ads

Tuesday 30 April 2013

இந்தியாவாகும் மலேசியா - ஸ்பெஷல் ரிப்போர்ட்


மலேசிய அரசியல் களம் எப்போதுமே ஒரு மாறுபட்ட தன்மை கொண்டது. உலக அரசியல் பேசாத ஒரு நாடு என்றால் அது மலேசியாதான். 

அவரை பற்றி இவரும், இவரை பற்றி அவரும் அறிக்கை விடுவார்கள், மற்றபடி மாறும் உலக சூழ்நிலை, அதில் மலேசியாவின் பங்கு என்பதை பற்றி யாரும் மூச்சு விடுவதே இல்லை.

சில தமிழ் தலைவர்கள்  அதிக பட்சம் இலங்கை தமிழர்களை பற்றி பேசுவார்கள். 

தமிழகத்தில் இன உணர்வோடு பேசி போராடும் தமிழ் தலைவர்களை சுயநலவாதிகள் என்று வர்ணிக்கும் இலங்கை தமிழர்கள் மாதிரி, மலேசிய தமிழ் தலைவர்கள் இந்தியாவை குற்றம் சொல்வதோடு  சரி. 

தங்கள் நாட்டு தலைமையை எதிர்க்க, இலங்கை தமிழர்களுக்கு  ஆதரவு குரல் கொடுக்க சொல்ல தைரியம் இருக்காது. 

அதிகபட்சம்  ராஜபெச்சே கொடும்பாவியை எரித்து விட்டு தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள்.

போகட்டும்.



எதிர்வரும் மே 5ம் தேதி பொதுத்தேர்தலை சந்திக்கிறது மலேசியா.

இந்தியா என்றில்லை. எந்த நாட்டு  அதிபர்  வேட்பாளாராக இருந்தாலும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யப்போகும் நலத்திட்டங்களை சொல்வது வழக்கமான ஒன்றுதான். செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதும் வழக்கமான ஒன்றுதான்.

இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரிசான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது.

தேர்தல் நெருங்கிய பிறகு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார் நஜீப். இது அவருக்கு நல்ல பெயரை தேடி தந்தாலும், மாகாதீர் முஹமட்டுக்கு எதிரான கோவம், வெறுப்பு, முகமதுநஜீப்பை பூதம் மாதிரி விழிங்கி விடும் போலிருக்கிறது. .



1957 இல் சுதந்திரம் பெற்ற பிறகு இதுநாள் வரை ஆட்சியில் இருக்கும் பாரிசான், இப்போது அக்னி பரீட்சையை சந்திக்கிறது என்பதுதான் உண்மை.



துங்கு அப்துல் ரகுமான், நுன் அப்துல் ரசாக், துன் உசேன் ஆன், மகாதீர் முகமட், அகமது படாபி, என்று மாறி இப்போது முகமது நஜீப் வசம் ஆட்சி இருக்கிறது. ஆனால் இந்த முறை வலுவான எதிரியை களத்தில் சந்திக்கிறது பாரிசான்.

கே. அடிலான் கட்சியின் தலைவர் அன்வர் தான் அந்த வலுவான எதிரி.

மகாதீர் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் அன்வர். கட்சிக்குள் அவர் வலுப்பெறுவதை விரும்பாத மகாதீர், அன்வரை பழிவாங்கும் விதமாக  ஓரின புணர்ச்சி  வழக்கை போட்டு சிறைக்கு அனுப்பி, அவமானப் படுத்தியதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அதற்கு பாரிசான்,  விலை தரும் தருணம் வந்து விட்டது போலவே காட்சியளிக்கிறது தேர்தல் களம்.



மலேசிய இந்தியன் காங்கிரஸ்  மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த போது, தமிழ் மக்களின் பாதுகாவலானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது ஹின்ட்ராப்.

ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் வெளியே வந்த பிறகும் தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது ஹின்ட்ராப்.

ஆனாலும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழ் மக்களிடம் இப்போது ஹின்ட்ராப் விலை போய் விட்டது என்ற விமர்சனம் வெளிப்படையாக ஒலிக்கிறது.

அதோடு,  கே அடிலான் கட்சி தலைவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இது ஆளும் கட்சிக்கு இனிப்பான செய்தி அல்ல.

நஜீப்பும் கூட இந்திய அரசியலை உற்று நோக்கினாரோ என்னவோ,  பல இலவச திட்டங்களை அறிவித்தார்.  பொங்கலுக்கு அரிசியும் கொடுத்தார். இப்போது பண பட்டுவாடாக்கள் கூட நடக்கிறது போல் இருக்கிறது.

கே. அடிலான் கட்சி தலைவர் அன்வர் பொது கூட்டத்தில் பேசும் போது இது தானாக கூடிய கூட்டம். காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல என்று பகிரங்கமாகவே சொல்கிறார்.

இதை பார்க்கும் போது இந்திய அரசியல் வாதிகள் போலவே மக்களுக்கு இலவசம், பிரியாணி, பணம் கொடுத்து தங்கள் வாக்கு வங்கியை வளர்ந்து  கொள்ளும் நடைமுறையை  மலேசிய தலைவர்களும் கற்றுக் கொண்டு விட்டார்கள் போலவே தெரிகிறது.

எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் நிறம் ஒன்றுதான். மொத்தத்தில் இந்தியாவாகிறது மலேசியா  .

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...