலங்கையில் நடந்ததால், கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதர், இலங்கை வெளிவிவகார அமைச்சராக அப்போது இருந்த ஏ.சி.எஸ்.ஹமீதுவை சந்தித்தார். இரு அமெரிக்கர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு லேசாக சிரித்த ஏ.சி.எஸ்.ஹமீது, “கடத்தியவர்கள், பணயத்தொகையை எங்கே கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள் பாருங்கள்… தமிழக அரசிடம். இதனால், தமிழக அரசுடன் அவர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும் அல்லவா? எனவே என்னிடம் பேசுவதைவிட, தமிழக அரசுடனோ, இந்திய மத்திய அரசுடனோ பேசுங்களேன்” என்றார்.

அதையடுத்து, இலங்கை வெளியுறவு அமைச்சர், “இருங்கள். நானே இந்திய வெளியுறவு அமைச்சருக்கு போன் போட்டு தருகிறேன். பேசிப் பாருங்கள்” என்று கூறிவிட்டு, டில்லிக்கு போன் போட்டார்.

அப்போது இருந்த இந்திய வெளியுறவு அமைச்சர், நரசிம்மராவ்.  “இந்த கடத்தலுக்கும், இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார் அவர்.

இதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் நிதானமாக ஒரு கேள்வி கேட்டார். “கடத்தல்காரர்கள், பணயத் தொகையையும் கைதிகளையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க சொல்கிறார்கள். தமிழக அரசின் அதிகாரத்தில் உள்ள யாருடனோ இது பற்றி பேசியிராமல், தாமாகவே இப்படி அறிவிப்பார்கள் என்று சொல்கிறீர்களா?”

(Do you say the EPRLF asked Sri Lanka to hand over the prisoners and the money to the Tamil Nadu government, without even mentioning the matter to someone in authority in Tamil Nadu?)

இந்தக் கேள்விக்கு நரசிம்மராவ்வால் பதில் கூற முடியவில்லை. காரணம், அவருக்கே தெரியும், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களே சென்னையில்தான் வசிக்கிறார்கள் என்பது!

மிக சுலபமாக இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்ட இலங்கை அரசு, அனைத்து பிரஷர்களையும் புதுடில்லியின் தலையில் போட்டுவிட்டு, சிரித்துக் கொண்டு இருந்து விட்டார்கள்.

இப்போது இந்தியாவின் சங்கடம் மேலும் அதிகரித்தது. அன்றைய அமெரிக்க உப ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் புதுடில்லிக்கு வருவதற்கு திட்டமிட்டு, ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. அவர் வருவதற்கு 2 தினங்களுக்கு முன் இப்படியொரு பூதம் கிளம்பியிருந்தது.

கடத்தப்பட்டவர்களோ அமெரிக்கப் பிரஜைகள்.  கடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்கு, மத்திய அரசு இந்தியாவில் ஆதரவு கொடுத்து, அதன் தலைவர்களையே சென்னையில் தங்க வைத்துள்ளது. இது முதலாவது நெருடல்.

இரண்டாவது, இந்தியா என்னதான் தாங்கள் ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்சி கொடுக்கவில்லை என்று சொன்னாலும், இந்தியா பயிற்சி கொடுக்கிறது என்ற விஷயம் சர்வதேச ராஜதந்திர வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் இருக்கிறார்கள் என்பதைவிட மற்றொரு விஷயம், அந்த இயக்கத்தினர் தாம் சொல்வதை தட்டாமல் செய்யக் கூடியவர்கள் என்ற தோற்றத்தை மத்திய அரசு வெளியே காட்டிக் கொண்டிருந்தது. 

இப்படியான சூழ்நிலையில் இந்தியாவுக்குத் தெரியாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் ராணுவப் பிரிவு, இப்படியொரு கடத்தலைச் செய்தது இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானத்தைக் கொடுத்துவிட்டது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் கைதிகளையும், பணயப் பணத்தையும் (50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம்) தமிழக அரசிடம் கொடுக்க வேண்டும் என்று கூறிய செயல், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சறுக்கல் ஒன்றை ஏற்படுத்தியது.

ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் எங்களுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்கிறது இந்தியா – ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்று பணத்தை தமிழக அரசிடம் கொடுக்கச் சொல்கிறது! எந்தவித சம்மந்தமும் இல்லாமல் இப்படிச் சொல்வார்களா?

தமிழக அரசின் பெயரை இதில் இழுத்ததில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கொதித்துப் போயிருந்தார். அது போதாதென்று, இந்திரா காந்தியே நேரடியாக எம்.ஜி.ஆரை போனில் அழைத்தார்.

“மத்திய அரசு, மாநில அரசு உறவு நல்ல விதத்தில் இருக்க வேண்டும் என்றால், அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வருமுன், கடத்தப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட வேண்டும்”

எம்.ஜி.ஆர்., தமது அதி நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரி மோகன்தாசை அழைத்த சில உத்தரவுகளைப் போட்டார். அப்போது மோகன்தாஸ் தந்திரமான காரியம் ஒன்றைச் செய்தார்.

தொடரும்..


தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு





Post a Comment